Pachcha milaka

Pachcha milaka கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம்

27/04/2024

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அதிமுக நகர கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது..

04/01/2024
பிரான்ஸ்நாட்டு சமூக ஆர்வலர் தான்படித்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணபொருட்களை வழங்கி பெருமிதம்புவனகிரி அருகே நெகிழ்ச்ச...
30/08/2023

பிரான்ஸ்நாட்டு சமூக ஆர்வலர் தான்படித்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணபொருட்களை வழங்கி பெருமிதம்
புவனகிரி அருகே நெகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் புவவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஏர்போர்ட் பணியாளர் மற்றும் சமூக ஆர்வலருமான தெய்வபிரகாசம் தனது மனைவி சுந்தரி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்தார். அப்போது தான் படித்த நத்தமேடு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளைவழங்கிய தெய்வபிரகாசம் தனது குடும்பத்தினருடன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணபொருட்களை வழங்கினார். மேலும் அவர் கூறும்போது இக்கிராமத்தில் பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தானாக வழங்கி இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை தனியாக செய்து வருவதாகவும் தெரிவித்தார். நத்தமேடு கிராமத்தை சேர்ந்த தான், கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் விமானநிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் அங்கேயே குடியுரிமைபெற்று வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Follow this link to join my WhatsApp group:
04/04/2023

Follow this link to join my WhatsApp group:

WhatsApp Group Invite

10/03/2023

அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்| NewsJ ...

https://youtu.be/lr9GJtsHitk
17/02/2023

https://youtu.be/lr9GJtsHitk

முதல்ல உங்க கட்சியை அடமானத்துல இருந்து மூட்டுங்கப்பா ... | NewsJ Watch News J , a Tamil News Channel fo...

என்எல்சி ரகசிய கூட்டம்
12/02/2023

என்எல்சி ரகசிய கூட்டம்

என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ரகசிய கூட்டம் | NewsJ Watch News J , a Tamil News Channel ...

04/02/2023

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சிறுமியை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்த வாலிபர் போக்சோவில் கைது,

03/02/2023

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அதிமுக மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கார்மாங்குடி கிராமத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தின நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்டம்புவனகிரி அருகே காணாமல் போன பசுமாடு.வேதனையோடு விவசாயி..
23/01/2023

கடலூர் மாவட்டம்
புவனகிரி அருகே காணாமல் போன பசுமாடு.வேதனையோடு விவசாயி..

இறைச்சிக்காக வளர்ப்பு பசுமாட்டை திருடி கொலை செய்த மர்ம நபர்கள் ! | NewsJ Watch News J , a Tamil News Channel for live n...

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..
22/01/2023

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

குறைந்துவரும் கால்நடை வளர்ப்பு !! பின்னணியில் ரசாயன உர மாஃபியாக்களா? | NewsJ Watch News J , a Tamil News Channel...

15/01/2023

கடலூர் மாவட்டம் பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு நடைபெற்றது..

பொங்கல் தொகுப்பில் மண்பாண்ட பொருட்களை வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை..
30/12/2022

பொங்கல் தொகுப்பில் மண்பாண்ட பொருட்களை வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை..

பொங்கல் தொகுப்பில், மண்பாண்ட பொருட்கள் வழங்க கோரிக்கை..!!| NewsJ Watch News J , a Tamil News Channel for live news, bre...

22/12/2022

*கடலூர் மேற்கு மாவட்ட அ.இ.அண்ணா தி.மு. கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான திரு ஆ.அருண்மொழிதேவன் அவர்களின் அறிக்கை:-*

*நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின், புதிய அனல் மின் நிலையத்தின், இரண்டாவது அலகில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உயிரிழந்த திரு திருநாவுக்கரசு அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு, நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் மற்றும் படுகாயம் அடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடும், உயர்தர சிகிச்சையும், அளிக்கப்பட வேண்டும்.*

நெய்வேலி என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தின், (NNTP-NEYVELI NEW THERMAL POWER STATION), இரண்டாவது அலகில் 22.12.2022 பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சிவசுப்பிரமணியன் மகனான திருநாவுக்கரசு, (வயது 45) என்ற இன்கோசர்வ் தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

மேலும்
நடைபெற்ற விபத்தில், படுகாயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள, செல்வராஜ், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோருக்கு, உயர்தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

நெய்வேலி என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களை, பாதுகாக்காமல் இருக்கும் காரணமாக, இந்த விலைமதிப்பற்ற உயிரின் இழப்பிற்கும், இந்த விபத்திற்கும், என்எல்சியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது, குற்ற வழக்கு பதிவுசெய்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, இரண்டாவது அனல் நிலையத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு விபத்துகளில், ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அப்போது, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின், சேர்மன் திரு ராகேஷ் குமார், இனிவரும் காலங்களில், இது போல் விபத்து நடக்காது என்று, உயிரிழந்த குடும்பத்தினரிடம் கைகூப்பி, மன்னிப்பு கேட்டது அனைவரும் அறிந்ததே.

