Puradsifm கமலேஷ்

Puradsifm கமலேஷ் Kamalesh Vlog
(9)

10/03/2024

Victoria மாநிலத் தலைநகர் Melbourne

08/03/2024
04/03/2024

இன்றைய நாள் இனிதே அமையட்டும்,

03/03/2024

Australia - Victoria - Melbourne இல் இலை உதிர் காலம்! Autumn

01/12/2021

அன்பிற்கினிய உறவுகளே,
தங்களின் பேரன்பும், பேராதரவும் தான் எனது படைப்புக்களின் பக்க பலமாக அமைந்து கொள்ளும், எனது Youtube பக்கத்தினை Subscribe செய்து தங்களின் அன்பையும் ஆதரவையும் வழங்குங்கள். ஊக்கப்படுத்துங்கள். புதிய பதிவுகளை தங்களிற்காக பகிர்ந்திட ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.
கனிவன்புடன், உங்கள் அன்புத் தோழன் உங்க கமலேஷ்
என் Youtube பக்கத்தினை Subscribe செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்:
📺 https://www.youtube.com/channel/UC2So...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தேசம் தமிழகம். தமிழகத்தின் நாகரீக - கலாச்சார தழுவல்களைத் தன்னகத்தே கொண்டவர்கள் இலங்கை வாழ் தமிழர்கள் என்று கூறலாம்.

குமரிக் கண்ட நில அதிர்வின் பின் - இந்துமா சமுத்திரத்தினுள் உருவான சிறிய தீவு இலங்கை - இங்கே இயக்கர் - நாகர் எனும் இரு இனங்கள் ஆதிக் குடிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

இவர்களைப் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் என்று கூறுவர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
ஈழம் என்பது - இலங்கையைச் சுட்டும் பெயர்.

தமிழகத் தமிழிற்கும் ஈழத் தமிழிற்கும் உச்சரிப்பில் அதிக மாற்றங்கள் உண்டு. ஆனால் எழுத்துருவில் அல்ல. தமிழக நாளேடுகளையும், சஞ்சிகைகளையும், ஏன் திரைப்படங்களில் வருகின்ற சென்னைத் தமிழ், கோயம்புத்தூர் தமிழ், மதுரைத் தமிழ் எனத் தமிழகத்தின் பிராந்தியம் சார் பேச்சு வழக்குப் பாசைகளையும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் ஈழத் தமிழர்கள்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் - மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு / நீர்கொழும்பு இந்தப் பகுதிகளில் சார்ந்து வாழுவோர் ஒவ்வோர் விதமான உச்சரிப்புக்களை - பேச்சு வழக்குகளை கொண்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்களின் நாகரிக - உணவுப் பழக்க வழக்கங்களுள் அதிகளவாக கேரளச் சாயல் இருக்கும்.
அதே போன்று சொற்களில் சில கேரள - மலையாளப் பேச்சு வழக்குடன் ஒத்துப் போகும்.

இலங்கையில் பேசப்படும் மட்டக்களப்புத் தமிழ் கொஞ்சம் இனிமையாகவும், நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும்.

கொழும்புத் தமிழ் / நீர்கொழும்புத் தமிழ்- இது தமிழக மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்.

இலங்கையில் - தமிழகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் சில வித்தியாசமான பொருளைக் கூடத் தரும். அந்தளவு தூரம் அர்த்தங்களில் வேறுபடும்.

ஈழம் என்பது - முழு இலங்கையினையும் குறிக்கும் பண்டைய / புராதன பெயர்.

இங்குள்ள தமிழ் மக்களின் பேச்சு வழக்கு மற்றும் தமிழக மக்களின் சொல்லாடல்களை அலசுவதே இக் காணொலியின் நோக்கம்.

அஃதே போன்று ஆங்கிலத்தில் இந்தியாவில் "Madurai" என்று எழுதும் போது ஈழத்தவர்கள் "Mathurai" என்றே எழுதுவார்கள்.
Tambaram என்பது ஈழத்தவர்களால் Thamparam எனவும்,
ரஜனி - Rajni என தமிழகத்திலும், Rajani என ஈழத்திலும் ,
ஈழம் என்பதை இலங்கையில் Eezham என்றும் தமிழகத்தில் Eelam எனவும் எழுதப்படும்.

