Tmmk Media - Erode East

Tmmk Media - Erode East TMMK-MMK Erode East District (Head)
Official page தமுமுக-மமக ஈரோடு கிழக்கு மாவட்டத்தின்
அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

20/05/2024
*கோவை மண்டல சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் "வெற்றியை நோக்கி " உலக கல்வி மற்றும் மார்க்க கல்விக்கான வழிகாட்டுதல் ந...
19/05/2024

*கோவை மண்டல சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் "வெற்றியை நோக்கி " உலக கல்வி மற்றும் மார்க்க கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி *ஈரோடு,பெருந்துறை ரோடு,EB நகர் மஸ்ஜிதே அமீர்* பள்ளிவாசலில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
*இன்று (19/ 05/ 2024) ஞாயிற்றுக்கிழமை*,
4 ம் நாள் காலை முதல் மாலை வரை
*முனைவர்.ஹுசைன் பாஷா*
தலைமை பிரதிநிதிகள்,தமுமுக
*கோவை. E.உமர் ஹாஜியார்*
மாநில பொருளாளர்
தமுமுக மமக
*வழக்கறிஞர். ஜெய்னுலாபுதீன்*
தலைமை நிலைய செயலாளர், மமக
ஆகியோர் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

இந்நிகழ்வில்
*A சித்தீக்*
மாவட்ட தலைவர்
தமுமுக மமக
*S.முஹம்மது லரீப்*
தமுமுக மாவட்ட செயலாளர்
*B.சலீம்*(பொறுப்பு)
மமக மாவட்ட செயலாளர்
*பவானி முஹம்மது*
மாநில தொண்டர் அணி செயலாளர்
*ஆட்டோ P.சாகுல் அமீது*
மமக,மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்
*அஹமது ஃபயாஸ்*
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்.
*M.சாகுல் ஹமீது*
கிழக்கு மாவட்ட தமுமுக துணை செயலாளர்
*சாகுல் ஹமீது*
ஈரோடு மேற்கு மாவட்ட துணை தலைவர்
SMI மாவட்ட செயலாளர்
*E.முபாரக்*
SMI மாவட்ட பொருளாளர்
*சலீம்*
மற்றும்
கோவை, நீலகிரி, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் இருந்து 9,10,11,12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் வெளியீடு:-
*TMMK IT WING*
*ERODE EAST DIST*

08/05/2024

தீய சூழ்ச்சி அதற்குரியவனைத் தவிர மற்ற எவரையும் சூழாது. அல்லாஹ்வின் வழிமுறைக்கு எந்த மாற்றத்தையும் ஒரு போதும் நீர் காணமாட்டீர் இன்னும் அல்லாஹ்வின் நடைமுறைக்கு ஒரு போதும் எந்த திருப்பத்தையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் :35-43)

06/05/2024
06/05/2024

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்களது வாழ்வில் இந்த வெற்றி பயணம் தொடரட்டும். இத்தகைய வெற்றி முழக்கத்தோடு, வாழ்கையில் வீருநடை
போட்டு, முன்னேறிச் செல்லுங்கள்!

மிக முக்கியமாக, நினைந்த மதிப்பெண்
எடுக்க முடியாதவர்கள் மற்றும் தோல்வியுற்றமாணவர்கள், இதனை நிரந்தர தோல்வியாகக் கருதாமல், உங்களது வெற்றி தாமதமாகிறது என எண்ணி, மனம் தளராமல், அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த பயிற்சியில் ஈடுபட்டால்,வெற்றி நிச்சயம். அதற்குப்
பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க
வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பிள்ளைகள் மனவுறுதி கொண்டு செயல்பட வைப்பது ஆசிரியர்களின் கடமையும் கூட.

