தாய் இதழ்

தாய் இதழ் thai magazine is the Official page for thaaii.com which is a tamil language e-magazine providing in

சென்னை புத்தகக் காட்சி: சில அற்புத கணங்கள்!https://thaaii.com/2025/01/02/chennai-book-fair-2025/ஆங்கிலப் புத்தாண்டு தினத...
02/01/2025

சென்னை புத்தகக் காட்சி: சில அற்புத கணங்கள்!
https://thaaii.com/2025/01/02/chennai-book-fair-2025/

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்ற போது பலதரப்பட்ட அரங்குகள், பலதரப்பட்ட சந்திப்புகள். உற்சாகம் மிகுந்தப் பேச்சுக்கள்.

பலதரப்பட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை ஒருசேர இம்மாதிரியான நிகழ்வில் சந்திக்க முடிவது, புத்தகக் காட்சிக்கான பலம்.

நேற்று புத்தகக் காட்சிக்குப் போனபோதும் உயிர்மெய் அரங்கில், நண்பர் மனுஷ்ய புத்திரனை பார்த்தபோது என்னுடைய 'சொல்வது நிஜம்' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதை தன்னுடைய முகநூலிலும் பகிர்ந்திருக்கிறார்.

நண்பர் இளம்பரிதியை அவருடைய பரிதி பதிப்பக அரங்கில் சந்தித்தபோது, அங்கும் என்னுடைய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பல நூல்களுக்கு சிறப்புத் தள்ளுபடி விலையை அறிவித்திருந்தார்.

நேற்று மாலை என்னுடைய இன்னொரு நூலான 'தமிழர்கள் எதில் குறைந்து போய்விட்டார்கள்' என்ற நூலை தமிழர்த் தேசிய இயக்கத் தலைவரான ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் நேரடியாக வந்து பதிப்பாளரான இளம்பரிதி இடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக டிஸ்கவரி புக் பேலஸ்-க்கு போனபோது அங்கும் பரவலாக வாசகர்கள் கூட்டம் இருந்தது. அங்கும் என்னுடைய மூன்று புத்தகங்கள் குறிப்பாக 'ஊடகம் யாருக்கானது' என்ற புத்தகம் உட்பட மூன்று புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நண்பரும் எழுத்தாளருமான இந்திரனை அவருடைய அரங்கில் பார்க்க முடிந்தது. எப்போதும் போல உற்சாகம் பொங்கிய குரலோடு உரையாடிக் கொண்டிருந்தார் இந்திரன். இதேபோல் நா.வே. அருள் உட்பட பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.

முகநூல் வழியாக அறிமுகமாகிய பல நண்பர்களையும் புத்தகக் காட்சியில் பார்க்க முடிந்தது.

புத்தக விற்பனையைப் பொறுத்தவரை நேற்றுதான் விற்பனை சற்று கூடியிருப்பதாக பதிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இருந்தாலும் பரவலாக இளைஞர்கள் அதிகமாக பார்வையாளராக அங்கு வந்திருப்பதை பார்ப்பது ஒரு மகிழ்வான தருணமாக இருக்கிறது.

- மணா

#சென்னை_புத்தகக்_காட்சி #எழுத்தாளர்கள் #பதிப்பாளர்கள் #மனுஷ்ய_புத்திரன் #சொல்வது_நிஜம் #பரிதி_பதிப்பகம் #தமிழர்கள்_எதில்_குறைந்து_போய்விட்டார்கள் #டிஸ்கவரி_பேலஸ் #வாசகர்கள் #எழுத்தாளர்_இந்திரன் ெடுமாறன் #ஊடகம்_யாருக்கானது

‘வணங்கான்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!https://cinirocket.com/vanangaan-making-video-released/இயக்குநர் பாலா இய...
02/01/2025

‘வணங்கான்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
https://cinirocket.com/vanangaan-making-video-released/

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடித்து பின்னர் விலகினார். அதற்கடுத்து நாயகனாக அருண் விஜய் நடித்தார்.

இந்தப் படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை சாம் சி.எஸ். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘வணங்கான்’ படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘வணங்கான்’ படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் நிலையில் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://youtu.be/Bveao44q0w8

#இயக்குநர்_பாலா #அருண்_விஜய் #வணங்கான் #சூர்யா #ரோஷிணி_பிரகாஷ் #சமுத்திரக்கனி #மிஷ்கின்

சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழக் கற்றுத்தருவதே கல்வி!https://thaaii.com/2025/01/02/periyar-telling-about-education/ப...
02/01/2025

சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழக் கற்றுத்தருவதே கல்வி!
https://thaaii.com/2025/01/02/periyar-telling-about-education/

படித்ததில் ரசித்தது:

மற்றவர்களின் ஆதிக்கத்திலோ
ஒவ்வொரு காரியத்துக்கும்
மற்றவர்களை எதிர்பார்த்தோ
அல்லது, தனக்கு மற்றவர்கள்
வழி காட்டக்கூடிய நிலையிலோ இல்லாமல்
சுதந்திரத்தோடும் சுய அறிவோடும்
வாழத் தகுதியுடையவர்களாக மாற்றுவதே
கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!

- தந்தை பெரியார்

#கல்வி #தந்தை_பெரியார் #சுதந்திரம் #சுய_அறிவு

அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!https://thaaii.com/2025/01/02/ramana-maharishi-thoughts-2/தாய் சிலேட்:அன்புள்ள மனிதன்...
02/01/2025

அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!
https://thaaii.com/2025/01/02/ramana-maharishi-thoughts-2/

தாய் சிலேட்:

அன்புள்ள மனிதன்தான்
எதிலும் வெற்றி பெறுகிறான்!

