12/01/2023
*ஒரு நாளைக்கு ரூ.256 போதும்.. ரூ.55 லட்சம் கேரண்டி.. எல்ஐசி-யின் அசத்தல் திட்டம்..!*
எல்ஐசி என்றாலே இன்சூரன்ஸ் எனும் அளவுக்கு, மக்கள் மத்தியில் பிரபலமான நம்பிக்கையான ஒரு நிறுவனமாகும். அந்தளவுக்கு மக்களுக்கு ஏற்ப பற்பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது. தொடர்ந்து பல புதுமையான திட்டங்களை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்திய மக்களிடையே பிரபலமான திட்டங்களில் ஒன்று தான் எல்ஐசி-யின் ஜீவன் லாப்.
*பங்கு சந்தை அபாயம் இல்லாத திட்டம்*
பங்கு சந்தை அபாயம் இல்லாத இந்த திட்டம் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டங்களில் ஒன்றாகும். இதில் இறப்பு பலன் என்பது உண்டு. பாலிசி ஹோல்டர்கள் தங்களது வசதிக்கு ஏற்ப பாலிசி பிரீமியம் மற்றும் காலத்தினை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு வரம்புள்ள பிரீமியம் கொண்ட ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும்
*இறப்பு பலன்*
இந்த திட்டத்தில் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், இறப்பு பலனாக, அந்த காலகட்டத்தில் நாமினி அல்லது சட்டபூர்வ வாரிசுதாரர் லம்ப்சம் தொகையாக பெற முடியும்.
இது பாலிசிதாரர் செலுத்தும் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு அல்லது பாலிசிகாலத்தில் பாலிசிதாரர் செலுத்தும் மொத்த பிரீமியத்தின் 105% மடங்கு. இந்த இரு தொகையில் எது பெரிதோ அதனை பெற முடியும். இதனுடன் போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் என சேர்த்து கிடைக்கும்.
*வயது வரம்பு*
ஜீவன் லாப் பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 2 லட்சம் ரூபாயாகும். இந்த பாலிசியினை எடுக்க பாலிசிதாரர் 8 - 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பாலிசி மூன்று விதிமுறைகளுடன் வருகிறது. 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் ஆகும்.
*வரி விலக்கு உண்டு*
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச வரம்பு என்பது இருந்தாலும், அதிகப்பட்ச முதலீடு குறித்து எந்த வரம்பும் இல்லை. 3 ஆண்டுகளுக்கு பின்னர் கடன் வசதியும் உண்டு.
இந்தத் திட்டத்தில் பிரீமியத்துக்கு வரி விலக்கும் உண்டு.
*கடன் வசதியும் உண்டு*
3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் இந்த பாலிசி பிரீமியம் அடிப்படையில் தள்ளுபடியும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பாலிசி குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் ரைடர்ஸ் பாலிசி வசதிகளும் உண்டு.
_ரூ.55 லட்சம் எப்படி சாத்தியம்?_
நீங்கள் ஒரு நாளைக்கு 256 ரூபாய் பிரீமியமாக செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். மாதம் 7700 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். இது சாதாரணமாக உங்களது கார் தவணை அல்லது மற்ற கடன்களை காட்டிலும் குறைவு. வருடத்திற்கு 92,400 ரூபாய் பிரீமியமாக செலுத்துவீர்கள்.
25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பாலிசிதாரரின் 41வது வயதில் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பர். முதிர்வு காலத்திற்கு பிறகு அவர் 54.50 லட்சம் ரூபாய் பெறுவார். இது முதிர்வு தொகை மற்றும் போனஸ் என அனைத்தும் சேர்த்து ஆகும்.