இந்தத்தருணத்தில், மீண்டும் ஒருமுறை
அனைத்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், அவர்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களும், மனதார பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

06/05/2024

| மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Village Cooking Channel தாத்தாவை நலம் விசாரித்த ராகுல் காந்தி - வீடியோ வெளியிட்டு நன்றி கூறினார்.

| | Rahul Gandhi

05/05/2024

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ஜெயக்குமார் தனசிங் படுகொலைக்குக் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை செய்தி.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். நீண்டகால காங்கிரஸ் பாரம்பரியத்தைக்
கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது நெல்லை மாவட்டத்தின் கிழக்கு மாவட்ட தலைவராகத் திறம்படச் செயலாற்றி வந்தவர்.

இரண்டாம் தேதி முதல் ஜெயக்குமார் மாயமானதாக அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருக்கிறார். கடந்த மாதம் ஜெயக்குமார் தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக காவல்துறையில் புகார் அளித்து இருந்ததாகவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் இன்று ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளும் என்று நெல்லை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அவர்
முன்னரே அளித்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவல்துறையின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக களப்பணி செய்தவர். இவரது படுகொலை விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி


| | | |

30/04/2024

| “இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை!” -ஹவாஹிருல்லா, மமக தலைவர்

| | |

11/04/2024

| “மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவில் தேர்தல்களே நடக்காது!”

பொருளாதார அறிஞரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகால பிரபாகர் கருத்து

| | |

அல்லாஹ், எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்ல அமல்களை ஏற்றுக் கொள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
11/04/2024

அல்லாஹ், எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்ல அமல்களை ஏற்றுக் கொள்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

ஈரோடு பாராளுமன்ற பிரச்சார கூட்டம் :-I.N.D.I.A.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவு பெற்ற...
03/04/2024

ஈரோடு பாராளுமன்ற பிரச்சார கூட்டம் :-
I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவு பெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில்
தேர்தல் பிரச்சார கூட்டம்
இன்று(03/04/24)
புதன்கிழமை
காலை 10 : 30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் A.சித்தீக் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல் வெளியீடு :-
TMMK IT WING
ERODE EAST DIST

02/04/2024
இஃபதார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி :-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு ம...
02/04/2024

இஃபதார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி :-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ரஹீமா சங்கு நகர் 32 வது வார்டு கிளை சார்பாக புனிதமிகு ரமலான் மாதத்தின் (இஃப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 31/03/2024 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06:00 மணியளவில் சங்குநகர் 32 வது வார்டு கிளை அலுவலகம் மேல் மாடி கிளை தலைவர் J.சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புரை :-
கிளை தமுமுக செயலாளர்
ஷாஜகான்

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் :-
தமுமுக கிளை து.செயலாளர்கள்
முஹம்மது, சையது

முன்னிலை :-
மமக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் S.அமீர், P.ஆட்டோ சாகுல், மனிதநேய வணிகர் சங்க மாநில து.செயலாளர் S.இலியாஸ், மாவட்ட து.தலைவர் S.சுல்தான் அலாவுதீன், தமுமுக மாவட்ட து.செயலாளர் M.இஸ்மாயில், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் G.முஹம்மத் உமர்.

சிறப்பு விருந்தினர்கள் :-
A.அக்பர் அலி
தலைமை பிரதிநிதி & ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்.
ஜெகதீஷ்
31வது வார்டு அதிமுக கவுன்சிலர்
அபூபக்கர் சித்திக்
மஸ்ஜித் ஹஸனா பள்ளி வாசல் முத்தவலி.
காங்கிரஸ் சதாம் பாய்

ரமலான் & இஃபதார் மகத்துவம் பற்றிய
சிறப்புரை :-
A.அக்பர் அலி
தலைமை பிரதிநிதி &
ஈரோடு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்.
B.சலீம் மமக மாவட்ட செயலாளர்

நன்றியுரை :-
இஸ்மாயில்
மற்றும்
கிளையின் அனைத்து நிலை நிர்வாகிகள், ஜமாத்தார்கள்,ஊர் பொது மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல் வெளியீடு :-
TMMK IT WING
ERODE EAST DIST

