Kowsalya Tamizhachi

Kowsalya Tamizhachi அரசியல்,சினிமா,விளையாட்டு மற்றும் ஆன்மீக தகவல்கள்

22/12/2024
ஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!
22/12/2024

ஜிவி பிரகாஷிற்காக மனம் உருகும் சைந்தவி!! அடுத்தடுத்து செய்த விஷயங்கள்!!

News4 Tamil provides Latest Tamil News in Online.Local News,Political News,Sports News and Cinema News in Tamil

வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமத...
21/12/2024

வீட்டுக் கடனுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் மத்திய அரசு!

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவியுடன் சில நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது.

மோடி அரசு தனது முதல் பதவிக் காலத்திலேயே இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டாம் கட்டமாக தற்போது அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.18 கோடி வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 85,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி வழங்கப்படும்.

ஏற்கனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. பயனாளிகள் மூன்று பிரிவுகளாகவும், திட்டம் நான்கு பிரிவுகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பயனாளிகள் பிரிவுகள்:

1) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் (EWS)

2) ஆண்டு வருமானம் ரூ.3-6 லட்சம் உள்ளவர்கள் (LIG)

3) ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ளவர்கள் (MIG)

திட்டப் பிரிவுகள்:

1) PMAY2.0 - பயனாளி அடிப்படையிலான கட்டுமானம் (BLC)

2) கூட்டுறவு மலிவு விலை வீடுகள் (AHP)

3) மலிவு வாடகை வீடுகள் (ARH)

4) வட்டி மானியத் திட்டம் (ISS)

BLC மாதிரியில் EWS பிரிவினர் தங்கள் நிலத்தில் வீடு கட்ட உதவி பெறலாம். AHP மாதிரியில் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும். EWS பிரிவினருக்கு நிதி உதவி வழங்கப்படும்.

PMAY-U 2.0 Eligibility

வட்டி மானியத் திட்டத்தின் (ISS) கீழ் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வீடுகளுக்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கப்படும். மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்தியாவில் இந்த 3 பிசினஸுக்கு அதிக தேவை உள்ளது; ஒருநாளும் நஷ்டமே ஏற்படாது!நம்மில் பலருக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண...
21/12/2024

இந்தியாவில் இந்த 3 பிசினஸுக்கு அதிக தேவை உள்ளது; ஒருநாளும் நஷ்டமே ஏற்படாது!

நம்மில் பலருக்கு சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளைப் பெற்றாலும் அதில் திருப்தி அடைவதில்லை. தனக்கென ஒரு அடையாளம் இருக்க வேண்டும், அதற்காக சிறியதாக இருந்தாலும் தனக்கென ஒரு தொழில் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் தொடங்குவதற்கு சிறு வணிகங்களைத் தேடும் நபர்களுக்கு மூன்று சிறந்த விருப்பங்கள் உள்ளன. முதலில், ஜெராக்ஸ் கடை வைப்பது. இப்போதெல்லாம் ஜெராக்ஸ் கடைக்கு நல்ல தேவை இருக்கிறது. இருப்பினும், ஒரு கடையைத் தொடங்குவதை விட நாம் எங்கு தொடங்குகிறோம் என்பது முக்கியம்.

இவற்றை பெரும்பாலும் கலை கல்லூரிகள் அல்லது பொறியியல் கல்லூரிகளுக்கு அருகில் அமைப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். திட்டப்பணிகள் முதல் தினசரி தேவைகள், பொருட்கள், குறிப்புகள் வரை, மாணவர்கள் தொடர்ந்து நிறைய நகல்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு கடை அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது.

இப்போது, ​​ஒரு நல்ல வியாபாரத்தைத் தேடுபவர்களுக்கு இரண்டாவது விருப்பம் முட்டைக் கடை. கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பலர் தங்கள் தினசரி மெனுவில் வலுவூட்டப்பட்ட மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கு இடம் தருகிறார்கள். இந்த வரிசையில் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவு முட்டை. மக்கள் அதிகம் வசிக்கும் காலனிகளுக்கு அருகில் இவற்றை அமைப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

தேநீர் கடைகளும் மிகவும் பிரபலமான வணிகங்களில் ஒன்றாகும். கார்ப்பரேட் அலுவலகங்கள், அலுவலகங்கள் அதிகம் உள்ள பகுதிகளில், டீ பங்க் சிகரெட் விற்கும் சிறிய கடையில் கூட மாதம் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். சென்னைபோன்ற பெருநகரங்களில் இவற்றுக்கு தேவை அதிகம். நெரிசல் மிகுந்த கார்ப்பரேட் ஏரியாக்களில் ஒரு சிறிய இடத்துக்குக் கூட மாதம் ஆயிரமும், சில சமயங்களில் லட்சமும் கொடுத்து கடை உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர்.

பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் சுவையான தேநீர் வழங்கும் கடைகளுக்கு அதிக தேவையும் தேவையும் உள்ளது. எனவே, சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொழில்களை நல்ல வருமானம் ஈட்டுவதற்கான வழிகளாகக் கருதலாம்.

UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பிட்டீங்களா? பணத்தை திரும்பப் பெற இதை செய்யுங்க!UPI பரிவர்த்தனையின் போது தவறுதலாக வ...
21/12/2024

UPI மூலம் தவறான கணக்கிற்கு பணம் அனுப்பிட்டீங்களா? பணத்தை திரும்பப் பெற இதை செய்யுங்க!

UPI பரிவர்த்தனையின் போது தவறுதலாக வேறொருவருக்கு பணம் அனுப்பிவிட்டால், என்ன செய்ய வேண்டும்? 48 மணி நேரத்திற்குள் பணம் திரும்பப் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நேரடி பண பரிவர்த்தனை முறையே குறைந்து விட்டது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய மால்கள் வரை யுபிஐ முறையிலே பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். அதே போல் மற்றவர்களுக்கு பணம் செலுத்தும் போது யுபிஐ முறையில் தான் பணம் செலுத்துகிறோம். இந்த முறை பணப் பரிமாற்றத்தை மிகவும் எளிதாக மாற்றி உள்ளது.

எனினும் மொபைலில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யும் போது, ​​தவறுதலாக மொபைல் எண்ணை பதிவிட்டால், பணம் வேறொருவரின் கணக்கிற்குச் செல்லும். இப்படி தவறுதலாக வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பி விட்டால் என்ன செய்வது? UPI அல்லது பிற பேமெண்ட் ஆப்ஸிலிருந்து பணம் அனுப்பும் போது, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை அனுப்பிவிடால், அதனை எளிதில் திரும்ப பெற முடியும்.

இதற்கு, நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்கள் போனில் இருந்து அழைப்பு செய்தால் போதும். உங்கள் பணத்தை வெறும் 48 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்?

கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பேமெண்ட் வேகமாக அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், தவறான பரிவர்த்தனைகள் குறித்த புகார்களும் தொடர்ந்து வருகின்றன. பயனர்களின் இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி தொடர்ந்து பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.

எங்கே, எப்படி புகார் செய்வது?

UPI ஆப் மற்றும் நெட் பேங்கிங் மூலம் தவறான கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால், முதலில் 18001201740 என்ற இலவச எண்ணில் புகார் செய்யுங்கள்.
இதற்குப் பிறகு, பணம் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கிற்குச் சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து அதைப் பற்றிய தகவலைக் கொடுக்கவும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மற்றொரு கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால், புகாருக்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்ப அனுப்புவது வங்கியின் பொறுப்பாகும்.
இது தவிர, வங்கியின் சேவை வாடிக்கையாளர் பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் புகாரைப் பதிவு செய்யலாம்.
வங்கியில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால் அல்லது வங்கி உதவி செய்ய மறுத்தால், அது குறித்து bankingombudsman.rbi.org.in இல் புகார் செய்யுங்கள்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தவறான பரிவர்த்தனைக்குப் பிறகு தொலைபேசியில் பெறப்பட்ட செய்தியை நீக்க வேண்டாம். ஏனெனில், இந்த எஸ்எம்எஸ், புகாரின் போது தேவைப்படும் பிபிபிஎல் எண்ணைக் கொண்டுள்ளது. நீங்கள் தவறான பரிவர்த்தனை செய்தால், 3 நாட்களுக்குள் அதைப் பற்றி புகார் செய்யுங்கள்.

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா!துல்கர் சல்மானுடன் எஸ். ஜே. சூர்யா நடிக்கும் படத்தின் அப்டேட்...நடிகர் த...
20/12/2024

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா!

துல்கர் சல்மானுடன் எஸ். ஜே. சூர்யா நடிக்கும் படத்தின் அப்டேட்...

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ். ஜே. சூர்யா தன் தனித்துவமான நடிப்பால் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளார். கதாநாயகனுக்கு இணையான காட்சிகள் உள்ள திரைப்படங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐகே, வீர தீர சூரன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மானும் நாயகியாக பிரியங்கா மோகனும் நடிக்கின்றனர். ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

ஏற்கனவே, ஃபஹத் ஃபாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ். ஜே. சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜோதியை மறக்க முடியாது, இருப்பினும் ஒரு சிலர் மறந்திருப்பர்.1978 முதல் சினிமாக்களில் தோன்றி தென்னக மொழிகளில் நடித்த...
19/12/2024

நடிகை ஜோதியை மறக்க முடியாது, இருப்பினும் ஒரு சிலர் மறந்திருப்பர்.

1978 முதல் சினிமாக்களில் தோன்றி தென்னக மொழிகளில் நடித்தவர் ஜோதி. டி.ராஜேந்தர் இயக்கிய ரயில் பயணங்களில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமும் ஆனார்.

அதன் பின் கன்னித்தீவு, புதுக்கவிதை, சட்டம் சிரிக்கிறது என பல படங்களில் நடித்தார், நடிக்க வந்த காலத்திலேயே ரஜினியுடன் புதுக்கவிதை படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் பாலச்சந்தரின் தயாரிப்பு, எஸ்.பி முத்துராமனின் இயக்கம் என ஆரம்ப காலத்திலேயே பெரிய நடிகையாக பிரபலமானார்.

இருப்பினும் அதிகம் தமிழ் படங்களில் நடிக்கவில்லை, சில குறிப்பிட்ட படங்களிலேயே நடித்துள்ளார்.

2000ங்களுக்கு பிறகு அஜீத் நடித்த ராஜா, பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா , உள்ளம் கொள்ளை போகுதே, அன்பு உள்ளிட்ட 2 கே கால படங்களிலும் அம்மா டைப் வேடங்களில் நடித்து கலக்கினார்.

விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வந்த இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2007ல் காலமானார்.

74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!74 வயதிலும் தன்னுடைய உடலையும், ம...
19/12/2024

74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ரஜினிகாந்த்; அவர் தவிர்க்கும் இந்த உணவுகள் தான் காரணமாம்!

74 வயதிலும் தன்னுடைய உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள ரஜினிகாந்த் என்னென்ன செய்கிறார். அவரின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ரஜினிகாந்த் என்றவுடன், பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைல் தான். உலக அளவில் இவரின் தனித்துவமான ஸ்டைலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தன்னுடைய 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. மேலும் அமீர் கானுடன் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுத்திகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா, சௌபின் ஷஹீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், சுதீப் கிஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தை லோகி இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தான், டிசம்பர் 12-ஆம் தேதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்கிட்டு' என்கிற பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டது.

வழக்கம் போல் தன்னுடைய மேஜிக்கல் இசையால் ரசிகர்களை பரவசம் செய்திருந்தார் அனிருத். அதே போல் தலைவரும் 300 நடன கலைஞர்கள் முன் கெத்தாக ஆடிய கர்சீப் டான்ஸ் செம்ம வைப்பாக இருந்தது.

'கூலி' படத்தில் ரஜினிகாந்தின் டான்ஸை பார்த்த பல ரசிகர்கள், இவருக்கு 74 வயது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என ஆச்சர்யப்பட்டு கமெண்ட் போட்டிருந்தனர். சினிமாவில் அறிமுகமாகும் பொது எப்படி ஒரு துடிப்பான நடிப்பை ரஜினியிடம் பார்க்க முடிந்ததோ... அதே நடிப்பை 45 வருடங்கள் கடந்த பின்னரும் மெயின்டெயின் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இவர் இந்த வயதிலும், சுறுசுறுப்பாகவும்... உடலளவிலும் மனதளவிலும் - உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க காரணம், அவரின் வாழ்க்கை முறை தான். ஒரு காலத்தில் மதுக்குவுக்கு அடிமையாகி பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் பிடித்த இவர், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அதன் பக்கமே தலை வைப்பது இல்லை. முடிந்தவரை சினிமாவில் கூட இது போன்ற காட்சிகளை தவிர்த்து விடுகிறார்.

