08/07/2024
தேவகோட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளின் பட்டப்பெயர்களில் சில கீழ்கண்டவாறு உள்ளன:
1. அறப்பணிகளால் வந்த பெயர்கள்:
உதாரணமாக தண்ணீர்பந்தலார் வீடு, பசுமடத்தார் வீடு, சத்திரத்தார் வீடு ,வள்ளல் மேனா வீடு, காலேஜ் செட்டியார் வீடு
2. கோயில் திருப்பணி செய்ததால், ஆன்மீக ஈடுபாட்டால் வந்த பெயர்கள்:
உதாரணமாக வன்றொண்டர் நாராயணன் செட்டியார் வீடு, தேசிகர் அண்ணாமலைச் செட்டியார் வீடு, திருச்சுழியார் வீடு, திருப்புணவாசலார் வீடு, கோவிலூரார் வீடு, பால்காவடியார் வீடு, கோட்டூரார் வீடு, குன்னக்குடியார் வீடு, திருவண்ணாமலை பழநியப்பசெட்டியார் வீடு, வெண்ணைமலை மைனர் வீடு, மடத்துக் குப்பாஞ்செட்டியார் வீடு,
3. முன்னர் வாழ்ந்த ஊரால் வந்த பெயர்கள்:
உதாரணமாக உதையாச்சியார் வீடு, புலிகுளத்தார் வீடு, செங்கற்கோயிலார் வீடு, சித்திவயலார் வீடு, சிவரக்கோட்டையார் வீடு, கல்லுப்பட்டியார் வீடு, கண்ணங் கோட்டையார் வீடு, தெண்ணீர்வயலார் வீடு, கடகம்பட்டியார் வீடு, செப்பவயலார் வீடு, செம்பொன்மாரியார் வீடு, ஓலைக்குடியார்வீடு, காரைக்குடியார் வீடு, சேந்தனியார் வீடு, ஆலம்பட்டார் வீடு, எழுவன்கோட்டையார் வீடு, மி(வி)த்ராவயலார் வீடு, தாணிச்சாவூருணி, சிதம்பரம் செட்டியார் வீடு, பக்கிரிப்பட்டியார் வீடு, மீன் புசலார் வீடு
4. செய்த தொழில் மற்றும் தொழில் செய்து வந்த ஊர்கள், வாழ்ந்த ஊர்களால் வந்த பெயர்கள்:
உதாரணமாக பவானியார் வீடு, கோயமுத்தூரார் வீடு, கூலிம்கார வீடு(மலேசியா), வங்காளத்தார் வீடு, மேட்டுக்கடையார் வீடு, தொண்டியார் வீடு, பாண்டி குமரப்பசெட்டியார் வீடு, மரக்கடையார்வீடு, செக்கடி வீடு, கரூரார் வீடு, நாமக்கல்லார் வீடு, குருநாக்கல்லார் வீடு (கொழும்பு), காங்கேயத்தார் வீடு, பாத்திரக்கடையார் வீடு,
கண்டி மு.வீடு, செய்கோன் ராம.வீடு, கொழும்பு குப்பாஞ்செட்டியார் வீடு, தாப்பா நாச்சியப்பசெட்டியார் வீடு (மலேசியா), மீன்லா குப்பான் செட்டியார் வீடு (பர்மா), செல்லஞ் ஜவுளி ஹால் வீடு, அம்மன் ஸ்டோர் வீடு, மீனாட்சி ஸ்டோர் வீடு, முல்லை பதிப்பகம் முத்தையா வீடு, வானதிப்பதிப்பகம் வீடு, அருணோதயம் வீடு, இன்ப நிலையம் வீடு, குமரன்பதிப்பகம் வீடு, பேப்பர் கிங் செந்தில்நாதன் செட்டியார் வீடு, பரங்கிப்பேட்டையார் வீடு, ரெங்கோன் சீனிச் செட்டியார் வீடு, பட்டணம் அழகப்ப செட்டியார் வீடு, மிஷின்கார வீடு, லண்டன் சுப்பையா செட்டியார் வீடு, அலமு