Orey Naadu ஒரேநாடு

Orey Naadu ஒரேநாடு ஒரே நாடு - தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை
(8)

09/12/2024

ஸ்டாலின் நாடகமாடுவது சரியா ?; அண்ணாமலை கேள்வி/

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் க...
06/12/2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

தாய், தந்தை, மகன் என ஒரே நாளில், எந்தத் தவறும் செய்யாத மூன்று பேரை தங்கள் குடும்பத்தில் இழந்த சகோதரி கவிதா மற்றும் அவர் குழந்தைகளின் துயரத்திற்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சகோதரி கவிதா, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து, சட்டத்தின்படி தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சகோதரி கவிதா அவர்கள் குடும்பத்தினருக்கு, விரைவாக நியாயம் பெற்றுத் தருவோம் என்று உறுதி அளித்தோம்.

குற்றம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகக் காவல்துறை, 14 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகள் பற்றிய எந்த விவரமும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகக் காவல்துறையினரின் திறமை மீது எந்த ஐயமும் இல்லை. ஆனால், தமிழகக் காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளோ, தொழில்நுட்ப வசதி குறைபாடுகளோ, வழக்கு விசாரணை முன்னேற்றத்தில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

வழக்கு விசாரணை தாமதமாவதால், இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஏற்படும் ஒவ்வொரு நாள் காலதாமதமும், குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு அளிப்பதாக இருக்கிறது. எனவே, இனியும் காலதாமதமின்றி, வழக்கு விசாரணையை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாகக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

- தலைவர் அண்ணாமலை

06/12/2024

இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.

நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம்.

ஜெய் பீம்!

பொதுமக்களுக்கு எமனாக மாறிய குடிநீர்; மரணத்தை விட வலி தரும் வதந்தி அமைச்சரின் அலட்சியம்சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கு...
05/12/2024

பொதுமக்களுக்கு எமனாக மாறிய குடிநீர்; மரணத்தை விட வலி தரும் வதந்தி அமைச்சரின் அலட்சியம்

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் குடிநீரில் கலந்ததால் இன்று மூன்று பேர் இறந்துள்ளார்கள். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கெட்டுப் போன மீன் சாப்பிட்டதால் இறந்திருப்பார்கள் என்று திமுக அமைச்சர் அன்பரசன் அலட்சியமாக பதில் சொல்லி இந்த பிரச்சனையை கடந்து போக முயல்கிறார். கழிவுநீர் குடிநீர் கலந்திருந்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என்றும், ஆனால் 20 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பெரும்பான்மை மக்கள் மெட்ரோ வாட்டர் அனுப்பும் நீரை அப்படியே குடிக்க பயன்படுத்துவதில்லை. அதை RO செய்து பயன்படுத்துவதாலும், காய்ச்சி குடிப்பதாலும் ஆபத்திலிருந்து தப்பி வருகிறார்கள். பலர் இந்த பிரச்சனையே வேண்டாம் என்று தான் கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதையும் மீறி இந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்தும் மக்கள் உயிரையும் இழக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்த நிலையில் அந்தப் பகுதி மாநகராட்சி குழாயில் இருந்து மஞ்சள் நிறத்தில் மாசடைந்த நிலையில் தண்ணீர் வெளிவரும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன. திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அலட்சியமாக பேசும் அமைச்சருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அமைச்சரின் இந்த அலட்சியமான பதிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தண்ணீரை அமைச்சர் தா.மோ அன்பரசன் குடிப்பாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றி செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால் அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் பாதிக்கப்படுகின்றனர். தினமும் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் சிறிதும் வெட்கமே இன்றி திராவிட மாடல் அரசு என விளம்பரம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கள நிலவரங்கள் தெரியுமா என்ற கேள்வியும் வலுப்பட்டு வருகிறது.

மேலும் மீன் சாப்பிட்டதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என வதந்தியையும் அவர் பரப்புகிறார். ஒருவேளை குடிநீர் காரணமாக இல்லை என்றாலும் ஆய்வுக்கு பிறகு சொல்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டுமே தவிர, மீன் உணவின் மீது பழிபோட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

05/12/2024

இவரு நிழல் பிரதமரா ?; பாஜக எம்பியின் கேள்வியால் திருதிருவென முழித்த ராகுல்காந்தி/

திமுக அரசின் அலட்சியத்தால் மற்றுமொரு துயர சம்பவம். இளைஞர் பலி/
05/12/2024

திமுக அரசின் அலட்சியத்தால் மற்றுமொரு துயர சம்பவம். இளைஞர் பலி/

05/12/2024

3 மாதங்களில் அடித்து செல்லப்பட்ட பாலம்; வெள்ளத்தில் ஊழலை மறைக்கிறதா திமுக ?/

04/12/2024

வங்கதேசத்தில் அகதிகளாக்கப்படும் இந்துக்கள்; தனிநாடு தான் தீர்வா ?/

04/12/2024

தெலங்கானாவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை

04/12/2024

மகாராஷ்ட்ரா முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு. முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திய பட்னாவிஸ் ...

இன்று தமிழகம் முழுவதுமாக பல இடங்களில் நடைபெற்ற பங்களாதேஷ் ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியானது நட...
04/12/2024

இன்று தமிழகம் முழுவதுமாக பல இடங்களில் நடைபெற்ற பங்களாதேஷ் ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது.

சென்னையில் ராஜரத்னம் ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார்கள்..!

பங்களாதேஷ் ஹிந்து உரிமைகள் மீட்டெடுக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் திறனற்ற திமுக அரசால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டுள்ளனர்..!

04/12/2024

பஞ்சாப்பில் மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு ... அமிர்தசரஸ் பொற்கோயிலில் வைத்து முன்னாள் முதலமைச்சரை கொல்ல முயற்சி ...

03/12/2024

இருவேல்பட்டு, விழுப்புரம்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேரில் வராமல் காரில் அமர்ந்தபடியே பேசிய அமைச்சர் பொன்முடி. சேற்றை வாரி அடித்த பொதுமக்கள்

03/12/2024

முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்காமல் தென்பெண்ணை ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது - அண்ணாமலை

03/12/2024

பாஜக‌ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அம...
02/12/2024

பாஜக‌ மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூடத்தில் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், நலின் கட்டீல், மேலிடப் பொறுப்பாளர், அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலம் நீரில் மூழ்கியதால் ரயில் சேவை ரத்து
02/12/2024

விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலம் நீரில் மூழ்கியதால் ரயில் சேவை ரத்து

30/11/2024

வங்கதேச இந்துக்கள் மீது அடக்குமுறை; துறவி கைது, இஸ்கானுக்கு தடையா ?

Address

Vaithyaram Street, Parthasarathy Puram
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Orey Naadu ஒரேநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orey Naadu ஒரேநாடு:

Videos

Share

Category