மேலும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, தினமும் அரைமணிநேரமாவது எளிமையான யோகா செய்யும் ரஜினிகாந்த், அரை மணிநேரம் நடை பயிற்சி செய்கிறார். இவருக்கு தன்னுடைய பண்ணை வீட்டில் செடிகளை பராமரித்து கொண்டு, அவற்றை பார்த்து கொண்டே நடப்பது மிகவும் பிடிக்கும். எனவே தான் ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரும்பாலும் தன்னுடைய பண்ணை வீட்டுக்கு குடும்பத்தினரோடோ அல்லது தனியாக சென்று விடுவார்.

மேலும் தன்னுடைய உணவில், ஃபாஸ்ட் ஃபுட், சீஸ், மயோனைஸ், அசைவ கொழுப்புகள் உணவுகள், வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, செயற்கை இனிப்புகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கிறார். குறிப்பாக சோடியம் நிறைந்த உணவுகளை அவர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக உள்ளது.

தன்னுடைய உணவில், பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்கிறார். சரியான நேரத்தில் தன்னுடைய உணவு மற்றும் உறக்கத்தை பராமரிக்கிறார். மனதை தெளிவாகவே வைத்து கொள்ள தினமும் தியானம் மேற்கொள்ளும் ரஜினிகாந்த், ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெள்ளை நிற உடைகளை மட்டுமே விரும்பி அணிகிறார். இது போன்ற விஷயங்கள் தான் ரஜினிகாந்தை 74- வயதிலும் பலரும் விரும்ப கூடிய ஒரு மனிதராக இவரை மாற்றியுள்ளது

வானத்தைப் போல படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கல? இப்பத்தானே தெரியுது...! நடிகர் விஜயகாந்த் பற்றியும், அவரது திறமை குற...
19/12/2024

வானத்தைப் போல படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கல? இப்பத்தானே தெரியுது...!

நடிகர் விஜயகாந்த் பற்றியும், அவரது திறமை குறித்தும் இயக்குனர் விக்ரமன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

விஜயகாந்த் சாரைப் பார்க்கும்போதெல்லாம் கண் கலங்குது. இந்த நல்ல மனுசர் நம்ம கூட இல்லையேங்கற வருத்தம் நிறைய இருக்கு. நான் இதுவரைக்கும் பண்ணின படங்களிலேயே ஒரு ஹீரோவுக்காக யோசிச்சி கதை பண்ணினேன்னா அது மரியாதை படம்தான்.

அவரு வந்து பயங்கர புத்திசாலி. கடைசி படம் டைரக்ட் பண்ணினாரு. விஜயகாந்த் சாருக்கு எப்படி டைரக்ஷன் தெரியும்? வேற யாரோ டைரக்ட் பண்ணிருப்பாங்க. அவரு சும்மா பேரு போட்டுருக்காருன்னு சொன்னாங்க. நிச்சயமா அப்படி இல்ல. உண்மையிலேயே அவருக்கு டைரக்ஷன் நல்லா தெரியும்.

திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் பல பேரை வாழ வச்சிருக்காரு. பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்திருக்காரு. இன்ஸ்டிட்யூட்ல அவரு வந்த பிறகு தான் பல பேரை டைரக்டர் ஆக்கியிருக்காரு. ஆர்.கே.செல்வமணி, அரவிந்த், ஆபாவணன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அவருக்கு இன்னம் நாம அஞ்சலியே பண்ணலன்னு தான் சொல்லணும். இப்ப திரும்ப ஸ்க்ரீன்ல ஏஐ மூலமா பார்க்கறது அரைகுறையாகத் தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். முழுமையா இல்ல என்கிறார் இயக்குனர் விக்ரமன்.

