Eagle Eye Tamil

Eagle Eye Tamil உறுதிபடுத்தபட்ட நடுநிலை தவறாத செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.
(4)

Eagle Eye Tamil is a Tamil News Channel for Live Current News , India politics News in Tamil and Updating all the current affairs of Tamil Nadu and Breaking Live News, National News Live, Headline Live News, Breaking News Live, Tamil Kollywood Cinema News, Live Sports News in Tamil, Tamil news Live, Tamil viral videos, Business News in Tamil, Instant Tamil news, Movie News in tamil , Interview, Mo

vie Review, Life History, Sports News in Tamil, Art culture and daily news Update only on Eagle Eye Tamil.

மஹி பாய் எனும் Boss மகேந்திர சிங் தோணி.!சக வீரர்களால் அழைக்கப்படும் மஹி, ரசிகர்கள் விண்ணை பிளக்கும் வகையில் ஆர்ப்பரிக்கு...
08/07/2023

மஹி பாய் எனும் Boss மகேந்திர சிங் தோணி.!

சக வீரர்களால் அழைக்கப்படும் மஹி, ரசிகர்கள் விண்ணை பிளக்கும் வகையில் ஆர்ப்பரிக்கும் தோணி. இந்த பெயர்களுக்கு பின்னால் இருக்கும் பணம் புகழ் வளர்ச்சி எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணமென சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு தக்க பதிலை பங்களாதேஷ் அணிக்கு எதிரான அந்த திரில் வெற்றி பதிலாக இருக்கும்.

ஆடுகளத்தின் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அப்படி ஒரு அசாத்திய மன உறுதி கொண்ட மனிதனை பார்க்க முடியாது. மஹி ஈஸ் ஆல்வஏய்ஸ் கூல்.!

தன் அணியின் வீரர்களை விட்டுக்கொடுக்காமல், வெற்றி வந்தால் அவர்கள் கைகளில் கொடுத்துவிட்டு தோல்வி வந்தால் தன் கைகளில் ஏந்திக்கொள்ளும் பக்குவத்தை எந்த தலைவனிடம் பார்த்திருக்கிறீர்கள்.?

தோல்வியின் கைகள் கட்டியணைக்க காத்திருக்கும் காட்சிகள் கண்முன்னே தெரிந்தாலும் விடாமுயற்சியால் வெற்றியின் விரல்களைப் பிடித்து இழுத்து வரும் திறமையை எந்த தலைவன் காட்டியிருக்கிறான்.?

ஆட்டம் கைவிட்டுப்போகும் நிலைமையை உணரும் நேரத்தில் பொசுக்கென ஆட்களை இடம் மாற்றி வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் தந்திரத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்.?

கடைசிநிமிட பரபரப்புக்கு இடையிலும் கையுறையை கழட்டிவிட்டு அங்கிருந்தபடியே முயற்சித்தால் தவறிவிடக்கூடும் என்பதை உணர்ந்து ஓடிவந்து ஸ்டெம்பிங் செய்த சமயோசித புத்தியை எத்தனை பேர் கையாண்டிருக்கிறார்கள்.?

வெற்றிக்கோப்பைகளை கைகளில் வாங்கிய அடுத்த நொடி அதை அணியினரிடம் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு ஓரத்தில் போய் நின்று கொள்ளும் தன்மையை எந்த தலைவனிடம் பார்த்திருக்கிறீர்கள்.?

ஐம்பது ஓவர் உலககோப்பையில் உலகமே ஆச்சரியமாய்
பார்த்துக்கொண்டிருந்த போது சிக்ஸராய் தோணி வானத்தில் பறக்கவிட்டது பந்தை மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களையும் தானே.?!

அந்த போட்டியில் கடைசியில் ஓடிவந்து தோணி பறித்தது ஸ்டம்புகளை மட்டுமல்ல நமக்கான வெற்றியையும் தானே.?

இந்த எல்லா கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாய் ஒருவனால் மாற்ற முடியுமென்றால் அது தோணியால் மட்டுமே முடியும்.

