MY KOVAI

MY KOVAI COIMBATORE EXCLUSIVE NEWS AND INFORMATION

16/10/2023

கொட்டும் மழையிலும் குப்பை கொட்டாமல் காக்க ஒருவரா???...

08/10/2023

காமுக ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு... school #

06/10/2023
கோவை, சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம...
13/07/2023

கோவை, சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரின் மனைவி சுதா.சமூக சேவைகள் அதிகளவில் செய்து வருகிறார்.கொரோனா பேரிடர் காலத்தில் ஏராளமானவருக்கு பலதரப்பட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை அந்த சமயத்தில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் சுதாவின் சமூக சேவையை பாராட்டி சர்வதேச ஜமைக்கா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து சுதா செய்தியாளர்களிடம் கூறும் போது கணவர் ஜெகநாதன் , எனது பெற்றோர் சண்முகம் சுகந்தி மற்றும் மகள்கள் கிரண்யா, ஜோஷிகா ஆகியோர் எனக்கு உதவிகரமாக இருந்ததால் இந்த பணிகளை செய்ய முடிந்தது என்றார்.

கோவை,

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளது வசந்த் அண்ட் கோ. இந்த கடையில் டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் வ...
12/07/2023

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளது வசந்த் அண்ட் கோ. இந்த கடையில் டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர் .இந்த நிலையில் இந்த கடை மேல் தளத்தில் அட்டைப்பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி இருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடையில் உள்ள நிர்வாகிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக மத்திய தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளது வசந்த் அண்ட் கோ. இந்த கடையில் டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்னணு ப.....

கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி என்பவர் கோவை- மேட்டுப்பாளையம் ...
08/07/2023

கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி என்பவர் கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் விஜயராணி(53). இவர் வெள்ளக்கிணர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்ற நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் அருகே வந்த அவர் இரு சக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்....

கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி என்பவர் கோவை- மேட்ட....

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும...
07/07/2023

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற சி. விஜயகுமார் கடலூர், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். சென்னை சி பி சி ஐ டி யில் பணியாற்றினார் . அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றினார்.அவருடைய சிறப்பான பணியின் காரணமாக ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்....

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டார.....

கோவை ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ந் தேதி தொடங்கி 19ந் தேதி வரை நடைபெற்றது. இந்த ப...
24/06/2023

கோவை ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் 2023 போட்டி மலேசியாவில் ஜூன் 14ந் தேதி தொடங்கி 19ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து 12ம் வகுப்பு மாணவி கோவை வீராங்கனை தன்யதா (17) கலந்து கொண்டார். இதில் இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனிநபர் பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத்தில் 2 கி.மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்திய டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் பதக்கம் வென்றது இந்தியா இதுவே முதல் முறையாகும்....

கோவை

கோவை, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடி சிவானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோ...
23/06/2023

கோவை, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடி சிவானந்தத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் என்பவரின் மகன் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. இக்கரை போலுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் ஆனந்த் என்கிற சிவானந்தம் கடன் வசதி செய்து தருவதாக சண்முகத்திடம் நம்பும்படி கூறியிருக்கிறார் .தொடர்ந்து குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் உள்ள நிலத்தை சண்முகத்திற்கு பணம் கொடுக்காமல் கடன் வாங்கி தருவதாக கூறி சக்திவேல் மற்றும் கனகராஜ் பெயரில் சிவானந்தம் மோசடியாக பதிவு செய்தார்....

கோவை,

சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா எல்எல்சி சிக்காகோ, யுஎஸ்ஏயில் சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்காக கோவை அத...
22/06/2023

சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா எல்எல்சி சிக்காகோ, யுஎஸ்ஏயில் சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்காக கோவை அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் நிறுவனர் கலை வளர்மணி ஆசான் ந.கருணாகரனுக்கு யோகா சிரோன்மணி விருதை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வழங்கினார். அருகில் சுப்ரா சுப்பிரமணியம் உட்பட பலர் உள்ளனர்.

சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா எல்எல்சி சிக்காகோ, யுஎஸ்ஏயில் சர்வதேச யோகா ஆசிரியர் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்ததற்....

நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி கோவையில் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. பாடகியும் நடிகையுமான ...
17/06/2023

நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி கோவையில் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது. பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்த சூழலில் கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியில் ஆன்ட்ரியா இசைக்கச்சேரி நடைபெறுகிறது. வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறும் இந்த இசைக்கச்சேரி குறித்து ஆன்ட்ரியா செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது … கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. இந்த கச்சேரி நன்றாக நடைபெற்றது. தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது....

நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி கோவையில் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெற உள்ளது.

Untitled
30/05/2023

Untitled

https://youtu.be/3zXBll_DK5Y கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜாராம். தொழிலதிபரான இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை ....

கோவை, கோவையில் காலை நேரத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்...
16/05/2023

கோவை, கோவையில் காலை நேரத்தில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா ( 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

கோவை,

கோவை, கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி.எம் நகர் உள்ளது .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிஎம் ராஜு என்பவர் ...
14/05/2023

கோவை, கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி.எம் நகர் உள்ளது .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிஎம் ராஜு என்பவர் இந்த இடத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்தார். அதை 40க்கும் மேற்பட்டோர் வாங்கி வீடுகள் கட்டி தற்போது குடியிருந்து வருகின்றனர் .இந்நிலையில் 1988 ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு பகுதியான 43 சென்ட் இடம் ராஜாராம் 1998 ம் ஆண்டு பத்திரம் பதிந்துள்ளதாகவும், அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என ராஜாராம் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் தவறான தகவல்களை அளித்து உத்தரவு பெற்றதாக சர்ச்சை எழுந்தது....

கோவை,

14/05/2023

கோவை, கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை நகரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் கோவை நகரில் மையப்பகுதியான டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழி பட்டு செல்வது இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் கோனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதிக்கு முன்புறமுள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கோவில் காவலாளி ஒருவர் பார்த்தார்....

13/05/2023

கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ஓட்டிச் சென்று வழக்கில் சிக்கி காரை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அரை டவுசரோடு டேபிள் மீது கையூன்றி சாய்ந்து கொண்டு காவல் ஆய்வாளரின் நேம் பேட்சை குறு குறுவென உற்றுப் பார்க்கும் இவர் தான், மனைவி மீது புகார் அளிக்கச் சென்று வாண்டடாக போதை வழக்கில் சிக்கிக் கொண்ட பழனிச்சாமி மகன் பன்னீர்செலவம்....

08/05/2023

கூட்டுக் குடும்பமாக மக்கள் வாழ்ந்த காலங்கள் மாறி இன்று தனித்தனியாக ஒவ்வொரு குடும்பமாக வசிக்க துவங்கிவிட்டனர் .உறவுகளை விட செல்லப் பிராணிகள் மீது காட்டும் அக்கறையும் இன்று அதிகமாகி உள்ளது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே மாறிப்போன செல்லப்பிராணிகளில் முதலிடம் பிடிப்பது நாய்கள் தான். செல்ல பிராணியாக மட்டுமில்லாமல் வீட்டைக் காக்கும் காவலனாகவம் இருந்து வருகிறது .இதில் விலை உயர்ந்தரக நாய்களை மிகவும் ஆசையுடனும் அக்கறையுடனும் பலர் வளர்த்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லும் போது செல்லப் பிராணிகளை பராமரிக்க சிக்கல் ஏற்படுகிறது....

08/05/2023

கோவை, கோவை மாவட்ட வர்த்தக சங்கம் தொடங்கி 2 ஆண்டுகள் ஆவதையொட்டி வர்த்தக தின குடும்ப விழா கோவை திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவில் உள்ள ஜிஎஸ்என் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் டி.முத்துப்பாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் டி.சாமுவேல்ராஜ், அவைத்தலைவர் என்.தேவராஜ், துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செய்தி தொடர்பாளர் ஏ.தனிஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக கண்ணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர். புஷ்பலதா ராஜகோபால், பிஜிஎம் மருத்துவமனை டைரக்டர் ஏ.ராதா பிரசாத் குத்துவிளக்கு ஏற்றினர்....

30/04/2023

கோவை,கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக மோசடி புகார் எழுந்து தற்போது அது விசாரணையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திமா நகர் பகுதிக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சிஎம் நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை ராஜா ராம் என்பவரது மகன் வெங்கட் அடியாட்களுடன் சி.எம் நகர் பகுதிக்கு வந்து இங்குள்ள 43 சென்ட் இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறியுள்ளார்....

