Sathuragiri iyarkai angadi

Sathuragiri iyarkai angadi இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப்பொருள்கள்,தேன் வகைகள்

சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்

அனைத்து முக ருத்ராட்சம் மற்றும் 108,54 மணிகள்கோர்த்தமாலைகள்கிடைக்கும்.சுத்தபடிகமாலைகள் கிடைக்கும் (வில்வம் ஓடு மற்றும் த...
20/02/2025

அனைத்து முக ருத்ராட்சம் மற்றும் 108,54 மணிகள்கோர்த்தமாலைகள்கிடைக்கும்.சுத்தபடிகமாலைகள் கிடைக்கும் (வில்வம் ஓடு மற்றும் துளசி மணி கோர்த்தும் தரப்படும்)


உருத்திராக்ஷம்பலன்கள்

ஒரு முகம்:

மிகவும் அரிதாக (நேபாளம்) கிடைப்பது; ஜாவா கிடைக்கும்.
ஒரு முக ருத்ராட்சம் (ஏகமுகிஉருத்ராட்சம்). இது சிவனுடைய உருத்திராட்சம் மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது. கிரக கட்டுப்பாடு - நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.

இரண்டு முக ருத்ராட்சம் :

சிவன் சக்தி இணைந்த சிவசக்திஉருத்ராட்சமாகபார்க்கப்படுகிறது இந்த இரு முக ருத்ராட்சம்.
பாவத்தைநீக்கவல்ல இந்த ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது. தம்பதியினர் இனிய இல்வாழ்வுக்கும் அணியலாம். கிரக கட்டுப்பாடு - சந்திரன்.

மூன்று முகம் உருத்திராட்சம்.

இந்த உருத்ராட்சத்தை ஆளும் தெய்வம் அக்கினி ஆளும் கோளாக சூரிய பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும்தன்னில் போட்டாலும் எரிப்பதுபோலவும்அதேவேளை தான் தூய்மையாக இருப்பது போலவும் இதை அணியும் நபருக்கு கடந்த பிறவி கர்மங்கள்அழிக்கப்பட்டு விடும். வாழ்வில் நடந்த, நடக்க இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்தும் விலகி துய்மைநிலையிற்பிறவியில்லாப்பெரு நிலை அடைவார்கள்.

நான்கு முகம் உருத்ராட்சம்.

நான்கு முக ருத்ராட்சத்த்தைஆளக்கூடியவர்பிரஹஸ்பதி; கோள் வியாழ பகவான். இதனை அணிபவர் ஆக்க சக்தியைபெறுவார். தன்னுள் இருக்கும் புத்தி கூர்மை, பேச்சுத் திறமை, சாமர்த்தியசாதூர்யங்களைவெளிப்படுத்தக்கூடியது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது. இதை முக்கியமாக மாணவர்கள்அணிவது உத்தமம்.

ஐந்து முகம் ருத்ராட்சம் .

ஐந்து முக உருத்ராட்சம்ருத்ரகாலாக்னியின்ஆளுமைக்குட்பட்டது. குரு பகவானின் கூடாத பலன்களைசரிசெய்யக்கூடியது. சிவனதுஆசியுடையதாக, மங்களத்தின்இருப்பிடமாகபார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம், பக்தி, சிறப்பாகும். மனம் அமைதியடையும், ஆத்மீக உயர்நிலை; ஜபம்; மந்திர உச்சரிப்பு என்பவற்றின்பலத்தைக் கூட்டி நல்ல நிலைமைக்கு இட்டுச்செல்லும். சிவனாசி உள்ள மணி.

ஆறு முகிஉருத்திராட்ஷம்.

ஆறு முக உருத்ராட்சம் செவ்வாய் பகவானை ஆளும் கிரகமாகக் கொண்டது. ஆளும் தெய்வம் முருகப் பெருமான். நம் அறிவு மேம்படவும், தலைமைப்பண்புகள் பெறவும், நேரிய சிந்தனைக்கும், அவசியமற்றஇச்சைகள்; மோகங்களைத்தவிர்க்கவும், இரத்தசம்பந்தநோய்களிலிருந்து ஆறுதல் பெறவும் இதை அணியலாம். பேரின்பத்தை பெற வழியை தேட இது உதவும்.

ஏழு முகம் உருத்ராட்சம்.

ஏழு முக உருத்ராட்சம் திருமகள், இலட்சுமி தேவியின் ஆளுமைக்கு உரியது. தேவி திருமகளையும், சப்தகன்னிகள், ஆகியோரைக்குறிக்கும்அம்சமுமாகும். இதனை அடையாளப்படுத்தும் கிரகம் வெள்ளியாகும். இந்த ருத்ராட்சத்தைஅணியும்போது பாசம், அன்பு, இல்லறம், பணம், நிதி சிக்கல்களில் இருந்து விடுபட்டு படிப்படியாக வாழ்க்கை முன்னேற்றம், பண,நிதி
நிலைமை உயர்வு ஆகியன ஏற்படும்.

எட்டு முகம் உருத்ராட்சம்.