டிசம்பர் 28ல அவருடைய நினைவு நாள் வருது. அவரைப் பற்றிய உங்க அபிப்ராயம் என்னன்னு கேட்கும்போது விக்ரமன் இப்படி சொல்கிறார். அவர் ஒரு எளிமையான மனிதர். நல்ல நடிகர். அவரோட திறமையில ஒரு சின்ன பகுதியை மட்டும்தான் நான் வெளிப்படுத்திருக்கேன். அதைத்தாண்டி 100 சதவீதம் திறமையுள்ள நடிகர் அவர்.

நான் வானத்தைப் போல படத்துக்கே அவருக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். அது சில அரசியல் காரணங்களுக்காக கிடைக்கல. அவரை நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போதே தெரியும். நூறாவது நாள்ல ஒர்க் பண்ணிருக்கேன். அதுல அவரு நடிச்சிருக்காரு. அதுல பெரிய கனெக்ஷன் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2009ல் விக்ரமன் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் மரியாதை. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் விஜய் ஆண்டனி. விஜயகாந்துடன் இணைந்து மீரா ஜாஸ்மின், மீனா, சம்பத்ராஜ், அம்பிகா, ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

2000ல் விக்ரமன் இயக்கிய படம் வானத்தைப் போல. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் வெகு அருமை. விஜயகாந்துடன் இணைந்து மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் - தம்பி இடையே உள்ள பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை விக்ரம் இயக்கி இருந்தார். பல செண்டிமெண்ட் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் விஜயகாந்த் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். அவரின் நடிப்பை கலைஞர் கருணாநிதியே பாராட்டியும் இருந்தார். ஆனால், சில அரசியில் காரணங்கால் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என விக்ரம் பேசி இருக்கிறார்.

வீழ்ச்சியிலிருந்து எழுந்த நட்சத்திரம்: அர்விந்த்சாமியின் மறுஜென்மம்!இன்றும் நம்மூரில் வீட்டில் பெண்ணுக்கு வரன் பார்க்கும...
18/12/2024

வீழ்ச்சியிலிருந்து எழுந்த நட்சத்திரம்: அர்விந்த்சாமியின் மறுஜென்மம்!

இன்றும் நம்மூரில் வீட்டில் பெண்ணுக்கு வரன் பார்க்கும் படலம் நடந்தால் மாப்பிள்ளை அர்விந்த்சாமி மாதிரி வேண்டும் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு ரசிகைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகர் அர்விந்த்சாமி. மணிரத்னம்…

இன்றும் நம்மூரில் வீட்டில் பெண்ணுக்கு வரன் பார்க்கும் படலம் நடந்தால் மாப்பிள்ளை அர்விந்த்சாமி மாதிரி வேண்டும் என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு ரசிகைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகர் அர்விந்த்சாமி. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தனது அழகால் ஆண்களையே மயக்கினார். பெண்கள் இவர் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. தொடர்ந்து வந்த ரோஜா திரைப்படம் அர்விந்த்சாமியை உச்சத்தில் நிறுத்தியது.

அதனைத் தொடர்ந்து மறுபடியும் படத்தில் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்.. என்று இளசுகளை அலைய வைத்தவர் மீண்டும் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் இவரை இந்தியாவின் டாப் ஹீரோவாக்கியது. உயிரே.. உயிரே பாடலில் இவர் காட்டும் முக பாவனைகள் நிஜத்தில் காதல் வலியையே கொடுத்தது எனலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ஈடுபாடு கொண்ட அர்விந்த் சாமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த போதிலும் ரோஜா, பம்பாய் அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் என் சுவாசக் காற்றே படம் ஓரளவு வெற்றி பெற, அதன்பின் அலைபாயுதே, மின்சாரக் கனவு ஆகிய படங்களில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.