இப்படி நிறையவே கூறலாம்.

14/11/2021

ஆஸ்திரேலியாவின் இருண்ட பக்கம் என்றால் - அங்கே நம் கண் முன்னே வந்து நிற்பவை பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பங்களும், இதுவரை தீர்வு காணப்ப்படாத மர்மங்களுமே.

1950 - 1980 வரையான காலப் பகுதியில் தெற்கு ஆஸ்திரேலியாவில் - அடிலெய்ட் பகுதியில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பங்கள் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் ஒன்று தான் இந்த Beaumont children mystery, என்னால் முடிந்த வரை தமிழாக்கத்துடன் இந்த மர்மத்தினை உங்கள் முன் கொண்டு வர முயற்சித்துள்ளேன்.,

தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

அவுஸ்திரேலியா விசா பெற்றுக் கொள்வதற்குரிய வழி முறைகள் – அவுஸ்திரேலியாவிற்குள் எப்படி வரலாம்?அனைவருக்கும் வணக்கமுங்கோவ், ...
07/11/2021

அவுஸ்திரேலியா விசா பெற்றுக் கொள்வதற்குரிய வழி முறைகள் – அவுஸ்திரேலியாவிற்குள் எப்படி வரலாம்?
அனைவருக்கும் வணக்கமுங்கோவ், கும்பிடுறேனுங்கோவ்!!
பதிவிற்குள் நுழைய முன்பதாக,
நான் இந் நாட்டுக் குடிமகன், எனக்குத் தெரிந்த – நான் அறிந்த தகவல்களைப் பகிர்கிறேன்,
At your own risk – Please do proper research!
நான் ஒரு குடிவரவு – குடியகல்வு முகவர் கிடையாது, என்னுடைய இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து இணையத்தில் தேடிப் பல தகவல்களைத் தாங்கள் பெற்றுக் கொள்ள முடியும், / தங்கள் நாட்டில் உள்ள Migration Agent & Education Consultants ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்தி நம்பகத் தன்மையுடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இந் நாட்டினுள் மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று வேலைவாய்ப்பு விசாவினூடாகவோ / பணிப்பெண்களாக வர முடியாது, உயர்கல்வியை தொடரும் நோக்கிலும், ஏற்கனவே தாங்கள் வாழும் நாட்டில் PHD / சிறப்புத் தகமை டிகிரி வைத்திருப்பவர்களும் அதே துறையில் அனுபவம் உள்ளவர்களுமே வர முடியும்.
கொரோணா தொற்றுச் சிக்கல்களிற்கு முன்பதாக இந்தியாவைச் சார்ந்தவர்களிற்கு Working Holiday Visa வழங்கும் திட்த்தினை அரசு அறிவித்திருந்து. அதன் பிரகாரம் இரண்டு வருடங்கள் அல்லது 18 மாதங்கள் ஒன்றரை வருடங்கள் இவ் விசாவின் ஊடகா இங்கு வந்து விவசாயத் துறையில் பணி புரிந்த பின் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதே இந்த விசாவின் நோக்கம்.
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கு வயதெல்லை கிடையாது, ஆனால் – கவனிக்க இங்கு 40 வயதில் PHD முடிப்பதற்காக வருகிறீர்கள் என்றால், கல்வி கற்று முடிக்க 4 வருடங்கள் 44 வயதில் இந் நாட்டின் குடியுரிமைக்கு விண்னப்பிக்க முடியாது.
2012ம் ஆண்டின் பின்னர் இலங்கையிலிருந்து வந்து உங்கள் உறவினர்கள் வசிப்பவராயின், அவரது புகலிடக் கோரிக்கை விசாவில் சிக்கல்கள் ஏதும் இருப்பின் அவரது Sponsorship இனைப் பயன்படுத்தி தாங்கள் இங்கு வருவதில் சிக்கல்கள் இருக்கலாம். இதனை Immigration Consultants ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
விசேட தகமை அடிப்படையில் குடியேற்றவாசியாக (Skilled Migration) ஊடாக இந் நாட்டிற்குள் நுழைவதற்குரிய வயதெல்லை 44(44 வயதிற்கு உட்பட்டவரகா இருத்தல் வேண்டும் )
