Vidiyal Pathippagam

Vidiyal Pathippagam Vidiyal Pathippagam is a nonprofit book publishing house based in Coimbatore.

பரிமளாமணாளன் என்கிற தோழர் சி.ஆரோக்கியசாமி இன்று காலை இயற்கை எய்தினார். தன் ஓய்வு காலத்தில் விடியல் பதிப்பகத்துடன் இணைந்த...
17/02/2024

பரிமளாமணாளன் என்கிற தோழர் சி.ஆரோக்கியசாமி இன்று காலை இயற்கை எய்தினார். தன் ஓய்வு காலத்தில் விடியல் பதிப்பகத்துடன் இணைந்து பணியாற்றி விடியலின் ஒரு தூணாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

தொடக்க காலத்தில் ஈழ விடுதலை அரசியலில் பங்காற்றியவர். சமயம், தமிழர் தொன்மை, பண்பாடு, மொழி, சிறு தெய்வ வழிபாடு, திராவிட அரசியல் வரலாறு, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
தான் ஏற்றுக் கொண்ட கொள்கையையும், பல வருட வாசிப்பின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அவர் பெற்ற அறிவையும் அனைவருக்கும் கடத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர். அதன் அடிப்படையிலேயே விடியலுடன் இணைந்து நூல்களை வெளியிட்டார்.

1. தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்

2. தமிழ்நாடு: தொன்மையும் தனித்தன்மையும்

3. கடவுளை கேள்விக்குள்ளாக்கும் மொழி

4. முல்லைத் திணையின் அந்திமக் காலம்

வள்ளுவரும் வள்ளலாரும் தமிழர் உள்ளம் தோறும் இல்லம் தோறும் குடியமர வேண்டும் என்று விரும்பினார்.
அவர் ஏற்றுக் கொண்ட சமுக மாற்றக் கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துச் செல்லவதன் மூலம் தோழரின் நினைவைப் போற்றுவோம்.

கிளர்ச்சியாளர் யூசுப்கான்எஸ்.சி.ஹால்கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரம்ப நிலையில், அதைச் சார்ந்...
08/01/2024

கிளர்ச்சியாளர் யூசுப்கான்
எஸ்.சி.ஹால்

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரம்ப நிலையில், அதைச் சார்ந்தும் பிறகு அதை எதிர்த்தும் செயல்பட்டவர்கள் கலகக்காரர்களா? கிளர்ச்சியாளர்களா? சந்தர்ப்பவாதிகளா? என்பதைப் பற்றிய மயக்கம் வரலாற்றில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாட்டார் வழக்கிலும் மக்கள் மனதிலும் அவர்கள் தியாகிகளாக, விடுதலை வீரர்களாக இடம்பெற்றுவிட்டனர் என்பது வரலாற்றின் இன்னொரு பரிமாணம். அப்படி ஒரு கிளர்ச்சியாளரான ‘மருதநாயகம்’ என்று அழைக்கப்படும் யூசுப்கானின் வீரமிக்க வாழ்க்கை வரலாற்று நூல் இது.

அரங்கு எண்: 347, 348

போர் இல்லாத இருபது நாட்கள்கன்ஸ்தந்தீன் ஸீமனவ்இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகள் சோவியத் குடியரசின் மீது நடத்த...
08/01/2024

போர் இல்லாத இருபது நாட்கள்
கன்ஸ்தந்தீன் ஸீமனவ்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகள் சோவியத் குடியரசின் மீது நடத்திய படையெடுப்புகள், தாக்குதல்கள், வன்முறைகள் நிறைந்த போரைப் பற்றியது இந்த நாவல். போர் திணித்த அவலங்கள், சோவியத் குடியரசின் வாழ்நிலைகள் குறித்தும் இந்நாவல் வழி தெரிந்து கொள்ள முடிகிறது.

அரங்கு எண்: 347, 348

எங்கள் ஊர்உ.வே.கோவிந்தசாமி ராஜு“இந்தியாவின் உயிர் கிராமங்களில் இருக்கிறது” என்ற காந்தியின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வக...
08/01/2024

எங்கள் ஊர்
உ.வே.கோவிந்தசாமி ராஜு

“இந்தியாவின் உயிர் கிராமங்களில் இருக்கிறது” என்ற காந்தியின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் ஒரு கிராமத்தில் சாதி முழுமையுடன் அதிகாரத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பதைச் சுய எள்ளலுடன், கற்பனையுடன் கோவை மாவட்ட வட்டார வழக்கில் மிகத் தெளிவாகச் சித்தரிக்கும் நூல் இது.

