1.சிலப்பதிகாரத்தில் நம்மை காருகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காருகர் என்றால் நெசவு செய்பவர் என்று பொருள.
2.சில கல்வெட்டுகளில் சேனைத்தலைவர், தத்துவாயர் எனறு நம்மை குறிப்பிடப்பட்டுள்ளது.
"சேனைத்தலைவர்"என்றால்
படைத்தலபதி என்று பொருள். "தத்துவாயர்" என்றால் நெசவாளர் என்று பொருள்.
3.தெற்கு ஆந்திராவில் நம்மை கரிகாலபக்தலூ, கைக்காள செங்குந்தம் என்று அழைப்பார்கள் "கரிகாலபக்தலூ" என்றால் கரிகால சோழனின் பக்தர்கள் என்று பொருள்.
4. கேரளாவில் நம்மை "கேரளமுதலி" அல்லது "கைக்கோள முதலி" என்று அழைப்பார்கள்.
நமது தோற்றம்:
சூரபாரதப்போரில் முருகனுக்கு உதவ முருப்பெருமானின் தாயான பார்வதி தேவியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து ஒன்பது வீரர்களை(நவவீரர்கள்) சிவபெருமான் உருவாக்கினார். அதாவது
1.வீரபாகு, 2.வீரகேசரி, 3.வீரமகேந்திரர், 4.வீரமகேஸ்வரர், 5.வீரபுராந்தரர், 6.வீரராக்கதர், 7.வீரமார்த்தாண்தர், 8.வீரரந்தகர் மற்றும் 9.வீரதீரர்.
⚜️ நான்காம் நூற்றாண்டில் சேந்தன் திவாகர முனிவர் எழுதிய எழுதிய "ஆதி திவாகரம்" அல்லது "சேந்தன்திவாகரம் " என்ற தமிழ் அகராதியில் நம்மைப் பற்றி எழுதியுள்ளார்
"செங்குந்தப்படையர் சேனைத் தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்"
அர்த்தம் 👇
1.செங்குந்தர்( குந்தம் ஏந்திய வீரன்), 2.சேனைத்தலைவர்( தளபதி), 3.தந்துவாயர் (நெசவாளர்), 4.காருகர் (நெசவாளர்), 5.கைக்கோளர்( வலிமையான கைகளை உடையவன்)
⚜️ ஆகிய ஐந்து பெயர்க்களும் ஒரே மக்களை குறிக்கும் பெயர்கள் என்று ஆதி திவாகரம் நூல் கூறுகிறது. மேலும் நாம் குறிஞ்சி நில வேந்தர்கள் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் நாம் பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நில மக்களாவர் .முருகனின் படையில் சூரபாத போரில் அரக்கனைக் வீழ்த்த முதலில் ரத்தம் படிந்த குந்தத்தை ஏய்ந்தி போருக்கு தலைமை ஏற்றனர் இந்த நவவீரர்கள். அரக்கனைக் கொன்ற பிறகு, போர்வீரர்கள் சிவனிடம் ஒரு தொழிலை ஏற்றுக்கொள்வதாகக் கூறினர், இது எந்தவொரு உயிரினத்தையும் அழிக்கவோ அல்லது காயப்படுத்தவோ சம்பந்தப்படாது, நெசவு அத்தகைய தொழிலாக இருப்பதால், அவர்கள் அதில் பயிற்சி பெற்றனர். மேற்கண்ட தளபதிகளில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்திர வள்ளியை மன்னர் முசுகுந்த சோழன் மணந்தார். இந்த நவவீரர்கள்(ஒன்பது வீரர்கள்) மற்றும் முசுகுந்த சோழனின் சந்ததியரே செங்குந்தர்கைக்கோள முதலியாரின் முதல் தலைமுறை ஆகும்.வரலாறு: