Thali Cultural Centre - TCC

Thali Cultural Centre - TCC Art, Architecture, Travel and Cultural Magazine
(1)

ஆட்டுத் தோலில் செய்த பையில் தண்ணீர் கொண்டுவரும், தண்ணீர்க்காரர். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தண்ணீர் கேன் தூக்குவது ...
17/04/2024

ஆட்டுத் தோலில் செய்த பையில் தண்ணீர் கொண்டுவரும், தண்ணீர்க்காரர். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தண்ணீர் கேன் தூக்குவது மட்டும் மாறவில்லை. அன்று ஆட்டுத்தோல் இன்று பிளாஸ்டிக் கேன்.
அக்பர் இமய மலையில் உருவாகும் நீரினை, புனிதம் எனக் கருதினார். அந்நீரை மட்டுமே அருந்தினார். அவருக்கு என்றே இமயத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர இவர்களின் ஒரு ஆட்டுத் தோல் பைக்காரார் காரர் குழு இருந்துள்ளது.

16/04/2024

மே மாத மின்னிதழுக்குக் கட்டுரைகள் அனுப்பும் கட்டுரையாளர்கள் Unicode வடிவில், Word Document இல், படங்களைத் தனி கோப்புகளில் [email protected]
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இம்மாத இறுதிக்குள் கட்டுரைகள் அனுப்பக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

தென்குமரியின் சரித்திரம் – அ.கா. பெருமாள்₹125Buy: https://www.heritager.in/shop/then-kumari-sarithiram/கன்னியாகுமரி மாவட...
15/04/2024

தென்குமரியின் சரித்திரம் – அ.கா. பெருமாள்
₹125

Buy: https://www.heritager.in/shop/then-kumari-sarithiram/

கன்னியாகுமரி மாவட்டத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஓர் அரிச்சுவடி.

இந்நூல் வழக்கமான வரலாற்றுச் சான்றுகளை மட்டுமல்ல; நாட்டார் வழக்காறுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; அரிதான பழைய படங்களைக் கொண்டது.

வரலாற்று மாணவர்களுக்குப் பாட நால். அபூர்வமான தகவல்களைக்கொண்ட ஆவனாம். கன்னியாகுமரி மாவட்டத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஓர் அரிச்சுவடி.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.கலைஞர் விளக்கம்:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்...
14/04/2024

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

கலைஞர் விளக்கம்:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள், ஒன்றுபட்டு சமூகம் இயங்க மொழி வளம் அவசியம், அற நூல்கள் மூலம், மொழி வளர்ச்சி மூலமும் மொழியைக் காத்து நிற்கும் நூலாசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் Heritager.in The Cultural Store இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

13/04/2024

மரபாளர் மின்னிதழ் கலந்துரையாடல் மற்றும் புத்தக வாசிப்பு

நூல் 1: தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் – முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு₹220பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய...
13/04/2024

நூல் 1: தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் – முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு
₹220

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் நிலத்தில் விளைந்த பொருள்களைப் பிற திணை மக்களிடம் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருள்களைப் பிற திணை மக்களிடம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இப்பொருள்களின் பரிமாற்றங்கள் பண்டமாற்று முறையாக மாறியது. இதுவே வணிகத்தின் தொடக்கமாக அமைகிறது. இப்பண்டமாற்று முறையின் வளர்ச்சியால் நெய்தல் நிலப்பகுதிகளில் கடல் வணிகம் தொடங்குகிறது.

https://www.heritager.in/shop/pandaiya-thamizharin-kadal-vanigam/

--------

நூல் 2: பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்
₹185

சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது என்பவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

https://www.heritager.in/shop/pazhanthamizh-vanigargal/

பௌத்தமும் பழந்தமிழ் குடிமக்களும் - புலவர் ஜெ. ஆனந்தராசன்Rs. 150 + ShippingBuy: https://www.heritager.in/shop/bouththamum...
12/04/2024

பௌத்தமும் பழந்தமிழ் குடிமக்களும் - புலவர் ஜெ. ஆனந்தராசன்
Rs. 150 + Shipping

Buy: https://www.heritager.in/shop/bouththamum-pazhanthamizh-kudimakkalum/

----------------

கி.மு. 300ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1200 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக்காலம் பௌத்த மதம் தமிழர்கள் பேணிய முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கி வந்திருக்கிறது. மணிமேகலை, குண்டலகேசி, உதயணன் காதை, பிம்பிசாரம், சித்தாந்தத் தொகை, சூடாமணி, திருப்பதிகம். வீரசோழியம் போன்ற பௌத்த காப்பியங்களைப் படைத்துத் தமிழ் பௌத்த அறிஞர்கள் தமிழன்னையை அழகூட்டிய காலம் அது

பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் – சிவ தியாகராஜா
₹420 + Shipping

Buy: https://www.heritager.in/shop/bouthathai-valaratha-pandaiya-thamizhargal-siva-thiyagaraja/

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பல வகையான முத்திரைகள் கிடைத்துள்ளன. தனிப்பட்டோரின் முத் திரைகள், குறிப்பிட்ட வணிகக் ...
11/04/2024

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பல வகையான முத்திரைகள் கிடைத்துள்ளன. தனிப்பட்டோரின் முத் திரைகள், குறிப்பிட்ட வணிகக் குழுவினரின் முத்திரைகள், அரசாங்க உயர் அதிகாரிகளின் முத்திரைகள், பெரியோர்களது முத்திரைகள், படைத்தளபதிகளுக்கான முத்திரைகள், அமைச் சர்களுக்கான முத்திரைகள், சமயம் தொடர்பான முத்திரைகள் என்று பல்வேறு வகைகளில் முத்திரைகள் இருந்துள்ளன. அம்முத்திரைகளிலே வாசகங்கள் பொறிக்கப்படுவதும் உண்டு.