எட்டு முக உருத்ராட்சகிரக ஆளுமை கேது பகவானுக்குரியது. ஆளும் கடவுள் விநாயகர் ஆவார். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின்ஆசியுண்டு. எட்டு முகிகடைகளை அகற்றும், வெற்றியைக்குவிக்கும்.
பார்க்கப்படுவதால் புத்தி, நுண்ணிய அறிவு, செல்வ வளம் என்பனஅதிகரிக்கும்.

ஒன்பது முக உருத்ராட்சம்.


ஒன்பது முக உருத்ராட்சம் இராகு பகவான் ஆளுமைக்குரியது. ஆளும் தெய்வம் துர்க்கை (சக்தி).
சக்தி அம்சமாகையால் இதை அணிவதனால் உடல், மனோ சக்தி கூடும். செயல் திறன் கூடும். பில்லி சூனியதுன்பங்கள்தாக்காது. மிக ஆற்றல் மிக்க மணியாகும். உலகத்துஇன்பங்களையும் ஆன்ம முன்னேற்றத்தையும் தந்து, நற்கதிக்குக் கொண்டு செல்லும்.

பத்து முக உருத்ராட்சம்.

மகாவிஷ்ணுவின் அம்சமாக பத்துமுகஉருத்ராட்சம்பார்க்கப்படுகிறது. இது எல்லாக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மிக சக்தி வாய்ந்தது. எல்லாக்
கிரகங்களினால்எற்படும்தீவினைகளிலிருந்து காக்கும். இது ஒரு பாதுகாப்புக்கவசத்தைப்போன்றது இதை அணிபவருக்கு ஏற்படும் தீய தாக்கங்கள் (பில்லி, சூனியம், கண்திருக்ஷ்டி, எதிர்மறை மனத்தாக்கங்கள்) எல்லாவற்றையும் உடைத்தெறியக்கூடியது. இதை அணிபவருக்கு நீதிமன்ற, காணி வழக்குகள் மற்றும் கடன் வழக்குத்தொல்லைகளினின்றும் காக்கும். குடும்பம் தலைமுறை தலைமுறையாகச்செழிக்கும்.

பதினொரு முக உருத்திராட்சம்.

இந்த மணியானதுசிவவடிவங்களாகியஅநுமன் உட்பட 11 உருத்திரர்களால்ஆளப்படுகிறது. இதை அணிவதனால் 1000 அஸ்வமேதயாகங்கள் செய்த பலனுண்டாகும் என வேத நூல்கள் தெரவிக்கின்றன. இதனை அணிவதனால் உயர்ந்த ஆத்மீகஅறிவும்; தெய்வீக சிந்தனையும்; நடுநிலையானமனமும் உயர்ந்த புத்திக்கூர்மையும்; புலன்களின் மீதான கட்டுப்பாடும்; பேச்சாற்றலும்; பயமின்மையும்ஆற்றலும் உருவாகும். மேலும் ஜபதவதியானங்களுக்கும், எல்லாக்கிரககட்டுப்பாடுகளுக்கும் நல்லது.

பன்னிரண்டு முக உருத்திராட்ஷம்.

இது முற்றிலும் சூரியனைச் சார்ந்த மணியாகும். ஆளும் தெய்வமும் ஆளும் கிரகமும் சூரியன் ஆகும். இது சூரியனைப் போன்ற பிரகாசம், ஆளுமை, தலைமை, ஆற்றல் தரும். பயம், நம்பிக்கையின்மையைபோக்கும். எவரையும் சார்ந்து நிற்கும் தன்மையினை இல்லாமல் ஆக்கும்.
நோயில்லா உறுதியான உடலமைப்பைத் தரும். சூரிய கிரகத்தால் ஏற்படும் குறைகள் சிக்கல்களை நீக்கும்.

பதின்மூன்று முக உருத்திராட்சம்.

இந்த மணியானதுகாமதேவனால்ஆளப்படுவது. இதனுடன் தொடர்பு பட்ட கிரகங்கள் வெள்ளியும்சந்திரனும் ஆகும். உலக இன்பங்களை, ஆசாபாசங்களை நேரிய வழியில் சரியான முறையிற்துய்த்துஅவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள இந்த உருத்திராட்சம் உதவி செய்யும். அதேவேளைசித்தர்கள் இந்த 13 முகியைசித்துக்களைப் பெற்று குண்டலினியைவிழிப்புறச் செய்ய உபயோகித்தாககூறுவர்.

பதினான்குமுகி உருத்திராட்சம்.

இது ஒரு அபூர்வமானஉருத்திராட்சமணியாகும். இதைத் 'தேவமணி' என்றும் கூறுவர். இது ஆஞ்சேயப் பெருமான் அருளாட்சிக்கு உட்பட்டது. ஆஞ்சனேயர்நவக்கிரகங்களிடம் பெற்ற வரத்தின்படி, ஆஞ்சனேயர்கட்டுப்பாட்டிலிருக்கும்இந்தத்தேவமணியானது, நவக்கிரகங்களினது தீய செயற்பாடுகளில்
இருந்தும் காக்கும். முக்கியமாக செவ்வாய், சனி கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைத்தடுக்கும். ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி மற்றும் குறிப்பாக சனி செவ்வாய் தோஷங்கள்உள்ளவர்கள்அணிவதுசிறப்பைத் தரும். தூய்மையான பக்தி மனோபாவத்தையும், தளராதவிசுவாசத்தையும், ஆண்மையையும், புலன்களின்கட்டுப்பாட்டையும் தரும் இந்த தேவமணி அருமையானது.

