KOVAI GREEN MEDIA

KOVAI GREEN MEDIA கோவையின் செய்திகள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
18/01/2025

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

19/09/2024

HMR Hotel



*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் M. அப்துல் ரஹ...
20/08/2024

*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்!

வல்ல இறைவனின் நல்லருள் நம் யாவருக்கும் உரித்தாகட்டும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் மிக நேர்மையுடனும், எந்த நிர்பந்தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமலும், வக்பு சட்டப்படி பணிகளாற்றுவதில் எந்த சமரசம் காட்டாமலும், இறையச்சமிக்க
வாழ்வே மிக உயர்ந்தது என்ற உறுதிப்பாட்டுடனும் பணிகள் ஆற்றி வந்திருக்கிறோம்.

இந்த உறுதிப்பாட்டில் நிலைத்திருக்க பல சவால்களையும், விமர்சனங்களையும் சந்திக்கவேண்டும் என்பதும் யதார்த்தம். இது எல்லா தரப்பினருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான்.

ஆனாலும் சமூகப் பொறுப்புகளோடு ஆற்றிவரும் கடமைகளில் இன்னும் அதிக உழைப்பும், ஈடுபாடும், சமுதாய நலன் சார்ந்த அந்த அர்ப்பணிப்பு பணி அவசியத்தேவை. அது காலத்தின் கட்டாயம் என்பதை ஆழ்ந்த கவனத்தில்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் ஒப்புதலோடும், வழிகாட்டுதலோடும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு 19/08/2024 மாலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளேன்.

மிகச் சிறப்பான ஆட்சிக்குத் தனி அடையாளமாய்த் திகழும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பணிகளுக்கு என்றும் துணைநிற்போம்; மக்களுக்குப் பணிகளாற்றுவதில் சவால்களையும் தாண்டி சாதனைகள் புரிவோம்.

இன்ஷா அல்லாஹ்.

செவ்வனே பணிகளாற்ற ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய தமிழ்நாடு அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், மாண்புமிகு துறை அமைச்சர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கும், வாரிய அலுவலர்களுக்கும், பல்வேறு வக்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.

எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu

IUML Tamil Nadu State
Indian Union Muslim League - Kerala State








KOVAI GREEN MEDIA

02/08/2024

முஸ்லிம் லீக் white guard (WG) வாயநாடு நிலசரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய ராணுவத்தோடு இணைந்து களப்பணி

மீட்பு பணிகளில் முழு வீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும், தொண்டர்களும்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பேரி...
01/08/2024

மீட்பு பணிகளில் முழு வீச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும், தொண்டர்களும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பேரிடர் மீட்புப் பணி குழுவினர் களத்தில் (ஒயிட் கார்ட்ஸ் - White Guards).

இறந்தோர் உடலை கண்டெடுத்து நல்லடக்க பணிகளில் முஸ்லிம் லீகினர்.

வயநாட்டை நோக்கி ஏராளமான வாகனங்களில் முஸ்லிம் லீகின் நிவாரண உதவிகள்.

பாதிக்கப்பட்டோரின் மறு வாழ்விற்கான பணிகளை முன்னெடுக்கும் முஸ்லிம் லீக்.

முஸ்லிம் லீக் சார்பு அமைப்பான KMCC சார்பில் பாதிக்கப்பட்டோருக்கு பேருதவி.

14/04/2024
24/03/2024

ராமநாதபுரம் வெற்றி வேட்பாளர்

காரியாபட்டியில்

நமது வெற்றி வேட்பாளர் கே.நவாஸ்கனியை

#ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்து 💚

சின்னவர்🖤❤ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பரப்புரை

Udhayanidh #ஏணி Stalin

K.Navas Kani Kanimozhi Karunanidhi

31/01/2024

ஆல் இந்தியா கே எம் சி சி சார்பாக (AIKMCC)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75வது பவள விழா ஆண்டை முன்னிட்டு

அனைத்து சமூகத்தினருக்குமான வறிய நிலை மக்களின் திருமண கனவுகளை நிறைவேற்றும் வண்ணமாக

கோவை NSK திருமண மண்டபத்தில் இரு மனங்கள் இணையும் திருமண விழா நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. நடைபெற உள்ளது.




