16/12/2024
அனைத்து முக ருத்ராட்சம் மற்றும் 108,54 மணிகள்கோர்த்தமாலைகள்கிடைக்கும்.சுத்தபடிகமாலைகள் கிடைக்கும் (வில்வம் ஓடு மற்றும் துளசி மணி கோர்த்தும் தரப்படும்)
https://youtu.be/vK_3UeLiGGY
உருத்திராக்ஷம்பலன்கள்
ஒரு முகம்:
மிகவும் அரிதாக (நேபாளம்) கிடைப்பது; ஜாவா கிடைக்கும்.
ஒரு முக ருத்ராட்சம் (ஏகமுகிஉருத்ராட்சம்). இது சிவனுடைய உருத்திராட்சம் மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது. கிரக கட்டுப்பாடு - நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.
இரண்டு முக ருத்ராட்சம் :
சிவன் சக்தி இணைந்த சிவசக்திஉருத்ராட்சமாகபார்க்கப்படுகிறது இந்த இரு முக ருத்ராட்சம்.
பாவத்தைநீக்கவல்ல இந்த ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது. தம்பதியினர் இனிய இல்வாழ்வுக்கும் அணியலாம். கிரக கட்டுப்பாடு - சந்திரன்.
மூன்று முகம் உருத்திராட்சம்.
இந்த உருத்ராட்சத்தை ஆளும் தெய்வம் அக்கினி ஆளும் கோளாக சூரிய பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும்தன்னில் போட்டாலும் எரிப்பதுபோலவும்அதேவேளை தான் தூய்மையாக இருப்பது போலவும் இதை அணியும் நபருக்கு கடந்த பிறவி கர்மங்கள்அழிக்கப்பட்டு விடும். வாழ்வில் நடந்த, நடக்க இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்தும் விலகி துய்மைநிலையிற்பிறவியில்லாப்பெரு நிலை அடைவார்கள்.
நான்கு முகம் உருத்ராட்சம்.
நான்கு முக ருத்ராட்சத்த்தைஆளக்கூடியவர்பிரஹஸ்பதி; கோள் வியாழ பகவான். இதனை அணிபவர் ஆக்க சக்தியைபெறுவார். தன்னுள் இருக்கும் புத்தி கூர்மை, பேச்சுத் திறமை, சாமர்த்தியசாதூர்யங்களைவெளிப்படுத்தக்கூடியது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது. இதை முக்கியமாக மாணவர்கள்அணிவது உத்தமம்.
ஐந்து முகம் ருத்ராட்சம் .
ஐந்து முக உருத்ராட்சம்ருத்ரகாலாக்னியின்ஆளுமைக்குட்பட்டது. குரு பகவானின் கூடாத பலன்களைசரிசெய்யக்கூடியது. சிவனதுஆசியுடையதாக, மங்களத்தின்இருப்பிடமாகபார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம், பக்தி, சிறப்பாகும். மனம் அமைதியடையும், ஆத்மீக உயர்நிலை; ஜபம்; மந்திர உச்சரிப்பு என்பவற்றின்பலத்தைக் கூட்டி நல்ல நிலைமைக்கு இட்டுச்செல்லும். சிவனாசி உள்ள மணி.
ஆறு முகிஉருத்திராட்ஷம்.
ஆறு முக உருத்ராட்சம் செவ்வாய் பகவானை ஆளும் கிரகமாகக் கொண்டது. ஆளும் தெய்வம் முருகப் பெருமான். நம் அறிவு மேம்படவும், தலைமைப்பண்புகள் பெறவும், நேரிய சிந்தனைக்கும், அவசியமற்றஇச்சைகள்; மோகங்களைத்தவிர்க்கவும், இரத்தசம்பந்தநோய்களிலிருந்து ஆறுதல் பெறவும் இதை அணியலாம். பேரின்பத்தை பெற வழியை தேட இது உதவும்.
ஏழு முகம் உருத்ராட்சம்.
ஏழு முக உருத்ராட்சம் திருமகள், இலட்சுமி தேவியின் ஆளுமைக்கு உரியது. தேவி திருமகளையும், சப்தகன்னிகள், ஆகியோரைக்குறிக்கும்அம்சமுமாகும். இதனை அடையாளப்படுத்தும் கிரகம் வெள்ளியாகும். இந்த ருத்ராட்சத்தைஅணியும்போது பாசம், அன்பு, இல்லறம், பணம், நிதி சிக்கல்களில் இருந்து விடுபட்டு படிப்படியாக வாழ்க்கை முன்னேற்றம், பண,நிதி
நிலைமை உயர்வு ஆகியன ஏற்படும்.