04/04/2023

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே மிரள வைத்து தடுப்பூசி மூலம் இன்று கட்டுக்குள் இருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். க...

30/03/2023

கோவை மேயர் வார்டில்குடிநீருக்காக சாலை மறியல்

15/03/2023

கோவை,மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு மீண்டும் மோசடியான முறையில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இந்த 2.23 ஏக்கர் இடத்தை மீண்டும் விற்பனை செய்துள்ளார்.இந்த இடத்தை ஏற்கனவே வாங்கியவர்கள் சிலர் கட்டிடங்களை கட்டியும் ஒரு சிலர் காலியாகவும் வைத்துள்ளனர்....

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்....
13/03/2023

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில் 35 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.12 ம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுகின்றனர்.அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும்....

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு ம.....

13/03/2023

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மூவர் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

13/03/2023

கோவை துடியலூரில் ஆட்டோ ஓட்டுவதற்கு ஒரு தரப்பினர் தங்களை அனுமதிக்காமல் பிரச்சனை கொடுத்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியது.கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான முனீர், ஓம் முருகா, பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் கோவை துடியலூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அங்கு உள்ள சக ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்கள் மீது மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், தீண்டாமையை கடைப்பிடித்து தங்களை ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வந்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்....

13/03/2023

பொதுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு டிஜிபியின் 5 ஆலோசனைகள்

பொதுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு டிஜிபியின் 5 ஆலோசனைகள்
13/03/2023

பொதுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு டிஜிபியின் 5 ஆலோசனைகள்

பொதுத் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு டிஜிபியின் 5 ஆலோசனைகள்

கோவை,தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு, இந்திய மக்கள் உரிமைகள் அமைப்பு, தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மற்ற...
12/03/2023

கோவை,தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு, இந்திய மக்கள் உரிமைகள் அமைப்பு, தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மற்றும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை இணைந்து எலும்பு மூட்டு மற்றும் தண்டுவட சிகிச்சைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புனித தெரசா பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் துவக்கி வைத்தார். முகாமிற்கு தேசிய தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் குமார், மாநிலத் தலைவர் ராஜசேகர் ,மாவட்ட தலைவர் பக்தவச்சலம், மாவட்ட செயலாளர்கள் கோகுலகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

கோவை,தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு, இந்திய மக்கள் உரிமைகள் அமைப்பு, தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் ச...

12/03/2023

கோவை கொடிசியாவில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மாநாடு இன்று நடந்தது. மாநாடு மாநாட்டிற்கு கூட்டமைப்பின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் என்ஜினீயர் ராஜதுரை வரவேற்றார். வரவேற்பு குழு பொருளாளர் என்ஜினீயர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநாட்டை கூட்டமைப்பின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் துவக்கிவைத்தார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- புதிய வீடுகள்...

10/03/2023

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

10/03/2023

அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

10/03/2023

கோவையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்டி

தமிழக முதல்வர் அவர்கள் நாளை 11 ந்தேதி, கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும், பாராட்டு வி...
10/03/2023

தமிழக முதல்வர் அவர்கள் நாளை 11 ந்தேதி, கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும், பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

தமிழக முதல்வர் அவர்கள் நாளை 11 ந்தேதி, கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும், பா....

10/03/2023

கோவை, தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு கடந்த சில நாட்களாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இதை அடுத்து தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை அது வதந்திதான் என்று தமிழக முதல்வர், தமிழக போலீஸ் டிஜிபி இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர் .இதனை தொடர்ந்து கோவை, ஈரோடு ,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தொழிலதிபர்களை சந்திப்பதுடன் வட மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தமிழக போலீஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

10/03/2023

கோவை சிட்ரா கலையரங்கில் சாதனை மகளிர் சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், உங்களால் தான் நாங்கள் இருக்கின்றோம் இந்த நாடு இருக்கிறது. என்னுடைய பேருக்கு பிறகு எம்பி, எம்.எல்.ஏ எனக்கு ஓடுவதற்காக நான் இங்கு வரவில்லை பாஜக வளர வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு, அதற்கான முயற்சி தான் தன்னிடம் உள்ளது....

Address

Race Course
Coimbatore
641018

Telephone

+919840555789

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY KOVAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MY KOVAI:

Videos

Share


Other News & Media Websites in Coimbatore

Show All

You may also like