உண்மையை நிரூபிக்கவும் அடையாளம் காணவும் அரசன் முத்திரையை உபயோகிக்கும் வழக்கம் மிகப் பழங் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. அதனால் அரசாங்கத் திற்கு முத்திரை ஒரு முக்கிய சாதனமாக விளங்கியது எனலாம்.

ஆணைகள் எழுதப்பட்ட பின்னர் இடப்படும் இலச் சினை (முத்திரை) மதிப்பு வாய்ந்த ஒன்று. முத்திரையின் மூலமே அவ்வாணை நிறைவேற்றப்படுகிறது.தர்ம சாஸ்திரங் கள்கூட இதனை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றன. 'முத்ரா ராக்ஷஸம்' என்ற நாடக நூலில் நந்தர்களின் அமைச்சனான ராக்ஷஸன் ஓரிடத்தில் ஆணையொன்றினை மறுக்க இயலாது தவிக்கிறான். காரணம் அதில் அவனுடைய முத்திரையே காணப்படுகிறது. அந்த நாடகத்தில் அவனுக்கே தெரியாமல் இடப்பட்ட முத்திரை அது. ஆனாலும், அம்முத்திரை இருப்ப தால் அவனால் மறுக்க இயலவில்லை.

இந்தியாவில் கிடைத்துள்ளவற்றுள் மிகவும் பழமை யான முத்திரை மொஹஞ்சதாரோவில் கிடைத்ததே ஆகும். அதில் உள்ள வாசகம் இன்னும் படிக்க இயலாத நிலையிலேயே உள்ளது.

ஏதாவது சின்னங்கள் முத்திரைகளில் இடம்பெறும். அவை ஏதாவதொரு விலங்கினத்தின் உருவமாகமோ அல்லது சிறப்பான பொருளின் உருவமாகவோ அமையலாம். அத னுடன் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும். பிற்காலம் வரை யிலும்கூட இம்முறையே பின்பற்றப்பட்டது.

சில முத்திரைகள் பண்டைக்காலத்தில் கோயில்களில் முத்திரையாகப் பயன்படுத்தியிருக்கலாம். சில முத்திரைகள் கொடுக்கல், வாங்கல் அதிகாரியின் முத்திரையாக இருக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்குச் சுங்கம் வாங்கியதற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே அரசனுடைய அலுவலர்கள் முத்திரையைப் பொறித்தார்கள். கோயிலுக்குரிய பற்று, வரவுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு கருதியும் அதன் நிர்வாகத்தினர் இம்முத்திரைகளைப் பயன்படுத்தி இருத்தல் வேண்டும்.

பொதுவாக இம்முத்திரைகள் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் செய் யப்படுவது உண்டு. பண்டைக்காலத்தில் களிமண்ணால் (சுடு மண்) செய்யப்பட்ட முத்திரைகளும் பயன்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சங்க காலத்தில் வெளியிட்ட தங்கத்தால் செய்யப் பட்ட முத்திரைகள் இன்றுவரை கிடைக்கவில்லை. எதிர்காலத் தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கிடைத்துள்ள முத்திரைகளை மட்டுமே ஆய்வு செய்து இந்த நூலில் தரப்பட்டுள்ளன. வெளிமாநிலங் களிலும் வெளிநாட்டிலும் கிடைத்த முத்திரைகள் எதுவும் இந் நூலில் தரப்படவில்லை.

பொருளடக்கம்

இயல் - ஒன்று

முத்திரைகள்

1. எழுத்துப் பொறிப்புள்ள சங்ககால முத்திரைகள்
2. சோழர் முத்திரைகள்
3. பாண்டியர் முத்திரைகள்
4. சேரர் முத்திரைகள்
5.ஸ்ரீவத்ஸம் முத்திரைகள்
6. சங்கு முத்திரைகள்
7. சக்கர முத்திரைகள்
8. சங்கு சக்கர முத்திரை
9. யானை முத்திரைகள்
10. சிங்க முத்திரைகள்
11. குதிரை முத்திரைகள்
12. நந்தி முத்திரைகள்
13. சுடுமண் முத்திரைகள்
14. ஐந்து சின்ன முத்திரைகள்
15. பறவை முத்திரைகள்
16. அம்மன் முத்திரைகள்
17. கணபதி முத்திரைகள்
18. நண்டு முத்திரைகள்
19. தேள் முத்திரைகள்
20. கண்ட பேருண்ட முத்திரைகள்
21. பல்வேறு வகையான முத்திரைகள்
22. கோயில் முத்திரைகள்
23. மாத்வர் முத்திரைகள்
24. வைணவ முத்திரைகள்
25. தனியார் முத்திரைகள்
26. நவாபு காலத்து முத்திரைகள்
27. தனிநபர் முத்திரைகள்
28. மர முத்திரைகள் (விவசாயம்)
29. மராட்டியர் முத்திரைகள்

இயல்- இரண்டு

மோதிரங்கள்

1.பெருங்கற்கால குறியீட்டு மோதிரம்
2. அடையாளக் குறியீட்டு முத்திரை மோதிரங்கள்
3. சங்ககால எழுத்துப் பொறிப்புள்ள மோதிரங்கள்
4.சங்க கால எழுத்துப் பொறிப்பு இல்லாத மோதிரங்கள்
5. இலச்சினை பொறித்த முத்திரை மோதிரங்கள்
6. பிற்காலச் சோழர் மோதிரங்கள்
7. பல்லவர் கால மோதிரங்கள்
8. நந்தி மோதிரங்கள்
9. மயில் மோதிரங்கள்
10. சோழர்கால மோதிரங்கள்
11. சங்கு மோதிரங்கள்
12. நாய் மோதிரம்
13. குதிரை மோதிரம்
14. மோதிரக் கல்லில் உருவங்கள்
15. அனுமன் மோதிரங்கள்
16.பாண்டியர் முத்திரை மோதிரங்கள்
17. வராக மோதிரங்கள்
18. லிங்க மோதிரங்கள்
19. சிங்க முத்திரை மோதிரங்கள்
20. மீன் மோதிரங்கள்
21. மராட்டியர் மோதிரங்கள்
22. ஓர் எழுத்து மோதிரங்கள்
23. பெயர் பொறித்த மோதிரங்கள்
24. பல்வேறு வகையான மோதிரங்கள்
25. தெலுங்கு மோதிரங்கள்
26. நவாபு காலத்து மோதிரங்கள்
27. நவாபு காலத்து மோதிரங்களிலிருந்து விழுந்த தகடுகள்
28.மராட்டியர் கால மோதிரங்களிலிருந்து விழுந்த தகடுகள்
29. மராட்டியர் கால மோதிரங்கள்

