ரா லாரன்ஸ்

ரா லாரன்ஸ் ragava avargalin ninaivaga natatha patum page ithu இது அவர்களின் உண்
(291)

06/01/2025
லஞ்சம் வாங்காமல் கஷ்டப்பட்டு உழைத்து புதிய பைக் வாங்கிய எனக்கு ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 🫵🫵🫵
06/01/2025

லஞ்சம் வாங்காமல் கஷ்டப்பட்டு உழைத்து புதிய பைக் வாங்கிய எனக்கு ஒரு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே 🫵🫵🫵

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.வ...
29/12/2024

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.

விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும்
இந்த தமிழ் நூல் காப்பகமே..
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் .

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார்

புலவர்
பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன.

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீசியசு அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.

திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்சு , அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்..

நூலகத்திற்கான
தனி கட்டிடத்தை
50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.

இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள்,
நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....

எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

தாலியை வேலி என்றும், பெண் அடிமைத்தனம் என்று பிற்போக்கு தனத்தோடு பேசி வந்த பேணீயவாதிகளுக்கு நடுவில், தாலியை வைத்தே ப்ரோமோ...
22/12/2024

தாலியை வேலி என்றும், பெண் அடிமைத்தனம் என்று பிற்போக்கு தனத்தோடு பேசி வந்த பேணீயவாதிகளுக்கு நடுவில், தாலியை வைத்தே ப்ரோமோஷன் செய்யலாம் என்று உலகுக்கு எதுக்கு காட்டாய் விளங்கும் கீர்த்தியே, உண்மையான புரட்சி பெண்

என் மனைவி என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று எனக்கு ஒரு Facebook Request  வந்தது. அவளது Request யை Confirm ...
30/11/2024

என் மனைவி என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று எனக்கு ஒரு Facebook Request வந்தது. அவளது Request யை Confirm பண்ணும் படி ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அதனால் அவளைச் சேர்த்தேன். Friend Request யை ஏற்ற பின் "நமக்கு ஒருவரையொருவர் தெரியுமா?" என்று Message அனுப்பினேன். அதற்கு அவள், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன், ஆனா நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்." என்று கூறினாள்.

அவள் முன்பு இருந்தே எனக்கு தோழியாக இருந்தாள். படத்தில் மிகவும் அழகாக இருந்தாள். நான் அரட்டை அடிப்பதை ஒரு பக்கம் வைத்து விட்டு என் மனைவியைப் பார்த்தேன், அவள் இன்றைய நாள் செய்த வேலையில் களைத்துப் போய் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து, என்னோடு ஒரு புத்தம் புதிய வீட்டில் இவ்வளவு வசதியாகத் தூங்கும் அளவுக்கு அவள் எப்படியான, எந்தளவுக்கு பாதுகாப்பை உணர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் இப்போது தனது பெற்றோரின் வீட்டை விட்டு விலகி இருக்கிறாள், அங்கு அவள் தனது குடும்பத்தினரால் சூழப்பட்ட 24 ஆண்டுகள் கழித்தாள். அவள் வருத்தமாகவோ அல்லது சோகமாகவோ இருந்தபோது, அவள் மடியில் அழுவதற்கு அவளுடைய அம்மா இருந்தாள். அவளுடைய சகோதரியோ அல்லது சகோதரனோ அவளிடம் நகைச்சுவைகளைச் சொல்லி அவளை சிரிக்க வைப்பார்கள். அவளுடைய அப்பா வீட்டிற்கு வந்து அவள் விரும்பிய அனைத்தையும் கொண்டு வருவார், அத்தோடு முக்கியமாக அவள் என்னை மிகவும் நம்பினாள்.

இந்த எண்ணங்கள் அனைத்தும் என் மனதில் தோன்றியதால், நான் தொலைபேசியை எடுத்து "BLOCK" யினை அழுத்தினேன். நான் அவள் பக்கம் திரும்பி அவள் பக்கத்தில் தூங்கினேன். நான் ஒரு ஆண் (Man) , பையன் (Boy) அல்ல. நான் அவளுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதியளித்தேன், அது அப்படியே இருக்கும். மனைவியை ஏமாற்றாத, குடும்பத்தை சீரழிக்காத மனிதனாக என்றென்றும் போராடுவேன்.

இது சிறிய மற்றும் உண்மையான கதையாகும்.

குளத்தோடு கோபித்துக் கொண்டு குளிக்க மாட்டேன் என்றாளாம் ஒருத்தி... குளம் ஒருபோதும் நாறாது...  ரஹ்மான் சார் நீங்க பாட்டு ப...
25/11/2024

குளத்தோடு கோபித்துக் கொண்டு குளிக்க மாட்டேன் என்றாளாம் ஒருத்தி...
குளம் ஒருபோதும் நாறாது...

ரஹ்மான் சார் நீங்க பாட்டு பாடுங்க

"துன்பம் தொலைந்தது இப்போ"

இசை தான் ரஹ்மானின் முதல் மனைவி

தேசத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்த அழகிய தமிழ் மகன்.

அவருடைய பெயர் ரகுமான் என்ற ஒரே காரணத்திற்காக இன்று ஒரு தற்குறி கூட்டம் அவரை இழிவு படுத்தி வருகின்றது

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங...
24/11/2024

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி...

மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்துபயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைத்த வரலாறு உண்டு.

புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்னது......

இவ்வளவு சம்பளம் பெறும் நடிகர்களின் ரசிகர்கள் யார் தெரியுமா....இலவச அரிசிக்கு ரேஷனில் சண்டை போடும் அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகள் தான்........

மக்கள் சிந்திக்க வேண்டும் நம் மூன்று மணி நேரம் பார்க்கும் திரைப்படத்திற்கே 100 200 500 என்று கொடுத்து பார்த்து‌ விட்டு வருகிறோம்‌ எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு வருகிறோம்....

ஆனால் ஒரு விவசாய ‌‌‌

பயிர் செய்து மூன்று நான்கு மாதம் உழைத்தால வரும் காய்கறிகள் பேரம் பேசுகிறார்கள் சிந்திங்கள். ...

இந்த உலகில் எது இல்லை என்றாலும் வாழ்ந்து விடலாம் ஆனால் உணவு இல்லை என்றால் வாழ முடியாது...
ஒரு விவசாய ‌தெய்வத்துக்கு சமம்....

விவசாய்த்தை காப்போம் ....

இயற்கையே இறைவன் தாவரமே தெய்வம்

முகநூல் பகிர்வு

என்னுடைய மகனுக்கு இன்று  பிறந்தநாள் ஒரு வாழ்த்து சொல்வீர்களா
24/11/2024

என்னுடைய மகனுக்கு இன்று பிறந்தநாள் ஒரு வாழ்த்து சொல்வீர்களா

😮♥️🙏🧁எனக்கு இன்று பிறந்தநாள் அண்ணா எனக்கு எல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா அண்ணா..?👇👇
22/11/2024

😮♥️🙏🧁எனக்கு இன்று பிறந்தநாள் அண்ணா எனக்கு எல்லாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வீர்களா அண்ணா..?👇👇

இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள் ,டீ கடை நாயர்கள் ,படிப்பிற்காக வருபவர்கள் ,மருத்துவ...
15/11/2024

இந்தியாவில் வாழ சிறந்த இடம் எது?

1.கேரளாவில் இருந்து வரும் மலையாளிகள் ,டீ கடை நாயர்கள் ,படிப்பிற்காக வருபவர்கள் ,மருத்துவத்துக்காக வருபவர்கள்

2,பிகார் இன தொழிலாளர்கள்

3அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள்

4,ஆந்திராவில் இருந்து வரும் சாலை பணியாளர்கள்

5 சிவகாசி மற்றும் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் வட இந்திய தொழிலாளர்கள்

6பேங்குகளில் பணியமர்த்தப்படும் வட இந்திய பணியாளர்கள்

7.எல்லா TOLL GATE களிலும் நிற்கும் பக்காவான வேறுமாநில ஊழியர்கள்

8 பெரிய ஊர்களெங்கும் கடை வைத்து வியாபாரத்தை விரிவாகியிருக்கும் வட இந்திய வணிகர்கள் நகை கடை காரர்கள் ,ஊழியர்கள்

9,பானி பூரி விற்பவர்கள் (அய்யோஓஓஓஓ )

10 இவ்வளவு ஏன் சிஃனலில் சுற்றி திரியும் ஏழைகள் ,பலூன் விற்பவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள்

இவர்கள் அனைவரையும் கேளுங்கள் இந்தியாவில் வாழ சிறந்த இடம் எதுவென்று ?

தயக்கமின்றி நம் தமிழ்நாட்டை கை காட்டுவார்கள்

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா புல்லோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் போட்டியில் பங்கேற்று ...
15/11/2024

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா புல்லோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் போட்டியில் பங்கேற்று வைரலானார். புல்லோஸ் 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

அந்த பெண் வெற்றி பெற்றதால் மட்டும் வைரலாகவில்லை, அவள் ஓடுவதற்கு ஷூ இல்லாததாலும், பேண்டேஜ்களை ஷூவாக பயன்படுத்த முடிவு செய்ததாலும் வைரல் ஆகிவிட்டால்.

நான் எப்பொழுதும் சொல்கிறேன், உங்கள் வாழ்வின் எந்த நேரத்திலும், நீங்கள் வெற்றிபெறத் தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த பெண் செருப்பு வைத்திருப்பவர்களிடம் கவனம் செலுத்தாமல், தன்னிடம் இருந்ததை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, மேலும் பல வாய்ப்புகளை தனக்காக உருவாக்கி உள்ளார். மற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் அல்லது பார்வையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் நம்மில் பலர் கலந்து கொள்ளாமல், நம் வாழ்க்கையை மேம்படுத்தி இறுதியில் மற்ற வாய்ப்புகளைக் கொண்டுவரும் வாய்ப்பைத் தவறவிட்டிருப்போம்.

உங்களிடம் உள்ளதை நீங்கள் பயன்படுத்தாததால், எத்தனை வாய்ப்புகள் உங்களை விட்டு சென்று இருக்கிறது? மற்றவர்கள் எப்படி ஆரம்பித்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களிடம் உள்ளதைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். எப்பொழுதும் நினைவில் உங்களையே வைத்து இருங்கள். ஏன்னா உங்களால் தான் உங்களை உருவாக்க முடியும். உங்களால் தான் உங்களை அழிக்கவும் முடியும். எதற்காகவும் எதையும் காரணம் சொல்லாதீர்கள்🙏🏻

பிடித்து இருந்தா பின்பற்றுங்க 👌🏻 மற்றவர்களையும் பின்பற்ற சொல்லுங்க

மறைந்த நடிகர் மாரிமுத்து குடும்பத்துடன்... எங்களுக்கெல்லாம் வாழ்த்து கிடைக்குமா அண்ணா? இதுவே பெரிய நடிகை நடிகர்களுக்கு ப...
13/11/2024

மறைந்த நடிகர் மாரிமுத்து குடும்பத்துடன்... எங்களுக்கெல்லாம் வாழ்த்து கிடைக்குமா அண்ணா? இதுவே பெரிய நடிகை நடிகர்களுக்கு போஸ்ட் இருந்தால் வாழ்த்து நிறைய கிடைச்சிருக்கும்.

Address

Chennai
600001

Telephone

+919855555555

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரா லாரன்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ரா லாரன்ஸ்:

Share