என்னைப் பொருத்தமட்டிலும் இன்னொரு
சச்சின் சமயம் வந்தால் சாத்தியமுண்டு...
இன்னொரு தோணி சத்தியமாய் சாத்தியமில்லை.!

இதற்கு மேலும் கூட நீங்கள் தோணிக்கு திமிர் என்று சொல்லித்திரிந்தால், அவன் அந்தத் திமிருடனே இருக்கட்டும்...!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல M.S. தோணி..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான IPL - 2023 போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக "தல" தோணியும், அணியி...
01/06/2023

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான IPL - 2023 போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக "தல" தோணியும், அணியினரும் சேப்பாக்கம் திடலைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள், ஒரு டென்னிஸ் மட்டையால் மென்பந்துகளை அரங்கில் அமர்ந்து "தோணி, தோணி" என்று ஆரவாரமிடும் ரசிகர்களுக்கு நடுவில் அடித்தபடி நடக்கும் கூர்மையான அவரது கண்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மஞ்சள் சீருடை அணிக்கு நடுவில் திடீரென்று ஒரு வயதான மனிதர் ஓடி வருகிறார், முன்னாள் நடக்கும் மகேந்திர சிங் தோணிக்கு எதிரில் நின்று தனது நெஞ்சை நிமிர்த்தி தனது சட்டையில் கையெழுத்திடுமாறு வேண்டுகிறார், அந்த வயதான மனிதரை ஏறத்தாழ 40 ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவர் கிரிக்கெட் உலகின் வசிஷ்டர், யாரிடத்திலும் அப்படி ஓடிப்போய் அவர் கையெழுத்து வாங்குவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, அந்த வயதான மனிதர் "சுனில் கவாஸ்கர்", இந்தியாவின் கிரிக்கெட் லிஜென்டுகளில் முதன்மையானவர்.

மகேந்திர சிங் தோணியைக் குறித்து இந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதுவது என்பது திருப்பதியில் மொட்டையடித்தவர்களைத் தேடுவதைப் போல கொஞ்சம் நெருடலாக இருந்தது.

ஆனால், தோணி, கிரிக்கெட் விளையாட்டைத் தாண்டி இந்தியா என்கிற தேசத்தின் மனசாட்சியை நோக்கி ஒரு உண்மையான தலைவனாக மெல்ல மெல்ல உயர்வதை நேரடி சாட்சியாக நின்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில் எழுதியாக வேண்டும் என்று மனம் உறுதி கொண்டது.

தானாகவே இருத்தல் :

ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், வழக்கமான நம்பிக்கைகளோடு, மிகக்கடுமையான அரசியல் கொண்ட கிரிக்கெட் விளையாட்டுக்குள் இந்திய பெருநகரத்தின் இயல்பான கனவுகள் கொண்ட இளைஞனாகத்தான் அவரது நுழைவு இருந்தது.

பெரிய ஆர்ப்பாட்டங்கள், பின்புலங்கள் என்று ஏதுமில்லாமல் "Pure Merit" தகுதியோடு தான் BCCI இன் இந்திய அணிக்குள் நுழைந்தார். இந்திய அணி என்பது மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் உயர் சாதி பிராமணர்களின் கோட்டை.

அந்தக் கோட்டைக்குள் பிற சமூகத்தினர் நுழைவது, வெற்றிகரமாக இயங்குவது என்பது மிகுந்த மன அழுத்தம் நிரம்பியது. பொதுவான, சாதீய எண்ணங்கள் இல்லாத, அனைவரையும் நேசிக்கிற ஒரு ஏகாந்த மனநிலையில் இருந்து தான் இதை எழுதுகிறேன்.

விடுதலை பெற்ற இந்தியாவின் பல்வேறு துறைகளைப் போலவே கிரிக்கெட்டில் வெகு இயல்பாக இது இருந்தது. இப்படியான சூழலில் தான் தோணி அணிக்குள் நுழைகிறார், ஆனால், தனது எளிமையான பின்புலத்தை தனது திறன்களோடு ஒருபோதும் அவர் குழப்பிக் கொள்வதில்லை.