- ரமண மகரிஷி

ிஷி #ரமணர் #மகரிஷி

ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம்!https://thaaii.com/2025/01/02/buddha-facts-6/இன்றைய நச் :ஒவ்வொரு மாற்றத்திற்கும்ஒரு க...
02/01/2025

ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம்!
https://thaaii.com/2025/01/02/buddha-facts-6/

இன்றைய நச் :

ஒவ்வொரு மாற்றத்திற்கும்
ஒரு காரணம் உண்டு;
காரணமின்றி விளைவில்லை;
இவை இரண்டும் இணைந்து செல்கின்றன.
நிரந்தரமானது என்று
எதையும் ஏற்க முடியாது!

- கௌதம புத்தர்

#மாற்றம் #காரணம் #கௌதம_புத்தர்

2025.அனைத்து நட்புச் சொந்தங்களுக்கும் மனநிறைவான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் தாய் குழுமம்.https://thaaii...
31/12/2024

2025.

அனைத்து நட்புச் சொந்தங்களுக்கும் மனநிறைவான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புடன் தாய் குழுமம்.
https://thaaii.com/

‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!https://thaaii.com/2024/12/31/barroz-movie-review/மோகன்லால். இந்தியா...
31/12/2024

‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!
https://thaaii.com/2024/12/31/barroz-movie-review/

மோகன்லால். இந்தியாவின் மிகச்சிறந்த நடிப்பாளுமைகளில் ஒருவர். அதனை அங்குலம் அங்குலமாக வேறுபடுத்தி, உயர்த்திக் காட்டுவதில் இயக்குநர்களிடையே ஒரு போட்டியே நடந்து வருகிறது கடந்த 44 ஆண்டுகளாக.

அப்படிப்பட்ட ஒரு நடிகர், இயக்குநர் நாற்காலியில் அமர்வது எப்பேர்ப்பட்ட விஷயம். அதனைச் சாதித்திருக்கிறது ‘பரோஸ்’.

இது ஒரு 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். ‘அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்?

ஒரு குட்டிக் கதை!

கோவாவில் போர்ச்சுக்கீசிய மன்னன் கிரிஸ்டோவோடா காமாவின் அடிமையாக இருந்தவர் பரோஸ்.

இளவரசி இஸபெல்லாவின் உற்ற தோழனாக இருந்தவர்.

ஒருநாள் எதிரி நாட்டுப் படை சுற்றி வளைக்கும்போது, தான் திரட்டிய செல்வம் இருக்கும் கஜானா அறையை நம்பகமான ஒருவரின் கையில் கொடுக்கத் திட்டமிடுகிறார்.

அதற்காக, பரோஸை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், அந்தக் காவல் பணிக்காக அவர் தனது உயிரை இழந்து பூதமாக நேர்கிறது.

ஆண்டுகள் கடக்கின்றன. நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அதே ராஜ வம்சத்து வாரிசான இசாவைச் சந்திக்க நேர்கிறது. அவரால் மட்டுமே பரோஸின் அடிமைச் சங்கிலியை அகற்ற முடியும். அதற்குத் தன் வசமிருக்கும் பொக்கிஷங்களை அவர் இசாவிடம் கொடுக்க வேண்டும்.

பரோஸ் அதனைச் செய்தாரா? அதற்கு யாராவது இடையூறாக இருந்தார்களா? பூதமான பரோஸை கண்டு இசா பயப்படவில்லையா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஒரு குட்டிக் கதை. அதனைச் சுற்றிச் சில சம்பவங்கள். நானூறு ஆண்டு காலக் காத்திருத்தல். மன்னர் ஆட்சியையும் அடிமைத்தனத்தையும் சிலாகிப்பதில் இருந்து விலகி சமத்துவத்தை வலியுறுத்தும் தற்கால சமூக அரசியல் நிலைமை. இப்படிப் பலவற்றைப் பேசுகிறது ‘பரோஸ்’.

அதனை 3டி நுட்பத்தில் ரசிகர்கள் பிரமிக்கும் வகையில் சொல்ல, கோவா பின்னணி சேர்க்கப்பட்டிருக்கிறது. சரி, அது நமக்கு நிறைவைத் தருகிறதா?

படம் எப்பூடி..?!

சமீப ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அனிமேஷன், அட்வெஞ்சர், பேண்டஸி வகைமைகளில் நிறைய ‘3டி’ படங்கள் வந்திருக்கின்றன. ‘அவதார்’ போன்று ஒரு சில படங்களே அவற்றில் ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கின்றன.

அந்த வரிசையில் தாராளமாக ‘பரோஸ்’ஸை சேர்க்கலாம். காரணம், இதில் 3டி நுட்பத்திற்கு இயக்குநர் மோகன்லால் தந்திருக்கும் முக்கியத்துவம்.

‘நாம பார்க்குறது 3டி படம் தானா’ என்று கிள்ளிக்கொள்ள அனுமதிக்காத வகையில், ஐந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை நோக்கிப் பாய்கிறது ஏதோ ஒரு பிரமிப்பு.

அதனைக் கனகச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறது படக்குழு.

அந்தப் பணியில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் முதலிடம் பெறுகிறார். சில காட்சிகளில் ‘டீட்டெய்லிங்’ பிரமிப்பின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தோஷ் ராமன், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் பிரைன்லி கேட்மேன், படத்தொகுப்பாளர் பி.அஜித்குமார், பின்னணி இசை அமைத்த மார்க் கிலியன், பாடல்களுக்கு இசையமைத்தவர்களில் ஒருவரான லிடியன் நாதஸ்வரம் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்திருக்கின்றனர்.

நடிப்பைப் பொறுத்தவரை பரோஸ் ஆக வரும் மோகன்லாலும், இசா/இசபெல்லா ஆக வரும் மாயா ராவ் வெஸ்ட்டும் மனம் கவர்கின்றனர்.

அவர்களைச் சுற்றியே நிறையக் காட்சிகள் பின்னப்பட்டிருக்கின்றன. அதனால் குரு சோமசுந்தரம், துகின் மேனன், கீர்த்தனா குமார் என்று சுமார் ஒன்றரை டஜன் நடிப்புக்கலைஞர்கள் வெறுமனே வந்து போயிருக்கின்றனர். அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

இந்தக் கதை ஜிஜோ புன்னூஸ் இதே பெயரில் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது.

