17/01/2025
◇ FRANCE DIAMOND HOUSE ரீகன் & உமா
தயாரிப்பில் இயக்குனர் அஜந்தன் அவருடைய 'பறவாதி" முழுநீளத்திரைப்படமாகும். இத்திரைப்படமானது இலங்கை தேசத்தின் கிழக்குப் பகுதியான மட்டக்களப்பு திரிகோணமலை எல்லை பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
• அன்றாட வாழ்வாதாரத்துக்கு வீதியோரங்களில் நின்று பழம் விற்கும் சிறுபிள்ளை தொழிற்சார் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அப் பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வுகளை தேட முற்படுவதே இத்திரைப்படத்தின் சாராம்ச கரு ஆகும்.
• இத்திரைப்படத்தின் சிறப்பம்சமே அச்சமுகத்தில் வாழும் பிள்ளைகளே நடிகர், நடிகைகளாக மாறி திரையிலும் சிறப்பாக வாழ்ந்து இருக்கின்றார்கள்.
• அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னோட்ட அறிமுக விழாவில் அச்சமுக மக்கள் வருகை தந்து சிறப்பித்ததோடு, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரீச்சா நிறுவனத்தின் ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையா, அக் கிராம மக்களுக்கு நன்கொடையும் வழங்கினார்.
• பல கல்விமான்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலைஞர்கள் என பலதரப்பட்டவர்களாலும் பாராட்டை பெற்ற பறவாதி திரைப்படமானது எதிர்வரும் தை மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் அமைந்துள்ள Megaraam (44 Avenue De La Longue Bertrane, 92390 Villeneuve La Garenne - RER - C - Bus - 137 - 166 - 177 - 178 - 261 Tram - T1) எனும் இடத்தில் 900 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் முதல் காட்சி காண்பிக்கப்படவுள்ளது.
• அந்தவகையில் ஈழத்தமிழர்களின் திரைதிரைத்துறை வளற்சிக்கு ஆதரவு தருமாறு திரைப்பட கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
◇ இந்த முழு நீளத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எமது முகநூல் Karulie Media பக்கம் மூலமாக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
◇ 'பறவாதி" முழு நீளத்திரைப்படத்தின் குழுப்பணியாளர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.
• நடிகர்கள் :- ஜனா மொஹேந்திரன், விவேக்ஷன், ஷிரோம் மேனகா (பப்புடு)
கோட்வின், ஜேடெல் ஜெய்ரஸ், அர்ஷத்,
ஸ்ரீ நிரோ, சுரேஷ், பிரசாத் (ஏசிடி) அட்ஷாயா நிஜோரின், கீர்த்தனா சங்கர்
• இசையமைப்பாளர் :- ஜெயந்தன் விக்கி
• ஒலி வடிவமைப்பாளர் & ஒலிச்சேர்க்கை பொறியாளர் :- வக்கீசன் அனந்த்
• ஒளிப்பதிவாளர் & படத்தொகுப்பாளர்
& திரைக் கழக இயக்குனர் :- அமலன்
• தயாரிப்பு மேலாளர் :- ஜே.பி.கே. சிங்கம்
• தயாரிப்பாளர் :- ரீகன் & உமா
• தயாரிப்பு நிறுவனம் :- FRANCE DIAMOND HOUSE
◇ நமது Karulie Media நேயர்கள் அனைவரும் வரவிருக்கும் முழு நீளத்திரைப்படத்தை சிறந்த பகிர்வையும், ஆதரவையும் அளித்து எம் தாய் நாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்று நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.