தான் சொல்ல நினைத்தவற்றை செயல்களின் மூலம் செய்து காட்டும் ஒரு புதிய யுத்தியோடு அவர் அணிக்குள் ஊடுருவினார். எந்த ஒரு சூழலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் அவர் தயங்கியதே இல்லை, போட்டிகளும், அரசியலும் நிரம்பிய ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போன்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

சாதனைகளையும், திறன்களையும் தாண்டி உங்கள் பிறப்பு, வளர்ப்பு, முந்தைய நடவடிக்கைகள், உங்களுக்காக யார் "லாபி" செய்கிறார்கள் என்று பல்வேறு காரணிகளை மையமாக வைத்து நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

தனது துவக்க நாட்களில் ஒரு நேர்மறையான "ஈகோ"வை மதிப்பீடுகளில் கையாண்டார் மகேந்திர சிங் தோணி. ராஜ்புத் இளவரசனின் ஆழமான அமைதி பழைய பஞ்சாங்கப் பலகைகளை லேசாக அசைத்துப் பார்த்தது.

நட்சத்திரங்களை நிர்வகித்தல்:

2007 ஆம் ஆண்டின் ஒரு கோடை நாளில் ஒளியூட்டப்பட்ட நட்சத்திரங்கள், நிஜ நட்சத்திரங்கள், முன்னாள் கேப்டன்கள் என்று பல தலைவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான அணிக்கு தோணி தலைவராக நியமிக்கப்பட்டார், அமைதியாக அவர் தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டார்.

யாரையும் தொந்தரவு செய்யவில்லை, பிறரது நிரூபிக்கப்பட்ட நடைமுறைகளில் அவர் தலையிட விரும்பவில்லை, சிறந்தவற்றை எடுத்துக் கொண்டார், தனது உறுதித் தன்மையை அதில் கலந்து இன்முகத்தோடு இளம் வீரர்களைத் தட்டிக் கொடுக்கத் துவங்கினார்.

எப்போதுமிருந்த அச்சம் விலகி இளம் தலைமுறை வீரர்கள் தங்கள் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன என்பதை நம்ப வைத்தார். அணிக்கென்று இருந்த எதிர்மறையான பழைய பண்பாட்டு விஷயங்களை தோணி மாற்றி அமைப்பதற்கு முன்பாக தனது நம்பகத்தன்மையை நிறுவினார்.

தனது திறன்களை தொடர்ந்து பயிற்சியின் மூலமாக வளர்த்துக் கொண்டார், எந்த மாற்றத்தையும் அவர் அவசரத்தோடு செய்ய விரும்பவில்லை, வீரர்களிடையே இயற்கையாக நிகழும் திறன் குறைபாடு போன்ற விஷயங்களை செயல்திறன் மேலாண்மை என்ற புதிய திசையில் வழிநடத்தினார்.

உளவியல் மேலாண்மை குறித்த ஒரு புதிய குழுவை புதிய தொழில்நுட்ப வசதிகளோடு இந்திய கிரிக்கெட் அணிக்குள் கொண்டு வந்தவர் மகேந்திர சிங் தோணி.

வெற்றி மற்றும் ஊடக வெளிச்சத்தை நிர்வகிக்கும் கலையில் தோணி மிகுந்த முதிர்ச்சியானவர், மிகப்பெரிய வெற்றிகளின் போது அவர் தனது கால்களை தரையில் ஊன்றிக் கொள்வார், அணியினரை முன்னே நிறுத்தி பின்னணியில் ஒரு அசைக்க முடியாத தூணைப் போல நின்று மென்மையாக சிரிப்பார்.

2011 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகான கொண்டாட்டங்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தால் தோணி வெற்றிகளின் போது ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நிகழ்கால சாட்சியாக இருப்பார்.

மிக இளம்வயதில் அளவற்ற பணத்தையும், புகழையும் நிர்வகிப்பது என்பது மிக எளிதான வேலையில்லை, அதற்கு மிகச்சிறந்த நிலைத் தன்மையும், பணிவும் தேவைப்படும்.