பதினைந்து முக உருத்திராட்சம்.

இது பசுபதிநாத்சிவனைஆளுமையாக கொண்ட உருத்திராட்சமாகும். புதன் கிரகத்தின் சம்பந்தம் உடையது. இது உலகத்தின் தேவைகளை எல்லாம் ஒருங்கே தரக்கூடியது. அதேவேளைஆத்மீகநாட்டத்தையும் தெய்வ உண்மைகளையும்தேடிப்போகச் செய்யும் தன்மையையும் கொண்டது. அநாகதச் (இருதய) சக்கரத்தை பேணிப் பாதுகாக்கும்தன்மையுடையது. குபேரனுக்கே செல்வம் வழங்கி, தான் பற்றற்றிருக்கும் யோக சிவனைப்போல வாழ வைக்கும் தன்மையுடையது. இதை அணியும் போது எல்லா மானுடர்களையும்நேசிக்கச் செய்யும் எண்ணத்தை இதயத்தில் உருவாக்கக்கூடியது. மன்னிக்கும்சுபாவத்தை ஏற்படுத்தும். தாராள சிந்தை, தர்மசிந்தனைகளை ஏற்படுத்தும். உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இதயத்தின் உயர்ந்த சிந்தனைகளூடாக ஆத்ம முன்னேற்றம் நோக்கி இட்டுச் செல்லும் தன்மையுடையமணியாகும்.

பதினாறு முக உருத்திராட்ஷம்.

இந்த முக உருத்திராட்சம் 'மகா மிருத்யுஞ்சய மணி' என்று அழைக்கப்படும். இது சிவனைமுதற்கடவுளாகக் கொண்டது. சந்திரனை ஆளும் கிரகமாகக் கொண்டது. இது அறம், பொருள், இன்பம், ஆரோக்கியம், வாழ்விற்
போதுமென்ற மனோபாவம் எல்லாம் தரக்கூடியது. இதை
அணிபவரைச்சுற்றிச்
சிவனருள் ஒரு பாதுகாப்புக்கேடயமாகச்செயற்பட்டு அவரை எதிர்மறை எண்ணங்கள்; தீய சக்திகள்; விபத்துக்கள்; நோய் துன்பங்கள்; கடன் வழக்கு என்பவற்றிலிருந்துபாதுகாக்கின்றது. சிவனருளையும், வெற்றியையும்தேவநேயத்தையும் தந்து வாழ்வில் வெற்றி தரும் இந்த உருத்திராட்சம் அதி உத்தமமானது.

பதினேழு முக உருத்திராட்சம்.

இது நவதுர்க்கைகளின் (சக்தியின்) ஆறாவதுவடிவமாகியகன்னித்தெய்வம்
கார்த்தியாயினியின் கட்டுப்பாட்டில் உள்ள உருத்திராட்சமாகும். காத்தியாயினி தேவி சனிக் கிரகத்தைக்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளாவாள். ஆகவே இந்த உருத்திராட்சம் சனியின் பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது. மனதிற்கு விரும்பிய வாழ்க்கைத்துணைய அடைய இது உதவி செய்யும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாது இந்த மணியானதுஅணியப்படும்போது இது எமதுவாழ்வின் நான்கு நிலைகளின் (பிரம்மச்சரியம்/இல்லறம்/வானப்ரஸ்தம்/துறவறம்) ஊடாகவும்எம்மை வழிநடத்தி இறுதியில் மோட்சப் பிராப்தி தரவல்லது. இது மட்டுமல்ல ஜபதவதியானங்களுடன் சேர்த்து இதைத்தரிக்கும்போது இது அஷ்டமாசக்திகளையும்; பல்வேறு உபசித்துக்களையும்தரக்கூடியது; இவற்றில் மனோரீதியில் இது தீர்க்கதரிசனத்தையும், டெலிபதி, எதிர்காலம் அறிதல், உருவாக்க ஆற்றல் சிந்தனை (creative intelligence)
போன்ற விடயங்களையும்உணரச் செய்யும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்த மணியானது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வளமான வாழ்வைத் தரும்.

பதினெட்டு முக உருத்திராட்ஷம்.

இந்த மணியானது; பூதேவி/ஶ்ரீதேவிசமேத ஶ்ரீநாராயணக் கடவுளின் ஒரு தேவியான பூதேவி (பூமித்தாய்)யின்ஆளுமைக்கு உட்பட்டது. பூமித்தாயைப் போல சகல உயிர்களிலும் பாரபட்சமின்றி அன்பு காட்டும் தன்மையும்; அவளது கருணையால் இந்த உருத்திராட்சம் அணிந்த ஒருவர் ஈடுபடும் எந்தக்காரியத்திலும்வெற்றியும், நிலம் சம்பந்தமான விடயங்களில் பெரும் இலாபங்களையும்ஈட்டித்தரவல்லது. உலகில் பெரும் செல்வங்களைக் குவிக்க கூடியது.

பத்தொன்பது முக உருத்திராட்சம்.

