மணி மேகலை

மணி மேகலை Some of the clips in video are not owned by me, if any copyright issue please contact massage whatsapp
(452)

15/01/2025
இங்கே சில  பேர்  மூன்றாவது இடத்துக்கு எதுக்கு இவ்வளவு சந்தோசம்னு கேக்குறாங்க .. நாங்க நாலாவது இடம் வந்து இருந்தாலும் இல்...
14/01/2025

இங்கே சில பேர் மூன்றாவது இடத்துக்கு எதுக்கு இவ்வளவு சந்தோசம்னு கேக்குறாங்க ..

நாங்க நாலாவது இடம் வந்து இருந்தாலும் இல்ல 19 வந்திருந்தாலும் இது பெரிய அச்சீவ்மெண்டா தான் நினைச்சிருப்போம்..

இந்த ரேஸ் ல கடைசி ஒரு மணி நேரம் படத்துல கூட இவ்வளவு திரில்லிங் இருந்து இருக்காது ஒரு நிமிஷம் 30 செகண்ட் மூணாவது இடத்தில் இருந்த அணி ( #974) லீடிங் போயிட்டு இருந்தாங்க....

இரண்டாவது இடத்துக்கு 9 நிமிஷம் முன்னாடி போகணும் அவ்வளவு ஈஸியா போயிட முடியுமான்னு கேட்டா முடியாது

ஒவ்வொரு செகண்டும் முக்கியம் ..இதில் என்னன்னா மூணாவதா இருந்தா அணி Pitstop போவாங்க அப்ப நமக்கு ஒரு ஒரு நிமிஷம் கிடைக்கும்

நினைத்துக்கொண்டிருக்கிறப்ப Code 60 (max speed 60kmph and no overtaking) ஆக்டிவேட் பண்ணிட்டாங்க ...அந்த நேரத்துல அவங்க Pitstop la Fuel Fill பண்ணிட்டாங்க ...

அதே நேரத்தில் நமக்கு 10 செகண்ட் தான் எக்ஸ்ட்ரா கிடைத்தது இன்னும் ஒரு பத்து செகண்ட் அவங்களுக்கு பெனால்டி இருக்கறதுனால ஒரு நிமிஷம் 10 செகண்ட் முன்னோக்கி வரணும்...

கோட் 60 எடுத்த உடனே நம்ம டிரைவர் ஒரு 30 செகண்ட்ஸ் எளிதா கடந்துவிட்டார் என்ன ரீசன் என்றால் நம்பர் 974 ட்ராக்க்குள்ள சுத்திட்டு இருக்கும் பொழுது அகைன் ஸ்டார்டிங் பாயிண்ட்ல இருந்து வரது தான் (once they enter pitstop athu than rules nu potrukanga) கவுண்ட் ஆகும்...

அதுவரைக்கும் 60 KMPH தான் ட்ரை பண்ணனும் அந்த நேரத்துல அந்த 30 செகண்ட் இவங்க கேப்சர் பண்ணிட்டாங்க ..

அடுத்த 5 ரவுண்ட்லயும் total ah 12 செகண்ட் கம்மி பண்ணி முன்னோக்கி வந்தாங்க கடைசி 15 நிமிஷத்துல தான் நமக்கு இந்த வெற்றிக்கான வாய்ப்பு கிடைச்சுச்சு.

அதனாலதான் இந்த வெற்றியை அணியும் அங்கு இருந்தவங்களும் அவ்வளவு கொண்டாடினார்கள்💕💕💕

கிரிக்கெட்ல எப்படி 6 பாலுக்கு 18 அடிக்கணும் என்கிற மாதிரி சிச்சுவேஷன்ல ஜெயிக்கிறோமோ அதே மாதிரி தான் இன்னைக்கு ஜெயிச்சதும்👍

இதுக்கு அப்புறம் அவங்க பல வெற்றி தோல்விகளை பார்க்க தான் போறாங்க ஆனா இந்த வெற்றி அந்த அணிக்கும் நம்ம க்கு உந்துகோலா இருக்கும்..