All India KMCC

*கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு*➖️➖️➖️➖️⤵️➖️➖️➖️➖️*கோவை மாவட்டம் மேட்டுப்பாள...
10/01/2024

*கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு*
➖️➖️➖️➖️⤵️➖️➖️➖️➖️
*கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவில், அறங்காவலர் குழு தலைவராக தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார்*.

*கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் ஐந்து பேர் அண்மையில் நியமிக்கப்பட்டனர். கோவை சாய்பாபா காலனி எம்.எம்.ராமசாமி, காரமடை தேவ் ஆனந்த், மத்வராயபுரம் கார்த்திகேயன், கவுண்டம்பாளையம் சுஜாதா, காரமடை மேடூர் குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரில் ஒருவரை, அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்க 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறாத நிலையில், அதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தலைவரை தேர்ந்தெடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன் படி காரமடையை சேர்ந்த தேவ் ஆனந்தை தலைவராக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இன்று காரமடை அரங்கநாதர் கோவில் அலுவலகத்தில் தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார். அவருக்கு கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உடன் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் காரமடை நகராட்சி தலைவர் உஷா, அட்மா சங்க தலைவர் சுரேந்திரன், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்*.
🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚

மிக்ஜாம் புயல் நிவாரண பணிஇ.யூ.முஸ்லிம் லீக் தென்சென்னை  மாவட்ட செயலாளர் பனைக்குளம் அபூபக்கர் ஒருங்கிணைப்பில் நிவாரண மற்ற...
07/12/2023

மிக்ஜாம் புயல் நிவாரண பணி

இ.யூ.முஸ்லிம் லீக் தென்சென்னை மாவட்ட செயலாளர் பனைக்குளம் அபூபக்கர் ஒருங்கிணைப்பில் நிவாரண மற்றும் மீட்பு பணி

பத்திரிகை அறிக்கை 18/09/23மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங...
18/09/2023

பத்திரிகை அறிக்கை 18/09/23

மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2023-2026) தேர்தல்
மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெய்தூன் சிக்னேச்சர் ஹோட்டலில் 16-09-2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

அல்ஹாஜ்,முஹம்மது இக்பால் BABL மற்றும் அல்ஹாஜ். மசூது ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டு முறையாகவும் திறம்படவும் தேர்தலை நடத்தி கீழ்காணும் பதவிகளுக்கு உறுப்பினர்கள் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

சேர்மன்- அல்ஹாஜ். அஹமது தம்பி
தலைவர்- அல்ஹாஜ் . முஹம்மது ரபீக்
செயலாளர்- அல்ஹாஜ். மின்னூர் சலீம்
பொருளாளர்- அல்ஹாஜ்.சமீர்
துணைத்தலைவர்- அல்ஹாஜ். லேனா இஷாக் துணைச் செயலாளர்- அல்ஹாஜ். அப்துல் ஹக்கீம்

நிர்வாக் குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றவர்கள்: அல்ஹாஜ். அப்துல் ஹக்கீம்
அல்ஹாஜ். தமீம் அன்சாரி
அல்ஹாஜா. பாத்திமா முஸபர்
அல்ஹாஜ்.மஹ்மூத் மரைக்கார் மற்றும்
அல்ஹாஜ். மசூது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுக்குழு மற்றும் தேர்தலில் கலந்துக்கொண்ட மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் நிறுவனங்கள் விபரம் பின்வருமாறு

1,தீன் ஹஜ் சர்வீஸ்.

2,ரிச்வே டூர்ஸ் & டிராவல்ஸ்.

3,சலீம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

4, அல்-நூர் ஹஜ்சர்விஸ் (இந்தியா)பிரைவேட் லிமிடெட்

5, அல் ஹரமைன் ஹஜ் சர்வீஸ் ( பி ) லிட்

6,பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ்.

7,கலந்தர் ஹஜ் ட்ராவல்ஸ்.

8, அல் அமானத் ஹஜ் சர்வீஸ் இந்தியா)பிரைவேட் லிமிடெட்

9,ஷா ஹஜ் சர்வீஸ் இந்தியா பி)லிட்

10, அல்ஹுதா ஹஜ் சர்வீஸ் (பி)லிட்

11,ஸலாமத் ஹஜ் சர்வீஸ்.

12,அப்சல் ஹஜ் டூர்ஸ் & டிராவல்ஸ்.