பல திறன் வாய்ந்த இளம் வீரர்கள் இந்த இடங்களில் தங்களைத் தாங்களே நிர்வகிக்க முடியாத தடுமாற்றத்தை சந்தித்து வெளியேறிக் கரைந்து போன எடுத்துக்காட்டுகள் நிறைய உண்டு. ஆனால், தோணி சமநிலையை இழக்காமல் நேர்த்தியாக வெற்றிகளையும், புகழையும் கலையையும் கற்றுக் கொண்டார்.

ஒரு தலைவனின் மிகப்பெரிய தகுதி அமைதியாகவும், குழப்பமற்ற மனநிலையுடனும் இருப்பது, மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் மகேந்திர சிங் தோணி "Perfect Example", ஒட்டுமொத்த அணியினரின் செயல்திறனையும் அவரது அமைதி ஆறுதல் செய்கிறது, மேம்படுத்துகிறது.

அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை மட்டுமில்லாமல் தங்களைத் தாங்களே நம்புவதில் அந்த அமைதி பெரும்பங்காற்றுகிறது. குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான Qualifier போட்டியில் ஒரு இளம் வீரர் பந்தைக் கோட்டைவிட்டு ஒரு கூடுதல் ரன் கொடுத்தபோது தோனியின் உடல் மொழியை நீங்கள் கவனித்திருந்தால் இது குறித்து ஒரு அற்புதமான முடிவுக்கு உங்களால் வந்துவிட முடியும்.

"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.

பல்வேறு விஷயங்களைத் தாண்டி எப்போதும் தன்னைச் சுற்றி இருக்கும் பரபரப்பான சூழலில் இருந்து உளவியல் ரீதியாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், எடுத்துக் கொண்ட வேலையை செய்து முடிப்பதற்கான அபாரமான திறமை கொண்டவர் தோணி.

பல்வேறு சர்ச்சைக்குரிய காலங்களில் அவர் ஒரு ஞானியைப் போன்ற தத்துவார்த்த பதில்களை வழங்கி ஊடகங்களையும் அதிர்ச்சியடைய வைத்தார். எந்த ஒரு தனிமனிதர் குறித்தும் எதிர்மறையாக அவர் பேசிய வரலாறு இல்லை.

கவனச் சிதறல் இல்லாமல் எடுத்துக்கொண்ட வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது ஒரு தலைவனுக்குரிய மிகப்பெரிய பண்பு என்பதை தனது தலைமைத்துவக் காலத்தில் இயல்பாக மாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.

இதயபூர்வமாகவும், நிறைவாகவும் வாழ்தல் என்ற பதத்தின் விளையாட்டுப் பரிணாமம் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டல், மகேந்திர சிங் தோணி தனது உள்ளுணர்வு சொல்வதைக் கேட்பவர்.

பல்வேறு சிக்கலான நேரங்களில் பந்து வீச யாரை அழைப்பது போன்ற முடிவுகளை அவர் தீர்க்கமாக எடுக்கும்போது திகைத்தவர்கள் கூட அந்த முடிவு துல்லியமாக பலனளித்த போது வியந்து அவரைப் பார்த்தார்கள்,

வெற்றியை கையாள்வதைப் போலவே தோல்வியைக் கையாள்வதும் மிக நுட்பமான மனித உணர்வு, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தோல்வி முகத்தில் இருந்தது, 2012 ஆம் ஆண்டில் நம்பிக்கைகள் மங்கிய ஒரு பொழுதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 தொடர் தோல்விகளை சந்தித்த அணியின் கூட்டு மனசாட்சி துவண்டு கிடந்தது.

ஆனால், தனியொரு மனிதராக "எங்கள் அணி மிகச்சிறந்த அணி, எனது வீரர்களால் எழுந்து மீண்டு வர முடியும்" என்று சக வீரர்களை ஆற்றுப்படுத்தினார்.

தனக்கே உரிய வகையில் மெருகேறிய ஆட்டத்திறனுடனும், எழுச்சியுடனும் அவர் அணியை மீண்டும் வெற்றியின் பாதைக்கு அழைத்து வந்து விமர்சகர்களுக்கு வழக்கம் போல செயலால் பதிலடி கொடுத்தார்.