சான்றெண் விளக்கம்

துணைநூற்பட்டியல்

தமிழக முத்திரை மோதிரங்கள்
ஆசிரியர்கள்: ஆறுமுக சீதாராமன், சங்கரன் ராமன்
Buy: https://www.heritager.in/shop/thamizhga-muthirai-mothirangal/
WhatsApp: wa.me/919786068908

நமது மரபாளர் மின்னிதழுக்கு முனைவர்.ஜோ. பிரின்ஸ் எழுதிய பெரும்பாணாற்றுப்படை வழிகள் கட்டுரை உங்களின் பார்வைக்கு. பெரும்பாண...
10/04/2024

நமது மரபாளர் மின்னிதழுக்கு முனைவர்.ஜோ. பிரின்ஸ் எழுதிய பெரும்பாணாற்றுப்படை வழிகள் கட்டுரை உங்களின் பார்வைக்கு.

பெரும்பாணாற்றுப்படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர். கடியலூர் என்னுமூர் எவ்விடத்தது என்பது கூற இயலவில்லை. அவர் கூறியுள்ள பெரும்பாணன் புதிய பெரும்பாணனை எங்குச் சந்தித்தான் என்பதும் தெரியவில்லை. ஆயின், அப்பெரும்பாணன் கூறியுள்ள வழியில் வேற்றரசர் நாடு கூறப்படவில்லை; தொண்டைநாட்டு நிலங்களும் ஊர்களுமே கூறப்பட்டுள்ளன. இவற்றைக் கூர்ந்து நோக்கின், பெரும்பாணன் தொண்டைநாட்டின் உட்பகுதிலிருந்தே புதிய பாணனுக்குக் காஞ்சிக்குச் செல்ல வழி கூறியுள்ளான் என்பது தெளிவாகத் தெரிகிறது..

Read More: மரபாளர் மின்னிதழ் - மார்ச் பதிப்பு 2024
Download the Issue: https://bit.ly/heritager2024

10/04/2024

மரபாளர் மின்னிதழுக்கு கட்டுரை அனுப்பும் கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளை [email protected] அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அறிவியல் முறையில் சங்க காலத்தை அணுகியுள்ள நூல்.சங்க காலத் தொழில்நுட்பம் - த. சாமிநாதன்Whatsapp: wa.me/918786068908
09/04/2024

அறிவியல் முறையில் சங்க காலத்தை அணுகியுள்ள நூல்.

சங்க காலத் தொழில்நுட்பம் - த. சாமிநாதன்

Whatsapp: wa.me/918786068908

இறந்தோரை வணங்குவதும், வீர மரணம் அடைந்தோருக்கு உருவம் பதித்த, எழுத்துடைய நடுகற்கள் உருவாக்கப்பட்டன என நடுகற்கள் பற்றி சங்...
08/04/2024

இறந்தோரை வணங்குவதும், வீர மரணம் அடைந்தோருக்கு உருவம் பதித்த, எழுத்துடைய நடுகற்கள் உருவாக்கப்பட்டன என நடுகற்கள் பற்றி சங்க இலக்கியம் நெடுக பேசப்படுகின்றன.

தமிழகம் மற்றும் தென்னக முழக்கம் உள்ள நடுகற்கள் பற்றிய தொகுப்பாக தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி வெளிவந்துள்ள இந்நூல்கள், தென்னக மக்களின் பொது வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாகும். நடுகல் பற்றிய ஆர்வலர்கள் வாங்க வேண்டிய முக்கிய நூலாக கருதிகிறேன்.

தொகுதி 1 ன் உள்ளடக்கம்

1. என்னுரை
2. அணிந்துரை
3. நடுகல் வழிபாடும் நம்பிக்கைகளும்
4. உலகெங்குமுள்ள நீத்தார் நினைவுக் கற்கள்
5. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நடுகற்கள்
6. செங்கம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி நடுகற்கள்
7. சங்க கால நடுகற்கள்
8. பல்லவர் நடுகற்கள்
9. சோழர் நடுகற்கள்
10. பாணர் நடுகற்கள்
11. நுளம்பர் நடுகற்கள்
12. பாண்டியர் நடுகற்கள்
13. இராட்டிரகூடர் நடுகற்கள்
14. கங்கர் நடுகற்கள்
15. சின்னக்கொத்தூர் நடுகற்கள்
16. கோழிக் கற்கள்
17. பள்ளிப்படைக் கோயில்கள்
18. தருமபுரி அகழ்வைப்பகம்
19. நவகண்ட சிற்பங்கள்
20. சதிக்கற்கள்
21. நீத்தோர்ப்பட்டி
22. நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும்
23. கோயில்களைக் காக்க உயிர் விட்டவர்கள்
24. நரபலிகள்
25. நடுகற்களில் சேவகர்கள்
26. கால்நடைச் செல்வங்கள்
27. தஞ்சை மராட்டியர் சமாதிக் கற்கள்
28. உதகமண்டலம் நீத்தார் நினைவுக் கற்கள்
29. படங்கள்