இந்த மணியானது ஶ்ரீமந்நாராணமூர்த்தியின்ஆளுமைக்குரியது. புதன் கிரகத்தின் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.
இந்த உருத்திராட்சம் அதியுயர்ந்த உருவாக்க, வெளிப்பாட்டு (creative, manifestation) சக்திகளைக் கொண்டது என 'கார்த்தியாயினி புராணம்' கூறுகிறது. இந்த மணியானதுதர்மத்துடன் கூடிய கல்வி, செல்வம், ஞானம், ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.
எமதுவாழ்வின்தர்மத்தையும்நோக்கத்தையும் புரிய வைக்கும் சக்தியுள்ள உருத்திராட்ஷம்இதுவாகும்.

இருபது முகி உருத்திராட்சம்.

இது படைப்புக் கடவுள் பிரம்மதேவரின் கட்டுப்பாட்டில் உள்ள உருத்திராட்சமாகும். பூமித் தாயின் தொடர்புடையது. அளவற்ற செல்வம், அறிவு, மூளைத்திறன், விரும்பியவற்றை அடைதல் ஆகியவை தரும். மனித இனத்துக்காக எதையாவது உருவாக்க, படைக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் உன்னதமான மணியாகும்.

இருபத்தொரு முக உருத்திராட்சம்.

மிகவும் அரிதான இந்த உருத்திராட்சம் தனாதிபதியும்வடக்குத்திக்பாலரானகுபேரபகவானுடையது. செல்வத்துக்கெல்லாம் செல்வம் தரும் மணியிது. இவ்வுலகின் சகல இன்பங்களையும், செல்வத்தையும் ஒருங்கே அள்ளித்தரவல்லது. பயணங்களின்போதுபாதுகாக்கும்தன்மையுடையது.
ஆளும் கிரகம் பூமாதேவியாகும்

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751


சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

நாட்டுமாடு நெய்.நாட்டுமாடு பாலில் இருந்து பாரம்பரிய முறைப்படி தயார் செய்யப்பட்ட சுத்தமான நெய் கிடைக்கும்.நெய் காய்ச்சும்...
20/02/2025

நாட்டுமாடு நெய்.

நாட்டுமாடு பாலில் இருந்து பாரம்பரிய முறைப்படி தயார் செய்யப்பட்ட சுத்தமான நெய் கிடைக்கும்.

நெய் காய்ச்சும் முறை:
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும்:
இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம். * அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும். * மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.

ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
நெய் உருக்கி மோர் பெருக்கி….
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

ஞாபக சக்தியை தூண்டும்,சரும பளபளப்பைக் கொடுக்கும்,கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே…
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். * கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். * நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது. * சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும். * உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.
நெய் நமக்கு ‘ஒஜஸ்’ என்கிற உயிர் சக்தியைக் கொடுக்கிறது.
நமது நினைவாற்றலுக்கும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
தேனைப் போலவே நெய்யும் நமது உடலின் திசுக்களுக்குள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்தது.
அனைத்து நோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி;ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை. இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

நாட்டுமாடு விபூதிதயாரிக்கும் முறை;அருகம்புல்லும் சேர்த்து உண்ட நாட்டு பசுவின் சணத்தை உருண்டைகளாக உருட்டி காயவைத்து, நெல்...
20/02/2025

நாட்டுமாடு விபூதி
தயாரிக்கும் முறை;அருகம்புல்லும் சேர்த்து உண்ட நாட்டு பசுவின் சணத்தை உருண்டைகளாக உருட்டி காயவைத்து, நெல் உமி கொண்டு கவசம் இட்டு பிறகு புடம் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுப்பது தான் தயாரிப்பு முறை ஆகும்
பாரம்பரியமான முறையில் நாட்டுபசுவின் சாணத்தில் கோசாலை மூலம் செய்யப்பட்ட விபூதி கிடைக்கும்.
சுத்தமான நாட்டுமாடு விபூதியை பூசுவதால் எதிர்மறை எண்ணம் மறையும்.
பிரபஞ்ச சக்தியை முழுமையாக உள்வாங்கும்.

இந்த விபூதியை நீரில் குழைத்து அடிப்பட்ட வீக்கம்,மூட்டுவலி,முகப்பரு போன்ற இடதில் பூச குணம் கிடைக்கும்.
கிருமி நாசினியாக செயல்படுகிறது.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

பாரம்பரிய விளக்கெண்ணெய்விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை:.நன்றாக முற்றிய ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி அவற்றின் மேல...
20/02/2025

பாரம்பரிய விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை:.நன்றாக முற்றிய ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி அவற்றின் மேல் தோலை நீக்கி அல்லது அப்படியே இளம் வறுப்பகா வறுத்து அவற்றை உரலில் இட்டு நன்கு இடிக்கவேண்டும். அது கிட்டத்தட்ட பசை போல இருக்கும். பின்னர் பானை ஒன்றில் ஒரு பங்கு விதைக்கு நாங்கு பங்கு தண்ணீர் அல்லது விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளர வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் மிதக்கும். அதனைச் சிறிது சிறிதாகக் கரண்டியால் எடுத்து வேறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்த எண்ணெயுடன் சிறிய அளவில் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். சலசல என்ற சத்தத்துடன் நீர் மெல்லமெல்ல வற்றும். நீர் முழுவதுமாக வற்றிபின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுப்பது நாம் பாட்டி காலத்து முறை.காரணம் இதன் விதைகளில் ரெசின் என்ற நச்சு தன்மை உள்ளது அதை நீக்கவெ மேலெ காணும்

எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள்:ஈயம்,செம்பு,பித்தளை,மண் பாத்திரம்
எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த கூடாத பாத்திரங்கள்:அலுமினியம்,பிளாஸ்டிக்
எண்னைய் சேகரித்து வைக்க வேண்டிய பாத்திரங்கள்:கண்ணாடி,காரணம் எண்னெய்யின் தன்மையை மாற்றாது.