*I.N.D.I.A.  கூட்டணியில்* அங்கம் வகிக்கும் *மனிதநேய மக்கள் கட்சி* யின் ஆதரவு பெற்ற,திராவிட முன்னேற்றக் கழகத்தின் *ஈரோடு ...
22/03/2024

*I.N.D.I.A. கூட்டணியில்* அங்கம் வகிக்கும் *மனிதநேய மக்கள் கட்சி* யின் ஆதரவு பெற்ற,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் *ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்* *கே.இ.பிரகாஷ்* அவர்களின் வேட்பாளர் *அறிமுக கூட்டம் மற்றும் திமுக செயல்வீரர்கள் கூட்டம்* இன்று(22/03/24)
மாலை 5 : 30 மணியளவில் ஈரோடு மேட்டுகடை, தங்கம் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் *மனிதநேய மக்கள் கட்சி* யின் சார்பில் மாவட்ட தலைவர்
*A.சித்தீக்*
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில்
மமக மாவட்ட செயலாளர்
*B.சலீம்*
தமுமுக மாவட்ட செயலாளர்
*S.முஹம்மது லரீப்*
மமக மாவட்ட பொருளாளர்
*K.M.சகுபர் அலி*
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்
*ஆட்டோ P.சாகுல் அமீது*
மமக மாவட்ட துணை செயலாளர்கள்
*A.சாகுல் ஹமீது*
*M.இஸ்மாயில்*
தமுமுக மாவட்ட து.செயலாளர்
*M.சாகுல் அமீது*
மற்றும் *44வது வார்டு புதுமை காலனி கிளை யின் நிர்வாகிகள்* மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் வெளியீடு
*TMMK IT WING 🎤✒️*
*🎥📷ERODE EAST DIST*

21/03/2024
*ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமையகம் வருகை:-**I.N.D.I.A. கூட...
21/03/2024

*ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமையகம் வருகை:-*
*I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின்* ஆதரவு பெற்ற ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர்
*சகோ. K.E.பிரகாஷ்*
அவர்கள்
இன்று(21/03/24) இரவு
08 : 30மணியளவில் *மனிதநேய மக்கள் கட்சி* யின் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகிற *பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டு வருகை புரிந்த* அவரை மமக மாவட்ட தலைவர்
*A.சித்தீக்*
மமக மாவட்ட செயலாளர்
*B.சலீம்*
தமுமுக மாவட்ட செயலாளர்
*S.முஹம்மது லரீப்* மாவட்ட பொருளாளர்
*K.M.சகுபர் அலி* ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
திமுக வேட்பாளர்
*K.E.பிரகாஷ்* அவர்களும் மாவட்ட தலைவர்
*A.சித்தீக்* அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மமக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் *ஆட்டோ P.சாகுல் அமீது*
*S.அமீர்*
மமக வணிகர் சங்க து. செயலாளர்
*S.இலியாஸ்*
தமுமுக மருத்துவ சேவை அணி துணை செயலாளர்
*A.Mபௌஜூல் ஹஸன்*
மற்றும் *மாவட்ட துணை & அணி நிர்வாகிகள்*
*பெரிய அக்ரஹாரம் பகுதி கிளை நிர்வாகிகள்* அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல் வெளியீடு :-
*M.சையது முஸ்தபா*
*தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்*
*ஈரோடு கிழக்கு மாவட்டம்*

*32 வது வார்டு ரஹீமா சங்குநகர் கிளை ஆலோசனைக் கூட்டம் :-**தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்*& *மனிதநேய மக்கள் கட்சி* யின...
17/03/2024

*32 வது வார்டு ரஹீமா சங்குநகர் கிளை ஆலோசனைக் கூட்டம் :-*
*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்*& *மனிதநேய மக்கள் கட்சி* யின் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட *32 வது வார்டு ரஹீமா சங்குநகர்* கிளையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கிளை தலைவர்
*J.சலாவுதீன்* தலைமையில் நடைபெற்றது.