கதையில் முதன்மைப் பாத்திரம் பதின்ம வயது சிறுமியாக இருந்தபோதும், இதில் பரோஸை அரை நிர்வாணமாகக் காட்டுகிற ஷாட் ஒன்று உண்டு. அது போன்ற தேவையில்லாத விஷயங்கள், இதனை முழுமையான குழந்தைகள் படம் என்று சொல்லவிடாமல் தடுக்கின்றன.

உண்மையைச் சொன்னால், இது பெரியோர்களும் பார்த்து ரசிக்கத் தகுந்த ஒரு 3டி படம்.

அதற்காக, நிறையவே திட்டமிட்டு திரையில் அவற்றைச் செயல்படுத்தியிருக்கிறது மோகன்லால் குழு.

’பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!’ என்று கேட்காத குறையாக, அதற்கேற்ற உழைப்பைக் கொட்டியிருக்கிறது.

அந்த உழைப்பின் மகத்துவம் அறிய வேண்டுமானால், ‘பரோஸ்’ பார்க்கலாம். அதற்காக, கொஞ்சம் அதீதமாக பொறுமையைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், 2டியில் ஓடிடியில் வெளியாகிறபோது அந்தப் பிரமிப்பு வடிந்து போயிருக்கும். அதற்காகவாவது ஒருமுறை தியேட்டரில் இதனைப் பார்க்கலாம்..

‘அந்தப் பொறுமை எங்ககிட்ட கிடையாதே’ என்பவர்களுக்கு இப்படம் நிச்சயமாகப் பிடிக்காது. அவர்களைத் தவிர மற்றவர்கள் 3டி நுட்பத்திற்காக இதனைப் பார்க்கலாம்..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

#பரோஸ்_3டி #விமர்சனம் #மோகன்லால் #ஒளிப்பதிவாளர்_சந்தோஷ்சிவன் #சந்தோஷ்_ராமன் #பிரைன்லி_கேட்மேன் #படத்தொகுப்பாளர்_பி_அஜித்குமார் #மார்க்_கிலியன் #குரு_சோமசுந்தரம் #துகின்_மேனன் #கீர்த்தனா_குமார்

பரிதி பதிப்பகத்தில் பத்திரிகையாளர் ‘மணா’வின் நூல்கள் விற்பனையில்!பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ‘மணா’வின் நூல்கள்  பரிதி...
31/12/2024

பரிதி பதிப்பகத்தில் பத்திரிகையாளர் ‘மணா’வின் நூல்கள் விற்பனையில்!

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ‘மணா’வின் நூல்கள் பரிதி பதிப்பகத்தில் விற்பனையில் உள்ளன.

உயிருக்கு நேர், முள்ளிவாய்க்கால், தமிழ் மண்ணின் சாமிகள், மிருதுவாய்ச் சில அஞ்சலிகள், ஊர்மணம், நதிமூலம், கனவின் பாதை, தமிழர்கள் எதில் குறைந்துபோய் விட்டார்கள் உள்ளிட்ட நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சி பரிதி அரங்கில் (எண் -118, 119) கிடைக்கின்றன.

என்னையே எனக்கு உணர்த்தியவர் கே.பி. சார்!நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிhttps://cinirocket.com/actor-rajinikanth-share-abou...
31/12/2024

என்னையே எனக்கு உணர்த்தியவர் கே.பி. சார்!
நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
https://cinirocket.com/actor-rajinikanth-share-about-director-k-balachandar/

திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சிப் பெற்ற பிறகு பழையபடி பெங்களூருக்குச் சென்று, கண்டக்டர் வேலையைப் பார்த்துக்கொண்டே பொழுதுபோக்காக கன்னடப் படங்களில் நடிக்கலாமென்று நினைத்திருந்தேன்.

தமிழ்ப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ஆனால், எதிர்பாராத விதமாக நான் பாலசந்தர் சாரைச் சந்தித்ததும், அவர் மூலமாக 'அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானதும் அனைவருக்கும் தெரியும்.

அந்த 'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான் ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார் அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படியெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

அன்று அவர் வழங்கிய அந்த ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.

அவருக்கு அவரே நண்பர்!

அவரது படப்பிடிப்புகளில் நான் அவரைக் கவனித்த வரையில், அவருக்கு அவரே தான் நண்பர் என்பதை உணர்ந்தேன்.

அவரது, அதாவது மனசாட்சி தான் அவருக்கு மிகச் சிறந்த, நெருங்கிய நண்பன். எந்த விஷயமாக இருந்தாலும் தனது மனச்சாட்சிக்கு ஏற்றதாக இருந்தால் தான் செய்கிறார்.

உதாரணமாக படப்பிடிப்பில் ஒரு 'ஷாட்' எடுக்கத் திட்டமிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அநேகமாக ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே ஷாட்டைத் தீர்மானிப்பார்.

சில சமயங்களில் 'செகண்ட் தாட்'டில் இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே அப்படியே செய்வோம், என்று கூறுவதும் உண்டு. அந்த 'செகண்ட் தாட்' தான் அவரது மனசாட்சி

அவரை என் 'God father' என்றால் அது மிகையாகாது.

தனது படங்களில் மட்டுமல்லாது, மற்றவர்களின் படங்களிலும் நான் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புகிறவர் அவர்.

அதனால் தான் 'ரஜினிகாந்த்'தை வெறும் கமர்ஷியல் வேல்யூவிற்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள். அவரை வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று மற்றவர்களுக்கும் ஆலோசனை கூறுவதுண்டு.

தற்போது எனக்கும் அவருக்குமிடையே ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் இயக்கும் படம் எதிலும் நான் பணியாற்றக் கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படாமலிருந்தது.