தொகுதி 2 ன் உள்ளடக்கம்

1. ஆந்திரப் பிரதேச நடுகற்கள்
2. கருநாடக மாநில நடுகற்கள்
3. கேரள மாநில நடுகற்கள்
4. கோவா மாநில நடுகற்கள்
5. மகாராஷ்டிர மாநில வீரக்கற்கள்
6. நடுகற்கள் காட்டும் வழிபாடும் பண்பாடும்

Buy: https://www.heritager.in/shop/nadugal-kalvettugalum-sirpangalum-volume-1-2/

WhatsApp: wa.me/919786068908

தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை  அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம்  (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார...
06/04/2024

தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொ.சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்:

வரலாற்றில் தகடூர்
சித்திரமேழி
மதுரையில் சமணம்
மாமதுரை
திருக்கோயில் உலா
நகரம் , தொல்லியலும் வரலாற்றியலும்
தமிழே திராவிடம்
வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்
கல்வெட்டு கலை
கோயிற் கலை
செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்

நமது Heritager.in The Cultural Store ல் விற்பனைக்கு உள்ள சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்: https://www.heritager.in/product-category/author/s-santhalingam/

மீனவர்களின் வட்டாரச் சொற்களை ஏறத்தாழ மூன்றாயிரம் கலைச்சொற்களாக வரிசைப்படுத்தி, மீனின் வகைகளும் அவற்றின் வெவ்வேறு பெயர்கள...
06/04/2024

மீனவர்களின் வட்டாரச் சொற்களை ஏறத்தாழ மூன்றாயிரம் கலைச்சொற்களாக வரிசைப்படுத்தி, மீனின் வகைகளும் அவற்றின் வெவ்வேறு பெயர்களும், மீன்பிடிக் கருவிகளின் வகைகளும் பெயர்களும், கடற்கலன்களின் வகைகளும் பெயர்களும் தொகுத்து வழங்கப்பட்டிக்கிறது.

நெய்தல் சொல்லகராதி
Buy Online: https://www.heritager.in/shop/neithal-sollagarathy/

-------------------------

தமிழக மீனவர்களின் தொழில்சார் சொற்கள், தொழில்நுணுக்கச் சொற்கள், தொழில்சார் பண்பாட்டுச் சொற்கள் ஆகியவை இலக்கியங்களிலிருந்தும் கள ஆய்வின் மூலமும் திரட்டப்பெற்று இவ்வகராதியில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘தமிழக மீனவர் தொழில் – பண்பாட்டுச் சொல்லகராதி’.

மீனவர் சொல்லகராதி: https://www.heritager.in/shop/a-dictionary-of-occupstional-and-cultural-terms-of-the-fisherfolk-of-tamil-nadu/

======

நெய்தல் புத்தகத் தொகுப்புகள்: https://www.heritager.in/product-category/books/tamil/thinai/neithal/

திணை புத்தகத் தொகுப்புகள்: https://www.heritager.in/product-category/books/tamil/thinai/

வரலாற்று நூல்கள்: https://www.heritager.in/product-category/books/tamil/history/

WhatsApp Order: wa.me/919786068908

முக்குவர் வாழ்வியல் - முனைவர்.சி. ஆன்சி மோள்முக்குவர் வாழ்வியல் என்னும் இந்நூல் குமரி மாவட்ட கிறித்தவ முக்குவர் வாழ்வில்...
05/04/2024

முக்குவர் வாழ்வியல் - முனைவர்.சி. ஆன்சி மோள்

முக்குவர் வாழ்வியல் என்னும் இந்நூல் குமரி மாவட்ட கிறித்தவ முக்குவர் வாழ்வில் வாழ்வில் நடைபெறுகிற சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், தொழில் முறைகள் மற்றும் வழக்காறுகள் ஆகியவற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்நூலில் புதிய தகவல்கள் கிடைக்கிறது. முக்குவர்களின் இருப்பிடத்தை அறிய உதவுகிறது. தகவல்கள் திரட்ட நூலாசிரியர் பயணித்த தூரத்தை அறிய முடிகிறது. அதற்காக அவர் தேடிக் கொடுத்திருக்கிற தரவுகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

- திருத்தமிழ்த்தேவனார்

Buy: https://www.heritager.in/shop/mukkuvar-vazhviyal/
===============================

நெய்தலின் வடிவங்கள் முனைவர். சி.ஆன்சி மோள்

ஆசிரியரை பற்றி...

குமரி மாவட்டம், குளச்சல் கடலோர கிராமத்தை சார்ந்தவர் முனைவர் சி. ஆன்சி மோள். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை பட்டமும், முட்டம் ஆயர் ஆஞ்சினி சுவாமி கல்வியியல் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழில் முனைவர் பட்டமும் பெற்றவர். தற்போது நாகர்கோவில் ஹோலிகிறாஸ் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக (சுயநிதி பிரிவில்) பணியாற்றி வருகிறார். அகம், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகிய கவிதை நூல்களையும் முக்குவர் வாழ்வியல் என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதியவர். சிங்கப்பூர், மலேசியா, அந்தமான், துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Buy: https://www.heritager.in/shop/neithalin-vadivangal/

WhatsApp: wa.me/097860 68908

நெய்தல் திணை குறித்த நூல்கள்: https://www.heritager.in/product-category/books/tamil/thinai/neithal/

097860 68908

நூல் அறிமுகம்: இந்து முக்குவர் (வரலாறு - வாழ்வியல்) - ஆசிரியர்: பௌளின்விலை: Rs. 120 + shippingBuy: https://www.heritager...
04/04/2024

நூல் அறிமுகம்: இந்து முக்குவர் (வரலாறு - வாழ்வியல்) -
ஆசிரியர்: பௌளின்

விலை: Rs. 120 + shipping

Buy: https://www.heritager.in/shop/hindu-mukkuvar/

WhatsApp: wa.me/919786068908

#நெய்தல் #மரபாளர்

திரு. கண்ணன் வெங்கடேசன் எழுதிய  பல்லவத் தளபதி உதயச்சந்திரன் குறித்த ஒரு வரலாற்றுத் தேடல் நமது மரபாளர் மின்னிதழில்.நமது இ...
03/04/2024

திரு. கண்ணன் வெங்கடேசன் எழுதிய பல்லவத் தளபதி உதயச்சந்திரன் குறித்த ஒரு வரலாற்றுத் தேடல் நமது மரபாளர் மின்னிதழில்.