எதிர்முகாமை ஒரு விதமான குழப்பம் மிகுந்த பதட்டத்தோடு வைத்திருப்பதில் மகேந்திர சிங் தோணியைப் போன்றதொரு விளையாட்டு வீரரை நான் பார்க்கவில்லை.

தன்னுடைய உறுதி, அமைதி, உடல்மொழி என்று பல்வேறு நிலைகளில் ஒரு பீதியை உருவாக்கும் அவருடைய செயல்பாடுகள் உளவியல் உறுதிப்பாடுகளைக் குலைக்கக்கூடியது.

அச்சம் தரும் அவருடைய அமைதி, மரியாதையையும் சேர்த்துக் கொண்டு வருகிறது, பல தருணங்களில் அவர் எதிரணி வீரர்களையும் அரவணைத்து, ஆலோசனைகள் வழங்கி இன்னும் மேன்மையான இடத்துக்கு நகர்கிறார்.

IPL - 2023 இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான சில ஆலோசனைகளை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் வழங்கியதாக உள்ளூர் நாளிதழ்களில் வெளியான கட்டச் செய்திகள் அவரது முதிர்ச்சியை மென்மேலும் மதிப்பு மிக்கதாக மாற்றுகிறது.

பெரும் கூட்டங்களில் நட்சத்திர வீரர்களுக்கு நிகழும் தள்ளு முள்ளு பெரிய அளவில் எங்கும் நிகழாததற்கு என்ன காரணம் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள், அவரைச் சுற்றி நிற்பவர்கள் தன்னியல்பாக ஒரு பாதுகாப்பு வட்டத்தை உருவாக்குவார்கள், அவர் மீது யாரும் விழுந்து விடாதபடிக்கு அவரைப் பாதுகாப்பார்கள்.

அவர் எளிமையாக அணுகக்கூடியவராக இருப்பதால் தன்னை நெருங்கி வருபவர்களை எப்போதும் அணைத்துக் கொள்ளும் தன்மையுடையவராக, மக்களின் நாயகனாக விளங்குகிறார்.

விளையாட்டையும், அதன் மூலமாக அவருக்குக் கிடைத்திருக்கக்கூடிய நினைத்துப் பார்க்க முடியாத பணம் மற்றும் புகழையும் தாண்டி குடும்பம் எவ்வளவு முக்கியமானது என்பதை மகேந்திர சிங் தோணி மற்றும் சாக்சியின் வாழ்க்கை வெளிப்படையாக நம் அனைவருக்கும் அறியத்தருகிறது.

மிக முக்கியமானவர்களை சந்திக்கிற போது மிக மென்மையாகக் குனிந்து சாக்சியின் காதில் அவர்களை அறிமுகம் செய்கிற தோணி மிக அழகானவர். இறுதிப் போட்டி முடிந்த பின்பு வெற்றி தந்தையிடம் வந்துவிட்டதை உணர்ந்து மகேந்திர சிங் தோணியின் செல்ல மகள் "ஷிவா" ஓடி வந்து தந்தையை அணைத்துக் கொள்கிற காட்சி மிக மென்மையான அற்புதமான தந்தையாக இருப்பது எப்படி என்பது குறித்து இளம் தந்தையருக்குப் பாடம் சொல்லித்தரும்.

ஒருவேளை இது மகேந்திர சிங் தோணியின் இறுதிப் போட்டியாக இருக்கலாம், அல்லது அடுத்த சீசனிலும் அவர் விளையாடலாம், விளையாட்டைத் தாண்டி மக்களின் மனதில் நிலைக்கும் வெகு அரிதான நாயகர்களின் வரிசைக்கு இப்போது தோணி வந்திருக்கிறார்.

மோசமான, மலிவான தந்திரங்களையும், மதவெறுப்பு பரப்புரைகளையும் பயன்படுத்தி மானுட நேசத்தை சிதைக்கும் பிற்போக்குவாத அரசியல்வாதிகளின் நடுவே நற்பண்புகளையும், மானுட நேசத்தையும் போற்றுகிற உறுதியான தலைவர்கள் இந்தியாவின் இன்றைய தேவை.