அந்த வகையில் எனக்குச் சிறிது வருத்தம் தான். ஏனெனில், என்னால் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள இயலாமற் போய் விட்டதே! என்பதுதான் என் வருத்தத்திற்குக் காரணம்.

சொந்தப் படம் எடுக்கும் அளவுக்கு நான் முன்னேறியிருந்தாலும் தொழில் முறையில் என்றும் நான் அவருக்கு ஓர் வேலைக்காரன்! ஆம்! இந்தப் பெயரில் அவர் படம் ஒன்றிய நான் நடிக்கும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

நன்றி: மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட (1987, மார்ச்) - ‘திரைக் கலைஞர்கள் வரிசை - இயக்குநர் கே பாலசந்தர்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

#திரைப்படக்_கல்லூரி #பெங்களூர் #கன்னடப்படங்கள் #தமிழ்ப்_படம் #அபூர்வ_ராகங்கள் #இயக்குநர்_கே_பாலசந்தர் #நடிகர்_ரஜினிகாந்த்

‘இன்ஸிடென்ட் அட் அவுல் க்ரீக்’: ஒரு ராணுவக் கைதியின் கதை!https://cinirocket.com/article-about-incident-at-owl-creek-movi...
31/12/2024

‘இன்ஸிடென்ட் அட் அவுல் க்ரீக்’: ஒரு ராணுவக் கைதியின் கதை!
https://cinirocket.com/article-about-incident-at-owl-creek-movie/

'இன்ஸிடென்ட் அட் ஔல் க்ரீக்' (INCIDENT AT OWL CREEK)

இந்தப் பிரஞ்சுப் படத்தில் ராணுவக் கைதி ஓருவன் தூக்கிலிடப்படக் காத்திருப்பதும், அவன் மனப் போராட்டங்களும் சொல்லப்படுகின்றன.

தூக்கு மரத்துக்கு அருகில் கை நிறுத்தப்படுகிறான். அவனது கை கட்டப்படுகின்றன. கால்கள் கட்ட படுகின்றன.

கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரி சைகை செய்கிறார். கைதி தூக்கிலிடப்படுகிறான்.

ஆனால், தூக்குக் கயிறு அறுந்து விழுகிறது. கீழே ஓடும் ஆற்றில் அவன் கை, கால் கட்டுகளுடன் விழுகிறான். கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறான் ஆற்றில் நீச்சல் போடுகிறான்.

கரையில் துப்பாக்கி ஏத்தி நிற்கும் சிப்பாய்கள் குறி பார்த்துச் சுடுகிறார்கள். ஆனால், அதிர்ஷ்ட வசமாக ஒரு குண்டு கூட அவன் உடலை துளைக்கவில்லை.

ஆற்றின் போக்கிலேயே நீந்திச் சென்று கரையை அடைந்து விடுகிறான்.

மேலே சூரியன் சிரிக்கிறான். செடி, கொடிகள், தாவரங்கள், பூக்கள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிகின்றன.

எழுந்து நின்று, தலை தெறிக்க ஓடிச் செல்கிறான். ஓட்டத்தின் வேகத்தில் விழுந்து விடுகிறான். மீண்டும் எழுந்து ஓடுகிறான்.

இதோ, கொஞ்சம் நேரத்தில் அவன் வீடு வந்துவிடும்.

கொடூரமான மரண தண்டனையிலிருந்து அவன் தப்பி விட்டான். சரியான நேரத்தில் தூக்குக் கயிறு அறுந்து விழுந்ததால் அவன் தப்பி விட்டான்.

இதோ! வீடு வந்து விட்டது.

அவன் மனைவி அவனை நோக்கிக் கைகளை அகல விரித்துக் கொண்டு ஓடிவருகிறாள். இதோ, கிட்ட வந்து விட்டான். கணவனும், மனைவியும் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.

இதோ தூக்குக் கயிறு இறுகுகிறது கழுத்தை நெரிக்கிறது! அவன் பிணமாகத் தொங்குகிறான்.

ஆம்! சாகுமுன் அவன் கற்பனையில் நடந்ததுதான் மேற்சொன்ன சம்பவங்கள் அத்தனையும். இந்தச் சின்னஞ்சிறு படம் நம்மை உலுக்கி எடுத்துவிடும்?

- எஸ். குரு

-புதிய பார்வை 1994-ம் ஆண்டு மே மாத இதழில் வெளிவந்த கட்டுரை.

#இன்ஸிடென்ட்_அட்_ஔல்_க்ரீக் #பிரஞ்சுப்_படம் #ராணுவக்_கைதி ்டனை

ராஜமவுலி படத்தில் நடிக்க 6 மாதமாக விவாதித்த பிரியங்கா சோப்ரா!https://cinirocket.com/priyanka-chopra-in-ss-rajamouli-film...
31/12/2024

ராஜமவுலி படத்தில் நடிக்க 6 மாதமாக விவாதித்த பிரியங்கா சோப்ரா!
https://cinirocket.com/priyanka-chopra-in-ss-rajamouli-film/

பாகுபலி-1, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர்., ஆகிய படங்கள் மூலம் இந்தியாவைத் தாண்டி பேசப்பட்டவர் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி. இவை மூன்றுமே ‘பான் இந்தியா' படங்கள். இதனைத் தொடர்ந்து அவர் ‘பான் வேர்ல்ட்’ படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் எடுக்கப்பட்டு, பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும். இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார்.

‘SSMB-29' என தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஹீரோவைத் தவிர வேறு எந்த நட்சத்திரமும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என மாதக்கணக்கில் யோசித்து வந்த ராஜமவுலி, இப்போது பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் விவாதித்து வந்துள்ளனர்.

கதை, தனது கேரக்டர், சம்பளம் போன்ற விஷயங்களில் திருப்தி ஏற்பட்டதால், ராஜமவுலிக்கு ஓகே சொல்லியுள்ளார் பிரியங்கா.

முன்னாள் உலக அழகியான அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.

பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்போது கணவர் நிக் ஜோனஸ், மகள் மால்டி ஆகியோருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். ஆப்பிரிக்க காடுகளில் ஷுட்டிங்.

‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தைப் போன்று, உலக அளவிலான மாஸ் ஆக் ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று எஸ்.எஸ். ராஜமவுலி கூறியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

ஆப்பிரிக்க காடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அமெரிக்காவிலும் முக்கியக் காட்சிகள் எடுக்கப்படும்.

2026 ஆம் ஆண்டு இறுதிவரை படப்பிடிப்பு நடக்கிறது. 2027-ம் ஆண்டு படம் திரைக்கு வருகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

#இயக்குநர்_எஸ்எஸ்_ராஜமவுலி #மகேஷ்_பாபு #பிரியங்கா_சோப்ரா #அட்வென்சர்_ #பான்_இந்தியா #ஆப்பிரிக்கா_காடு forest

நல்ல வாசகனாக உருவாவது எப்படி?https://thaaii.com/2024/12/30/how-to-become-a-good-reader/எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்...
31/12/2024

நல்ல வாசகனாக உருவாவது எப்படி?
https://thaaii.com/2024/12/30/how-to-become-a-good-reader/

எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால் நிச்சயமாக இல்லை.

பின்னே?

இந்தப் புத்தகங்களை வாசிக்கும் வாசகர்கள் பெருக வேண்டும். அந்த வாசகர்கள் தாம் எடுத்துப் படித்ததை எல்லாம் திரும்பத் திரும்ப மனதில் எண்ணி இலயித்து, 'ஆகா இது அல்லவா எழுத்து. இப்படி எல்லாம் கூட சமூகத்தில் நடந்திருக்கிறதே. எப்படிப்பட்ட நல்ல விஷயம்' என்று மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

'அடடா இங்கே இப்படிக் கூட அட்டூழியம் நடந்திருக்கிறதே. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம்' என்று வருந்தி யோசிக்க வைக்க வேண்டும்.

இரண்டுமல்லாமல், 'ப்பூ இதென்ன பெரிய விஷயம். நம் வாழ்க்கையில் - நம் வீட்டில் - நம் பக்கத்து வீட்டில் - நம் உறவுக்காரருக்கு இதை விட பயங்கரமாய் அது நடந்ததே.

அதை உலகுக்குச் சொல்ல வேண்டுமே. அதன் மூலம் இந்த சமூகம் குண்டூசி முனையளவேனும் மாற வேண்டுமே.

அதற்கான முயற்சியாக நாம் எழுத வேண்டுமே!' என்ற எண்ணத்தை ஒரு எழுத்து உருவாக்குமேயானால் நீங்களும் எழுதப் போகிறீர்கள், எழுத்தாளராகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

சரி எப்படி எழுதுவது? அதற்கு நம் எழுத்தாள முன்னோடிகள் பலர் "எழுதுவது எப்படி?" என நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

அதில் முக்கியமானது ரா.கி. ரங்கராஜன் எழுதிய எப்படி கதை எழுதுவது? இதைப் படித்து எழுத்தாளராக ஆகி புகழடைந்தவர் ஏராளம்.

அதன் பின்னிட்டு சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, ரஞ்சன், பா.ராகவன் போன்றோரெல்லாம் கதை எழுதுவதன் கதையை எழுதி உள்ளார்கள்.

அப்படியில்லாமல் தன் அனுபவமாக ராஜேஷ்குமார் 'எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்', 'என்னை நான் சந்தித்தேன்' என இரண்டு நூல்களை எழுதி உள்ளார்.

இது எல்லாம் 1980-களில் நாங்கள் எழுத வந்த காலம். இவர்கள் நீங்கள் எழுத்தாளராவதற்கு உங்களுக்குள் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என பலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அவர்கள் எல்லாம் சொல்லாத விஷயம் ஒன்று உள்ளது.

எழுத்தாளராவதற்கு முதல் முழு தகுதி நீங்கள் முதலில் வாசகராக - வாசிப்பாளராக இருக்க வேண்டும் என்பதைத்தான்.

அதை சொல்ல அவர்கள் மறந்து விட்டார்களா? என்றால் இல்லை. அதை அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எழுதச் சொல்லித் தந்த காலத்தில் நாங்கள் வண்டி, வண்டியாய் வாசித்துக் கொண்டிருந்தோம்.

1980-களுக்கு முன்பு தத்துப் பித்தென்று எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் புத்தகமோ, நாளிதலோ, வார இதழோ ஏதாவது ஒன்றையாவது தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்.

வாசிப்பு என்பது அப்போது அனைவருக்குமான சுவாசம். 2K கிட்ஸ்களுக்கு விளங்கச் சொல்லுவதானால் இப்போது ரயிலிலோ, பஸ்ஸிலோ, ஆட்டோவிலோ செல்லும் பயணிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் யாவர் கையிலும் செல்ஃபோன் இருக்கிறது.

அதை 99 சதவீதம் பேர் நோண்டிக் கொண்டே செல்கிறார்கள். செல்ஃபோன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதல்லவா?

அது போல அந்தக் காலத்தில் எங்கே பயணம் போவதானாலும், நடந்து செல்வதானாலும் ஏதாவது ஒரு புத்தகம், நாளிதழ், பருவ இதழ் இல்லாமல் - அதை வாசிக்காமல் செல்லாதிருக்க முடியாது.

அதை விட வாசிக்கத் தெரியாதவர்கள் கூட நாளிதழ்களை வாங்கி படிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து உரக்க வாசிக்கச் சொல்லி கேட்ட காலம்.

இப்போதைய தலைமுறைக்கு செல்ஃபோன் பொழுது போக்குக் கருவியானது எப்படியோ, சென்ற தலைமுறைக்கு TV பொழுது போக்கு அம்சமானது எப்படியோ, அதுபோல புத்தகங்களே அதற்கு முந்தைய தலைமுறைக்கு பொழுதுபோக்கும் அம்சமாக இருந்தது.