நமது இதழ் தொடர்ந்து வெளிவர, உங்களுடைய ஆதரவு மிக முக்கியம். கட்டுரைகளை பங்களித்து தொடர்ந்து உதவவும். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected] .

மரபாளர் மின்னிதழ் - மார்ச் பதிப்பு 2024

Download the Issue: https://bit.ly/heritager2024

இதழ் சந்தா படிவம்: https://www.heritager.in/heritager-tamil-magazine-subscription-form/

"புராதன இந்தியாவின் நாட்டியக்கலை சம்பந்தமான சகல விடயங்களையும் உள்ளடக்கிய, மிகப் பழமையான நூல் நாட்டிய சாஸ்திரம். நாட்டியக...
03/04/2024

"புராதன இந்தியாவின் நாட்டியக்கலை சம்பந்தமான சகல விடயங்களையும் உள்ளடக்கிய, மிகப் பழமையான நூல் நாட்டிய சாஸ்திரம். நாட்டியக் கலையானது இந்தியா முழுவதற்கும் உரித்தான பொதுச் செல்வம். இக்கலை யானது ஆதியில் ஆரியர் அல்லாத மக்கள் கூட்டத்தினர் மத்தியில் வளர்ந்து, பரிணமித்தது. நாட்டியம் உட்பட இந்தியத் துணைக் கண்டத்தின் கலாசார வளர்ச்சியானது ஏற்கெனவே உள்ள பூர்விக திராவிடப் பண்பாட்டில் கட்டி எழுப்பப்பட்டது நாம் அறிந்ததே.

இந்திய நாட்டியக் கலைக்கு வேண்டிய சகல அம்சங்களையும் அஃதாவது அன்று வரை அறியப்பட்டவற்றை ஒன்று திரட்டி. விதி முறை களையும் கலைநுட்பங்களையும் உருவாக்கி எழுதப்பட்ட முதல் நூலாக நாட்டிய சாஸ்திரம் கருதப்படுகின்றது. இது ஏறத்தாழ கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் எழு தப் பட்டதென ஆராய்ச்சிகள் நிறுவுகின்றன. பரத முனிவர் என்பார் எழுதியதாக நாட்டிய சாஸ்திரத்தின் தோற்றம் பற்றிய மரபுக் கதை கூறுகின்றது.

அறிஞர் மனோ மோகன் கோஷ் நாட்டிய சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். “பரத எனும் சொல் ஆரம்பத்தில் நடிகனையே குறித்தது. பினனர் நாட்டியத்துக்கு இலக்கணம் வகுத்தவனைக் குறிப்ப தாயிற்று' என்கிறார் மனோமோகன் கோஷ். மேலும், பரத எனும் சொல் பரந்த பொருள்படவும் நாட்டிய சாஸ்திரத் தில் கையாளப்படுகிறது. காட்சி அமைப்போன், விதூஷகன், நடிகன், தயாரிப்பாளன் என்போர் யாவரும் பரதரே.

புராதன இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு குல மரபுக் குழுக்கள் போல நாட்டியத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு குல மரபுக் குழு வாழ்ந்திருக்க வேண்டும். இதற்கு நாட்டிய சாஸ்திரத்திலும் சான்று உண்டு. பரதர் என்பது இக்குலமரபுக் குழுவாக இருக்கலாம் எனக் கருதுவதற்குச் சான்றுகள் உண்டு. இக்குழுவும் அதன் வழித்தோன்றல் களும் வடக்கில் இருந்து தெற்குவரை பரவின எனவும் கருத இடமுண்டு. பரத குலத்தினர் பேணிக் காத்த நாட்டிய இலக்கணங்களே நூல் வடிவமாக, பரதநாட்டிய சாஸ்திரம் ஆகிய து என நாம் கருதுவோமாயின், வரலாற்று உண்மையினின்றும் பெரிதும் விலகியவர்களாகமாட்டோம். வடமொழியானது அறிஞர் மொழியாகவும், அரசியல் மொழியாகவும் இருந்த காலகட்டத்தில் எழுதப் பட்டதனால் நாட்டிய சாஸ்திரம் வடமொழியில் காணப்படுகின்றது.

இயற்கை நெறியில் வாழ்ந்து பூர்விகக் குடிகளின் பண்பாடுகளை முற்றிலும் அழித்தொழித்துவிடாமல், வைதிகக் கொள்கையுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரியமாக்கல் நடைபெறுவதற்கு வடமொழி நாட்டிய சாஸ்திரமும் ஓர் எடுத்துக்காட்டு. இதனாலேயே நாட்டியக் கலையானது நாட்டிய வேதம் எனப்பட்டது. அதே வேளையில் நாட்டியமானது இழிகுலத்தோரின் 'வேதம்'. என இதற்கு முத்திரை பொறித்து ஐந்தாவது வேதமாகக் கொள்ளப்படினும், இது ஏனைய நான்கு வேதங்களின் “பரம்பரை”க்கும் புறம்பானதான திராவிடப் பரம்பரை யினரது நாட்டியக் கலை என இனம் கண்டுகொள்ள முடிகிறது.