13,மில்லத் ஹஜ் சர்வீஸ்.

14, அல்ஹுஸாம் டிராவல் & டூர்ஸ் இந்தியா பி லிமிடெட்

15,திருச்சி சன் சைன் ஹஜ் சர்வீஸ்.

16,அல் மதீனா ஹஜ் சர்வீஸ்.

17, அல் மிஸ் பாஹ் ஹஜ் உம்ரா சர்வீஸ்.

18, அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸஸ் (பி) லிமிடெட்

19,அல் சபா ஹஜ் சர்வீஸ்.

20,புஷ்ரா ஹஜ் சர்வீஸ்.

21, அல் தாஜ் ஹஜ் சர்வீஸ்

22 அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் (பி) லிட்,

23, பிளைவேஸ் ட்ராவல்ஸ்

24, H.M டிராவல்ஸ்

25,தாஜ் ஹஜ் சர்வீஸ் டூர்ஸ் & டிராவல்ஸ்

26, பினாரங் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்

27,பரக்கத் ஹஜ் சர்வீஸ்.

28,அல் அலீப் ஹஜ் சர்வீஸ்.

29,முபாரக் ஹஜ்& உம்ரா சர்வீஸ்.

30, ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ்.

31,மர்வா ஹஜ் சர்வீஸ்.

32, சவுத் ஆசியன் ஹஜ் & உம்ரா சர்வீசஸ்

33, SMK ஹஜ் சர்வீஸ்.

34,அல் மீசாப் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.

35,டால்ஃபின் ஏர் சர்வீஸ்.

36,அஹமத் வேர்ல்ட் டிராவல்ஸ் டூர்ஸ் & கார்கோ.

37,தைபா ஹஜ் சர்வீஸ்.

38,ரிஸ்வான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.

39,நாகூர் ஷரீஃப் ஹஜ் சர்வீஸ்.

40,அல் பதுர் ஹஜ் சர்வீஸ்.

41,அல் மாஸ் ஹஜ் உம்ரா குரூப் சர்வீஸ்.

42,அல் மக்கா ஹஜ் சர்வீஸ் மதுரை.

43, அல் ஃமாமூர் ஹஜ் .

44,நெஸ்ட் ஹஜ் அண்ட் உம்ரா சர்வீஸ்.

45, தக்பீர் ஹஜ் சர்வீஸ்

46, அல் மக்கா ஹஜ் சர்வீஸ். சென்னை.

47,மக்கா ஜாபர் டூர்ஸ் & டிராவல்ஸ்.

ஆகியோர் மத்திய அரசின் சிறுபான்மை துறை அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.

இன்று காலை கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா அவர்களிடம்கோவை மாநகராட்சி 84 வது வார்டு மக்க...
18/07/2023

இன்று காலை கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா அவர்களிடம்
கோவை மாநகராட்சி 84 வது வார்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ வேண்டும் என்று கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு நாள் இன்று 18.07.23 மாநகராட்சி மேயர், ஆணையாளர் ஆகியோர்களை நேரில் சந்தித்து வலைசிறகுகள், லவ்லி யூத் விங்ஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.*

*மனு விரைவாக பரிசீலனை செய்வதாகவும், ஜி.எம்.நகர் பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும் கூறினார்கள்*

குறிப்பு: *வலைசிறகுகள், லவ்லி யூத் விங்ஸ் சார்பில் கோவை மாநகராட்சி அனைத்து வார்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு அதிகாரிகளின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.*
⤵️
எப்போதும் மக்கள் பணி குழுவில்
கோவை அயூப் ரியாஸ்
லவ்லி யூத் விங்ஸ்

அனைத்து உறவுகளுக்கும், சகோதரர்கள்அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் - பெருநாள் நல்வாழ்த்துக்கள்..تقبّل الله منّا ومنكم صالح الأع...
21/04/2023

அனைத்து உறவுகளுக்கும், சகோதரர்கள்
அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் - பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

تقبّل الله منّا ومنكم صالح الأعمال
அல்லாஹ் எங்களிடமிருந்தும், உங்களிடமிருந்தும் நற்செயல்களை ஏற்றுக்கொள்வானாக. !!

அன்புடன்,

லேனா இப்ராஹிம்
KOVAI GREEN MEDIA
கோயமுத்தூர்.

