Covai News Time

Covai News Time Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Covai News Time, News & Media Website, Coimbatore.

கேபினட் அமைச்சர்கள் & இலாகாக்கள்பிரதமர் மோடி- அணுசக்தித் துறை, விண்வெளி துறை, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்ர...
10/06/2024

கேபினட் அமைச்சர்கள் & இலாகாக்கள்

பிரதமர் மோடி- அணுசக்தித் துறை, விண்வெளி துறை, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்

ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை

அமித் ஷா- உள்துறை, கூட்டுறவுத் துறை

நிதின் கட்கரி- சாலை போக்குவரத்துத் துறை

ஜேபி நட்டா- சுகாதார துறை, கெமிக்கல் மற்றும் உரத்துறை

சிவராஜ் சிங் சவுகான்- வேளாண் துறை, ஊரக வளர்ச்சி

நிர்மலா சீதாராமன்- நிதித் துறை, கார்பரேட் விவகாரம்

எஸ் ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை

மனோகர் லால் கட்டார்- நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை & மின் துறை

எச்டி குமாரசாமி- கனரக தொழில்துறை மற்றும் இரும்புத்துரு

பியூஷ் கோயல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை

தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை

ஜிதன் ராம் மஞ்சி- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை

லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்- பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை

சர்பானந்தா சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை

டாக்டர் வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை

கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்துத் துறை

பிரகலாத் ஜோஷி- உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம்

ஜுவல் ஓரம்- பழங்குடியினர் நலத்துறை

கிரிராஜ் சிங்- ஜவளித்துறை

அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே துறை, தகவல் & ஒளிபரப்புத்துறை

ஜோதிராதித்ய சிந்தியா- தகவல் தொடர்பு துறை, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.

பூபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை

கஜேந்திர சிங் ஷெகாவத்- கலாச்சார துறை & சுற்றுலாத்துறை

அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்

கிரண் ரிஜிஜு- நாடாளுமன்ற விவகார அமைச்சகம்

ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியத்துறை

மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை

ஜி கிஷன் ரெட்டி- நிலக்கரி துறை மற்றும் சுரங்கத்துறை

சிராக் பாஸ்வான்- உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்- ஜல் சக்தி அமைச்சர்.

சிஆர் பாட்டீல்- ஜல்சக்தி துறை

தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவிகள் & இலாகாக்கள்

ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை, திட்டமிடல் துறை

ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை

அர்ஜுன் ராம் மேக்வால்- சட்டம் மற்றும் நீதி துறை

பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்- ஆயுஷ் துறை

ஜெயந்த் சவுத்ரி- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை

இணை அமைச்சர்கள் & இலாகாக்கள்

ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை (இணை அமைச்சர்)

ஸ்ரீபாத் நாயக்- மின் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (இணை அமைச்சர்)

பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை (இணை அமைச்சர்)

கிரிஷன் பால் குர்ஜார்- கூட்டுறவுத்துறை (இணை அமைச்சர்)

ராம்தாஸ் அத்வாலே- சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் (இணை அமைச்சர்)

ராம் நாத் தாக்கூர்- வேளாண் துறை (இணை அமைச்சர்)

நித்யானந்த் ராய்- உள் துறை (இணை அமைச்சர்)

அனுப்ரியா பட்டேல்- சுகாதார துறை, கெமிக்கல் துறை (இணை அமைச்சர்)

வி சோமண்ணா- ஜல்சக்தி, ரயில்வே துறை (இணை அமைச்சர்)

டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி- ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்பு துறை (இணை அமைச்சர்)

எஸ்பி சிங் பாகேல்- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை, பஞ்சாயத்து ராஜ் துறை (இணை அமைச்சர்)

ஷோபா கரந்த்லாஜே- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (இணை அமைச்சர்)

கீர்த்தி வர்தன் சிங்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத் துறை (இணை அமைச்சர்)

பிஎல் வர்மா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்

சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்து (இணை அமைச்சர்)

சுரேஷ் கோபி- பெட்ரோலியத்துறை, சுற்றுலாத்துறை (இணை அமைச்சர்)

எல் முருகன்- தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை (இணை அமைச்சர்)

அஜய் தம்தா - சாலை போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)

பாண்டி சஞ்சய் குமார்- உள்துறை (இணை அமைச்சர்)

கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சித் துறை (இணை அமைச்சர்)

பகீரத் சவுத்ரி- வேளாண் துறை (இணை அமைச்சர்)

சதீஷ் சந்திர துபே- நிலக்கரி துறை, சுரங்கத்துறை (இணை அமைச்சர்)

சஞ்சய் சேத்- பாதுகாப்பு துறை (இணை அமைச்சர்)

ரவ்னீத் சிங் பிட்டு- உணவு பதப்படுத்துதல், ரயில்வே துறை (இணை அமைச்சர்)

துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரத் துறை (இணை அமைச்சர்)

ரக்ஷா காட்சே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

சுகந்தா மஜும்தார்- கல்வித்துறை, வடகிழக்கு விவகாரங்கள் துறை

சாவித்ரி தாக்கூர்- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

டோகன் சாஹு- நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை (இணை அமைச்சர்)

ராஜ்பூஷன் சவுத்ரி- ஜல்சக்தி துறை (இணை அமைச்சர்)

பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா- கனரக தொழில்துறை, இரும்பு துறை (இணை அமைச்சர்)

ஹர்ஷ் மல்ஹோத்ரா- சாலை போக்குவரத்து துறை, கார்பரேட் விவகாரங்கள் துறை (இணை அமைச்சர்)

நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை (இணை அமைச்சர்)

முரளிதர் மோஹோல்- கூட்டுறவுத்துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை (இணை அமைச்சர்)

ஜார்ஜ் குரியன்- சிறுபான்மையினர் விவகாரத் துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை (இணை அமைச்சர்)

பபித்ரா மார்கெரிட்டா- வெளியுறவுத்துறை, ஜவளித்துறை (இணை அமைச்சர்)

09/06/2024

இந்தியாவின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல...
05/06/2024

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்

``அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது!" - ஆர்.பி.உதயகுமார்
25/05/2024

``அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது!" - ஆர்.பி.உதயகுமார்

இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான்  மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்.
25/05/2024

இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (மே 26) ) இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர் ச...
25/05/2024

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (மே 26) ) இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா உத்தரவு

காரமடை சாஸ்திரி நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் அம்மன் அழைப்பானது காரமடை காந்தி மைதானம் ஐயப்பன் கோவிலில் இருந்த...
22/05/2024

காரமடை சாஸ்திரி நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் அம்மன் அழைப்பானது காரமடை காந்தி மைதானம் ஐயப்பன் கோவிலில் இருந்து சாஸ்திரி நகர் கோவில் வரை வான வேடிக்கை, தாரை, தப்பட்டை முழங்க நாதஸ்வர இசையுடன் சுவாமி திருவீதி உலா வருகை புரிந்தார்.

22/05/2024
22/05/2024

கோவை மாவட்டம் காரமடையில் கரு மேகங்களுடன் சாரல் மழை பொழிகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் கரகம் அழைக்கு...
22/05/2024

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் கரகம் அழைக்கும் விழா நடைபெற்றது..

சிக்காரம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்போர் மற்றும் கற்பிப்போரை சிறப்பு செய்தல் நிகழ்ச்சி!கோவை வடக்கு மாவ...
20/05/2024

சிக்காரம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்போர் மற்றும் கற்பிப்போரை சிறப்பு செய்தல் நிகழ்ச்சி!

கோவை வடக்கு மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்குட்பட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சி கன்னார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்போர் மற்றும் கற்பிப்போரை சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கன்னார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்போர் மற்றும் கற்பிப்போரை சிறப்பு செய்யும் நிகழ்ச்சியானது ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா கல்வி அறக்கட்டளை மற்றும் காரமடை ரோட்டரி கிளப், கற்போர் மற்றும் கற்பிப்போர் குழு, ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் இருந்து கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்க இருக்கும் மாணவ, மாணவியர்களை சிறப்பிக்கும் இவ்விழாவானது சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும் , ஸ்ரீ ப்ளூ மெட்டல்ஸ் வெள்ளை மணல் நிறுவனருமான சா.ஞானசேகரன் கலந்துகொண்டு தலைமை தாங்கி தனது நிறுவனம் சார்பில் சுமார் 125 மாணவ, மாணவிகளுக்கு வண்ண புத்தாடை மற்றும் நிதி உதவி அடங்கிய தொகுப்பு வழங்கினார். மேலும் மாணவர்கள் முன்பு சிறப்புரையாற்றி பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். இதில் தானும் ஒரு அரசு பள்ளி மாணவர் என்று கூறி பெருமிதம் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார். காரமடை ரோட்டரி சங்க நிர்வாகிகள் தலைவர் விஜய பிரபு, செயலாளர் சோமசுந்தரம், பட்டய தலைவர் சிவ சதீஷ் மற்றும் காரமடை முன்னாள் கவுன்சிலர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உடன் ஊராட்சி துணை தலைவர் யுவராஜ், முன்னாள் துணைத் தலைவர் ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், காரமடை கவுன்சிலர் கவிதா நடராஜன் மேலும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

17/05/2024

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது

16/04/2024

LIVE | மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தேர்தல் பிரச்சாரம்

12/04/2024

LIVE | மக்களவை தேர்தல் பிரச்சாரம் | முக ஸ்டாலின் - ராகுல்காந்தி பரப்புரை | கோவை

10/04/2024

LIVE | முதலமைச்சர் முக ஸ்டாலின் மக்களவை தேர்தல் பரப்புரை | தேனி

08/04/2024

🔴LIVE: பாஜக வேட்பாளர் கு.அண்ணாமலை தேர்தல் பரப்புரை | ஐந்து முக்கு, பெரியநாயக்கன்பாளையம்

08/04/2024

🔴LIVE: பாஜக வேட்பாளர் கு.அண்ணாமலை தேர்தல் பரப்புரை | கஸ்தூரிபாளையம்

08/04/2024

மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் கு.அண்ணாமலை பரப்புரை

04/04/2024

LIVE | அதிமுக கோவை எடப்பாடி பழனிசாமி பிரச்சார பொதுக்கூட்டம்

22/03/2024

🔴 LIVE :2024 மக்களவைத் தேர்தல் திருச்சி பெரம்பலூர் திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம்

18/03/2024

LIVE | கோவையில் பிரதமர் நரேந்திர மோடி 'ரோடு ஷோ'

17/03/2024

மக்களைவை தேர்தல் 2024 | ராகுல் காந்தி நடைபயணம் நிறைவு விழா | மும்பை

16/03/2024

LIVE | மக்களவை தேர்தல் 2024 | தேர்தல் தேதி அறிவிப்பு கூட்டம்

Address

Coimbatore
641104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Covai News Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Coimbatore

Show All