![நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு இதழுக்கு பழம்பெரும் நடிகையும், மறைந்த நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரனின் மனைவியுமான விஜ...](https://img4.medioq.com/209/741/637773292097410.jpg)
02/02/2025
நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு இதழுக்கு பழம்பெரும் நடிகையும், மறைந்த நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரனின் மனைவியுமான விஜயகுமாரி பேட்டி அளித்துள்ளார்.
குலதெய்வம் படத்தில்தான் அவருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு காதலித்து மணந்து கொண்டேன் என கூறியுள்ளார். எஸ்.எஸ் ஆரும் இவரும் நீண்ட வருடங்கள் முன்பே பிரிந்துவிட்டனர். எஸ்.எஸ் ஆர்க்கு மூத்தமனைவி ஒருவர் இருக்கிறார்.
எஸ்.எஸ் ஆர் மறைந்த பிறகு அவர் வீட்டுக்கு சென்று கதறி அழுதேன் என கூறி இருக்கிறார். மேலும் எஸ்.எஸ் ஆரின் மூத்த மனைவி மகன்கள் இன்னும் விஜயகுமாரி மேல் பாசமாக இருக்கிறார்களாம். சின்னம்மா சின்னம்மா என்றுதான் அழைப்பார்களாம்.
எஸ்.எஸ் ஆரும் ,விஜயகுமாரியும் சேர்ந்து நடிக்கும்போது தன் படங்களை தவிர மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்காத அளவு பொஸசிவ் ஆக இருப்பார், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நான் நடிக்க வேண்டியது, கணவர் தடுத்ததால் வேண்டாம் என்றேன். இது போல சிவாஜி அண்ணன் படங்கள் பலவற்றில் நான் நடிக்க வேண்டியது, கணவர்தான் வேண்டாம் என சொல்லி விடுவார்.
சிவாஜி அண்ணன் பொது இடங்களில் கேட்பார், ஏம்மா விஜயா நான் என்ன சிங்கமா , புலியா என்னை பார்த்து ஏன் பயந்து நடிக்க மாட்ற, நான் என்ன உன்னை கடிச்சா தின்று விடுவேன் என்பாராம். இவருக்கு அமைந்தது பெரும்பாலும் அழுகை ரோல்கள் தான், அப்படி யதார்த்தமாகவே அது போல் ரோல்கள் அமைந்தது என குறிப்பிடுகிறார். இப்போது இருக்கும் நடிகர்களில் கார்த்தியை பிடிக்கும் என கூறுகிறார் விஜயக்குமாரி.