இந்தியால இருந்து நிறைய பேர் டீமா ஆரம்பிப்பாங்க அதனால நமக்கு நிறைய பெருமைகளும் கிடைக்க வாய்ப்பிருக்கு 🩷

அது நம்ம தமிழ்நாட்டுல தான் அதிகமான ட்ராக் இருக்கு எனக்கு தெரிஞ்சு அடுத்த 15, 20 வருஷத்துல நம்ப இந்தியால இருந்து அதுவும் தமிழ்நாட்டில் இருந்து ஏகப்பட்ட கார் ரேசர்கள் உருவாக வாய்ப்பு இருக்கு அதுக்கு இன்னைக்கு விதையை விதைச்சிட்டாரு 💕💕💕

தளபதி தொண்டன் தல ரசிகன்❤️
ராஜ் சதிஷ்

14/01/2025

😆😆😆

பைக் வாங்குறதுக்கு பதிலா காரையே வாங்கலாம்.. 4 பேர் அமரும் டாடா நானோ கார்!First Published | Nov 27, 2024, 8:07 AM ISTடாடா...
12/01/2025

பைக் வாங்குறதுக்கு பதிலா காரையே வாங்கலாம்.. 4 பேர் அமரும் டாடா நானோ கார்!
First Published | Nov 27, 2024, 8:07 AM IST
டாடா நானோ எலக்ட்ரிக் கார் 2025 ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த பேட்டரி, பிரீமியம் அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் இந்த கார் விலையானது சாமானிய மக்கள் வாங்கக் கூடிய விலையில் வரவுள்ளது,
Tata Nano 4 Seater
டாடா நானோ எலக்ட்ரிக் கார்: டாடா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் சில காலமாக அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி, டாடா நானோ எலக்ட்ரிக் கார் விரைவில் டாடா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் பிரீமியம் அம்சங்களை அனுபவிக்க முடியும்.Tata Motors
இது ஒரு சக்திவாய்ந்த பேட்டரியின் உதவியுடன் சேகரிக்க முடியும். சுமார் 400 கிலோமீட்டர் ஓட்டும் வரம்பு கொடுக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல டாடா நானோ எலக்ட்ரிக் காரை அனைவரும் வாங்க கூடிய விலையில் டாடா நிறுவனம் சுமார் ரூ. 4 லட்சம் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஓம்நமசிவாய 🙏

இதுவா உங்க சிக்கனம்!நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பி...
12/01/2025

இதுவா உங்க சிக்கனம்!

நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்!

இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்!

முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்!

பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்!

பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்!

வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்!

ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு!

இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேச மாட்டேன் என்பவர்கள் ஒரு லைக் போடுங்க நன்றி.

ஒரு பார்ல சரக்கு சப்ளை பண்றவர் ஒருத்தர் இருந்தார். யாராலயும் அடிச்சுக்கமுடியாத அளவுக்குப் பெரிய பலசாலி. அதனால அவரை வச்சு...
11/01/2025

ஒரு பார்ல சரக்கு சப்ளை பண்றவர் ஒருத்தர் இருந்தார்.
யாராலயும் அடிச்சுக்கமுடியாத அளவுக்குப் பெரிய பலசாலி.
அதனால அவரை வச்சு பத்தாயிரம் ரூபா பந்தயம் ஒண்ணு வச்சாங்க.

அவர் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு சாறு எடுப்பார்.
அதுக்கப்பறமா அந்தப் பழத்துல யாராச்சும் ஒரு சொட்டு சாறு பிழிஞ்சு எடுத்தாலும் அவங்களுக்குப் பத்தாயிரம் பரிசு.
சவால்ல தோத்தா பத்தாயிரம் தந்துடணும்.

பல காலமா பல பலசாலிகள் முயற்சி பண்ணினாங்க.
பளு தூக்கறவங்க, சொம சொமக்கறவங்க, மல்யுத்த ஆட்டக்காரக விறகு வெட்டுறவக இப்படிப் பலரும்! யாராலயும் அந்த சவால்ல ஜெயிக்கமுடில.
எல்லாருக்கும் பத்தாயிரம் போச்சி

அப்ப
ஒரு வயசான அம்மா வந்தாங்க.
சரக்கு என்ன சாப்ர்றிங்க னு கேட்டாங்க பச்ச தண்ணில
வெண்ண எடுக்கறவ டா நா.
கொண்டாடா
அந்த எலும்ச்சம் பழ தோல னு சொன்னாங்க.