கிராஅத் :-
*அலாபு*
கிளை மமக செயலாளர்

முன்னிலை :-
*P.ஷாஜகான்*
கிளை தமுமுக செயலாளர்
*K.தௌஃபீக்*
கிளை துணை தலைவர்
*A.சையது,*
*Y.முஹம்மது*
கிளை தமுமுக துணை செயலாளர்கள்
*ஜபருல்லா*
*ஷாஜகான்*
மமக கிளை துணை செயலாளர்கள்

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-
*தீர்மானம் :-01)*
இந்த வருடம் ரமலான் மாத ஃபித்ரா,சதக்கா, ஜக்காத் ஆகியவை வசூல் செய்து *ஃபித்ரா அரிசி,சேமியா,மைதாபாக்கெட் ஆகியவை அடங்கிய கிட்* ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது.

*தீர்மானம் :-02)*
புதிய உறுப்பினராக *ஆபித்தாகிர்* என்பவர் கிளையில் சேர்க்கப்பட்டு *தமுமுக துணைச் செயலாளராக* கிளை நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டார்.

*தீர்மானம் :-03)*
31/03/24 அன்று கிளை
சார்பில் இஃப்தார் விருந்து(100 நபர்களுக்கு)

*தீர்மானம் :-04)*
கிளையின் அடுத்த ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல் வெளியீடு :-
*TMMK IT WING*
*ERODE EAST DIST*

17/03/2024

குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் ரமலானை முன்னிட்டு அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகத் தெரிகிறது. அத்தோடு இல்லாமல் வாக்குவாதம் செய்து வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு இலங்கை மாணவர் உட்பட 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி இருக்கும் ‘ஏ’ பிளாக்கில் நடந்துள்ளது. முஸ்லிம் மாணவர்களின் மடிக்கணினிகள், அலைப்பேசிகள் உடைமைகள் போன்றவற்றையும் வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி உள்ளது. தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதாகவும் நான்கு பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

குற்றவாளிகளைக் கைது செய்வதில் குஜராத் மாநில அரசு போதிய முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. நமது நாட்டின் விருந்தினர்களாகக் கல்வி பயில வந்துள்ள மாணவர்கள் புனித ரமலான் மாதத்தில் தமது மத வழிப்பாட்டை தமது தங்குமிடத்தில் நடத்தியதைப் பொறுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர்களிடையே எந்த அளவிற்கு மதவெறி புகுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக இது அமைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டு இருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறோம். குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தவும் தனிமனிதவழிபாட்டு உரிமையைக் காக்கவும் அரசு உரிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

இப்படிக்கு
எம் .எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

| | |

17/03/2024
*புதுமைகாலனி கிளை ஆலோசனைக் கூட்டம் :-**தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்*& *மனிதநேய மக்கள் கட்சி* யின் ஈரோடு கிழக்கு மா...
17/03/2024

*புதுமைகாலனி கிளை ஆலோசனைக் கூட்டம் :-*
*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்*& *மனிதநேய மக்கள் கட்சி* யின் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட *44 வது வார்டு புதுமை காலனி* கிளையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கிளை தலைவர்
*S.சையது முஸ்தபா* தலைமையில் நடைபெற்றது.

முன்னிலை :-
*A.அப்துல் அஜீஸ்*
மாவட்ட MTS துணை செயலாளர்.
மற்றும் புதுமை காலனி கிளை செயலாளர்கள், நிர்வாகிகள்.

இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர்
*A.சித்திக்*
தமுமுக மாவட்ட செயலாளர்
*S.முஹம்மது லரீப்*
மமக மாவட்ட செயலாளர்
*B.சலீம்*
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் மமக
*ஆட்டோ P.சாகுல் அமீது*
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :-
*தீர்மானம் :-01)*
சென்ற வருடம் போல இந்த வருடம் ரமலான் மாத ஃபித்ரா,சதக்கா, ஜக்காத் ஆகியவை வசூல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது.

*தீர்மானம் :-02)*
வருகிற (07/04/2024) அன்று ஏழை எளிய மக்களுக்கு ஃபித்ரா அரிசி மற்றும் சேமியா பாக்கெட் வழங்குவது.