 #அகில_இந்திய_முஸ்லிம்_லீக்கின் #தொடர்ச்சியாகவே  #இந்திய_யூனியன்_முஸ்லிம்_லீக்கை  #காயிதே_மில்லத்_( #ரஹ்)  #நிர்மாணித்தா...
12/03/2023

#அகில_இந்திய_முஸ்லிம்_லீக்கின்
#தொடர்ச்சியாகவே #இந்திய_யூனியன்_முஸ்லிம்_லீக்கை
#காயிதே_மில்லத்_( #ரஹ்) #நிர்மாணித்தார்
#தினமணி_ஆசிரியரின்_பவள_விழா_கட்டுரை

இன்று பவள விழா (75 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் நலனைப் பாதுகாப்பதற்காகவும், பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே நல்லுறவையும், இணக்கத்தையும் பேணுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அடைந்த வெற்றிகளைவிட எதிர்கொண்ட சோதனைகள்தான் அதிகம். அதனால்தான் அந்தக் கட்சியின் பவள விழா முக்கியத்துவம் பெறுகிறது.

உலகத்திலுள்ள 11% முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% அளவிலான மக்கள் பின்பற்றும் நம்பிக்கையாகவும் திகழ்கிறது இஸ்லாம். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் எடுக்கப்படாததால் துல்லியமான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் ஏறத்தாழ 20 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்ற மதமாக அது
திகழ்கிறது. இந்தோனேஷியா, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழும் நாடு என்பதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேவையும், பங்களிப்பும் இந்தியாவுக்கு
அத்தியாவசியமாகிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 1952-இல் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்ற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நின்றது என்பதில் தொடங்கி அதன் அரசியல் பங்களிப்பு இன்று வரை தொடர்கிறது. பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான வலிமையை அடையாவிட்டாலும் இதுவரை அந்தக் கட்சி தவிர்க்க முடியாத, ஒதுக்க முடியாத சக்தியாக சில மாநிலங்களில் தொடராமலும் இல்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவான வரலாறு, சுதந்திர இந்திய வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்க
முடியாத ஒன்று. முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்து முகமது அலி ஜின்னா பிரிவினையை வலியுறுத்தியது பாகிஸ்தான் என்கிற பெயரில் தனி நாடு உருவானது. முஸ்லிம் லீக் என்கிற கட்சியின் தேவைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக பலரும் கருதிய நேரத்தில், சுதந்திர இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்க அந்தக் கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்ததன் விளைவுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கிற இயக்கம்.

220 ஆண்டுகள் வரலாறு கொண்ட சென்னை ராஜாஜி ஹாலில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பதைவிட மறுபிறவி எடுத்தது என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்தியாவைப் பிளவுபடுத்தி தனி நாடு கோரி பெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பாதையில் இருந்து விலகி பொறுப்புள்ள மத நல்லிணக்க கோஷத்துடனும், தாய் நாட்டின் மீதான நேசத்துடனும் புதுப்பிறவி எடுத்த இயக்கம் இன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

சென்னை ராஜாஜி ஹால் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றை வங்க தேசத்தின் தலைநகரான
டாக்காவில் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு அந்தக் கட்சியின்
முக்கியத் தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். இந்தியாவில் தொடர்வது என்று
முடிவெடுத்தவர்கள் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோனர்
அரசியலில் இருந்து விடைபெற்றனர். எஞ்சியிருந்த தலைவர்களுக்கு அந்த இயக்கத்தை கலைத்துவிட
வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது.

கொல்கத்தாவில் 1947 நவம்பர் மாதம் நடைபெற்ற, மாநாட்டில் முன்மொழியப்பட்ட லீக்கை கலைக்கும்
தீர்மானத்தை இரண்டு பேர் எதிர்த்தனர். அவர்கள் இருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். முதலாமவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப். இரண்டாமவர் கே.எம்.சிதி சாகிப். டிசம்பரில் கராச்சியில் முகமது அலி ஜின்னா தலைமையில் கூடிய கட்சிக் கூட்டம் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்கிற பெயரில் புதிய கட்சியை அறிவித்தது. இந்தியாவில் கட்சியின் செயல்பாடுகள் தொடர வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்காக இஸ்மாயில் சாகிபை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தது. அவரால் கூட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்தான் 1948 மார்ச் மாதம் 10-ஆம் தேதி சென்னை ராஜாஜி ஹாலில் கூடியது.

