03/08/2024
மறக்க முடியாத கிரிக்கட் வீரர்கள்
90s கிட்ஸ்களின் நாயகன் ஆண்டிப்ளவர்💜
ஜிம்பாவே என்றொரு நாடு இருப்பதே பலருக்கு தெரியாது ஆண்டி ப்ளவர் பெயரை சொன்னால் ஜிம்பாவே தெரியும் அப்படியான ஒரு வீரர் பெரிய சாதனைகள் ஒன்றும் படைக்கவில்லை... ஆனால் ,கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். கத்துக்குட்டி அணியான ஜிம்பாவேயை அனைத்து அணிகளும் துவம்சம் செய்து விடும் 90 களில் ஆப்ரிக்க கண்டத்தில் கிரிக்கெட் விளையாடியது இரண்டு அணிகள் தான் ஒன்று ஜிம்பாவே இன்னொன்று தென் ஆப்ரிக்கா ஆனால் தென் ஆப்ரிக்கா எப்போதும் பலம் வாய்ந்த அணி ஜிம்பாவே அப்படி இல்லை இந்த அணியுடனான போட்டி என்றாலே சுவாரஸ்யம் குறைந்து விடும் ஏனெனில் எதிர்த்து ஆடும் அணிகள் எப்படியும் வென்று விடும் இப்படியாக இருந்த ஒரு நிலையை மாற்றி அமைத்தவர்தான் ஆண்டி ப்ளவர் கோபம் நிதானம் இரண்டையும் தனக்குள் வைத்திருந்த ஒரு வீரர்...
புகழ்பெற்ற சூழல் பந்து வீச்சாளர்களான வார்னே முரளிதரன் ,அனில் கும்ளே இவர்களின் பந்துக்களை கூட பறக்க விட்டு விடுவார் ஆண்டி ப்ளவர்
தன்னுடையை முதல் ஒரு நாள் போட்டியில் அதுவும் உலக கோப்பை போட்டியில் சதமடித்த ஒரு வீரர் இவர் ..பெரும்பாலான போட்டிகளில் ஜிம்பாவே எடுக்கும் ரன்களில் பாதி ரன்கள் இவர் அடித்த ரன்களாகத்தான் இருக்கும் சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தார்...
ஆண்டி ப்ளவர் ஜிம்பாவே அணியின் கேப்டனாக ஆன பின் ஜிம்பாவே அணி தொடர்ந்து 12 ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று நாங்களும் இருக்கோம் களத்தில் என்று உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு காட்டியது.. டெஸ்ட் போட்டிகளில் வெற்றியே பெறாமல் இருந்த ஜிம்பாவே அணி ஆண்டி ப்ளவர் தலமையில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக வெற்றி பெற்றது. அது போல ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை ஆண்டி ப்ளவர் அடித்து நொறுக்கியதால் புகழ்பெற்ற பத்திரிக்கைகள் எல்லாம் சர்வாதிகாரத்தை உடைத்த ஆண்டி என தலையங்கள் எழுதினார்கள். ரிவர்ஸ் ஸ்விப்ட் ஷாட்கள் அடிப்பதில் ஆண்டி ப்ளவருக்கு நிகராக வீரர்கள் இன்று வரையில் இல்லை என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
எந்த சூழ்நிலையிலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் ஆடும் ஆண்டி ப்ளவர் களத்தில் நின்றால் எதிரணி வீரர்கள் பதட்டதிலேயே இருப்பார்கள் அப்படிப்பட்ட ஓர் வீரனின் கிரிக்கெட் வாழ்வு சில அரசியல் காரணங்களால் எந்த வித விழாக்களும் இன்றி அமைதியான முறையில் அஸ்தமித்து போனது..!