பரத நாட்டிய சாஸ்திரத்தை இன்றைய வழக்கில் கூறுவதெனில், பரத நாடக நூல் எனலாம். நாடகம் எனும் கலையினை மேடையில் நடித்துக் காட்டுவதற்கு வேண்டிய சகல அம்சங்களும் இந்நூலில் கையாளப் பட்டுள்ளன.. இதில் 5,560 சூத்திரங்கள் உண்டு. ஆடல், அபிநயம், இசை, சொற் பொருளாய்வு, சொல்லமைப்பு, வெவ்வேறு பேச்சு வழக்குகள் அவற்றின் ஒலியியல், நாடகம் எழுதுதல், நாடகம் அமைத்தல், தயாரித்தல் ஒத்திகை, நடிப்புக்கலை. திறனாய்வு. பார்வையாளர், தயாரிப்பாளர் என்பனவும் நாடகக் கலைக்கு உதவ வேண்டிய ஏனைய தொழில் நுட்பங்களும், நாட்டிய சாஸ்திரத்தில் அடங்கும்."

- ஆசிரியரின் குறிப்பிலிருந்து

இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

விலை: ₹275

Buy: https://www.heritager.in/shop/indhiya-naatiyaththin-dravida-marabu/

WhatsApp: wa.me/919786068908

தமிழர் போர்முறை படைக்கருவிகள் குறித்தும், புராதான இந்துப் போர்முறை பற்றியும் எழுதப்பட்ட நூல்கள். போர்கள், போர் ஆயுதங்கள்...
02/04/2024

தமிழர் போர்முறை படைக்கருவிகள் குறித்தும், புராதான இந்துப் போர்முறை பற்றியும் எழுதப்பட்ட நூல்கள். போர்கள், போர் ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்வோர் வாங்கவேண்டிய நூல்கள் இவை.

நூல் 1: தமிழ்நாட்டுப் படைக்கலன்கள் – நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் ஆ. இராகவன்
₹260

https://www.heritager.in/shop/thamizhnattu-padaikkalan/

தமிழ் நாட்டுப் படைக் கலங்களை கற்காலக் கருவிகள், மரக்காலக் கருவிகள் உலோக காலக் கருவிகள் என்று முதலாவதாக பிரித்து ஆய்ந்தனர். அப்பால் வந்த அறிஞர்கள் வில், அம்பு, கதை, தடி, உலக்கை போன்றவைகள் மரக்கால ஆயுதங்கள் என்றும் கத்தி, வாள், வேல், ஈட்டி, கோடரி, அங்குசம், கேடயம் போன்றவைகள் உலோக கால ஆயுதம் என்றும் பிரித்து ஆராய்ந் துள்ளார்கள். பின்னர் ஆயுதங்கள் ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி கத்தி இனம், வேல் இனம், கேடய இனம் என்று பிரித்து ஒவ்வொரு ஆயுதத்திலும் பல உட்பிரிவுகளைக் கண்டு ஆய்ந்துள்ளார்கள்.

1. தோற்றுவாய்
2 படையும் நடையும்
3 தமிழர்களின் போர் முறை
4. இலக்கியச் சான்றுகள்
5. சிற்ப நூற் சான்றுகள்
6. புதை பொருள் சான்றுகள்
7. பண்டைக் காலப் பாரதப் படை
8 திராவிடப் பழங்குடி மக்களின் படைக்கலன்கள்
9. வரலாறு படைத்த பாரதப் படை
10. இந்தியப் படையின் ஏற்றம்
11. கருவிகளின் பரிணாம வளர்ச்சி
12. படைக்கலன்களின் விளக்கம்

=====

நூல் 2: புராதன இந்து சமுதாயத்தில் போரியல் – கலாநிதி முகுந்தன்
₹225

https://www.heritager.in/shop/purathana-inthu-samuthayaththil-poriyal/

WhatsApp: wa.me/919786068908

#ஹெரிட்டேஜர் #மரபாளர்

சர்வதேச குழந்தைகள் புத்தக தின நல்வாழ்த்துக்கள்! குழந்தைகள் சார்ந்த பல புத்தகங்கள் நம் அமைப்பில் கிடைக்கிறது.  அவர்களை பள...
02/04/2024

சர்வதேச குழந்தைகள் புத்தக தின நல்வாழ்த்துக்கள்!

குழந்தைகள் சார்ந்த பல புத்தகங்கள் நம் அமைப்பில் கிடைக்கிறது. அவர்களை பள்ளி கல்வி புத்தகங்கள் மட்டும் அல்லாமல், பலவகையான புத்தகங்களை அறிமுகம் செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். அவர்களின் திறமைகளை புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாசிப்பு அவர்களுக்கு துணை நிற்கும். இன்றைய சூழலில் கணினியிலும் தொலைபேசியில் இருந்தும் குழந்தைகளை வெளியே கொண்டு வர விளையாட்டும், வாசிப்போம் நல்ல பயிற்சி என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக நம் நாட்டின் கலாச்சார, கட்டிடக்கலை சார்ந்த சில புத்தகங்களின் தொகுப்பை இங்கு வெளியிட்டு இருக்கிறோம். தேவைப்படுவோர் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட புத்தகங்களை வாங்கி குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்.

Mamallapuram - Rs.195
Sanchi -Rs.195
Chhatrapati Shivaji Terminus- RS.195
Art of India - Rs.295
Qutub Minar - Rs.195

Collection of 5 : Rs.1075/-

For orders pls contact : 9360195938

பண்டைய தமிழக வரலாற்றை மறைந்துபோன அரசுகளின் கல்வெட்டுகள், செப்பேடுகளில் மட்டும் நாம் தேடிக்கொண்டிருக்க, வாழும் வரலாறான மக...
01/04/2024

பண்டைய தமிழக வரலாற்றை மறைந்துபோன அரசுகளின் கல்வெட்டுகள், செப்பேடுகளில் மட்டும் நாம் தேடிக்கொண்டிருக்க, வாழும் வரலாறான மக்களிடையே உள்ள பண்பாட்டு கூறுகளை மறந்து விடுகின்றோம். இவற்றை ஆராய்ந்து அணுகும் திரு. பக்தவச்சல பாரதி Bhakthavatsala Bharathi அவர்களின் மானுடவியல் நூல்கள்.