இந்நிலையில் அர்விந்த்சாமி பிஸினெஸ் பக்கம் செல்ல படங்களில் நடிப்பதைக் குறைத்தார். 2005-ல் சாசனம் படத்தில் அவர் நடித்த போது அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. அந்த தருணத்தில் அர்விந்த் சாமி வாழ்க்கையில் வீசிய புயல் அவரை நிலைகுலைய வைத்தது. விபத்து ஒன்றில் சிக்கிய அர்விந்த்சாமி அறுவை சிகிச்சையால் வீட்டிலேயே சில வருடங்கள் முடங்கினார். மேலும் அவர் தலைமுடி அனைத்தும் கொட்டி விட்டது. உடல் பருமனும் அதிகமாக எந்த அளவிற்கு ரசிகைகளை ஈர்த்தாரோ அப்படியே எதிராக ஆளே மாறிப் போனார்.

மீண்டும் 2012-ல் மணிரத்னத்திடமிருந்து அழைப்பு. அப்போது கடல் படம் உருவாகிக் கொண்டிருந்தது. மணிரத்னம் அர்விந்த்சாமியை நடிக்க வைப்பதென தீர்மானமாக இருந்தார். அர்விந்த்சாமியிடம் கேட்கையில் 2 மாத அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்குள் மீண்டு வந்தால் நடிக்கிறேன் என்று கூற, மணிரத்னமும் ஓகே சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அர்விந்த்சாமி தன்னம்பிக்கையுடன் ஒரே மாதத்தில் ஆளே மாறினார்.

கடுமையான உடற்பயிற்சி, உட நல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஒரே மாதத்தில் பழைய அர்விந்த்சாமியாக மணிரத்னம் முன் நிற்க, கடல் படம் உருவானது. இருப்பினும் கடல் படம் வெற்றியடைய வில்லை என்றாலும் அர்விந்த்சாமிக்கு 8 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆனது. அதனைத் தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக வில்லனாக மிரட்ட படம் சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார் போகன், தலைவி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்தார். கடைசியாக நடித்த மெய்யழகன் படம் பழைய அர்விந்த்சாமியை அவரது ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

Good morning
17/12/2024

Good morning

வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க...வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் ...
16/12/2024

வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க...

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 2004ல் வெளியான சென்னை 600028ல் இருந்து கோட் படம் வரை அவர் தான்.

மங்காத்தா

அந்த வகையில் 2011ல் தல அஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய படம் மங்காத்தா. யுவன் தான் இசை. இது மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தில் வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், என் நண்பனே என்னை ஏய்த்தாய் ஆகிய பாடல்களை எழுதியவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல. வாலிபக்கவிஞர் வாலி தான்.

அதிலும் என் நண்பனே என்னை ஏய்த்தாய் என்ற பாடலுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அந்தப் பாடல் உருவான விதம் குறித்து யுவன் இப்படி சொல்கிறார்.

இந்தப் பாடலைப் பொருத்தவரை இதன் மெட்டு மிகவும் கஷ்டமான முறையில் அமைக்கப்பட்டது. வேகமாக டியூன் நகர்ந்து சென்றது. இதற்கு பாடல் வரிகளை எழுத வேண்டும். வாலி எப்படி எழுதப் போகிறார்னு யுவன் நினைத்தார்.

ஆனாலும் டியூனை அவருக்காக மாற்றவில்லை. தயாராக இருந்தது. இதைக் கேட்டதும் வாலி எனக்கு இதெல்லாம் ஜூஜூபி என்று சொல்லியபடி வரிகளைப் போட்டார். ‘முதல் வரி முதல் முழுவதும் பிழை. விழிகளின் வழி விழுந்தது மழை. எல்லாம் உன்னால் தான்…’

அசால்டாக எழுதினார்

‘இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்… கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்’ என்று அவர் வேகமாகப் போட்ட டியூனுக்கும் வரிகளை அசால்டாக எழுதினார். இதைப் பார்த்ததும் வெங்கட்பிரபு, யுவன் சங்கர்ராஜா இருவருமே வாயடைத்துப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.