இந்த சூழலில் தோணியைப் போன்ற சிறந்த பண்புகளைக் கொண்டவர்கள் நிஜத் தலைவர்களாக உருவெடுத்தால் கண்ணியமான, மதநல்லிணக்கமும், உண்மையும் கொண்ட இந்தியா உலகெங்கும் ஒளிவீசும்.

| |

IPL FINALS 2023: அகமதாபாத் மைதானத்தை சேப்பாக்கம் மைதானமாக மாற்றிய மஞ்சள் படைகள்.மழையின் காரணமாக தாமதமாகும் இறுதி போட்டிக...
28/05/2023

IPL FINALS 2023: அகமதாபாத் மைதானத்தை சேப்பாக்கம் மைதானமாக மாற்றிய மஞ்சள் படைகள்.

மழையின் காரணமாக தாமதமாகும் இறுதி போட்டிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகளவில் வந்ததால் மைதானமே மஞ்சள் மயமாக காட்சியளிக்கிறது.

| | |

15/05/2023

புகைப்பட கலைஞரின் உதவியாளர்..!!

|

IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான 61 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளத...
14/05/2023

IPL 2023 : கொல்கத்தா அணிக்கு எதிரான 61 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

| |

தலையங்கம் : பறித்ததோ ஒரு எம்.பி பதவி; பறிகொடுத்ததோ ஒரு மாநிலத்தை..!! பா.ஜனதாவின் பரிதாபங்கள்..!!  |   |   |   |
14/05/2023

தலையங்கம் : பறித்ததோ ஒரு எம்.பி பதவி; பறிகொடுத்ததோ ஒரு மாநிலத்தை..!! பா.ஜனதாவின் பரிதாபங்கள்..!!

| | | |

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அதற்கான அரசியல் காரணங்களும் குறித்த எமது பார்வையை உங்களிடம் சமர்ப...

மீண்டும் முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?: கொல்கத்தாவுடன் இன்று மோதல்..!!   |   |   |
14/05/2023

மீண்டும் முதலிடத்தை பிடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்..?: கொல்கத்தாவுடன் இன்று மோதல்..!!

| | |

IPL 2023 : சென்னையில் இன்று நடைபெறும் 61 வது லீக் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கர்நாடக தேர்தல் முடிவுகள் : ஆட்சியமைக்கும் விவகாரத்தில் வியூகத்தை மாற்றிய காங்கிரஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள்..!!   |   |...
13/05/2023

கர்நாடக தேர்தல் முடிவுகள் : ஆட்சியமைக்கும் விவகாரத்தில் வியூகத்தை மாற்றிய காங்கிரஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள்..!!

| | | |

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை ஆலோசனை கூட்....

  | 113 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.* ஆளும் பா.ஜனதா-76, மதசார்பற்ற ஜனதா தளம்-30, மற்ற ...
13/05/2023

| 113 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.

* ஆளும் பா.ஜனதா-76, மதசார்பற்ற ஜனதா தளம்-30, மற்ற கட்சிகள்-06 இடங்களில் முன்னிலை.

| | | |

விளையாடு மங்காத்தா..!! உச்சகட்ட பரபரப்பை எட்டிய ஐ.பி.எல் போட்டிகள்: அடுத்த சுற்றை எட்டும் 4 அணிகள் எவை..?!!   |   |   | ...
12/05/2023

விளையாடு மங்காத்தா..!! உச்சகட்ட பரபரப்பை எட்டிய ஐ.பி.எல் போட்டிகள்: அடுத்த சுற்றை எட்டும் 4 அணிகள் எவை..?!!

| | | | | | | | | | |

IPL 2023: ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற 6 அணிகளிடையே கடும் போட்டி நிலவுவதால் ஐ.பி.எல் 2023 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்த.....

தோனி களமிறங்குவதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்: ஆரோன் பிஞ்ச்..!!   |   |
08/05/2023

தோனி களமிறங்குவதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்: ஆரோன் பிஞ்ச்..!!

| |

மகேந்திரசிங் தோனி: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 1981 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் மகேந்திரசிங் தோனி.

