சிறந்த பெற்றோர்க்குரிய குணங்கள்
சிறந்த பெற்றோர்க்குரிய குணங்கள் | Parenting Skills | குழந்தை வளர்ப்பு | Skills of Amazing Parents | பெற்றோர்கள் கவனத்திற்கு |
ஒரு விவசாயின் அழுகை
அற்பமான விஷயங்களுக்காக உங்களது உண்மையான சந்தோஷத்தை இழந்து விடாதீர்கள் -ஒரு குட்டிக்கதை | ஒரு விவசாயின் அழுகை | தக்காளி விவசாயி |
திருமணத்திற்கு முன் யோசியுங்கள்
திருமணத்திற்கு முன் யோசியுங்கள் | இல்லறவியல் | சரியான வாழ்க்கைத்துணை யார்? | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: ஈகை / Giving
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving?
வள்ளுவரின் சாபம்
வள்ளுவரின் சாபம் | தானம் செய்பவரை தடுக்காதீர்கள் | திருக்குறள் | குறள் எண் : 166 |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
அதிகாரம்/Chapter: அழுக்காறாமை / Not Envying
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
முல்லாவின் அழுகை - ஒரு நகைச்சுவைக் கதை
முல்லாவின் அழுகை - ஒரு நகைச்சுவைக் கதை😂 | சந்தோஷத்திற்கும் திருப்திக்குமான எல்லை நாம் வரையறுத்துக்கொள்வதில் தான் இருக்கிறது
வள்ளுவரின் கோவம்
வள்ளுவரின் கோவம் 😡 | குறள் எண் : 1077 | அதிகாரம்/Chapter: கயமை / Baseness | பால்: பொருட்பால் | ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
திருக்குறளும் - அறிவியலும்
திருக்குறளும் - அறிவியலும் | Scientific outlook in Thirukkural | அறிவியல் பேசும் திருக்குறள் |
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
- பாவேந்தர் பாரதிதாசன்
"கொடி காத்த குமரன்" பிறந்தநாள் அக்டோபர் 4
கொடிபறக்குது கொடிபறக்குது
கொடிபறக்குது பாரடா!
கோணலற்ற கோலில் எங்கள்
கொடிபறக்குது பாரடா!
சிறைகிடந்து துயரமடைந்த
தேசபக்தர் நட்டது
தீரவீர சூரரான
தெய்வபக்தர் தொட்டது.
முறைகிடந்து துன்பம்வந்து
மூண்டுவிட்ட போதிலும்
முன்னிருந்து பின்னிடாமல்
காக்கவேண்டும் நாமிதை!
வீடிழந்து நாடலைந்து
வினையிழந்த நாளிலும்
விட்டிடாத தேசபக்தர்
கட்டிநின்று காத்தது ;
மாடிழந்து கன்றிழந்து
மனையிழக்க நேரினும்
மானமாக நாமுமிந்தக்
கொடியைக்காக்க வேண்டுமே!
உடலுழைத்துப் பொருள்கொடுத்தும்
உயிரும்தந்த உத்தமர்
உண்மையான தேசபக்தர்
ஊன்றிவைத்த கொடிஇது ;
கடல்கொதித்த தென்னமிக்க
கஷ்டம்வந்த போதிலும்
கட்டிநின்று விட்டிடாமல்
காக்கவேண்டும் நாமிதை!
மனமுவந்திங் குயிர்கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது!
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்துபோ
பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும்
பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் | Tamil proverbs and their right meanings | பொருள் திரிந்த தமிழ்ப்பழமொழிகள்
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள் |
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
ஒண்டி ஆண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிடாத சண்டையன்று புதுமையே!
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய்...
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே...
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே...
- "காந்தியக் கவிஞர்" - "நாமக்கல் கவிஞர்" வெ. இராமலிங்கம் பிள்ளை
சிறிய விஷயங்களுக்காக உங்களது பெரிய சந்தோஷத்தை இழந்து விடாதீர்கள் - ஒரு குட்டிக்கதை
சிறிய விஷயங்களுக்காக உங்களது பெரிய சந்தோஷத்தை இழந்து விடாதீர்கள் - ஒரு குட்டிக்கதை | Moral Stories | கடற்கரைக்கு விளையாடச்சென்ற ஒரு பெண் | குழந்தையை காப்பாற்றிய கடல் தேவதை | வாழ்க்கைத்தத்துவங்கள் | அம்மாவும் மகளும்
ஒரு குற்றவாளியின் கடைசி ஆசை - ஒரு குட்டிக்கதை
ஒரு குற்றவாளியின் கடைசி ஆசை - ஒரு குட்டிக்கதை | குழந்தை வளர்ப்பின் சூத்திரம் | ஒரு நிமிடக்கதை | எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே; - அது
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே
வாழ்க்கையை வளமாக்கும் அறிவுரைகள் | குழந்தை வளர்ப்பு | How to grow a child in Tamil |