12/09/2024
🔥 *தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)*🔥
ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில்...
அதாவது ஆரியர்கள் வருவதற்கு முன்...
*பெண்களின் இரத்தப் போக்கை கண்ட நம் முன்னோர்கள் அவர்களின் உடல் வலிகளை உணர்ந்து அந்த மூன்று நாட்கள் ஓய்வு அளித்தனர்.*
*அந்தக் காலங்களில் இன்று போல் துணி நாப்கின் போன்ற உபகரகணங்கள் பயன்படுத்தப் படவில்லை. மாறக வாழை மட்டைகளையும் மண் பாண்டங்களையும் பயன்படுத்தினர்.*
அது மட்டுமல்லாமல் இரத்தம் தரையெங்கு விழும் என்பதால் ஒரே இடத்தில் அமரச் செய்தனர். இதனால் கோவில்கள் செல்ல முடியவில்லை. விளக்கேற்றவோ வீட்டு வேலைகள் செய்தால், இரத்தப் போக்கு அதிகரிக்கும் இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்ற விசயங்களினால் அவதிப்படுவர் என்பதினால் மட்டுமே.
இதற்குப் பெயர் தீட்டு என்று அந்தணர் கூட்டம் பொய்யுரைத்தது.
ஆனால் இறைவனை எக்காலமும் வணங்கலாம். இறைவனை வணங்க சாஸ்த்திரம் தேவையில்லை.
கீழே ஒரு உண்மையான வரலாறு...
நமச்சிவாய வாழ்க!
🔥 *"மாதவிடாய் காலத்தில் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்த பெண்ணைப்பற்றி தெரியுமா???"*🔥
திருஞானசம்பந்தர் தனியாக சிவசோதியில் கலக்கவில்லை. சம்பந்தரின் திருமண விழாவில் சோதியாய் தோன்றிய சிவபெருமானுடன், திருமண விழாவுக்கு வந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு கூட்டமாக சோதியில் கலந்தவர்தான் சம்பந்தர் பெருமான்.
🔥 *ஈசன் சோதியாக எழுந்ததும், எல்லோரும் சிவனோடு சேர்ந்து பேரின்ப வீடான ஈசனின் திருவடி நிழலை அடைவோம் வாருங்கள் என்று சம்பந்தர் அழைத்ததும், அனைத்து மக்களும் சோதியோடு சேர்ந்தனர்.*🔥
*🔥ஆனால் ஒரு பெண் மட்டும் தயங்கி ஓரமாக நின்றால். அப்பெண்ணை பார்த்து சம்பந்தர், ஏனம்மா இங்கு நிற்கிறாய்!! ஈசனோடு சேர விருப்பமில்லையா?? என்று கேட்டார்.*🔥
🔥 *கண்கள் கலங்கிய நிலையில், "சுவாமி, நான் தீட்டுப் பட்டுவிட்டேன். மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன். நான் எப்படி!!!!!!!!" என்று சொல்லித் தன் இயலாமையையை கண்ணீரால் தெரியப்படுத்தினால்.*🔥
🔥 *இதைக் கேட்ட ஞானசம்பந்தர் என்ன கூறினார் தெரியுமா?????*
*"அம்மா...... நீ தீட்டு என்று கருதுவதால் இது தீட்டு ஆகிவிடாது. அப்படியே இது தீட்டு என்றால், உன் தீட்டு வெறும் தீப்பொறிப் போன்றதே. சிவபெருமான் சோதி ரூபமானவன். "இந்த சிறிய தீப்பொறி, அந்த சோதியை என்ன செய்துவிடும்" என்று சொல்லி, அப்பெண்ணை தேற்றி, அவளையும் சிவபெருமானோடு சேரச் செய்தார்.*🔥
🔥 *மாதவிடாய் என்பது உடலின் இயல்பு. அது ஒரு போதும் தீட்டாகாது. 365 நாளும் சிவபெருமானை வழிபடலாம். 365 நாளும் சிவச்சின்னங்களை அணியலாம்.*🔥
🔥 *மாதவிடாய் காலத்தைத் தீட்டு என்றும், தீட்டு நேரத்தில் ஈசனை பார்க்கக் கூடாது என்றும் சிவச்சின்னங்கள் அணியலாகாது என்றும், வீட்டின் பூசையறைக் கதவுகளை தாழிட வேண்டும் என்றும் சிவனடி சேர்ந்த நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் எங்கும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன்...... சிவபெருமானே தம் கைப்பட எழுதிய திருவாசகத்திலும் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.*🔥
*சிவனடியைச் சேராதவர்களும், சிவனடியை சேர விடாதவர்களாலும் உருவாக்கப்பட்ட நெறிதான், மாதவிடாய் காலத்தில் இறைவனைப் பார்க்கவே கூடாது என்ற நெறி.*
*சிவபெருமான் மீது மெய்யாகவே அன்பு கொண்டவர் தொழுநோயராக இருந்தாலும், மாட்டின் தோலை உறித்து பிழைப்பு நடத்தும் புலையராக இருந்தாலும், அவர்தான் நான் வணங்கும் கடவுள் என்று சிவனடி சேர்ந்த அப்பர் பெருமான் பாடியுள்ளார். தொழுநோயைவிட மோசமானதா மாதவிடாய் காலம்????*
*எங்கள் வீட்டில் இந்த பழக்கம் செல்லாது. யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அஞ்சவேண்டாம். ஈசனோடு நெருங்கிப் பழகப் பழக, உங்கள் வீட்டாரும் ஈசனை உணர பழகிக் கொள்வர். துணிவே சிவம்.*
*மறையும் முறையும் எமக்கில்லை!*
*மனமும் மொழியும் தடையில்லை!*
*சிவனை நினைப்போம்!*
*சிவனை உரைப்போம்!*
*சிவனடி சேரவே சீவித்திருப்போம்!*
திருச்சிற்றம்பலம்