24/12/2024
பட்டியல் சமுதாய சகோதரரை,
ஜாதி பெயரை சொல்லி, எட்டி உதைத்த
திமுக ஊராட்சி மன்ற தலைவி மகன்!
சந்தி சிரிக்கிறது!! எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி!!
செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் சிவன் கோயிலில் மாற்றுத் திறனாளியை சாதி பெயரை சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவி மகன் கொடூர செயல் கண்டு எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.
ஒருபுறம் ஈவேரா தான் ஜாதியை ஒழித்தார், சமத்துவம் தான் திராவிட மாடல் என கூவி அரசியல் வியாபாரம் செய்யும் திறனற்ற திமுக அரசில், திமுகவின் ஊராட்சி மன்ற தலைவி மகன், ஜாதியின் பெயரால் தனது சொந்த கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பட்டியல் சமுதாய இளைஞரை மனிதாபிமானம் சிறிதுமின்றி எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சிகள் கண்கலங்க வைக்கிறது.
திமுக கட்சிக்குள் சமத்துவத்தை நிலைநாட்ட முடியாத திறனற்ற திமுக தலைவரின் போலி சமத்துவ அரசியல் வெகு காலத்திற்கு நிலைக்காது என்பதை மக்கள் தேர்தல் பாடம் மூலம் உணர்த்துவார்கள். பட்டியல் சமுதாய மக்களின் காவலனாக தலைவனாக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் சரக்கு, மிடுக்கு தலைவர் திருமாவளவனின் தோழமை சுட்டுதல் கூட இல்லை என்பது தான் காலத்தின் கொடுமை..