அங்க இருந்தவங்களுக்கு சிரிப்ப அடக்கமுடில.
அந்த வெயிட்டர் வெய்ட் ஆசாமி
ஒரு எலுமிச்சையை எடுத்துப் பிழி பிழின்னு பிழிஞ்சாரு.

இனி அதுல ஒண்ணுமே இல்லைங்கற நெலையில அந்த அம்மா கையில வெறும் தோலைக் குடுத்தாரு,
கலா மாஸ்டர் கிழி கிழி மாதிரி இந்தம்மா பிழி பிழினு புழிஞ்சது.

அங்க இருந்தவங்க மறுபடி கிண்டலாச் சிரிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா அவங்க சிரிப்பு உடனே அடங்கிடுச்சு. கூட்டத்துல எல்லாரும் திகைச்சுப் போயிட்டாங்க.

காரணம்
யாருமே பிழிய முடியாத அந்த எலுமிச்சைத் தோல்ல அந்த அம்மா பதினெட்டு சொட்டு
பிழிஞ்சதுதான்.

எல்லாரும் வாய பொளக்க
அந்த வயசான அம்மா கிட்ட பத்தாயிரம் ரூபாயக் குடுத்துட்டு,

'யார்மா நீயி?
இவ்வளவு தெறமயா பிழியற!
நீ வெயிட் லிஃப்டரா, இல்லை வேற மாதிரி மரம் வெட்டியோ, பாரம் தூக்கியோ பழக்கமா? உன் பேர் என்ன?'

அந்த அம்மா நக்கல் சிரிப்போட
ஒண்ணும் சொல்லாம பத்தாய்ர ரூவா பணத்தோட வெளியே போயிருச்சு

டிஜிட்டல் ஹே
இந்தியாஹே 🤔

 #பதிமுக_நீர்..... ⚜ ⚜ கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும...
11/01/2025

#பதிமுக_நீர்..... ⚜ ⚜
கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும். 🥀🍂
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது ?
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.🌱🍃
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?
இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.
பொது நலன் கருதி வெளியீடு.. இயற்கையாகவே வாழப் பழகு இயற்கை உணவை உட்கொண்டு.

1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குள...
10/01/2025

1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA..... அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு" விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,

இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும்.

ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.

எப்படி ஆயினும்.... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

ஒரு லைக் போட்டு போங்க
08/01/2025

ஒரு லைக் போட்டு போங்க

♥ நடு இரவில் அவர் நன்றாக தூங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நாள் முழுவதும் எனக்கு உதவுவதற்கு அவருக்கு இலகு...
07/01/2025

♥ நடு இரவில் அவர் நன்றாக தூங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் நாள் முழுவதும் எனக்கு உதவுவதற்கு அவருக்கு இலகுவாக இருக்கும்.

♥சில நேரங்களில் குழந்தை அழும்போது அவர் தூங்கிக்கொண்டிருப்பதைப் பற்றி நான் பொறாமைப்படலாம், ஆனால் ஒருபோதும் எரிச்சலடையவில்லை! பகல் முழுதும் அயாராது சுற்றி உழைத்துவரும் அவருக்கு சிறு தூக்கமே நின்மதி.

♥அவர் தூங்கி வழக்கமாக எழுந்து என்னை முதுகில் தடவி, மன்னிச்சிரு என்பார்...

♥ ஏனெனில் பெண்களுக்கே உண்டான சிறப்பு காலநேரம் இன்றி பிள்ளைகளை தாங்குவதும் கணவனை தாங்குவதும்.

♥அவருக்கு நான் எப்படியோ அனால் எனக்கு என் கணவனும் குழந்தை தான்..

♥♥நல்ல கணவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.♥♥

உலகத்தமிழ் மங்கையர் மலர்
பிரான்ஸ் 🇨🇵

கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)பஸ் ஓரளவு க...
07/01/2025

கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். (நடுவுல தான்..தாய் சொல்லை தட்டாதே)

பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து

"தம்பி பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(பொய்) வேற எங்கயாவது உக்காருங்க"

சில நிமிடம் கழித்து டிப் டாப்பாய் ஒரு ஆசாமி "சார் பக்கத்துல ஆள் வருதா?"

" ஆமா(மறுபடியும் பொய்). ஏன் சார் பஸ்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காரலாம்ல என்று நினைத்ததை அவர் உணர்ந்து வேறு இடம் சென்று அமர்ந்து கொண்டார்.