லக்னோ VS சென்னை: புள்ளி பட்டியலில் முன்னேறிய அணிகள்..!! மழையால் கைவிடப்பட்ட போட்டியால் யாருக்கு பலன்?!!   |   |   |
03/05/2023

லக்னோ VS சென்னை: புள்ளி பட்டியலில் முன்னேறிய அணிகள்..!! மழையால் கைவிடப்பட்ட போட்டியால் யாருக்கு பலன்?!!

| | |

IPL 2023: லக்னோ-சென்னை சூப்பர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் தலா ஒரு புள்ளி வழங்கப்ப.....

ஐ.பி.எல் திருவிழா 2023 || மீண்டும் குறுக்கிட்ட மழை: யாருக்கு பாதிப்பு..?!!    |   |   |
03/05/2023

ஐ.பி.எல் திருவிழா 2023 || மீண்டும் குறுக்கிட்ட மழை: யாருக்கு பாதிப்பு..?!!

| | |

IPL 2023: லக்னோ-சென்னை சூப்பர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டுள்ளது.

ஐ.பி.எல் திருவிழா 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு.* சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்...
03/05/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு.

* சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தீர்மானித்துள்ளது.

| | |

ஐ.பி.எல் திருவிழா 2023: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்.* சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழையின் குறுக்க...
03/05/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்.

* சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழையின் குறுக்கீட்டால் டாஸ் போடவில்லை.

| | |

FREE IPL TICKET CONTEST : சேப்பாக் ஸ்டேடியத்தில் IPL பார்க்க ரெடியா..?சென்னை சூப்பர் கிங்ஸ்  Vs மும்பை இந்தியன்ஸ்இலவச IP...
03/05/2023

FREE IPL TICKET CONTEST : சேப்பாக் ஸ்டேடியத்தில் IPL பார்க்க ரெடியா..?
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்
இலவச IPL டிக்கெட் போட்டி..!!

| |

Finish all the tasks to increase your chance to win the tickets for Chennai Super Kings Vs Mumbai Indians IPL Match at Chepauk Stadium on 06-05-2023.12 Winners will get 25 IPL Tickets and 100 people will get Chepauk Super Gillies Replica Jersey.சேப்பாக் ஸ்டேடியத்த...

ஐ.பி.எல் திருவிழா 2023: ஜெய்பூரில் இன்று நடைபெறும் 37 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு.  |  ...
27/04/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: ஜெய்பூரில் இன்று நடைபெறும் 37 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு.

| | |

ஐ.பி.எல் திருவிழா 2023: உள்ளூர் தோல்விக்கு பழிதீர்க்குமா சி.எஸ்.கே..?!!: ராஜஸ்தானுடன் இன்று மோதல்..!!   |   |   |   |   ...
27/04/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: உள்ளூர் தோல்விக்கு பழிதீர்க்குமா சி.எஸ்.கே..?!!: ராஜஸ்தானுடன் இன்று மோதல்..!!

| | | | |

IPL 2023: ராஜஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இன்று நடைபெறும் போட்டியில் சி.எஸ்.கே பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார....

போலி கோப்பையுடன் முதல்வரை ஏமாற்றிய போலி கேப்டன் வினோத் பாபு மீது வழக்கு..!!* பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏம...
27/04/2023

போலி கோப்பையுடன் முதல்வரை ஏமாற்றிய போலி கேப்டன் வினோத் பாபு மீது வழக்கு..!!

* பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில், வினோத் பாபு மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

| |

பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டத்தை எட்டப் போவது யார்..?: ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!...
26/04/2023

பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டத்தை எட்டப் போவது யார்..?: ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

| | | | | | | | | | | |

ஐ.பி.எல் டி-20 லீக் தொடரில் இதுவரை 35 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதம் உள்ள 35 போட்டிகளிலும் அனல் பறக்கும் என...