குடியேற்ற நாடு என்கின்ற காரணத்தினால்,
இந் நாட்டின் முதுகெலும்பாக – நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு விசேட தகமை உடையவர்களும், கற்றோரும் மட்டும் உதவுவார்கள் எனும் நோக்கில் இந் நாட்டிற்குள் அதிகளவில் கல்வியிற் சிறந்தவர்களையும், விசேட தேர்ச்சி பெற்றவர்களையும் அரசு அழைத்து வருகின்றது.
இதன் பிரகாரம் தற்போதைய சனத்தொகையான 25 மில்லியன் ( 2.5 கோடி ) 2045ம் ஆண்டில் 40 மில்லியனாக (4 கோடியாக ) உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது,
இந் நாட்டினுள் இங்கிலாந்து, இந்தியா , சீனா , பிலிப்பைன்ஸ் , மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அதிகளவானோர் குடியேற்றவாசிகளாக வருகை தருவதாக அரசு 2019-2020 சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இங்கிலாந்திலிருந்து 980,000 பேரும், இந்தியாவிலிருந்து 725,000 பேரும் வருகை தந்துள்ளார்கள், மொத்த சனத்தொகையில்,
இந்தியாவில் இங்கு பஞ்சாப் மாநிலத்த – இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளார்கள், இதற்குரிய காரணம் அவர்களுள் நிலவும் ஒற்றுமை -ஒருவர் வந்தாலே போதும், சொந்த பந்தங்களை தான் வந்த அதே வழியில் கல்வி கற்க வைத்து அழைத்து வந்துவிடுவார்கள்.
இந் நாட்டிற்குள் வருவதற்கு கண்டிப்பாக ஆங்கிலத்தில் தாங்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதை உறுதி செய்வதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஆங்கில மொழிப் பரீட்சைகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றி, அதற்குரிய வெட்டுப் புள்ளியைப் பெற்றுக் கொண்டாலே போதும்!!
* International English Language Testing System (IELTS Academic or General Training) - At least 7 for each of the 4 test components
* Test of English as a Foreign Language internet-based Test (TOEFL iBT) - At least 24 for listening, 24 for reading, 27 for writing and 23 for speaking
* Pearson Test of English Academic (PTE Academic) - At least 65 for each of the 4 test components
* Occupational English Test (OET) - At least B for each of the 4 test components
* Cambridge C1 Advanced test - At least 185 in each of the 4 test components
student Visa & Skilled Visa (இதில் Employer Sponsorship Skilled Visa) தவிர்ந்த ஏனைய விசாக்களில் இங்கு வருபவராயின் 60,000 டொலர் வங்கியில் சேமிப்பாக தங்களின் அவுஸ்திரேலிய வாழ்விற்குரிய பணமாக குடிவரவு குடியேற்றத் திணைக்களத்திற்கு காண்பிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை உயர்கல்வி கடன் எனும் அடிப்படையில் வங்கிகளில் இலகுவாக இந்த தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.
இனி இந் நாட்டிற்குள் வருவதற்குரிய விசாக்களைப் பற்றி நோக்கலாம்
1) Student Visa – தாங்கள் உயர்கல்வியை Bachelor / Masters தொடர இருப்பவராயின் , கல்வி கற்ற பின் இதே நாட்டில் நிரந்தர வதிவிட விசா பெற்றுத் தங்க விரும்புகின்ற நபராயின் , எந்தக் கற்கை நெறியினைக் கற்றால் தாஙள் விசாவினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நன்றாக ஆராயுங்கள்,