எட்டு முகம் உருத்ராட்சம்.
எட்டு முக உருத்ராட்சகிரக ஆளுமை கேது பகவானுக்குரியது. ஆளும் கடவுள் விநாயகர் ஆவார். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின்ஆசியுண்டு. எட்டு முகிகடைகளை அகற்றும், வெற்றியைக்குவிக்கும்.
பார்க்கப்படுவதால் புத்தி, நுண்ணிய அறிவு, செல்வ வளம் என்பனஅதிகரிக்கும்.
ஒன்பது முக உருத்ராட்சம்.
ஒன்பது முக உருத்ராட்சம் இராகு பகவான் ஆளுமைக்குரியது. ஆளும் தெய்வம் துர்க்கை (சக்தி).
சக்தி அம்சமாகையால் இதை அணிவதனால் உடல், மனோ சக்தி கூடும். செயல் திறன் கூடும். பில்லி சூனியதுன்பங்கள்தாக்காது. மிக ஆற்றல் மிக்க மணியாகும். உலகத்துஇன்பங்களையும் ஆன்ம முன்னேற்றத்தையும் தந்து, நற்கதிக்குக் கொண்டு செல்லும்.
பத்து முக உருத்ராட்சம்.
மகாவிஷ்ணுவின் அம்சமாக பத்துமுகஉருத்ராட்சம்பார்க்கப்படுகிறது. இது எல்லாக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மிக சக்தி வாய்ந்தது. எல்லாக்
கிரகங்களினால்எற்படும்தீவினைகளிலிருந்து காக்கும். இது ஒரு பாதுகாப்புக்கவசத்தைப்போன்றது இதை அணிபவருக்கு ஏற்படும் தீய தாக்கங்கள் (பில்லி, சூனியம், கண்திருக்ஷ்டி, எதிர்மறை மனத்தாக்கங்கள்) எல்லாவற்றையும் உடைத்தெறியக்கூடியது. இதை அணிபவருக்கு நீதிமன்ற, காணி வழக்குகள் மற்றும் கடன் வழக்குத்தொல்லைகளினின்றும் காக்கும். குடும்பம் தலைமுறை தலைமுறையாகச்செழிக்கும்.
பதினொரு முக உருத்திராட்சம்.
இந்த மணியானதுசிவவடிவங்களாகியஅநுமன் உட்பட 11 உருத்திரர்களால்ஆளப்படுகிறது. இதை அணிவதனால் 1000 அஸ்வமேதயாகங்கள் செய்த பலனுண்டாகும் என வேத நூல்கள் தெரவிக்கின்றன. இதனை அணிவதனால் உயர்ந்த ஆத்மீகஅறிவும்; தெய்வீக சிந்தனையும்; நடுநிலையானமனமும் உயர்ந்த புத்திக்கூர்மையும்; புலன்களின் மீதான கட்டுப்பாடும்; பேச்சாற்றலும்; பயமின்மையும்ஆற்றலும் உருவாகும். மேலும் ஜபதவதியானங்களுக்கும், எல்லாக்கிரககட்டுப்பாடுகளுக்கும் நல்லது.
பன்னிரண்டு முக உருத்திராட்ஷம்.
இது முற்றிலும் சூரியனைச் சார்ந்த மணியாகும். ஆளும் தெய்வமும் ஆளும் கிரகமும் சூரியன் ஆகும். இது சூரியனைப் போன்ற பிரகாசம், ஆளுமை, தலைமை, ஆற்றல் தரும். பயம், நம்பிக்கையின்மையைபோக்கும். எவரையும் சார்ந்து நிற்கும் தன்மையினை இல்லாமல் ஆக்கும்.
நோயில்லா உறுதியான உடலமைப்பைத் தரும். சூரிய கிரகத்தால் ஏற்படும் குறைகள் சிக்கல்களை நீக்கும்.
பதின்மூன்று முக உருத்திராட்சம்.
