அறந்தாங்கி (Aranthangi)
அறந்தாங்கி நகரின் புவியமைப்பு;
● இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்திலமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின்
இரண்டாவது பெரிய நகரம் ''அறந்தாங்கி நகரம்''.
● 10டிகிரி அட்சரேகைக்கு வடக்காகவும் 70டிகிரி தீர்க்கரேகைக்கு கிழக்காகவும்
கடல் மட்டத்திலிருந்து 32.31மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.
● புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான நதியான வெள்ளாறு இந்நகருக்கு மேற்குப்
பகுதியை ஒட்டி கடந்து
சென்று வங்கக் கடலை அடைகிறது.
அறந்தாங்கி கோட்டை:
● பிரம்மான்ட கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இந்நகரின்
தொன்மையை பறைசாற்றி நிற்பதை காணமுடிகிறது. இக்கோட்டையின் சுவர்கள் வெறும்
செங்கல் மற்றும் பாறைகளால் மட்டுமின்றி அதன் பெரிய இடைவெளிகள் மண்ணால்
நிரப்பப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இக்கோட்டையின்
உள்ளே அரண்மனை கட்டிடங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது. இந்த
கோட்டை எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றேதும் இல்லை.
இக்கோட்டையை சுற்றி பிரம்மான்ட அகழி உள்ளது.
●
இங்கு அமைந்துள்ள சிவன் கோயில் இராஜேந்திர சோழ வர்மரால் கி.பி.11ம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அறந்தாங்கியில் விமான நிலையம்:
● இந்நகரை ஒட்டிய மூக்குடி கிராமத்தில் விமான நிலையம் ஒன்று ஆங்கலேயர்
ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு உலகப்போருக்குப் பிறகு கைவிடப்பட்டது. அதன்
சிதிலமடைந்த கட்டிடங்களை இன்றும் காண முடிகிறது.
அறந்தாங்கி வரலாறு:
● அறந்தாங்கி தொண்டைமான் வரலாறு எந்த நூலிலும், எந்த வரலாற்றிலும்
பெரும்பாலும் இடம்பெறவில்லை. 17ம் நூற்றாண்டுக்கு பிறகு சுதேச மன்னர்கள்,
பாளையக்காரர்கள், பட்டயக்காரர்கள் ஆவணங்களை யாரும் தொகுக்கவில்லை.
கிழக்கிந்திய கம்பெனிகளின் வியாபாரங்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள்
பார்த்தார்களே தவிர, தங்கள் உள்ளூர் வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்
களை, செப்பேடுகளை யாரும் படித்துப் பார்க்கவில்லை.
● அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 350 ஆண்டுகள்
முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
● அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1319ல் தான் முதலில் தெரிகிறது.
பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலிமையும்
செல்வாக்கும் முள்ளவரென்று தெரிகிறது. இவர் காலத்தில்தான் மேற்ச்சொன்ன
அறந்தாங்கி கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்
இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.
● பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர். இவர்களிற்
சிலர் பழைய அரசர்களின் வழியினர் அல்லது அமைச்சர் முதலானோரின் வழியினர்
என்று சொல்கின்றனர். இவர்களின் முன்னோர் அரசர்களிடமிருந்து,
அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ,
பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர்.
● படையெடுத்து பிறபகுதிகளை வெல்லவில்லை என்றாலும், படை வைத்திருந்தாக
கல்வெட்டு கூறுகிறது. தனிச்சிறப்பு கருதி ‘தொண்டைமானார்’ என
குறிப்பிட்டிருக்கின்றனர்.
● மழை, வறட்சி, போர் போன்றவற்றால் அழிந்த பயிர்கள் போக, வளர்ந்து நின்ற
பயிர்களுக்கு மட்டும் வரி வசூலித்திருக்கிறார்கள். வரிக்குறைப்பும், வரி நீக்கமும்
செய்திருக்கிறார்கள். வரிவசூலில் கண்டிப்போடும், கருணையோடும்
நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது ராணி பற்றி எங்கும்
குறிப்பிடப்படவில்லை.
● நோய் நீங்க கொடை வழங்கியிருக்கிறார்கள். கொடையை தவறாக கொடுத்தபோது,
மீண்டும் விசாரித்து உரியவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.
● நிலத்தை விற்கும் போது, ஒரு ஜாதியினர் அந்த
ஜாதியினருக்கு மட்டுமே விற்கவேண்டும் என கூறியிருக்கின்றனர்.
● நீர்ப்பாசனம், நீதித்துறை குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. 1319ம்
ஆண்டு முதல் 1759 வரை தனிஆட்சி செய்த மரபினர்.