இது ஓர் ஜனநாயக நாடு, இங்கே லஞ்சம் கொடுத்து விசா பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, தாங்கள் உயர்கல்வி கற்க வருகின்ற நபராயின், தங்களிற்குரிய விசாவினை எந்த முகவர் நிலையம் பெற்றுத் தருகின்றதோ அவர்களிற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக் கழகத்தினர் சேவைக்குரிய பணத்தினை வழங்குவார்கள், ஆகவே இலகுவாக தாங்கள் எந்த வித கட்டணமும் immigration Consultant இற்கு வழங்காது விண்னப்பிக்க முடியும்.
பின்னூட்டம் 1) இல் எந்த துறையில் கல்வி கற்றால் நிரந்தர வதிவிட உரிமத்தினைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதனை பகிர்ந்துள்ளேன்.
2) விசேட தகமை விசா – Skilled Visa – இது பல்வேறு வகைகளாக உள்ளது, உதாரணமாக தங்கள் நாட்டில் இருந்தே தாங்கள் கல்வி கற்ற துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராயின், அந்த துறை சார்ந்த நிறுவனத்திடம் பணி இருப்பின், அவர்கள் வேலைக்கு ஆளைத் தேடுகின்றார்கள் என்றால் விண்ணப்பித்து அவர்களின் செலவில், தங்குமிடம், வேலை அனைத்தையும் உறுதி செய்து வருவது.
* Regional Skilled Visa – இங்கு மக்கள் வாழ்கின்ற பிரலபமான நகரங்களான மெல்பேர்ண், சிட்னி, குயின்ஸ்லாந்து தவிர்ந்த உள்ளூரில் மக்கள் தொகை அதிகமில்லாத இடங்களில் வேலைவாய்ப்பு இருக்கும், அந்த நிறுவங்களை தொடர்பு கொண்டு இங்கு வருவது.,
மேற்குறிப்பிட்ட இரு விசாக்களிலும் இங்கு வருவோர் நிரந்தர வதிவிட (PR) உடன் / TR விசாவுடன் இங்கு வருவார்கள்.
* Skilled Migration Visa – எந்தெந்த Skilled பகுதிகளில் வெற்றிடங்கள் இருக்கிறதோ, அவற்றில் ஏதாவது ஒன்றில் கற்றுத் தேறி, அனுபவம் மிக்கவராகத் தாங்கள் இருப்பின் அந்த விசாவின் அடிப்படையில் இங்கு வரலாம்.
பின்னூட்டம் 2) இல் இங்கு நிலவுகின்ற தகமைசார் பணி வெற்றிடங்களிற்குரிய இணைப்பினை வழங்கியுள்ளேன்.
3) பெற்றோரை அழைத்து தங்கள் அருகே வைத்திருக்கும் முறை – இந் நாட்டில் நிரந்தர வதிவிட நபராக தாங்கள் இருப்பின் 1,3,6,18 மாத சுற்றுலா விசாக்களில் / 3 வருட & 5 வருட & 10 வருட விசாவில் தங்கள் பெற்றோரை இங்கே அழைத்து வர்லாம், அவர்களிற்கும் குடியுரிமை வாங்கி கொடுக்கலாம்.
4) Remaining Relative Visa – இது கொஞ்சம் கடினமானது.இந்த விசாவிற்குரிய பரிசீலனைக் காலம் 6-12 மாதங்கள் வரை நீடிக்கும் , தங்கள் குடும்பத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் தவிர்த்து, நீங்கள் பிறந்த நாட்டில் தனியாக ஒருவர் மட்டும் இருப்பின் அவரை அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்து வந்து அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றுக் கொள்ளும் வரை “நாமே அவரின் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கின்றோம் என உறுதி தெரிவித்து அரசிற்கு 50,000-60,000 டொலரை Bond ஆக செலுத்தி விசாவினைப் பெற்றுக் கொள்வது.
இனிவரும் பதிவுகளில் Student Visa & Skilled Visa இற்கு எப்படி தங்களை தயார்படுத்துவது? விண்ணப்பிப்பது போன்ற விடயங்களைப் பகிர்கிறேன்.
இங்கு ஏதாவது விடயங்களை நான் தவற விட்டிருந்தால், அனுபவசாலிகள், நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