அப்போது சினிமா பொழுதுபோக்குக் கருவிதான் என்றாலும் தினம் தினம் அதைப் பார்க்கும் வசதி கிடையாது. வாரம், மாதம் ஒரு நாள் அதற்குத் திட்டமிட்டுப் போவதே ஒரு கல்யாண நிகழ்ச்சிக்குப் போவது போல் இருக்கும்.

இன்றைக்கு அறுபது வயது கடந்தவர்கள் புத்தக வாசிப்பு, தொலைக்காட்சி நேசிப்பு, செல்ஃபோன் மோகம் என மூன்றையும் பார்த்தவர்கள். அனுபவிப்பவர்கள்.

ஆக வாசிப்பு என்பது மூன்றாம் தலைமுறைக்கு சுவாசமாகிப் போனது. எனவேதான் எழுத்தாளராவது எப்படி என்று பக்கம்பக்கமாக எழுதிய அந்த தீர்க்கதரிசிகள், 'எப்படி வாசிப்பது' என்றோ, 'எழுத்தாளன் ஆவதற்கு வாசிப்புதான் அடிப்படை' என்றோ, 'வாசிக்காமலே நீ எழுத்தாளன் ஆனால் நீ எழுதும் எழுத்து அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போல!' என்று சொல்லத் தவறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஏன் செல்ஃபோனில் வாசிப்பவர்கள் இல்லையா? என நீங்கள் கேட்கலாம். அது மிகச் சொற்பம். அதுவும் பெரும்பாலும் அந்தக் காலத்தில் புத்தகங்களில் லயித்தவர்கள்தான் செல்ஃபோனிலும் படிக்கிறார்கள் (இப்போது நான் இதை எழுதுவது போல) என்பது என் அனுமானம்.

சரி. இதை எல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன். இப்போது நிறைய எழுத்தாளர்கள் எழுத வருகிறார்கள். நிறைய புத்தகங்களும் போடுகிறார்கள். அவற்றை எல்லாம் கை தேர்ந்த வாசகர்களாலேயே வாசிக்க முடிவதில்லை.

அதை மீறி கஷ்டப்பட்டு வாசித்தாலும் அயற்சியே மேலிடுகிறது. நல்ல வாசகனே அப்படி என்றால் புதிதாக வாசிக்க வரும் வாசகன் நிலைமை என்ன? புத்தகங்கள் என்றாலே இப்படித்தானோ என மிரண்டு ஓடுகிறான்.

இன்றைய காலத்தில் ஒரு ஒளவையார் பிறந்து பாட வந்தால், 'கொடிது, கொடிது பாட புத்தகங்களை விடவும், கதைப் புத்தகங்கள் வாசிப்பது கொடிது' என்று சொல்லி ஓடியிருப்பார் என்பது போலத்தான் பெரும்பான்மை எழுத்தாளர்களின் நூல்கள் வாசிப்பு சுகம் என்றால் வீசை என்ன விலை என கேள்வி கேட்கிறது.

அந்த வாசிப்பு சுகம் என்பது என்ன? இப்போது வரும் நூல்களில் வாசிப்பு சுகம் உள்ள நூல்களே இல்லையா? அப்படியான வாசிப்பு சுகம் உள்ள நூல்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு நல்ல வாசகனாக உருவாவது எப்படி? எந்த வயதில் வாசிக்கத் தொடங்கலாம்.

எந்தந்த நூல்களை எப்படி வாசிக்கலாம்? வாசிப்பிற்கும், எழுத்தாளன் ஆவதற்கும் என்ன தொடர்பு? இப்படியான கேள்விகளுக்கு விடை சொல்வதே இப்போது இதை நான் எழுதுவதன் நோக்கம்.

- கா.சு. வேலாயுதன்

#எழுத்தாளர் #எழுத்தாளன் #வாசகன் #வாசகி #வாசகர் #நூல் #வாசிப்பு

பெருந்துயரத்தில் உழலும் பொழுது…!https://thaaii.com/2024/12/31/script-of-thi-ja/வாசிப்பின் ருசி:பெருந்துயரத்தில் உழலும்எந...
31/12/2024

பெருந்துயரத்தில் உழலும் பொழுது…!
https://thaaii.com/2024/12/31/script-of-thi-ja/

வாசிப்பின் ருசி:

பெருந்துயரத்தில் உழலும்
எந்த ஜீவனும்
அந்த சமயத்தில்
ஒரு கம்பீரத்தைப் பெறுகிறது!

- தி.ஜானகிராமன்

ja janakiraman #தி_ ஜானகிராமன் #தி_ ஜா ja

'தி ஸ்மைல் மேன்' - ’போர்தொழில்’ போல இருக்கிறதா?!https://thaaii.com/2024/12/31/the-smile-man-movie-review/கடந்த ஆண்டு வெள...
31/12/2024

'தி ஸ்மைல் மேன்' - ’போர்தொழில்’ போல இருக்கிறதா?!
https://thaaii.com/2024/12/31/the-smile-man-movie-review/

கடந்த ஆண்டு வெளியான ‘போர்தொழில்’, நடிகர் சரத்குமாரின் முக்கியத்துவத்தைத் திரையுலகில் மீண்டும் முன்னிறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டில் மட்டும் ஹிட் லிஸ்ட், மழை பிடிக்காத மனிதன், நிறங்கள் மூன்று படங்கள் அவர் நடிப்பில் வெளியாகின.

அந்த வரிசையில், அவர் நடித்த 150ஆவது படம் என்ற சிறப்பைத் தாங்கி வந்திருக்கிறது, ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ள ‘தி ஸ்மைல்மேன்’.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இந்த ‘தி ஸ்மைல்மேன்’?

இரு போராட்டங்கள்!

காவல் துறை அதிகாரி சிதம்பரம் நெடுமாறன் (சரத்குமார்) ஒரு விபத்தில் சிக்குகிறார்.

