#CoimbatoreCorporation #kovai #coimbatore
ACC சிமெண்ட் ஆலை அருகில்
#Madukkarai
#kovai
#coimbatore
#coimbatorediaries
இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் கோவை- நஞ்சுண்டாபுரம்...காரணம் இதோ..
கோவை மாநகராட்சி 75 வது வார்டு நஞ்சுண்டாபுரம் பகுதி 19 வீதிகளையும், 15 சந்தையும் உள்ளடக்கிய பகுதி இப்பகுதியில் சிலர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நஞ்சுண்டாபுரம் நகர் நல பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். (09-06-2021) வரை 965 பேருக்கு பரிசோதனை செய்ததில் 680 பேருக்கு பாஸிடிவ் வந்துள்ளது. நஞ்சுண்டாபுரம் பகுதியில் இதுவரை 30 பேர் கொரோனாவால் இறந்து விட்டார்கள்.06/06/2021 பரிசோதனை மேற்கொண்டதில், சிலரது சளி மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரோனா உருமாறியது கண்டறிய பட்டுள்ளது..உடனடியாக இந்திய ஆராய்ச்சி கவுன்சில்க்கு அனுப்பிய அதிகாரிகள்,இந்த வகை கொரோனா வைரஸ் SARS - Cov 3 -covid 19 TNCBE என்றும், இந்த வகை ஒருவர் மூலம் மற்றவருக்கும் எளிதில் தொட்ற்ற
ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள்- அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது
ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ. கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன. கோவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையின் டீ