வீடியோஸ் வெங்கடாசலம் செட்டியார் வீடு, துபாய் சொக்கலிங்கம் செட்டியார் வீடு, ஸ்டேட் எக்ஸ்பிரஸ் இராமநாதன் செட்டியார் வீடு, கோரங்கியார் வீடு, மைசூர் காவன்னா வீடு, டைரி அரு வீடு, காபித்தூள் வள்ளியப்பச்செட்டியார் வீடு, தறி கண்ணப்ப செட்டியார் வீடு, கள்ளிக்கோட்டையார் வீடு, முறுக்கு உமையாச்சி வீடு, மோகனூரார் வீடு, எடப்பாடியார் வீடு, சோமனூரார் வீடு, ஈரோடு. மீயன்னா வீடு, மயிலை கிட்டுச்செட்டியார் வீடு, ஏற்காடு வெள்ளையன் செட்டியார் வீடு, சிங்கப்பூர் சேக்கப்ப செட்டியார் வீடு, வில்லியம் சுப வீடு, பரோடா மேனா வீடு, காலி குட்டையன் செட்டியார் வீடு,
5. கொள்கையால் வந்த பெயர்கள்:
உதாரணமாக காந்தி நாவன்னா வீடு, ஐ.என்.ஏ.சோனா வீடு, காந்தி முத்துக்கருப்பன் செட்டியார் வீடு
6. செட்டியார் அல்லது ஆச்சியின் உருவத்தால் ஆற்றலால், குணத்தால், உடலமைப்பால் வந்த பெயர்கள்:
உதாரணமாக கவிராயர் மங்களாச்சி வீடு, பல்லு முருகன் செட்டி வீடு, ஞானியார் வீடு, காட்டுச்சிங்கம் (Cards king) வீடு, சுந்தரேசப் பிரபு வீடு, மைனர் வீடு, குட்டையன் செட்டியார் வீடு, கருத்த பழனியப்ப செட்டியார் வீடு, கருத்த வெங்கிடாசலம் செட்டியார் வீடு, எட்டு வீட்டு உமையாச்சி வீடு, கத்திரிக்காய் பெத்த பெருமாள் செட்டியார் வீடு, கஞ்சித்தாழியார் வீடு, கட்ட முருகப்ப செட்டியார் வீடு, டோப்பா வீடு, அவுட்டா லேனா வீடு, சொக்க வெள்ளி (சொக்கமல்லி) வீடு, பிரில்லியண்ட் வீடு, கிழவன் செட்டி வீடு, தலைவிரிச்சான் வீடு, காக்காச்சியார் வீடு, மூக்குறிஞ்சியார் வீடு, குண்டு குழந்தையன் செட்டியார் வீடு, கொசு குப்பான் வீடு, பல்லுக்குழந்தையன் செட்டியார் வீடு, இங்கிலீஷ் மாணிக்கஞ் செட்டியார் வீடு, பகல்வேஷம் நடேசன் செட்டியார் வீடு, ஆபிசர் கமலி ஆச்சி வீடு, மாவாட்டி சுப்பஞ் செட்டியார் வீடு, செகுட்டு அண்ணாமலை செட்டியார் வீடு, நாய் வள்ளியப்ப செட்டியார் வீடு, கோழிக்குஞ்சார் வீடு, பான்ஸ் லேனா வீடு, பவுடர் காசி செட்டியார் வீடு, ஊமையாச்சி வீடு, பெரலீஸ் காவன்னா வீடு, திருகுமனை ஆச்சி வீடு, விளக்கெண்ணை செட்டி வீடு,
7. கிராமம் வைத்திருந்ததால் அல்லது பிரிட்டிஷாரிடம் கிராமத்தை வாங்கியோ அல்லது ஜமீன் சொத்து அடகில் பிடிபட்டிருந்ததாலோ வந்த பெயர்கள்:
உதாரணமாக துடுப்பூர்- துடுப்பூரார் வீடு, ரெட்டையம்பாடி - ரெட்டையம்பாடி ஜமீன்தார் வீடு, தேவகோட்டை ஜமீன்தார் வீடு, பில்லூர் ஜமீன்தார் வீடு, பரவை அரு. வீடு, தேவாரம் ஜமீந்தார் வீடு, மாங்குடியார் வீடு, காச்சான் வீடு, மாத்துக்கண்மையார் வீடு
8. வீட்டின் அமைப்பு அல்லது ஏதேனும் ஓர் அடையாளத்தால் வந்த பெயர்கள்.