விளையாடு மங்காத்தா

2011ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் மங்காத்தா. அஜீத் உடன் அர்ஜூன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். விளையாடு மங்காத்தா, நீ நான், வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், நண்பனே, பல்லே லக்கா, தீம் இசை, விளையாடு மங்காத்தா ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

வாலிபக்கவிஞர்

வாலியைப் பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே தற்போதைய இளம் நடிகர்கள் வரை பாடல் எழுதி விட்டார். இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பாடலை விட இசை தான் முக்கியம். அதனால் பாடல் ஒரே இரைச்சலாக இருக்கும். பிக்கப் ஆகாது. ஆனால் தமிழ்சினிமாவைப் பொருத்த வரை இசையை விட பாடல் வரிகள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதனால் இன்றைய 2 கே கிட்ஸ்களுக்கும் பிடித்த வகையில் பாடலை எழுதி அசத்தியுள்ளார் வாலிபக்கவிஞர் வாலி.

அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமாஇசையமைப்பா...
11/12/2024

அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடலை சுட்டி காட்டி, இதே ராகத்தில் அஜித்தின் 'ஆசை' படத்தில் ரொமான்டிக் பாடல் இடம்பெற வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்க, தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார் தேவா. அது எந்த பாடல் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி கதை, திரைக்கதை, நடிகர்கள், முக்கியமோ... அதேபோல் இசை என்பதும் ஒரு திரைப்படத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பழங்காலத்தில் இருந்தே இசையை மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு காட்சியை நாம் பார்க்கும் அந்த சூழ்நிலையை ரசிகர்கள் எளிதில் உணரும் விதத்தில் அமைகிறது.

அதேபோல் திரைப்படங்களிலும் இடம்பெறும் பாடல்கள், அதனைக் கேட்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. எனவே தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், மணிரத்தினம், போன்ற இயக்குனர்கள் தாங்கள் இயக்கம் திரைப்படங்களில், கண்டிப்பாக நான்கு பாடல்களாவது இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சமீப காலமாக, சில திரைப்படங்கள் பாடல்களே இல்லாமல் வெளியாகி இருந்தாலும்... அந்த படங்களை பிஜிஎம் இசையால் தூக்கி நிறுத்துகிறார்கள் இசையமைப்பாளர்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர் என்பவர் மிகவும் முக்கிய நபராக பார்க்கப்படுவதோடு, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அவரின் இசையை கொண்டாடும் விதத்தில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடத்தி அவர்களை சிறப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்கர் நாயகன், ஏ ஆர் ரகுமான் போட்ட பாடலின் ராகத்தை அப்படியே காப்பி அடித்து இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் தேவா கொடுத்துள்ளார். இது பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதாவது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்பது அதை பற்றி அலசி ஆராய்ந்த இசையமைப்பாளர்களுக்கு தெரியும். அதே சமயம் ஒரு ராகத்தை எந்த சூழலுக்கும் பொருந்தும் வகையில் பாடல்களை உருவாக்கவும் முடியும். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் 'டூயட்' படத்தில் உச்சாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில், எனர்ஜிடிக் பாடலாக உருவாக்கிய 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடலை துளியும் அந்த பாடலின் சாயல் இன்றி... அஜித்துக்கு ரொமாண்டிக் பாடலை உருவாக்கி கொடுத்து ஹிட் அடிக்கவைத்தார் இசையமைப்பாளர் தேவா.

அதாவது ஏ.ஆர்.ரகுமானின் 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடல் இயக்குனர் வசந்துக்கு மிகவும் பிடித்து போன நிலையில்.. இதே 'ஆனந்த பைரவி' ராகத்தில், ஆசை படத்தில் அஜித்தின் ரொமான்டிக் பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். இதை தொடர்ந்து தேவா 'கொஞ்சநாள் பொறு தலைவா... வஞ்சிக்கொடி இங்கே வருவா' என்கிற அழகிய ரொமான்டிக் பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, ஏ.ஆர்.ரகுமானின் மனதை கவர்ந்த பாடல்களில் ஒன்றாகவும் மாறியதாம். இதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்திலும் இதே ராகத்தில் இயக்குனர் ஒரு பாடல் வேண்டும் என தேவாவிடம் கேட்டபோது.. அவர் 'செங்குருவி செங்குருவி காடமடை செங்குருவி' என்கிற பாடலை இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல் ஒரு பாடலையோ... அல்லது இசையையோ குறிப்பிட்டு இயக்குனர்கள் கூறி, தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கும் பழக்கம் காலம் காலமாக இருந்துள்ளது. எம்.எஸ்.வி, இசையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசை ஜாம்பவான்களிடம் கூட, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வெளியான பாடலின் ராகத்தை சுட்டி காட்டி, இதே ராகத்தில் ஆனால் அந்த பாடலின் சாயல் இல்லாமல் தங்களுடைய படத்திற்கு ஒரு பாடல் அமைத்து தர வேண்டும் என கூறுவது வழக்கமான ஒன்று தான். யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள், இதனை ஓபனாகவே கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவங்க தான் நீலாம்பரி இன்ஸ்பிரேஷன்.. படையப்பா படம் பாத்துட்டு ஜெயலலிதா சொன்ன வார்த்தை.. ரஜினி உடைத்த சீக்ரெட்..இந்திய சின...
11/12/2024