இந்த மணியானதுகாமதேவனால்ஆளப்படுவது. இதனுடன் தொடர்பு பட்ட கிரகங்கள் வெள்ளியும்சந்திரனும் ஆகும். உலக இன்பங்களை, ஆசாபாசங்களை நேரிய வழியில் சரியான முறையிற்துய்த்துஅவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள இந்த உருத்திராட்சம் உதவி செய்யும். அதேவேளைசித்தர்கள் இந்த 13 முகியைசித்துக்களைப் பெற்று குண்டலினியைவிழிப்புறச் செய்ய உபயோகித்தாககூறுவர்.
பதினான்குமுகி உருத்திராட்சம்.
இது ஒரு அபூர்வமானஉருத்திராட்சமணியாகும். இதைத் 'தேவமணி' என்றும் கூறுவர். இது ஆஞ்சேயப் பெருமான் அருளாட்சிக்கு உட்பட்டது. ஆஞ்சனேயர்நவக்கிரகங்களிடம் பெற்ற வரத்தின்படி, ஆஞ்சனேயர்கட்டுப்பாட்டிலிருக்கும்இந்தத்தேவமணியானது, நவக்கிரகங்களினது தீய செயற்பாடுகளில்
இருந்தும் காக்கும். முக்கியமாக செவ்வாய், சனி கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைத்தடுக்கும். ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி மற்றும் குறிப்பாக சனி செவ்வாய் தோஷங்கள்உள்ளவர்கள்அணிவதுசிறப்பைத் தரும். தூய்மையான பக்தி மனோபாவத்தையும், தளராதவிசுவாசத்தையும், ஆண்மையையும், புலன்களின்கட்டுப்பாட்டையும் தரும் இந்த தேவமணி அருமையானது.
பதினைந்து முக உருத்திராட்சம்.
இது பசுபதிநாத்சிவனைஆளுமையாக கொண்ட உருத்திராட்சமாகும். புதன் கிரகத்தின் சம்பந்தம் உடையது. இது உலகத்தின் தேவைகளை எல்லாம் ஒருங்கே தரக்கூடியது. அதேவேளைஆத்மீகநாட்டத்தையும் தெய்வ உண்மைகளையும்தேடிப்போகச் செய்யும் தன்மையையும் கொண்டது. அநாகதச் (இருதய) சக்கரத்தை பேணிப் பாதுகாக்கும்தன்மையுடையது. குபேரனுக்கே செல்வம் வழங்கி, தான் பற்றற்றிருக்கும் யோக சிவனைப்போல வாழ வைக்கும் தன்மையுடையது. இதை அணியும் போது எல்லா மானுடர்களையும்நேசிக்கச் செய்யும் எண்ணத்தை இதயத்தில் உருவாக்கக்கூடியது. மன்னிக்கும்சுபாவத்தை ஏற்படுத்தும். தாராள சிந்தை, தர்மசிந்தனைகளை ஏற்படுத்தும். உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இதயத்தின் உயர்ந்த சிந்தனைகளூடாக ஆத்ம முன்னேற்றம் நோக்கி இட்டுச் செல்லும் தன்மையுடையமணியாகும்.
பதினாறு முக உருத்திராட்ஷம்.
இந்த முக உருத்திராட்சம் 'மகா மிருத்யுஞ்சய மணி' என்று அழைக்கப்படும். இது சிவனைமுதற்கடவுளாகக் கொண்டது. சந்திரனை ஆளும் கிரகமாகக் கொண்டது. இது அறம், பொருள், இன்பம், ஆரோக்கியம், வாழ்விற்
போதுமென்ற மனோபாவம் எல்லாம் தரக்கூடியது. இதை
அணிபவரைச்சுற்றிச்
சிவனருள் ஒரு பாதுகாப்புக்கேடயமாகச்செயற்பட்டு அவரை எதிர்மறை எண்ணங்கள்; தீய சக்திகள்; விபத்துக்கள்; நோய் துன்பங்கள்; கடன் வழக்கு என்பவற்றிலிருந்துபாதுகாக்கின்றது. சிவனருளையும், வெற்றியையும்தேவநேயத்தையும் தந்து வாழ்வில் வெற்றி தரும் இந்த உருத்திராட்சம் அதி உத்தமமானது.
பதினேழு முக உருத்திராட்சம்.