உடலில் எந்த பகுதியில் வீக்கம் இருந்தாலுமதை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

பருப்பு எளிமையாக வேக மற்றும் செரிமானம் சிறப்பாக நடக்க காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்

அடிபட்ட புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்படுகிறது

தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.மேலும் பொடுகு தொல்லை குணமாகும்.

பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும் அல்லது அப்படியே அமுங்கும்.

சுகபேதிக்கு நாம் பலதலைமுறைகளாக பயன்படுத்தி வந்தது விளக்கெண்ணெய் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

உடலுக்கு சூட்டை நீக்கி குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

கண்கள் சிவந்திருந்தால், மங்களான பார்வைக்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு துளியை இரவில் கண்களில் விட்டு உறங்க குணம் கிடைக்கும்

விளக்கெண்ணெய் உடன் சம அளவு தேங்காய் எண்ணேய் கலந்து தினமும் தேய்க்க தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

குடம்புளி (அல்லது கொக்கம் புளி )சமையலில் இப்போது நாம் பயன் படுத்தும் புளி,ஆப்ரிக்க சூடான் நாட்டில இருந்து சுட்ட புளி.குட...
20/02/2025

குடம்புளி (அல்லது கொக்கம் புளி )
சமையலில் இப்போது நாம் பயன் படுத்தும் புளி,ஆப்ரிக்க சூடான் நாட்டில இருந்து சுட்ட புளி.குடம்புளி (அல்லது கொக்கம் புளி )எனும் Garcineacampogea, தான் நம்ம ஊர் பழைய புளி என்று வாதிடுவோர் தாவரஉலகில் உண்டு.
https://youtu.be/NjpVwCNm7J4?si=_nm5Gf93-C6ApVLN
இந்த கொடம்புளி உடல் எடையை குறைக்க தன்னுள்ளே ஹைட்ராக்ஸி சிட்ரெட் என்னும் பொருளை கொண்டுள்ளது.விஷயம் தெரிந்த ஹெயின்ஸ் முதலான பன்னாட்டு கம்பெனிகள் இந்த கோடம்புளியை நாம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கப்பலேற்றி கொண்டு இருக்கிறார்கள்.
நன்மைகள்:
1.குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
2.பழத்தோலில்னின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் உபாதைகளுக்கு சிறந்த மருந்து.ஹோமியோபதி மருத்துவத்தில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று போக்கிற்கு சிறந்த மருந்தாகும்
3.இதில் அடங்கி உள்ள ஹைட்ராஸி சிட்ரிக் அமிலம் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் தன்மை படைத்தது.
4.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் உகந்தது.
இயற்கை முறையில் விளைந்த முதல் தரமான நல்ல முறையில் சுத்தமான குடம்புளி நமது அங்காடியில் விற்பனைக்கு உள்ளது.
தற்போது உபயோகப்படுத்தும் புளிக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம்.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
/

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

பல் வலி,பல் சொத்தை,ஈறு வலி ,வீக்கம் மற்றும் பல பிரச்னைகளுக்கு எளிய சிகிச்சை முறை -வீரமணி மூலிகை .கடந்த ஐந்து வருடங்களுக்...
20/02/2025

பல் வலி,பல் சொத்தை,ஈறு வலி ,வீக்கம் மற்றும் பல பிரச்னைகளுக்கு எளிய சிகிச்சை முறை -வீரமணி மூலிகை .

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு என்பது வயது முதியவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு அகாச கருடன் கிழங்கை இலவசமாக அளித்து அதனுடைய பெருமைகளை கூறிக்கொண்டு வந்தார்,அருகில் என்னுடைய தாத்தாவை கண்டதும் அவருக்கு ஒரு கிழங்கை அளித்து ,பின்பு ஒரு மருந்தினை அளித்தார்,

அந்த மூலிகை பார்பதற்கு ஏதோ,ஒரு மரத்தின் வேர் மற்றும் பட்டையை நசுக்கி கொடுத்தது போல் இருந்தது.இந்த மூலிகை பல் சம்பதமான அனைத்து குறைபாடுகளையும் மூன்று நாட்களில் சரிசெய்யும் என்று கூறினார்.