முஸ்லிம் லீக் கூட்டம் நடத்துவதற்கு இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதியிலும் இடம் கிடைக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கலைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில்தான் சென்னை ராஜாஜி ஹாலில்
இடம் வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும். அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த மௌண்ட்பேட்டன் பிரபு சென்னைக்கு நேரில் வந்து ஒருங்கிணைப்பாளரான காயிதே மில்லத்தை சந்தித்து
லீக்கை கலைத்துவிடும்படி கேட்டுக்கொண்டார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அவர்களது எதிர்பார்ப்பையெல்லாம் தகர்க்கும் விதத்தில் சென்னை ராஜாஜி ஹால் புதியதொரு இயக்கத்தின் தொடக்கத்துக்கு சாட்சியானது. சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக் என்கிற இயக்கம் தேவைதானா? என்று அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. டாக்காவில் 3,000 பேர் பங்கெடுத்த கூட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானது என்றால், ராஜாஜி ஹால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 51 பேர் மட்டுமே.

அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தி தொடங்கிய அந்தக் கூட்டத்துக்கு காயிதே மில்லத்
தலைமை வகித்தார். 'மாறிவிட்ட புதிய இந்திய சுதந்திர சூழலில் இஸ்லாமியர்களின் சமூக, அரசியல்,
கல்வி, முன்னேற்றத்துக்கு முஸ்லிம் லீக் தொடர வேண்டும், பெரும்பான்மை ஹிந்துக்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பவும், அவர்களது உணர்வுகளை பிரதிபலிக்கவும் முஸ்லிம் லீக் அவசியமாகிறது' என்கிற தீர்மானத்தை டி.கே.மொகிதீன் குட்டி சாகிபு முன்மொழிந்தார். அதனடிப்படையில் 10 மணி நேரம் விவாதம் நடந்தது.

அந்தத் தீர்மானத்தின் முடிவில் நடந்த வாக்கெடுப்பில் 37 பேர் ஆதரித்தனர்; 14 பேர் எதிர்த்தனர். அப்படித்தான் அகில இந்திய முஸ்லிம் லீக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கிற பெயரில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியது.

அந்தப் புதிய கட்சியின் தலைவராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிபு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜயவாடாவைச் சேர்ந்த மெகபூப் அலி பேக் பொதுச் செயலாளராகவும், மும்பையை சேர்ந்த ஹசன் அலி
பி. இப்ராகிம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உற்சாகத்துடன் அந்தக் கூட்டம் கலைந்தது
என்றாலும் அதற்கு எதிராக நான்கு திசைகளிலிருந்து எதிர்ப்புகள் உயர்ந்தன.

அடுத்த சில நாள்களில் ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு புதிதாக உருவான
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை 'செத்த குதிரை' என்று விமர்சித்தார். அவர் மட்டுமல்ல, பலரும் அந்த
இயக்கத்தை இந்தியாவை துண்டாடிய இயக்கமாகவே பார்த்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த
75 ஆண்டுகளாக அதையெல்லாம் மீறித்தான் தனது பயணத்தைத் தொடர்கிறது.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு (1948-72), அப்துல் ரகுமான் பாபக்கி தங்கல் (1972-73), இப்ராகிம்
சுலைமான் ஷேக் (1973-1994), ஜி.எம்.பனாட் வாலா (1994-2008), இ.அகமது (2008-2017) ஆகியோரைத்
தொடர்ந்து 2017 முதல் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
என்கிற அரசியல் இயக்கம் பயணிக்கிறது.

தமிழகத்தில் காயிதே மில்லத்தை தொடர்ந்து அப்துல் சமத், எம்.ஏ. லத்தீப், அப்துல் ரகுமான் உள்ளிட்டோரும், கேரளத்தில் அந்தக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த பானக்காடு அப்துல் ரகுமான் பாக்கவி தங்கல், கேரள முதல்வராக இருந்த முகமது கோயா, குஞ்ஞாலி குட்டி, இ.அகமது
ஆகியோரைக் குறிப்பிடாமல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் வரலாற்றைப் பதிவு செய்ய முடியாது.

வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை அரசியல், கல்வி, சமூக ரீதியாக மேம்படுத்தியதில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. கடந்த 75 ஆண்டுகளில் பல
பிளவுகளை அந்த இயக்கம் சந்தித்துவிட்டது. அடிப்படைவாத, பயங்கரவாத சிந்தனைகளின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்களைக் கவர்ந்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பலர் ஓரளவுக்கு
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், பொறுப்புள்ள அரசியல் கட்சியாக, சமூக நல்லிணக்கத்தை
முன்னிறுத்தி பெரும்பான்மை சமூகத்துடன் மோதல் போக்கில்லாமல் தங்களுக்கான உரிமையை
நிலைநாட்டும் முனைப்பில் தொடரும் இயக்கமாக இன்றளவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இயங்குகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

1948 மார்ச் 10-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கிய அதே சென்னையில் ராஜாஜி ஹால்
உள்பட மூன்று இடங்களில் இன்று அந்தக் கட்சியின் பவள விழா நிகழ்ச்சி நடைபெறுவது என்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றிக்கு அடையாளம். இந்திய பன்முகத்தன்மைக்கு அடையாளம். மதத்தால் வேறுபட்டாலும் இனத்தால் மாறுபடாத
மண்ணின் மைந்தர்கள்
என்கிற நாட்டுப் பற்றின் அடையாளம்.

#தினமணி_ஆசிரியரின்_பவள_விழா_கட்டுரை
#இந்திய_யூனியன்_முஸ்லிம்_லீக்கை

#சென்னை

11/03/2023
08/03/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் தளபதி யார் அவர்களின் 70ஆவது பிறந்தநாள் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடந்தது இதில் திமுக பிரமுகரும் சமூக ஆர்வலரும் ஆகிய டிஸ்கோ காஜா தமிழ் திருக்குர்ஆன் கொடுத்து கொடுத்து வாழ்த்தினார் இன்றைக்கு வந்த மாலை முரசு நாளிதழில் பிறந்தநாள் நிகழ்ச்சி செய்தி செய்தியை கோவை வடக்கு மாவட்ட திமுக பகுதி துணைச் செயலாளர் கரும்புக்கடை சாதி திமுக பிரமுகர் அல் அமீன் ஹபீம் மற்றும் கழகத் தோழர்கள் பொது மக்களுக்கு வழங்கினார்கள்வழங்கினார்கள்

*கோவை* வடக்கு மாவட்டத்தின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு பவள விழா அகில இந்திய மாநாட்டின் செயல் வீரர...
21/02/2023

*கோவை* வடக்கு மாவட்டத்தின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு பவள விழா அகில இந்திய மாநாட்டின் செயல் வீரர்கள் கூட்டம் 19 2 2023 ஞாயிற்றுக்கிழமை கோவை கோட்டைமேடு வைரவிழா மண்டபத்தில் காலை 11 மணி முதல் நடைபெற்றது

மாவட்டத் தலைவர் எஸ் எம் அய்யூப் தலைமையில் கூட்டம் சிறப்பாக துவங்கியது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் சிறப்பாக பங்கேற்று பவள விழா மாநாடு குறித்தும் அதில் பங்கேற்க வேண்டியது குறித்தும் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் அதிகமான மக்களை திரட்டி மாநாட்டை வெற்றி அடைய செய்யுமாறு பேசினார்

முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அல்ஹாஜ் எல் எம் அப்துல் ஜலீல் சாகிப் வாழ்த்துரை வழங்கி அவர் கூறும் பொழுது முஸ்லிம் லீக் செய்த சாதனைகள் முஸ்லிம் லீக்கர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக பேசினார்

முன்னதாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஐ முபாரக் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்