ஓரளவு பஸ் நிரம்பி விட்டது.. இப்போ ஒரு பையன் வந்தான். அழுக்கு சட்டை அழுக்கு பேண்ட் " சார் பக்கத்துல ஆள் வருதா?"

நான் இனி பொய் சொல்ல முடியாதென்றெண்ணி "இல்ல யாரும் வரல ஏன் ?'

இல்ல நான் உக்காரணும்"

" சரி உக்காரு" ஒரு வித நெருடலுடன் சொன்னேன். அவன் உடனே தான் கொண்டு வந்திருந்த கூடையை என் அருகில் வைத்து விட்டு கீழிறங்கி எங்கேயோ சென்று விட்டான்.

கூடைக்குள் அழுக்கு துணிகள்.. அதிலிருந்து துர் நாற்றம் வேறு.

என்னடா இது பிரபுவுக்கு வந்த சோதனை ?!

முதல்ல கேட்ட அந்த பெரியவர் அல்லது டிப் டாப் ஆசாமி இருவரில் யாருக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். இப்படி ஆகிருச்சேன்னு கவலை பட்டுக்கொண்டே அந்த கூடையை மெல்ல அழுத்தி பார்த்தேன். (என் பையன் அடிக்கடி என்கிட்ட வந்து " ஏம்ப்பா ! ஈரோட்டுக்கெல்லாம் தீவிரவாதிங்க வருவங்களாப்பா" னு )

அந்த கூடை முழுதும் அழுக்கு துணிகள்.

தீடிரென சத்தம் எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கி ஓட துவங்கினார்கள் எனக்கு என்னென்னே புரியலை.

பின்பு தான் புரிந்தது இந்த பஸ் கிளம்பும் முன்பாக ஒரு பிரைவேட் பஸ் கிளம்ப தயாரான பொழுது அனைவரும் இறங்கி அதை நோக்கி ஓடினர். நான் வேற நடுவுல உக்காந்துருக்கேன் . நான் போறதுக்குள்ள அந்த பஸ்ல சீட் நிரம்பிடும். இந்த பஸ் கிளம்ப இன்னும் தாமதம் ஆகும்போல தெரிந்தது. இந்த கூடைக்காரன வேற காணோம்.

திடீரென்று பஸ்சுக்கு வெளிய இருந்து என் ஜன்னலோரம் அவன் வந்து

"சார் சார் அந்த கூடையை கொடுங்க கூடையை கொடுங்க" னு கத்தினான்.

நான் எதுக்கு னு கேட்டேன்.

"சார் சார் கூடையை கொடுங்க சார் நான் அந்த பஸ்ல ஏறனும்"

சரி இந்தா னு சொல்லி என் என் இரு விரல்களால் அந்த கூடையை வேண்டா வெறுப்பாய் தூக்கி அவனிடம் நீட்டினேன்.
அவன் கூடையை வாங்கியவுடன் சொன்னான்

" சார் நீங்க மெதுவா வாங்க நான் உங்களுக்கு அந்த பஸ்ல சீட் போட்டு வைக்கிறேன்" னு

நான் யாரை அழுக்கு பையன்னு நெனச்சேனோ, யார் கூட போனா என் பயணம் இனிக்காதுன்னு நெனச்சேனோ, அவன் சொல்றான் வாங்க சார் உங்களுக்கு சீட் போட்டு வைக்கிறேன்னு.

பள்ளியிலும் கல்லூரியிலும் தான் பாடம் நடத்திட்டு பரீட்சை வைப்பாங்க.

ஆனால் வாழ்க்கையில் பரீட்சை வெச்சுட்டுத்தான் பாடம் நடத்துவாங்கனு புரிஞ்சுகிட்ட ஒரு தருணம் அது.

நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்க இறைவனால் அல்லது இயற்கையால் அனுப்பப்படுகிறான் என்பதை நான் நம்புகிறேன்.

அந்த பையன் அருகே அமர்ந்து நான் போன அந்த இரண்டு மணி நேர பயணத்தில் துர்நாற்றம் அடிக்கவில்லை. நல்ல மனத்தின் மணம்தான் வீசியது......

Address

3 Sami Street
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when மணி மேகலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category