திடீர் திருப்பம்: கொடநாடு வழக்கில் சசிகலாவை விசாரிக்க போலீசார் திட்டம்?!   |   |   |   |
26/04/2023

திடீர் திருப்பம்: கொடநாடு வழக்கில் சசிகலாவை விசாரிக்க போலீசார் திட்டம்?!

| | | |

கொடநாடு கொலை சம்பவம் குறித்து சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி....

கம்பீரமாக முதலிடத்திற்கு முன்னேறிய சி.எஸ்.கே: ஈடன் கார்டனில் ஓங்கி ஒலித்த வீ வாண்ட் தோனி..!!   |   |   |
24/04/2023

கம்பீரமாக முதலிடத்திற்கு முன்னேறிய சி.எஸ்.கே: ஈடன் கார்டனில் ஓங்கி ஒலித்த வீ வாண்ட் தோனி..!!

| | |

கொல்கத்தா நைட் ரைடஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை 49 ரன்கள் வித்தியாசத்தில் அப.....

ஐ.பி.எல் திருவிழா 2023: புரட்டி எடுத்த கான்வே; 3 வது இடத்தை தக்க வைத்த சென்னை..!!   |   |   |
22/04/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: புரட்டி எடுத்த கான்வே; 3 வது இடத்தை தக்க வைத்த சென்னை..!!

| | |

IPL 2023 : சென்னயில் நேற்று நடைபெற்ற 29 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்ற.....

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம்: இன்று மீண்டும் விசாரணை..!!   |   |   |
21/04/2023

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் விவகாரம்: இன்று மீண்டும் விசாரணை..!!

| | |

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று பிற்ப...

ஐ.பி.எல் திருவிழா 2023: ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 26 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜ...
19/04/2023

ஐ.பி.எல் திருவிழா 2023: ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 26 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு.

| | |

ரஜினியை இமிடேட் செய்த தோனி..!! ரசிகர்களை கவர்ந்த வைரல் போட்டோ..!!   |   |
19/04/2023

ரஜினியை இமிடேட் செய்த தோனி..!! ரசிகர்களை கவர்ந்த வைரல் போட்டோ..!!

| |

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தின் தோரணையில் சி.எஸ்.கே கேப்டன் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிற.....

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.!!: இறுதிக்கட்டத்தை எட்டிய விசாரணை: மதுரை ஐகோர்டு கிளையில் சி.பி.ஐ தகவல்..!!   |   |
19/04/2023

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.!!: இறுதிக்கட்டத்தை எட்டிய விசாரணை: மதுரை ஐகோர்டு கிளையில் சி.பி.ஐ தகவல்..!!

| |

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ க....

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: முதல்வருக்கு கடிதம் எழுதிய அன்புமணி குடும்பத்தினர்..!!    |   |
17/04/2023

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: முதல்வருக்கு கடிதம் எழுதிய அன்புமணி குடும்பத்தினர்..!!

| |

வன்னியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் ....

தமிழை வளர்ப்பதற்கு தேவாரமும், திருவாசகமும் இருக்க..!! ஒன்றுக்கும் உதவாத திராவிடம் எதற்கு?!! : சூடிபிடித்த சமூக வலைதளங்கள...
17/04/2023

தமிழை வளர்ப்பதற்கு தேவாரமும், திருவாசகமும் இருக்க..!! ஒன்றுக்கும் உதவாத திராவிடம் எதற்கு?!! : சூடிபிடித்த சமூக வலைதளங்கள்..!!

| |

சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் கிடைத்த தேவார செப்பேடுகளும் ஐம்பொன் சிலைகளும் சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்வி...

தேசத்திற்காக 5 பதக்கங்களை வென்ற தங்க மகன்..!! : நடிகர் மாதவன் பெருமிதம்..!!   |
17/04/2023

தேசத்திற்காக 5 பதக்கங்களை வென்ற தங்க மகன்..!! : நடிகர் மாதவன் பெருமிதம்..!!

|

மலேசியாவில் நடந்த நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவின் சார்பில் 5 தங்க பதக்கங்களை வென....

Address

161, North Street, Villiyanallur
Chidambaram
608501

Alerts

Be the first to know and let us send you an email when Eagle Eye Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Chidambaram

Show All