மாவட்ட பொருளாளர் கே கே அக்பர் அலி முஸ்லிம் லீக் மூத்த நிர்வாகிகள் எம் ஏ ஹாலிதீன் பி ஏ சகாபுதீன் ஹாஜி பி எஸ் எம் உசேன் ஏ எம் முஹம்மது திராவ்சா மேட்டுப்பாளையம் நகர முஸ்லிம் லீக் தலைவர் என் முகைதீன் அப்துல் காதிர் ஹஜ்ரத் நகரச் செயலாளர் யூ எப் அப்துல் ஹக்கீம் நகரப் பொருளாளர் எஸ். சம்சுதீன் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஓ எ செய்யது இப்ராஹிம் வி.ஏ சுலைமான் ஏ அக்பர் அலி என் இக்பால் மாநில பொதுக்குழு உறுப்பினர் அத்தார் ஜமாத் ஏ ஆர் முஹம்மது முஸ்தபா எஸ் சையத் முஸ்தபா மாவட்ட துணை செயலாளர்கள் ஏ ஹாஜா அமானுல்லா என் அப்துல் காதர் என் குலாம் தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளர்களாக கோவை தெற்கு மாவட்ட தலைவர் பி அப்துல் கபூர் மாவட்ட செயலாளர் ஹாஜி எம் இ சாகுல் ஹமீது மாவட்ட பொருளாளர் பொள்ளாச்சி கே சாகுல் ஹமீது திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் என் சையது முஸ்தபா மாவட்ட செயலாளர் மங்கலம் எம் முகமது இப்ராஹிம் மாவட்ட பொருளாளர் ஆர்ஐஜே முகமது லுக்மான் ஆல் இந்தியா கே எம் சி சி மாநில பொருளாளர் மஞ்சேரி எம் ஏ ரசீது பொள்ளாச்சி நகர முஸ்லிம் லீக் தலைவர் எஸ் எம் சிக்கந்தர் நகர பொருளாளர் டி இப்ராஹிம் எஸ் டி யூ ஆட்டோ தொழிற்சங்க கோவை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா செயலாளர் முஹம்மது ஷரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் கோவை தெற்கு மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஐ அப்துல் காதர் ஹாஜி ஏ ஆர் சிராஜ்தீன் பொள்ளாச்சி ரசீது பி ஐ அப்துல் ரஹீம் ஹாஜி எம் ஏ முகமது யூசுஃப் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் பி பி அப்துல் ரஹ்மான் எம் ஐ குலாம் தஸ்தகீர் முகமது அலி மாவட்ட துணைச் செயலாளர்கள் குனிசை மு அப்பாஸ் எம் ஏ முகமது அனிபா தா மு சஹாப்தின் ஸ்டீல் யூசுப் மாவட்ட அமைப்பு செயலாளர் வி எம் முகமது அலி ஜவகர் உட்பட 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கோவை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சக்சஸ் ஏ அக்பரலி துணை அமைப்பாளர் மேட்டுப்பாளையம் எஸ். உசேன் எம் எஸ் எஃப் மாணவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஏ ஹெச் அப்துல் காதிர் ஜல்வத்தி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ் எம் தாரிக் அகமது எஸ்டியூ தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் அப்துல் நசீர் மாவட்ட துணை அமைப்பாளர் எஸ். ஜாபர் சாதிக் செயலாளர் விடி அப்துல் ஹக்கீம் கோவை வடக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எம் எஸ் காஜா உசேன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட அனைத்து வார்டு தலைவர்கள் செயலாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சி வெற்றி பெற களப்பணி ஆற்றினார்கள்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்டம் கோவை தெற்கு மாவட்டம் திருப்பூர் வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் பொள்ளாச்சி நகரம் ஆகிய நிர்வாகி நிர்வாகிகளுக்கு பணிகள் சிறக்க வாழ்த்தும் கூறப்பட்டது

பவள விழா அகில இந்திய மாநாட்டுக்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரம் பேர் செல்வது எனவும் மாநாட்டில் வரவேற்பு குழு உறுப்பினர்களாக 100 பேர் பங்கேற்பது மணிச்சுடர் பத்திரிகை புதிய சந்தாதாரர்களை உருவாக்குவது இதற்காக வேண்டி மாவட்டச் செயலாளர் எஸ் ஐ முபாரக் ஏற்பாடு செய்திருக்கும் மன்னிச்சுடர் வாசகர் வட்டத்தில் மக்களை இணைப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியின் துவக்கமாக சம்சுதீன் ஹஜ்ரத் கிராத் ஓத முகைதீன் பாகவி ஹஜ்ரத் துஆ உடன் மாவட்ட துணைச் செயலாளர் லேனா இப்ராஹிம் நன்றி கூறினார்.

Address

Coimbatore
641001

Telephone

+919363159911

Website

Alerts

Be the first to know and let us send you an email when KOVAI GREEN MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share