அதனால், ஐந்தாண்டுகள் ஓய்வில் இருக்கிறார். ஓரளவு நல்ல உடல்நலத்தை அவர் அடைந்தப்பிறகு, ‘உங்களுக்கு அல்சைமர்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது’ என்கிறார் மருத்துவர்.

அதனால், ஓராண்டு வரை மட்டுமே அவர் நினைவுகளைத் தாங்கி வாழ முடியும் என்கிறார்.

மேற்சொன்ன விபத்தின்போது தான், ‘தி ஸ்மைல்மேன்’ எனும் சைக்கோ கொலைகாரனை சிதம்பரம் நேரில் கண்டிருக்கிறார்.

ஆனால், அவரது முகத்தைக் காணவில்லை. தனக்கும் அந்தக் கொலைகாரனுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளதை அவர் உணர்கிறார்.

ஏனென்றால், அந்த விபத்துக்குப் பிறகு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த சிதம்பரத்திடம் ‘நீ வெளிச்சத்திற்கு வந்தா, நானும் என் பாணியில கொலைகளைச் செய்ய ஆரம்பிப்பேன்’

எனும் தொனியில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் அந்த ‘ஸ்மைல்மேன்’.

சிதம்பரம் தனது காவல் துறை அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிடுகிறார். அது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகிறது. அதனைக் காண்கிறார் அந்தக் கொலைகாரன்.
மீண்டும் சிதம்பரத்தைத் துரத்த தயாராகிறார்.

இந்த முறை, அவரைத் தன்னை நோக்கி வரவழைக்கத் திட்டமிடுகிறார் சிதம்பரம். தண்டனையில் இருந்து தப்பி, சமூகத்தில் உலவும் சில குற்றவாளிகளோடு வலியச் சென்று நட்பு வளர்க்கிறார்.

அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து அந்த ‘சைக்கோ’ கொலைகாரனுக்கு இரையாகின்றனர். அவர்கள் குறித்து தகவல் தந்த ஒரு ஓய்வுபெற்ற காவலரும் (ஜார்ஜ் மரியான்) கொல்லப்படுகிறார்.

அதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, அவரது வீட்டுக்குச் செல்கிறார் சிதம்பரம். ஆனால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

காரணம், நினைவுகளோடு சிதம்பரம் நடத்தும் போராட்டம். அதனுடன் அந்தக் கொலைகாரனைக் கண்டறியும் போராட்டத்தையும் மேற்கொள்கிறார்.

இரு வேறு போராட்டங்களையும் சிதம்பரம் வெற்றிகரமாக எதிர்கொண்டாரா? ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட அந்தக் கொலைகாரனைப் பிடித்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

சரத்குமாரின் இருப்பும், த்ரில்லர் கதையும் தானாகவே இப்படத்தை ‘போர்தொழில்’ உடன் ஒப்பிட வைக்கும். ஆனால், அது போன்று இப்படம் இல்லை. அந்த ஒப்பீடே இப்படத்திற்கான பெரும்பலவீனம்.

தவறிய இடங்கள்!

‘போர்தொழில்’ போன்று ஏன் ‘தி ஸ்மைல்மேன்’ இல்லை? இந்தக் கேள்வியே தவறானதுதான். ஏனென்றால், எந்தவொரு இயக்குநராலும் தனது முந்தையப் படத்தின் வெற்றியைப் போன்று மீண்டும் ஒன்றை ஆக்க இயலாது.

அந்த ஒப்பீட்டையும் மீறிச் சில இடங்களில் தவறியிருக்கிறது இப்படம்.

சிறப்பாக எழுதப்பட்ட காட்சிகள், நறுக்கு தெறித்தாற் போன்று அமையப் பெற்ற காட்சியாக்கம், காட்சிகளுக்கு இடையேயான வெளியை இறுக்குதல், பிரேம்கள் முழுக்க ஒரே மாதிரியான வண்ணக் கலவையை நிரப்ப முயற்சித்தல், அதன் வழியே படத்திற்கான ‘மூடு’ பார்வையாளர்கள் மனதில் உருவாதல் போன்றவற்றைத் தவறவிட்டிருக்கிறது ‘தி ஸ்மைல்மேன்’.

அதேநேரத்தில், ‘இது ஒரு சிறப்பான முயற்சி’ என்ற வகையில் நம் மனம் கவர்கிறது.

படத்தின் முன்தயாரிப்பிலும், படப்பிடிப்பின்போதும் கொஞ்சம் அதிகக் கவனத்தைச் செலுத்தியிருந்தால், தவறிய இடங்களைச் சரி செய்திருக்கலாம்.

இயக்குனர்கள் ஷ்யாம் - பிரவீன், திரைக்கதையாசிரியர் கமலா அல்கெமிஸ் கூட்டணி அதனைத் தவறவிட்டிருக்கிறது.

நாயகன் சரத்குமார் இதில் ‘சூப்பராக’ நடித்திருக்கிறார். என்ன, அவரது ஒப்பனை தான் சரிவர அமையவில்லை.

அவரோடு சிஜா ரோஸ், இனியா, பேபி ஆலியா, சுரேஷ் மேனன், குமார் நடராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்படச் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

குமார் நடராஜன், ராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால், தியேட்டரில் ஆங்காங்கே சிரிப்பலைகள் எழுந்திருக்கும்.

இந்தக் கதையில் கலையரசனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இதுவரை இந்த விமர்சனத்தைப் படித்தவர்களுக்கு அது என்னவென்று தானாகப் பிடிபடும்.

இதில் சரத்குமாரின் ஜுனியராக ஸ்ரீகுமார் என்பவர் நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரமும், அதற்கான நடிப்பும் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ரவி பாண்டியன், ஒப்பனையாளர் வினோத் சுகுமாரன் உட்படப் பலர் இதில் தொழில்நுட்பப் பணிகளைக் கையாண்டிருக்கின்றனர்.

ஆனால், சிறப்பான வெளிப்பாடு அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

அதற்குப் படக்குழு பல பதில்களை வைத்திருக்கும்.