உபயோகிக்கும் முறை:பல் வலி,பல் சொத்தை,ஈறு வலி ,வீக்கம் மற்றும் பல பிரச்னைகளுக்கு இந்த மூலிகையை ,இரவு உணவுக்கு பிறகு பிரச்னை உள்ள இடத்தில் வைத்து கடித்து கொள்ளவும்,இல்லை என்றால் அருகில் உள்ள பல்லில் வைத்து கடித்து கொள்ளவும்,இந்த சமயத்தில் அதிக அளவு உமிழ் நீர் சுரக்கும் ,அதை பத்து நிமிடம் கழித்து விழுங்கிவிட வேண்டும்,இதே போல் உறக்கம் வரும் வரை செய்து பின்பு ,அப்படியே உறங்கி விட வேண்டும்,மறுநாள் காலை எழுந்தவுடன் ,துப்பிவிட வேண்டும் என்றும் ,இது வயிற்றில் உள்ள தீமை செய்யும் கிருமிகளையும் அழிக்கும்,இது போல மூன்று நாள் செய்தால் குணமாகிவிடும் என்று தெளிவாக கூறி சென்றார்.
அவரிடம் இது என்ன மூலிகை ,பெயர் என்ன என்று கேட்டதிக்கு சொல்ல மறுத்துவிட்டார் ,

பிறகு நமது அங்காடியில் உள்ள நண்பர்கள் பயன்பெற ஒரு பத்து பக்கெட் அளவு வாங்கி வந்து அவருடைய பெயரிலேயே இலவசமாக கொடுத்தோம் ,நல்ல பலன் கிடைத்தது ,தற்போது குறைந்த அளவு வாங்கி விற்பனை செய்துகொண்டு இருகிறோம்.
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

சதுரகிரி மூலிகை மலைத்தேன்.மூலிகை மலைத்தேன் என்பது மலைத்தேனில் பல மூலிகை சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலப்பது அல்ல,இ...
19/02/2025

சதுரகிரி மூலிகை மலைத்தேன்.
மூலிகை மலைத்தேன் என்பது மலைத்தேனில் பல மூலிகை சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலப்பது அல்ல,இயல்பாகவே மலைதேனீக்கள் மலைக்காடுகளில் உள்ள மூலிகைகளில் உள்ள பூக்கள் மூலம் எடுக்கப்படுவதே ஆகும்.

பொதுவாக மலைதேனின் பயங்களை கூறுவதை விட சதுரகிரி மூலிகை மலைத்தேனை உபயோகம் செய்தவர்கள் கூறியவற்றை தொகுத்து உள்ளோம்.
நன்றாக பசி எடுக்க:
6 வயது பெண் குழந்தைக்கு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேன் சப்பிட நன்றாக பசி எடுக்கிறது.—6 வயது பெண் குழந்தைக்கு.இந்த குழந்தை காலையில் ஒரு தோசை அல்லது இரண்டு இட்லி ,மதிய உணவை சரிவர சாப்பிடாது,அப்படியெ கொண்டுவரும்,இல்லை என்றால் கீழெ கொட்டிவிடும்.பசி என்று கூறி உணவு வாங்கி சாப்பிட்டது இல்லை.சதுரகிரி மூலிகை மலைத்தேனை சப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் பசிக்கிறது என்று கூறி உணவை கேட்டு வாங்கி சாப்பிட்டது.என்று குழந்தையின் தந்தை கூறினார்.
உடல் எடை கூட:
மேலே குறிப்பிட அதே 6 வயது பெண் குழந்தை 30 நாளில் 4.3 கிலோ எடை கூடி உள்ளது.சென்னையில் உள்ள நண்பருக்கு விந்தணுக்கள் அதிகரிக்க மூலிகை சூரணம் சொல்லி தேனில் சாப்பிட வேண்டும் என்று கூறினேன்.நம்முடிய சதுரகி தேனுடன் பொடியை கலந்து சாப்பிட்ட 50 நாளில் 7 கிலோ வரை எடை கூடியது(எடை குறைய மறுபடியும் அவருக்கு மருந்து கொடுத்தது தனிகதை)
உடல் எடை குறைய
கடலூர் நண்பர் முருங்கை இலையில் தேன் கலந்து கசாயம் வைத்து குடித்தால் எடை குறையும் என்று கூறி 3 மாதத்தில் 11 கிலோ வரை குறைத்தார்(இதனுடன் காலை மாலை 8 வடிவ நடைப்பயிர்ச்சி 20 நிமிடம் செய்தார்)
இரத்தம் ஊற:
52 வயது பெண்ணுக்கு 3 ஸ்பூன் தேன் உடன் நாட்டுமதுளை தோல் உடன் 150 கிராம் அரைத்து வடிகட்டி அருந்திய போது 6 என்றா அளவில் இருந்த ஹீமொகுளோபின் அளவு 8.1 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.
இரத்த அழுத்தம் இயல்பகா:
மேலெ கூறிய அதே பெண்ணுக்கு 176/108 என்ற அளவில் இருந்த இரத்த அழுத்தம் 147/89 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.
எடுக்கும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்க.
பொதுவகா தேனில் எடுக்ககூடிய மருந்துகளை சதுரகிரி மூலிகை மலைதேன் வழியாக எடுக்கும் போது மற்ற மலைத்தேனைகாட்டிலும் 5 மடங்கு அதிகமாக வேலை செய்கிறது.இது பயன்படுத்திய அனைவரும் கூறியது.
ஆண்மை தன்மையை அதிகரிக்க.
இஞ்சி,கல் உப்பு,பேரரத்தை தலா இரண்டு கிராம் இவற்றை தேனில் அரத்து பூசி காய்ந்தவுடன் உடலுறவு கொள்ள ஆண்குறி வலுவாக மாறும் என்பது சித்தர்கள் குறிப்பு. வேறு தேனை விட சதுரகிரி தேன் 5 மடங்கு பலன் கிடைத்தது.
திக்குவாய் குணம் பெற. 4 மாதம் தொடச்சியாக,,3 வயது குழந்தைக்கு 15 மில்லி தேனை இரவில் பனியில் வைத்து அதிகாலை 5.30 மணிக்கு நாக்கில் தடவி வந்தனர்.பேச்சு குளறுபடி குணம் கிடைத்தது,(பெரியவர்களுக்கு குணம் கிடைக்கவில்லை)
லேகியதின் சக்தியை கூட்ட…நாங்கள் மற்ற மலைகளில் இருந்தும் தேன் எடுத்து வருகிறோம்.பல சித்த வைதியரகளுக்கு தந்து கொண்டு இருக்கிறோம்.அவர்கள் கணக்குபடி சதுரகிரி மூலிகை மலைத்தேன் மற்ற வகை மலைத்தேனை காட்டிலூம் பலமடங்கு லேகியத்தின் சத்தை உடல் எடுத்து கொள்கிறது என்று கூறி உள்ளனர்.
மேல் கூறிய அனைத்து பலன்களும் இயல்பாகவெ மலைத்தேன் கொண்டு இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.மற்ற வகை மலைத்தேனை காட்டிலும் பலன் (குடலின் சத்து உட்கிரகிக்கும் திறனை முழுமையடைய செய்கிறது) பல மடங்கு அதிகம் என்பது சோதனை செய்ததில் கண்ட உண்மை.
தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