இது நவதுர்க்கைகளின் (சக்தியின்) ஆறாவதுவடிவமாகியகன்னித்தெய்வம்
கார்த்தியாயினியின் கட்டுப்பாட்டில் உள்ள உருத்திராட்சமாகும். காத்தியாயினி தேவி சனிக் கிரகத்தைக்
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளாவாள். ஆகவே இந்த உருத்திராட்சம் சனியின் பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது. மனதிற்கு விரும்பிய வாழ்க்கைத்துணைய அடைய இது உதவி செய்யும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாது இந்த மணியானதுஅணியப்படும்போது இது எமதுவாழ்வின் நான்கு நிலைகளின் (பிரம்மச்சரியம்/இல்லறம்/வானப்ரஸ்தம்/துறவறம்) ஊடாகவும்எம்மை வழிநடத்தி இறுதியில் மோட்சப் பிராப்தி தரவல்லது. இது மட்டுமல்ல ஜபதவதியானங்களுடன் சேர்த்து இதைத்தரிக்கும்போது இது அஷ்டமாசக்திகளையும்; பல்வேறு உபசித்துக்களையும்தரக்கூடியது; இவற்றில் மனோரீதியில் இது தீர்க்கதரிசனத்தையும், டெலிபதி, எதிர்காலம் அறிதல், உருவாக்க ஆற்றல் சிந்தனை (creative intelligence)
போன்ற விடயங்களையும்உணரச் செய்யும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்த மணியானது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வளமான வாழ்வைத் தரும்.
பதினெட்டு முக உருத்திராட்ஷம்.
இந்த மணியானது; பூதேவி/ஶ்ரீதேவிசமேத ஶ்ரீநாராயணக் கடவுளின் ஒரு தேவியான பூதேவி (பூமித்தாய்)யின்ஆளுமைக்கு உட்பட்டது. பூமித்தாயைப் போல சகல உயிர்களிலும் பாரபட்சமின்றி அன்பு காட்டும் தன்மையும்; அவளது கருணையால் இந்த உருத்திராட்சம் அணிந்த ஒருவர் ஈடுபடும் எந்தக்காரியத்திலும்வெற்றியும், நிலம் சம்பந்தமான விடயங்களில் பெரும் இலாபங்களையும்ஈட்டித்தரவல்லது. உலகில் பெரும் செல்வங்களைக் குவிக்க கூடியது.
பத்தொன்பது முக உருத்திராட்சம்.
இந்த மணியானது ஶ்ரீமந்நாராணமூர்த்தியின்ஆளுமைக்குரியது. புதன் கிரகத்தின் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.
இந்த உருத்திராட்சம் அதியுயர்ந்த உருவாக்க, வெளிப்பாட்டு (creative, manifestation) சக்திகளைக் கொண்டது என 'கார்த்தியாயினி புராணம்' கூறுகிறது. இந்த மணியானதுதர்மத்துடன் கூடிய கல்வி, செல்வம், ஞானம், ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.
எமதுவாழ்வின்தர்மத்தையும்நோக்கத்தையும் புரிய வைக்கும் சக்தியுள்ள உருத்திராட்ஷம்இதுவாகும்.
இருபது முகி உருத்திராட்சம்.
இது படைப்புக் கடவுள் பிரம்மதேவரின் கட்டுப்பாட்டில் உள்ள உருத்திராட்சமாகும். பூமித் தாயின் தொடர்புடையது. அளவற்ற செல்வம், அறிவு, மூளைத்திறன், விரும்பியவற்றை அடைதல் ஆகியவை தரும். மனித இனத்துக்காக எதையாவது உருவாக்க, படைக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் உன்னதமான மணியாகும்.
இருபத்தொரு முக உருத்திராட்சம்.
மிகவும் அரிதான இந்த உருத்திராட்சம் தனாதிபதியும்வடக்குத்திக்பாலரானகுபேரபகவானுடையது. செல்வத்துக்கெல்லாம் செல்வம் தரும் மணியிது. இவ்வுலகின் சகல இன்பங்களையும், செல்வத்தையும் ஒருங்கே அள்ளித்தரவல்லது. பயணங்களின்போதுபாதுகாக்கும்தன்மையுடையது.
ஆளும் கிரகம் பூமாதேவியாகும்
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751
சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு
பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....
Telegram:
https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA
YouTube:
https://www.youtube.com/channel/UC2nBO9EFn7SO7WN6ZRuNGuQ
Blogspot:
https://sathuragiriangadi.blogspot.com
Facebook:
https://www.facebook.com/sathuragiriangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
Email:[email protected]
ருத்ராட்சம் மற்றும் அனைத்து விதமான ஆன்மீக பொருள்கள் தேவைப்படுவோர் அனுகவும்சதுரகிரி இயற்கை அங்காடி9486072414 https://t.me/joi...