அரங்கு எண்: 347, 348

கோயில் என்ன செய்யும்?பண்ணன்சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை புனைவு இலக்கியத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை...
08/01/2024

கோயில் என்ன செய்யும்?
பண்ணன்

சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை புனைவு இலக்கியத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இன்றும் இருக்கிறது. இந்நூலின் வழியே அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார் எழுத்தாளர் பண்ணன்.

அரங்கு எண்: 347, 348

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 3தொண்டின் வடிவம் எங்கள் சாமிபண்ணன்தன்னிலை உணர்ந்த சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமத்துவம...
08/01/2024

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 3

தொண்டின் வடிவம் எங்கள் சாமி
பண்ணன்

தன்னிலை உணர்ந்த சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்று எழுந்து போராடிய திராவிட இயக்கத்தின் ஒரு பிரிவு, அதிகாரத்தை நோக்கிய தேர்தல் அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது தமிழகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று. பேராயக் கட்சியின் செல்வந்தர்களுக்கு, நிலவுடமையாளர்களுக்கு, பெரும்பான்மை சாதியினருக்கு எதிராக, அந்தக் கட்சி நடத்திய போராட்டங்களையும், செய்துகொண்ட சமரசங்களையும் பதிவுசெய்யும் நூல்கள் இவை.

அரங்கு எண்: 347, 348

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 2 பா.நா.வுடன் பதினாறு ஆண்டுகள்பண்ணன்தன்னிலை உணர்ந்த சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமத்து...
08/01/2024

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 2

பா.நா.வுடன் பதினாறு ஆண்டுகள்
பண்ணன்

தன்னிலை உணர்ந்த சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்று எழுந்து போராடிய திராவிட இயக்கத்தின் ஒரு பிரிவு, அதிகாரத்தை நோக்கிய தேர்தல் அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது தமிழகத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று. பேராயக் கட்சியின் செல்வந்தர்களுக்கு, நிலவுடமையாளர்களுக்கு, பெரும்பான்மை சாதியினருக்கு எதிராக, அந்தக் கட்சி நடத்திய போராட்டங்களையும், செய்துகொண்ட சமரசங்களையும் பதிவுசெய்யும் நூல்கள் இவை.

அரங்கு எண்: 347, 348

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 1 தமிழ்ச்செல்வங்களுக்கு தந்தை பெரியார்பண்ணன் போராட்டமும் கொள்கை தீரமும் மிக்க  தந்தை...
08/01/2024

திராவிட அரசியல் வரலாறு நூல் வரிசை - 1

தமிழ்ச்செல்வங்களுக்கு தந்தை பெரியார்
பண்ணன்

போராட்டமும் கொள்கை தீரமும் மிக்க தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை இளையோரும் படிக்கும் வகையில் மிக எளிமையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பண்ணன்.

அரங்கு எண்: 347, 348

முதலாளியத்திற்கான மாற்று - மார்க்சின் பார்வையில்பீட்டர் ஹுடிஸ்முதலாளிய சமூக அமைப்பிற்கான மாற்றாக மார்க்ஸ் முன் வைக்கும் ...
08/01/2024

முதலாளியத்திற்கான மாற்று - மார்க்சின் பார்வையில்
பீட்டர் ஹுடிஸ்

முதலாளிய சமூக அமைப்பிற்கான மாற்றாக மார்க்ஸ் முன் வைக்கும் சமூக அமைப்பைப் பற்றிய மறுஆய்வாகாவும் மறுவாசிப்பாகவும் விளங்குகிறது இந்நூல்.

அரங்கு எண்: 347, 348

கடவுளை கேள்விக்குள்ளாக்கும் மொழிசி.ஆரோக்கியசாமி கடவுள்கள் காற்றில் கரைந்த பிறகு, மதத்தில் ஏறிய மனிதர்களும் மறைந்த பிறகு,...
08/01/2024

கடவுளை கேள்விக்குள்ளாக்கும் மொழி
சி.ஆரோக்கியசாமி

கடவுள்கள் காற்றில் கரைந்த பிறகு, மதத்தில் ஏறிய மனிதர்களும் மறைந்த பிறகு, விடுதலையாக, பகுத்தறிவாக, தோழமையாக மொழி மட்டும் உடனிருக்க, துணிந்து வாழும் ஒரு சமூகத்தைக் கற்பனை செய்கிறது இந்நூல்.

அரங்கு எண்: 347, 348

08/01/2024
46-வது சென்னை புத்தகக் காட்சி 2023அரங்கு எண்: 601, 602
10/01/2023

46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம்வெள்விரிபத்திநாதன் பர்ணாந்துமீனவர்களும் அகதிகளும் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்கும் அண்மைக் கடல் பரப்பில் ...
09/01/2023

நூல் அறிமுகம்

வெள்விரி
பத்திநாதன் பர்ணாந்து

மீனவர்களும் அகதிகளும் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்கும் அண்மைக் கடல் பரப்பில் 16.7 கடல் மைல்களுக்கு அப்பால் மட்டுமே இருந்தாலும் அறியப்படாமலிருக்கும் மன்னார்ச் சமூகத்தின் வாழ்வையும் உள்முரண்பாடுகளையும் சிக்கல்களையும் மிகத் தெளிவான நடையில் காட்சிப்படுத்துகின்றன பத்திநாதன் பர்ணாந்துவின் படைப்புகள்.