உதாரணமாகக் கம்பி அடைச்ச வீடு, கண்ணாடியார் வீடு, நெல்லிமரத்தார் வீடு, வாழை மரத்தார் வீடு, கீழ வீடு, மேல வீடு, தெற்கு வீடு, கக்குளத்தார் (கைக்கோளர்-முதலியார்) வீடு, மாமாங்கத்தார் வீடு, கல்லுவரி நாகம்மை ஆச்சி வீடு, தென்னைமரத்தார் வீடு, மாமரத்து மீனி ஆச்சி வீடு, இரண்டாங்கட்டார் வீடு, குண்டுக்கரையார் வீடு, பொந்தலியார் வீடு, சாவக்கட்டி வீடு, கோலங்கா வீடு, மானி ஐயா வீடு, பத்துப்பிள்ளைக்கார வீடு,
9.விலாசத்தால் (அ) ஆதிமுதல் செட்டியாரின் பெயரால்,ஆச்சியின் பெயரால் வழங்கப்படும் வீட்டுப் பெயர்கள்
உதாரணமாக சி.பெரி.வீடு, வள்ளிசெட்டி வீடு, அரு.லெ.வீடு, M.L.M வீடு, AL.AR வீடு, உ.மு வீடு, இரட்டை அரு வீடு, சின்னவடுகன் செட்டி வீடு, கும.கரு வீடு, வயிநாகரம் வீடு (வயி.நாக.ராம., அமராவதிப்புதூரிலும், தேவகோட்டையிலும் உள்ளனர்), நாகசுரம் (நாக.சு.ராம.) வீடு, சுசெலெ வீடு (சு.செ.லெ.), மா.அரு வீடு, ஆண்டான் செட்டி, தொத்தஞ்செட்டி வீடு, அப்பி ஆச்சி வீடு, அப்பு லேனா வீடு, செல்லஞ்செட்டி வீடு, மெ.வ.மா.வீடு, குஞ்சான் செட்டியார் (குஞ்சாவடியார்) வீடு, ஏகப்ப செட்டியார் வீடு, மு.க.மு வீடு, நைனப்பையா வீடு, பெரிச்சியப்பச்செட்டியார் வீடு, சி.க. வீடு, வ.அள. வீடு, லெ.மு.மு. வீடு, லெ.சுப. வீடு, மு.ப. வீடு, எ.பெரி.மா. வீடு,
நா.லெ.வீர.(N.L.VR) வீடு, நாக.பழ.வீடு, ஆவி.க (AV.K) வீடு, அ.கண.வீடு, நன்னி செட்டி வீடு, பள.செ.வீடு, காடப்பையா வீடு, கதி.பழ.(KT.PL) வீடு, ஆத.மு.வீடு, ராம.லெ.ராம.லெ (Rm.L.Rm.L)
வீடு, மு . ராம. சுப (M.RM.SP.) வீடு, செ.சுப.செ. (SSS) வீடு, கி. கரு வீடு, பெரிய சேவுகஞ் செட்டியார் வீடு
10. தற்காலத்தில் கலைத்துறையால், வகித்த பதவியால் வந்த பெயர்கள்:
ஜட்ஜ் வீடு, அசத்தல் இராமநாதன் வீடு, ஐ.ஏ.எஸ்.வீடு, இசை இல்லம் வீடு, சங்கீதம் காவன்னா வீடு, சினிமா அடைக்கப்ப செட்டியார் வீடு, சேர்மன் ராம.வெள்ளையன் செட்டியார் வீடு, அரு.சோ.வீடு, லேனா தமிழ்வாணன் வீடு, பாடுவார் சோனா வீடு, வக்கீல் சோனா வீடு, டாக்டர் மீனாட்சி சுந்தரம் செட்டியார் வீடு, டென்னிஸ் அரு வீடு, எம்பி அட்டப்பட்டி அருணாச்சலம் செட்டியார் வீடு
தகவல்: Kailash PL
PC: Art by L Sendhil Kumaran
திருத்தங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
: Viswanathan Arunachalam via - Revive Chettinad