ஏறுசிங்கி ஒரு அடி குச்சி தேவைப்படுவோர் அழைக்கவும்-9486072414
19/02/2025

ஏறுசிங்கி ஒரு அடி குச்சி தேவைப்படுவோர் அழைக்கவும்-9486072414

நாத பொடி-முழுமையான தீர்வு : மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்தண்ணீர்விட்டான் கிழங்கு ,மகா வில்வம் ,முருகை பூ ,வெண்தாமரை ,ஓர...
19/02/2025

நாத பொடி-முழுமையான தீர்வு : மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்
தண்ணீர்விட்டான் கிழங்கு ,மகா வில்வம் ,முருகை பூ ,வெண்தாமரை ,ஓரிதழ்,சிறிய நங்கை ,கீழாநெல்லி ,சம அளவு நிழலில் காயவைத்து தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து செய்யலாம்.

இந்த மூலிகை கலவையை காலை ,மாலை என தொடர்ந்து 48 நாட்கள் பாலில் கலந்து அருந்தினால் நீங்கள் இழந்த சக்திகளை பெற்றுவிடலாம்

இந்த மூலிகை கலவை உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து ,விந்து உற்பத்தியை அதிகமாகிறது மேலும் நீர்த்து போன விந்தை கெட்டியாக்குகிறது,அதுமட்டுமல்லாமல் தரமான விந்தணுக்களை உருவாக்கும். உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்,உடல் பொன்நிறமாக மாற்றம் அடையும் ,ஆண் குறியை வழுவாக்கும்,விந்து அதிக அளவில் வீணாவதால் உடல் மெலிந்து கன்னங்களின் சதை நலிவுற்ற நிலையில் ஒடுங்கி சிலருக்கு காணப்படும் இவர்களுக்கு இந்த கலவை ஒரு வர பிரசாதம்.திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் 48 நாட்கள் இந்த கலவையை எடுத்து கொண்டால் உடல் உரமாகி பலம் பெறலாம்.

வெறும் விந்தணுக்கள் பிரச்சனையை மட்டும்மல்லாது காய்ச்சல் ,சோகை, பசியின்மை,இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி சுத்தமக்குகிறது.

கல்லிரல் சம்பதமான அனைத்து நோய்களையும் வராமல் தடுக்கும்.

சில மூட நம்பிக்கை தற்போது உள்ள ஆண்களிடம் காணாப்படுகிறது அதாவது

ஆண் குறி அளவில் பெரியதாக இருந்தால் தான் நல்லது,இல்லை என்றால் ஆண்மை குறைவு என்ற எண்ணம் வந்துவிடுகிறது இது மிகவும் தவறு ,இறைவன் படைப்பில் ஒவ்வொரு ஆணுக்கும் அளவுகள் மாறுபடும்,உங்களுக்கு விறைப்பு தன்மை இருந்தால்போதுமானது,