அவங்க தான் நீலாம்பரி இன்ஸ்பிரேஷன்.. படையப்பா படம் பாத்துட்டு ஜெயலலிதா சொன்ன வார்த்தை.. ரஜினி உடைத்த சீக்ரெட்..

இந்திய சினிமாவையே தனது ஸ்டைல் மற்றும் மாஸ் வசனங்கள் மூலம் ஐம்பது ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு நடிகர் சாதாரணமாக நடிக்கும் காட்சிகளை கூட தான் நடிக்கும் போது ஒரு படி மேலே சென்று தனது ஸ்டைல் மற்றும் மாஸான உடல் மொழியுடன் அதனை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்லும் திறன் படைத்த ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் மிக கம்பீரமாகவும் அமர்ந்து வருகிறார்.

லுடன் தனது திரை பயணத்தை ஆரம்பித்திருந்த ரஜினிகாந்த், ஒவ்வொரு திரைப்படத்திலும் மாசான வசனங்கள், ஸ்டைலான நடை, உடை, தலை முடியில் ஸ்டைல் காண்பிப்பது என ஒவ்வொன்றிலும் பலரையும் இன்ஸ்பயர் செய்தும் வருகிறார். 70 வயதை கடந்தாலும் இன்னும் ரஜினி தனது திரைப்படங்கள் மூலம் அதிக வசூலை அள்ளி சாதனை புரிந்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும், இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

ஹே சூப்பர் ஸ்டாருடா..

2.0 திரைப்படத்திற்கு பிறகு வெளியான அவரது சில திரைப்படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் ஜெயிலர் படத்தின் வசூல் அனைத்திற்கும் ஈடு கட்டும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து வேட்டையன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்னும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளும் உலக அளவில் கொண்டாடப்பட உள்ளது.

இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் எங்கே பார்த்தாலும் ரஜினியின் திரைப்படங்கள் தொடர்பாக நிறைய தகவல்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் படையப்பா திரைப்படம் படத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்த்த சமயத்தில் என்ன தெரிவித்தார் என்பது பற்றி அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறிய கருத்து தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது.

நீலாம்பரி இன்ஸபிரேஷன் ஜெயலலிதா..

“வில்லியாக வரும் நீலாம்பரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்ஸ்பிரேஷன் தான். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, படம் வெளியான சமயத்தில் ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து பிரிண்ட் வாங்கி ஜெயலலிதா அவர்கள் தனது வீட்டிலேயே திரையிட்டு பார்க்கிறார். நீலாம்பரியே அவரது இன்ஸபிரேஷன் என்பதால் அவர் படம் பார்க்கிறார் என தெரிந்ததும் எனக்கும் பயமாக இருந்தது.

படம் பார்த்து விட்டு மறுநாள் வரையிலும் எதுவும் சொல்லவில்லை. இதன் பின்னர் ரஜினிகாந்தை சந்தித்த போது அவரிடம் முதல்வர் ஜெயலலிதா என்ன சொன்னார் என் கேட்டேன். அவருக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும், அதிலும் நீலாம்பரி கதாபாத்திரம் அட்டகாசமாக இருந்ததாகவும் பாராட்டியதாக ரஜினி கூறினார். தன்னை போல ஒரு பவர் ஃபுல்லான பெண்ணை திரையில் பார்த்ததும் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்து போய் விட்டது. அதை ஒரு கதையாக தானே பார்க்க வேண்டும்” என கே. எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowsalya Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share