விலை: ரூ.500
பக்கம்: 544
46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம்உட்துறைமுகம்கௌரிபாலன்அகமும் புறமும் இழந்து, தன்னை மறந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறக்கப்பட்டு வரும்...
09/01/2023

நூல் அறிமுகம்

உட்துறைமுகம்
கௌரிபாலன்

அகமும் புறமும் இழந்து, தன்னை மறந்து நிற்கும் தற்கால ஈழச் சமூகத்தில் மறக்கப்பட்டு வரும் ஒரு போராட்டத்தில், பன்முகம் கொண்ட ஒரு சிறு நகரத்தில், தனியொருவனுக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொண்டு தமிழ்க் கரையில் அமைந்திருக்கிறது உட்துறைமுகம்.

விலை: ரூ. 300
பக்கம்: 328
46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம் காந்தியின் பகவத்கீதைநா.ஜெயராமன்இந்துமதம், இந்துத்துவா, தீண்டாமை போன்றவற்றின் மீது காந்தி கொண்டிருந்த சிக்க...
09/01/2023

நூல் அறிமுகம்

காந்தியின் பகவத்கீதை
நா.ஜெயராமன்

இந்துமதம், இந்துத்துவா, தீண்டாமை போன்றவற்றின் மீது காந்தி கொண்டிருந்த சிக்கலான கருத்துகள் பற்றிய ஒரு விரிவுரையே இந்நூல்.

விலை: ரூ.200
பக்கம்: 216
46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம்தமிழ்நாடு: தொன்மையும் தனித்தன்மையும்சி.ஆரோக்கியசாமிகடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அகழாய்வு...
06/01/2023

நூல் அறிமுகம்

தமிழ்நாடு: தொன்மையும் தனித்தன்மையும்
சி.ஆரோக்கியசாமி

கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அகழாய்வுகள் தமிழின் தொன்மையை அறிவியல் அடிப்படையில் மேலும் உறுதியான அளவில் மெய்ப்பித்துவருகின்றன. மேலாதிக்கத்தை நோக்கியதாக, வெற்றுப் பெருமையாக இல்லாமல் வேறுபட்டு நிற்பதுதான் தமிழின் தனித்தன்மை என்று நிறுவ முயற்சிக்கிறது இந்நூல்.

விலை:ரூ. 260
பக்கம்: 280

46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம்குத்தூசி குருசாமி கட்டுரைகள்காலத்திற்கு ஒவ்வாத, மூடத்தனமான கருத்துகள், புனிதங்கள், பழக்க வழக்கங்கள், சாதி ச...
05/01/2023

நூல் அறிமுகம்
குத்தூசி குருசாமி கட்டுரைகள்

காலத்திற்கு ஒவ்வாத, மூடத்தனமான கருத்துகள், புனிதங்கள், பழக்க வழக்கங்கள், சாதி சமயங்கள் என அனைத்தையும் நக்கல் நையாண்டியுடன் கட்டுடைத்தவர் குத்தூசி குருசாமி. அவர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

விலை:ரூ.400
பக்கம்: 408
46-வது சென்னை புத்தகக் காட்சி 2023
அரங்கு எண்: 601,602

நூல் அறிமுகம் கைவல்ய சுவாமியார் கட்டுரைகள்தமிழ் நாட்டின் மகத்தான சுயமரியாதை சிந்தனை இயக்கத்தின் அங்கமாக இருந்து தமிழ்ச் ...
04/01/2023

நூல் அறிமுகம்

கைவல்ய சுவாமியார் கட்டுரைகள்

தமிழ் நாட்டின் மகத்தான சுயமரியாதை சிந்தனை இயக்கத்தின் அங்கமாக இருந்து தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்தவர்களில் ஒருவர் 'கைவல்ய சுவாமியார்' என்கிற பொன்னுசாமி. வேத சாஸ்திரங்களையும் புராணங்களையும் தர்க்கத்திற்கு உட்படுத்தி கேள்வி கேட்டவர். அவரின் பேச்சுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பே 'கைவல்ய சுவாமியார் கட்டுரைகள்'.