பார்வையாளர்களுக்கு அந்தக் காரணங்கள் எல்லாம் ஆறாம்விரலாகவே தெரியும்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ், தனது பின்னணி இசை மூலமாகக் காட்சிகளுக்கான இடைவெளியை நிறைக்க முயற்சித்திருக்கிறார்.

அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இக்கதையில் சில லாஜிக் மீறல்கள் தலைகாட்டும். அது தியேட்டரில் படம் பார்க்கையிலேயே வெளியே தெரிவதுதான் ‘தி ஸ்மைல்மேன்’னின் மைனஸ்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா - திரைக்கதையாசிரியர் ஆல்ப்ரெட் பிரகாஷ் கூட்டணியின் ’போர்தொழில்’ படத்தில் அவை அறவே தென்படாது. அந்த வேறுபாட்டைப் பார்வையாளர்கள் உணர்வதும் இப்படத்தின் பலவீனம்.

அதேநேரத்தில், ’எத்தனை குறைகள் இருக்கட்டும், நான் த்ரில்லர் படம் பார்க்கணும்ங்க’ என்று தியேட்டருக்கு வருபவர்களை ஈர்க்கும் ‘தி ஸ்மைல்மேன்’.

- உதயசங்கரன் பாடகலிங்கம்.

#தி_ஸ்மைல்மேன் #விமர்சனம் #சரத்குமார் #ஜார்ஜ்_மரியான் #ஷ்யாம்_பிரவீன் #கமலா_அல்கெமிஸ் #சிஜா_ரோஸ் #இனியா #பேபி_ஆலியா #சுரேஷ்_மேனன் #குமார்_நடராஜன் #பிரியதர்ஷினி_ராஜ்குமார் #ஸ்ரீகுமார் #ஒளிப்பதிவாளர்_விக்ரம்_மோகன் #படத்தொகுப்பாளர்_சான்_லோகேஷ் #கலை_இயக்குநர்_ரவி_பாண்டியன் #ஒப்பனையாளர்_வினோத்_சுகுமாரன் #இசையமைப்பாளர்_கவாஸ்கர்_அவினாஷ்

சிந்தனையின் பலன் அதன் செயலில்!https://thaaii.com/2024/12/31/edison-thoughts-2/தாய் சிலேட்:ஒரு யோசனையின் மதிப்புஅதை செயல்...
31/12/2024

சிந்தனையின் பலன் அதன் செயலில்!
https://thaaii.com/2024/12/31/edison-thoughts-2/

தாய் சிலேட்:

ஒரு யோசனையின் மதிப்பு
அதை செயல்படுத்துவதில்
தான் இருக்கிறது!

- எடிசன்

#எடிசன்

எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!https://thaaii.com/2024/12/31/mgr-some-non-critical-remarks/எம்.ஜி.ஆர் ஒரு நடிகர...
31/12/2024

எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!
https://thaaii.com/2024/12/31/mgr-some-non-critical-remarks/

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே, அவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் போக்குதான் இன்றைக்குச் சில எழுத்தாளர்களிடம் நிலவுகிறது.

அப்படியானால், உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!

பெரியாருக்கு மட்டுமின்றி மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டுவிழா கொண்டாடியது எம்.ஜி.ஆர். அரசு தான்.

சுத்தானந்த பாரதி உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை, மாவட்ட நூலகத் துறைக்குத் தனி அலுவலர்கள், அவர்களுக்கு ஓய்வூதியம் – இதெல்லாம் அளிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான்.

தமிழக அரசின் ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணையிட்டதோடு, அரசின் மடல்கள், செய்திக் குறிப்புகள் போன்றவற்றில் திருவள்ளுவர் ஆண்டைப் பதிவு செய்ததும் எம்.ஜி.ஆரின் செயற்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆர். எழுத்தாளர் இல்லை; கண்டுபிடிப்பாளர் இல்லை. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் அவரது ஆட்சி எண்ணற்ற பயனும், வளமும் தந்தது என்பதை மறுக்க முடியாது.

நன்றி: செ.இளவேனிலின் ‘அரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு?’ எனும் கட்டுரையிலிருந்து.

#உலகத்_தமிழ்_மாநாடு #மதுரை #தமிழன்னை #தமிழ்ப்_பல்கலைக்_கழகம் #தஞ்சாவூர் #எம்ஜிஆர் #அதிமுக #திமுக #தமிழ்நாடு #முதலமைச்சர் #திருவள்ளுவர் #மகாகவி_பாரதி #நடிகர் #எழுத்தாளர்

முயற்சியும் துணிவுமே வரலாறாகிறது!https://thaaii.com/2024/12/31/robert-ingersoll-facts/இன்றைய நச்:மனிதனாகப் பிறப்பதுபொதுவ...
31/12/2024

முயற்சியும் துணிவுமே வரலாறாகிறது!
https://thaaii.com/2024/12/31/robert-ingersoll-facts/

இன்றைய நச்:

மனிதனாகப் பிறப்பது
பொதுவான நிகழ்வு;
ஆனால், ஒருவன்
பெரிய மனிதனாக இறப்பது
தன்னுடைய
முயற்சியாலேயே நடக்கும்!

- இங்கர்சால்

#இங்கர்சால்

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மா!https://cinirocket.com/rare-photo-with-sivaji-and-kamala-ammal/பேசும் படம்:‘தில்லானா ...
30/12/2024

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மா!
https://cinirocket.com/rare-photo-with-sivaji-and-kamala-ammal/

பேசும் படம்:

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

#தில்லானா_மோகனாம்பாள் #நடிகர்_திலகம் #சிவாஜி_கணேசன் #கமலா_அம்மாள்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தாய் இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தாய் இதழ்:

Videos

Share

Category

Thai Magazine

Thai magazine is the Official page for Thaaii.com.

Thaai.com is a Tamil Magazine site providing information on current affairs in Tamil.