தற்போது ஒன்றரை வருடத்தில், மூன்றாவது முறையாக, விபத்து ஏற்பட்டு உள்ளது என்பது, தொழிலாளர்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், என்எல்சி நிறுவனம் இருப்பது அலட்சியத்தின் உச்சமாக தெரிகிறது.

இந்த விபத்துக்கும், மன்னிப்பு கேட்கப் போகிறாரா? என்எல்சி சேர்மன்.

வருடம் தோறும், கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் தான், என்எல்சி நிர்வாகம் செயல்படுகிறதா??

நிலம் மற்றும் வீடு கொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து, சொற்ப சம்பளத்திற்காக, வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது, எவ்வித அக்கறையும்,

ஏன்?., நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் எடுத்துக் கொள்வதில்லை?

NNTP என்று சொல்லக்கூடிய புதிய அனல் மின் நிலையத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதிக தொழில்நுட்ப வசதியுடன், தொடங்கப்பட்டுள்ளது என என்எல்சி நிர்வாகம் தம்பட்டம் அடித்துக் கொண்டது.

ஆனால் தமிழர்களை நம்பாமல், வடமாநில தொழிலாளர்களையும், தனியார் நிறுவனத்தையும் கொண்டு, உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையத்தில், தற்போது விபத்து ஏற்பட்டுள்ளதற்கு நெய்வேலி என்எல்சி நிர்வாகம் என்ன? பதில் சொல்லப் போகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, நடந்த விபத்தில், 20 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது, அவர்களின் குடும்பத்திற்கு, சொற்பத் தொகையும், வேலையும் வழங்கிய என்எல்சி நிர்வாகம், தற்போது அதிக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, புதிய அனல் மின் நிலையத்தில், பணியில் இருந்த தொழிலாளிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது, மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு என்ன செய்யப் போகிறது இந்த என்எல்சி நிர்வாகம்?.

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறதா? இல்லையா? என சந்தேகம் ஏற்படுகிறது.

சாதாரண வெல்டிங் கடை நடத்துபவர் கூட, தீயணைப்பு தடுப்ப சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், கையுறைகள், என அனைத்தையும், வைத்துக் கொண்டு வேலை செய்யும்போது,

நவரத்தினா அந்தஸ்து என்ற பெயரில், மின்சார உற்பத்தியில், பெரும் லாபத்தோடு இயங்கும் நிறுவனமாக, திகழக்கூடிய நெய்வேலி என்எல்சி நிர்வாகம், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என, கடந்த இரண்டு சமபவங்களும், தற்போது அரங்கேரியுள்ள, மூன்றாவது சம்பவத்தின், மூலமாக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

எனவே, என்எல்சி நிர்வாகம் உடனடியாக, உயிரிழந்த திருநாவுக்கரசு குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என்றும், உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு தொழிலாளிகளுக்கும், தலா 50 லட்சம் நிவாரணமும், தீக்காயத்தால் தொடர்ந்து பணி செய்ய இயலாத பட்சத்தில், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், ஏற்படும் விபத்துகளில் உயர்மட்ட அதிகாரிகள், தங்களது அதிகார பலத்தால், தப்பித்துக் கொண்டு வருகின்றனர். எனவே
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பயங்கர தீவிபத்து நடைபெற்ற, இடத்தில் பணிபுரிந்த, என்எல்சி உயர் அதிகாரிகள் மீது, வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் இது போல், விபத்துக்கள் நடக்காமல் இருக்கும். தொடர்ந்து என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

24/08/2022

வீராணம் ஏரியின் முழுமையாக நீர் நிரம்பிய காட்சிகள்

மிக அவசரம் . A Positive. . Blood. Group. தேவை தொடர்புக்கு9600772482தேவராஜன்Name..... ThanavalliAge ........65Word .........
23/07/2022

மிக அவசரம் .
A Positive. . Blood. Group. தேவை தொடர்புக்கு
9600772482
தேவராஜன்

Name..... Thanavalli

Age ........65

Word ......15
Hospital .... R.M.M.C.H
Chidambarm
Blood. Group ... A positive

Emergency. Pelee s
Cat no.
9600772482
9790884789

11/07/2022

Address

West Street, Vadappakkam
Chidambaram
608201

Telephone

+919629645932

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pachcha milaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pachcha milaka:

Videos

Share


Other News & Media Websites in Chidambaram

Show All