சாதிகளை எவ்வாறு அணுக வேண்டும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள், அடையாள எச்சங்கள், மாற்றங்கள் என அறிவியல் பூர்வமாக என்னை இந்நூல்கள் அணுக உதவின.

ஜாதிய சமூக வரலாற்றை மாற்றுக் கோணத்தில் நாம் அணுக உதவும் மானுடவியல் நூல்கள் இவை.

ஆய்வாளர் பக்தவச்சல பாரதி அவர்களின் மானுடவியல் நூல் தொகுப்பு நமது Heritager.in The Cultural Store விற்பனைக்கு:

நூல் தொகுப்பு: https://www.heritager.in/product-category/author/author-bhakthavatsala-bharathi/

மற்ற மானுடவியல் நூல்கள்: https://www.heritager.in/product-category/books/tamil/anthropology/

WhatsApp: wa.me/919786068908

Our Social Media Handles:
https://www.heritager.in/
https://www.instagram.com/heritager.in/
https://twitter.com/HeritagerIn
https://www.youtube.com/channel/UCisScMqRDjVXVuRw6U9y2IA
https://www.facebook.com/heritagerstore
https://open.spotify.com/show/2FKDp6qLitHnzQR1TmL4RD

01/04/2024

வணக்கம், மரபாளர் மின்னிதழுக்கு மரபுசார் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளை அனுப்ப விருப்பமுள்ள கட்டுரையாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு கட்டுரைகளை அனுப்பலாம்.

நன்றி 🙏🙏

தமிழர் சால்பு - ஆசிரியர் வித்தியானந்தன், சு.‎‎குமரன் புத்தக இல்லம்பக்கங்கள் 368உள்ளடக்கம்முதலாம் இயல் : சங்க கால வரலாறுஇ...
31/03/2024

தமிழர் சால்பு - ஆசிரியர் வித்தியானந்தன், சு.‎‎

குமரன் புத்தக இல்லம்
பக்கங்கள் 368

உள்ளடக்கம்

முதலாம் இயல் : சங்க கால வரலாறு
இரண்டாம் இயல் : சங்க காலம்
மூன்றாம் இயல் : அரசியல் அமைப்பு
நான்காம் இயல் : போரும் போர்முறைகளும்
ஐந்தாம் இயல் : தமிழ் மக்களுக்குச் சிறப்பான சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும்
ஆறாம் இயல் : தெய்வங்கள்
ஏழாம் இயல் : ஆரியர் நம்பிக்கைகளும் சமயச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும்
எட்டாம் இயல் : சமணமும் பெளத்தமும்
ஒன்பதாம் இயல் : சமய வாழ்க்கை
பத்தாம் இயல் நம்பிக்கைகள்
பதினொராம் இயல் : சமூக அமைப்பு நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த மக்கட் பாகுபாடு
பன்னிரண்டாம் இயல் : மக்கள் தொழிலும் வணிகமும்
பதின்மூன்றாம் இயல் : பெண்கள்
பதினான்காம் இயல் : கல்வியும் கலைகளும்

Buy Online: https://www.heritager.in/shop/tamilar-saalbu/

WhatsApp: wa.me/919786068908

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு₹220.00ஆசிரியர் :ஜெகதாBuy: https://www.heritager.in/shop/anaikattugal-sollum-arputha...
30/03/2024

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு
₹220.00

ஆசிரியர் :ஜெகதா

Buy: https://www.heritager.in/shop/anaikattugal-sollum-arputha-varalaaru/

இந்தியாவில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளின் வரலாறு குறித்த மிக அபூர்வமான தகவல்களை விரிவாகக் கூறும் நூல் இது!

நீர் மேலாண்மை குறித்த ஆய்வுப் பார்வைக்கு பரந்த அளவில் கல்வியாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், உயிரோட்டமான பல உயரிய தகவல்களை வாரி வழங்கும் தடாகமாக நூலாசிரியர் திரு. ஜெகாதா அவர்களின் இந்நூல் ஒரு ஆவண நூலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாறு, புவியியல், அரசியல், புராணம் என ஒரு அணைக்கட்டின் அனைத்து வலைத்தளங்களையும் ஆய்ந்து மிக நுட்பமான தகவல்களை இந்நூலில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஜெகாதா.

இந்திய நீராதாரங்களின் புள்ளி விபரங்களையும், அணைக்கட்டுகள் பற்றிய அரிய தகவல்களையும் சொல்லும்போதே, நதிநீர்ப் பிரச்சனைகளின் இன்றைய சமூக மோதல்களைச் சுட்டிக் காட்டி, அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் விளக்கியிருப்பது இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு
₹220.00
ஆசிரியர் :ஜெகதா

Buy: https://www.heritager.in/shop/anaikattugal-sollum-arputha-varalaaru/

புலவர் செ. இராசு அவர்களின் நூல்கள் தொகுப்பு தற்போது விற்பனையில் Heritager.in The Cultural Store  புலவர் செ. இராசு நம்மோட...
30/03/2024

புலவர் செ. இராசு அவர்களின் நூல்கள் தொகுப்பு தற்போது விற்பனையில் Heritager.in The Cultural Store



புலவர் செ. இராசு நம்மோடு பேசும் நான்கு தலைப்புகள்

1.கொங்குல தெய்வங்கள்
செப்பேடு சொல்லும் சேதிகள்
2. தமிழகத்தில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்
3. கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும்
4. பழனி வரலாற்று ஆவணங்கள்
5. கொங்குநாடும் சமணமும்
6. தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள்