*தீர்மானம் :-03)*
ஏழை எளிய சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடைகளை வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல் வெளியீடு :-
*TMMK IT WING*
*ERODE EAST DIST*

11/03/2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க ம ம க செயற்குழு திருச்சியில் கூடுகிறது

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக அவசர தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் மார்ச் 13.2024 (புதன்) அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.

தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ச ம உ தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
ப அப்துல் சமது
பொதுச் செயலாளர்

ஈரோடு கிழக்கு மாவட்டம் 15வது வார்டு நஞ்சப்பா நகர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பு செயலாளராக சகோதரர் காஜாமைதீன் அவ...
11/03/2024

ஈரோடு கிழக்கு மாவட்டம் 15வது வார்டு நஞ்சப்பா நகர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்பு செயலாளராக சகோதரர் காஜாமைதீன் அவர்கள் நியமனம் செயல்பட்டுள்ளார்.

சகோதரரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வது வார்டு நஞ்...
11/03/2024

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வது வார்டு நஞ்சப்பா நகர் கிளையின் நிர்வாகக்கூட்டம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை (10.03.2024) இரவு 08:00 மணி அளவில் நடைபெற்றது.

கிராஅத் :-
அப்துல் ரஜாக்
தமுமுக கிளை செயலாளர்

தலைமை :-
கா.அக்பர்
கிளை தலைவர்

முன்னிலை :-
ப.சலீம்
மமக மாவட்ட செயலாளர்

சிறப்பு அழைப்பாளர் :-
க.முஹம்மத் உமர்p
தமுமுக IT WING கோவை மண்டல செயலாளர்

இக்கூட்டத்தில் 15வது வார்டு நஞ்சப்பா நகர் கிளையின் மனிதநேய மக்கள் கட்சி செயலாளராக M.காஜாமைதீன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் :- 1
மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றுவது, நலத்திட்ட உதவிகள் செய்வது, மரக்கன்று நடுவது மற்றும் அதிகப்படியான உறுப்பினர்கள் இணைப்பது.

தீர்மானம் :- 2
எதிர் வரக்கூடிய ரமளானை முன்னிட்டு ஃபித்ரா, சதக்கா, ஜக்காத் வசூல் செய்து அதிகப்படியான நபர்களுக்கு கொடுப்பது.

தீர்மானம் :- 3
எதிர் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மாநில தலைமை எடுக்கக்கூடிய முடிவுக்கு கட்டுப்பட்டு களப்பணி செய்வது.

மேலும் இக்கூட்டத்தில் கிளை பொருளாளர் அப்துல் ஹமீது, கிளை துணைத் தலைவர் ப.அல்தாப், கிளை தமுமுக துணை செயலாளர்கள் முஹம்மது இஸ்மாயில் K.சஹிருல்லா, கிளை மமக துணை செயலாளர் சையது முஸ்தபா மற்றும் கிளை மருத்துவ சேவை அணி செயலாளர் தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

07/03/2024

வீட்டின் நாட்டின் கண்களான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை

மாறிவரும் நவீன யுகத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

’பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று எடுத்தியம்பினார்கள் நபிகளார்.

"பெண்ணின் பெருந்தக்க யாவுள" என்று வள்ளுவரும் போற்றுகிறார்.

குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை, பாலியல் சீண்டல்கள் போன்ற கொடுமைகளிலிருந்து பெண்களை காப்போம். பெண்கள் சுமையல்ல; அவர்கள் சுமைதாங்கிகள்.
இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பெண்களின் உரிமைக்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு, வளமான பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும், அவற்றை சீர்குலைக்கிற கொள்கைகளுக்கு எதிராகவும் முன்னிலும் வீரியமாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காணுவோம்.

மகளிர் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி.


Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Tmmk Media - Erode East posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tmmk Media - Erode East:

Videos

Share


Other Media/News Companies in Erode

Show All