இளம்வயதினர் இடையே தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,என்பது அவர்களுக்கு பெரிய பயமாகவும் ஆண்மை குறையாகவும் கருதுகின்றனர் இது மிகவும் தவறான கருத்தாகும்,மாதத்தில் அதிகப்பட்சசமாக 1 to 4 வரை வெளியேறுவது தவறில்லை ,திருமணம் ஆனவர்களுக்கு இது பொருந்தாது,பத்திரத்தில் நீரை ஊற்றும் போது அதன் கொள்ளளவு முடிந்தவுடன் தரையில் சிந்துவது இயல்பே அதுபோலதான் விந்து உற்பத்தி அதிகமாக இருந்து ,விந்து பை கொள்ளளவு கடந்தவுடன் ,எதாவது ஒரு வகையில் விந்து வெளியேறிவிடும்,இது படைப்பின் அதிசயமே,ஆனால் சரியான முறையில் சத்தான உணவு பொருள்கள் உண்ணாமல் ,அதிகப்படியான விந்து வெளியேற்றம் இருந்தால் தான் தவறு,

இது போலவே நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவில்லை என்றாலும் ,விரைவில் விந்தணுவெளியேறினாலும் ஆண்மை குறைவு என்ற எண்ணம் உள்ளது ,இது தவறான கருத்தாகும்,சராசரியாக உடலுறவில் ஈடுபட்ட 5 நிமிடதிற்குள்ளாகவே விந்து வெளியேறிவிடும்,இது அறிவியல் ரீதியான உண்மை ,

எனவே தவறான நம்பிக்கைகளை மனதில் பதியவிடாமலும்,சத்தான சரிவிகித உணவை உண்டு வளமாக வாழுங்கள்,சத்தான உணவு என்றால் பாதம் ,பிஸ்தா ,முந்திரி இன்னும் பல விலை உயர்ந்த பொருள்கள் அல்ல,நம் முன்னோர்கள் இந்த பொருள்களை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்?

அவர்கள் உண்டது கம்பு ,சோளம் ,ராகி போன்றவற்றை களியாகவும்,கூழாகவும்,சிலர் சாமை,திணை,வரகு ,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் தான் எடுத்து கொண்டனர்,அந்த காலத்தில் அரிசிலேயே 1008 ரகம் இருந்ததாக கூறுவர்கள்(ஆதாரம் இல்லை )ஆனால் நாம் பட்டை தீட்டிய அரிசி மற்றும் வெள்ளை கோழி ,ரசாயனம் மிகுந்த துரித உணவுகளே விரும்பி உண்ணுகிறோம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ..

அங்காடியில் உள்ள பொருள்கள் தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

நாட்டு சர்க்கரைஇயற்கை விளைச்சலில் கிடைத்த கரும்பு மூலம் இரசாயன கலப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட நாட்டு சர்க்கரை கிடைக்...
18/02/2025

நாட்டு சர்க்கரை

இயற்கை விளைச்சலில் கிடைத்த கரும்பு மூலம் இரசாயன கலப்பு இல்லாமல் உற்பத்தி செய்யப்பட நாட்டு சர்க்கரை கிடைக்கும்.



தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

மூட்டு வலித்தைலம்ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு தேய்மான நோய்களால் உண்டாகும் கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி அதனால் உண்டாக...
18/02/2025

மூட்டு வலித்தைலம்
ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு தேய்மான நோய்களால் உண்டாகும் கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி அதனால் உண்டாகும் வேதனைகளையும் இந்த மூட்டு வலி தைலத்தை காலை மாலை இருவேளை தடவி, சில மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவிவிட, சிறப்பாக குறுகிய நாட்களில், தீர்த்து விடும்.

இந்த மூட்டு வலித் தைலத்தில் அத்திப்பால் , சிற்றாமுட்டி ,விராலி , மயிலாடுங் குறும்பை ,கண்பலா மரப்பட்டை , பேராமுட்டி , மூக்கிரட்டை வேர் , கோரைக் கிழங்கு ,பிரண்டை,வேலி பருத்தி, வாதநாராயணன், வாதமடக்கி , முடக்கறுத்தான் , மற்றும் பல அரிய வகை மூலிகைகளைச்சேர்த்து எண்ணெயாக காய்ச்சி எடுக்கப்படுகிறது.
இந்த மூட்டு வலி தைலம், மூட்டு வலிக்காக மட்டுமல்ல , மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல், இரத்தத்தில் எலும்புகளைத் தேய்க்கும் காரணிகளால் எலும்புகளிலும் , எலும்பு மூட்டுக்களிலும் ஏற்படும் தேய்மானம், எலும்பு முறிவு, மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல், இரத்தக் கட்டு , கீழ் முதுகு வலி , பக்க வாதம் போன்ற பல வியாதிகளைத் தீர்க்கும்.இதை மேற்பூச்சாகப் பூசி வர இதிலுள்ள அத்திப் பால் எலும்பை என்றும் ஒடியாத இரும்பாக்கும்.

எலும்பு முறிவு, மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல், மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல் , தசைப் பிடிப்பு, நரம்பு வலி, நரம்பு இசிவு, நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ,சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள், கழுத்தெலும்புத் தேய்வு,முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் , கீழ் முதுகு வலி , ஒரு பக்க பக்க வாதம் , இரு பக்க பக்க வாதம், குறை பக்க வாதம் போன்ற பல வியாதிகளை குணமாக்கும்.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------

Address

Opp To MRF Tyres, Near Laxmi Mills, Avinashi Road, Bharathipuram, P. N. Palayam
Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when Sathuragiri iyarkai angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sathuragiri iyarkai angadi:

Videos

Share