To Buy Please Contact: +91 9786068908
or
WhatsApp: wa.me/919786068908

https://www.heritager.in/
https://www.instagram.com/heritager.in/
https://twitter.com/HeritagerIn
https://www.youtube.com/channel/UCisScMqRDjVXVuRw6U9y2IA
https://www.facebook.com/heritagerstore
https://open.spotify.com/show/2FKDp6qLitHnzQR1TmL4RD

பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்விலை: ₹185Buy: https://www.heritager.in/shop/pazhanthamizh-vanigar...
29/03/2024

பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்

விலை: ₹185

Buy: https://www.heritager.in/shop/pazhanthamizh-vanigargal/

கிழக்கு பதிப்பகம்

சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது என்பவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

இந்தியாவின் சர்வதேச வணிகத் தொடர்புகளுக்கு தமிழக வர்த்தகர்கள் எப்படி முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஆதாரபூர்வமாக இதில் ஆராயப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் ஆரம்பித்து சோழப் பேரரசு முடிவுக்கு வருவது வரையிலான பழங்காலத் தமிழகத்தில் நடைபெற்ற உள் நாட்டு வணிகம் மற்றும் கடல் கடந்த வணிகம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகம், தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.

· பழங்காலத்தில் வணிகர்களும் வர்த்தகமும் எப்படி இருந்தன?

· பண்டைத் தமிழ் மன்னர்கள் வணிகத்துக்கு எந்தெந்தவகையில் உதவினர்?

· அயல் நாட்டு வணிகம் அவர்களுடைய ஆட்சியில் எப்படி இருந்தது?

· கோவில் கலாசாரம் வணிகத்துக்கு எப்படி உதவியாக இருந்தது? · சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது?

என்பவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆரம்பகால காலனிய தமிழகம் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு நூல்கள் எழுதியிருக்கிறார்.

தமிழர் அளவை முறைகள் - MEASUREMENT SYSTEMS OF THE TAMILSமுதன்மைப் பதிப்பாசிரியர் இரா.சந்திரசேகரன்பதிப்பாசிரியர் ந. பெரியச...
29/03/2024

தமிழர் அளவை முறைகள் - MEASUREMENT SYSTEMS OF THE TAMILS

முதன்மைப் பதிப்பாசிரியர் இரா.சந்திரசேகரன்
பதிப்பாசிரியர் ந. பெரியசாமி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
விலை: Rs. 400 + 50
WhatsApp: wa.me/919786068908

தமிழர்களின் கணித அறிவியல் சிந்தனை குறித்துச் செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. தமிழர்களின் எண்ணல் அளவைகள், நிறுத்தல் அளவைகள், நில அளவைகள், நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகள்,பெய்தல் அளவைகள், கால அளவைகள், நாணய அளவைகள், தொழில்சார் பண அளவை முறைகள் (குழூஉக்குறி) உடற்கூறு அளவைகள். தொழில்சார் அளவைகள், அளவைக்கருவிகள், அளவைசார் சொற்கள் ஆகியவை இலக்கியங்களிலிருந்தும் கள ஆய்வின் மூலமும் திரட்டப்பெற்று இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வளவை முறைகளிலிருந்து தமிழர்களின் அறிவுத்திறனும் அறிவியல் நுட்பமும் புலப்படுகின்றன. தமிழர்களின் அனைத்து வகையான அளவை முறைகளிலும் பயன்படுத்தப்பட்ட அளவைகளை முழுமையாகத் தொகுத்தளிப்பதாகத் 'தமிழர் அளவை முறைகள்' என்னும் இந்த நூல் அமைந்துள்ளது.

https://www.heritager.in/shop/measurement-systems-of-the-tamils/

அம்பை மணிவண்ணன் கோயிற்கலை நூல் தொகுப்பு - கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், தமிழகக் கோயிற்கலை வரலாறு, திருக்கோயில் அமைப்பும்...
29/03/2024

அம்பை மணிவண்ணன் கோயிற்கலை நூல் தொகுப்பு - கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், தமிழகக் கோயிற்கலை வரலாறு, திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்

Buy:
https://www.heritager.in/shop/thamizhaga-koyirkalai-varalaaru-amabai-manivannan/

தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை பாகம் - I & II
https://www.heritager.in/shop/thamizh-naattu-koyir-kattadakkalai/

வாளேந்தி வியாபாரத்திற்கு சென்றவர்கள் என உமணர்கள் சங்க காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.உப்பு விற்பனை செய்பவர்களை சங்க இல...
28/03/2024

வாளேந்தி வியாபாரத்திற்கு சென்றவர்கள் என உமணர்கள் சங்க காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.

உப்பு விற்பனை செய்பவர்களை சங்க இலக்கியம் உமணர் என அழைக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பின் விலையும் சரிசமமாக இருந்தது. உப்பு என்பதற்கு கோவளம் என்றும், பேரளம் என்றும் அறியப்படுகிறது.

உமணர்கள், உப்பு மூட்டைகளை தலையிலும், மாட்டு வண்டிகளிலும் சுமந்துகொண்டு ஊர் தோறும் விற்பர். மனைவி மற்றும் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்வர். "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பதால் உப்பின் மகிமை சிறப்பு பெறுகிறது. அந்த உமணர் வாழ்வியல் குறித்து இந்நூல் பேசுவதால் இந்நூல் வரலாற்றில் இடம் பெறுகிறது.

உமணர் வாழ்வியல் - சகாய சுசி
விலை: 80 + shipping

திருத்தமிழ்த்தேவனார் பதிப்பகம்

WhatsApp order: wa.me/919786068908

Address

Meenakshi Amman Street, Janaki Raman Colony
Chennai
600107

Alerts

Be the first to know and let us send you an email when Thali Cultural Centre - TCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Magazines in Chennai

Show All