விலை: ரூ.1200
பக்கம்:926

46-வது சென்னை புத்தகக் காட்சி 2023

விடியல் பதிப்பகம் அரங்கு எண்: 601,60246-வது சென்னை புத்தகக் காட்சி
03/01/2023

விடியல் பதிப்பகம்
அரங்கு எண்: 601,602
46-வது சென்னை புத்தகக் காட்சி

நூல் அறிமுகம் மக்கள் தோழன் லெனின்தொகுப்பு: ஏ.க்ராவ்சென்கோஉழைக்கும் மக்களின் மாபெரும் தலைவராக லெனின் உருவெடுத்த வரலாற்றை ...
03/01/2023

நூல் அறிமுகம்

மக்கள் தோழன் லெனின்
தொகுப்பு: ஏ.க்ராவ்சென்கோ

உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவராக லெனின் உருவெடுத்த வரலாற்றை இளம் வாசகர்களும் படிக்கும் வகையில் மிக எளிமையாகப் பதிவு செய்கிறது இந்நூல்.

விலை: ரூ.120
பக்கம்: 64
46-வது சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு
அரங்கு எண்: 601, 602

நூல் அறிமுகம் சூழலியல் - ஒரு அறிமுகம்இயற்கைச் சூழலுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ன? ஒரு அமைப்பாக இயற்கைச் சூழல் எப்படி...
02/01/2023

நூல் அறிமுகம்
சூழலியல் - ஒரு அறிமுகம்

இயற்கைச் சூழலுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்ன? ஒரு அமைப்பாக இயற்கைச் சூழல் எப்படி இயங்குகிறது? பல லட்சக்கணக்கான உயிர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பிற்குள் பொருளாதார விலங்காக நுகர்ந்து கொண்டிருக்கும் நம்மைப் பொருத்திக் கொள்வது எப்படி? மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரு மாற்று சூழலியல் நாகரிகத்தை தோற்றுவிப்பது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம்.

விலை: ரூ.250
பக்கம்: 168
46-வது சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு

01/01/2023

நூல் அறிமுகம்

கேள்வி கேள்!
கருத்துருவாக்கம்: புஷ்பா எம்.பார்கவா

எந்த ஒன்றையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் முறைமையைக் கற்றுக்கொடுத்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவுகிறது இச்சிறு புத்தகம்.

விலை: ரூ.60
பக்கம்: 64
46-வது சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பு வெளியீடு
அரங்கு எண்: 601, 602

Vidiyal Pathippagam is a nonprofit book publishing house based in Coimbatore.

இயந்திர யுகத்தில் கலைப்படைப்பு வால்ட்டர் பெஞ்சமின்முதலாளிய கட்டமைப்பின் கீழ் உற்பத்தி முறையின் வடிவங்களும் கருவிகளும் மா...
01/12/2022

இயந்திர யுகத்தில் கலைப்படைப்பு
வால்ட்டர் பெஞ்சமின்

முதலாளிய கட்டமைப்பின் கீழ் உற்பத்தி முறையின் வடிவங்களும் கருவிகளும் மாறி வர கலை மற்றும் கலை வடிவத்தின் மீதான அதன் தாக்கம், கலைக்கும் மக்களுக்குமான உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றி ஆழமான மார்க்சியப் பார்வையில் எழுதியுள்ளார் வால்ட்டர் பெஞ்சமின்.

விலை: ரூ.90
பக்கம்: 98

24/03/2022
17/03/2022
17/03/2022
நூல் அறிமுகம்பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடங்கி, அவ்வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அயோத்தியில் அரங்கேறிக் ...
17/03/2022

நூல் அறிமுகம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடங்கி, அவ்வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அயோத்தியில் அரங்கேறிக் கொண்டிருக்கும் பிரிவினைவாதம் இன்று அதே இடத்தில் இராமனுக்கு கோயில் கட்டுவதை தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியலாக வளர்ந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்த இராமர் சிலை பாபர் மசூதிக்குள் உள்ளே நுழைந்தது எப்படி என்ற வரலாற்றை தரவுகளுடன் எழுதியுள்ளனர் பத்திரிக்கையாளர்களான கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா.

அயோத்தி: இருண்ட இரவு

பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு.

கிருஷ்ணா ஜா - திரேந்திர கே. ஜா

விலை ரூ.180
(248 பக்கங்கள்)

25% சலுகையுடன் அஞ்சல் செலவு தனி

Address

A51, Balan Nagar, Masakkalipalayam Road, Peelamedu
Coimbatore
641004

Opening Hours

Monday 10:30am - 5:30pm
Tuesday 10:30am - 5:30pm
Wednesday 10:30am - 5:30pm
Thursday 10:30am - 6pm
Friday 10:30am - 6pm
Saturday 10:30am - 6pm

Telephone

+919443468758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vidiyal Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vidiyal Pathippagam:

Share

Category



You may also like