#கமலேஷ்

அவுஸ்திரேலியாவை நான் ஏன் நேசிக்கிறேன் என்பதற்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்,குறுகிய வயதினுள் வாழ்வின் பாதிக் காலத...
07/11/2021

அவுஸ்திரேலியாவை நான் ஏன் நேசிக்கிறேன் என்பதற்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்,
குறுகிய வயதினுள் வாழ்வின் பாதிக் காலத்தினுள் பல முன்னேற்றங்களை அடைய இந்த நாடு உதவியிருக்கிறது.

ஐரோப்பாவில் , இங்கிலாந்தில் இருந்திருந்தால் இப்படி ஓர் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்பேன் யான்.

அப்புறம் முயற்சி உடையோர் , வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வோர் பிழைத்துக் கொள்வார்கள் என்று கூறுவீர்கள், ஆனால் சந்தர்ப்பம் - வாய்ப்புக்கள் - கட்டமைப்புக்கள் ( System) இவை அவுஸ்திரேலியா, கனடா , நியூசிலாந்து , அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக மிக இலகுவான வழியில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாடும் ஓர் குடியேற்ற நாடே, ஆதிக் குடிகள் நாட்டை களவாடியவர்கள், அகதிகள் விடயத்தில் விசா வழங்குவதில் கடும்போக்காளர்கள் என்பது தவிர எனக்கு இந் நாட்டவர் மீது குறை என்று கண்டு பிடிக்கும் அளவிற்கு ஏதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் ப்ளீஸ் பகிருங்கள்.

தமிழைப் படிக்கலாம், தமிழில் தேர்ச்சியடையலாம்.

ஆம் இங்கு ஆரம்ப வகுப்பிலிருந்து VCE எனப்படுகின்ற உயர் கல்விக்குரிய பெறுபேற்றுத் தேர்வு வரை நாம் தமிழை ஓர் பாடமாக கற்கலாம், தமிழில் பரீட்சை எழுதிப் பெறுபேற்றைப் பெற்றால் அதுவும் நம் உயர் கல்விக்குரிய மதிப்பெண்களுள் சேர்க்கப்படும். இது எப்படி?

ஆண்களும் பெண்களும் இங்கு பணிக்குச் செல்வார்கள்.

காரணம் - ஆங்கில மொழி
என்ன தான் ஊரில் இருந்து வரும் போது ஆங்கிலம் பேச முடியாதவராக இந் நாட்டிற்கு வந்தாலும் சில வருடங்களில் தன் தேவையை தானே பேசி முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவர் ஆங்கிலத்தில் தேறி விடுவார்.

கல்வியை வியாபாரமாக விற்பதால்,
*இங்கு கல்வி கற்பதற்கு வயது எல்லை கிடையாது.

ஆங்கில மொழி - கணக்கு
Languag literacy & Numeracy பரீட்சையில்
தேறினால் போதும், நம்மவர்கள் ஆரம்பத்தில் இருந்தே certificate லெவலில் இருந்து ஓர் கல்வியை கற்க முடியும்.

உதாரணம் - இங்கு நான் வந்த காலத்தில்
15,000 இற்க்கும் குறைவான தமிழர்களே வாழ்ந்தார்கள்.
இன்று 75,000 இற்கும் மேல்.

அப்போது படித்து பட்டம் பெற்றோர், படிக்க வருவோர், மற்றும் படித்து தம் துறை சார் பணிக்காக இங்கு வருகை தந்தவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

அகதிகள் என்றால் அவர்கள் அருவருப்பாக பார்ப்பார்கள்.
6-8 தமிழ் கடை தமிழர் ஏரியா என்று சொல்லப்படும் Dandenong இல் இருந்தது.

அதுவும் காது படவே அதிகம் படித்தவர்கள், தம்பி என்ன படிக்கவோ போறியள், படிச்சு முடிப்பதில் பார்க்க உழைச்சுக் கொண்டு ஊருக்குப் போம் என்று ஒரு கிண்டலடிப்பார்கள்.

ஆனால் 2009 இன் பின் அந். நிலமை தலை கீழானது. படகு மூலம் பலர் வந்தார்கள்.
வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஊரில் 0/L முடித்தவருக்கு கொஞ்ச ஆங்கில அறிவு இருந்தாலே போதும். Trade தொடர்பான வேலைகளை இலகுவாக கற்றுத் தேறி சுய தொழில் ஆரம்பிக்கலாம்.

Electrician , plumber , metal fitters, diesel mechanic, auto electrician , butcher , Hair dressers, carpenters, welders
இப்படி ஏராளமான துறைகளில் நம்மவர்கள் இங்கு கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

ஒரு accountant / Civil engineers சம்பாதிக்கும் ஊதியத்தை விட அவர்களின் வருட வருமானம் அதிகம்.

சுய தொழிலை இலகுவாக ஒரு நிறுவனத்தை பதிவு செய்து உருவாக்கும் வசதி.

வீடு வாங்கும் வசதி. இங்கு வீடு, கார் , வியாபாரம் வாங்குவது ஓர் பெரிய விடயமே கிடையாது, அவ்வளவு இலகுவாக்கி வைத்துள்ளார்கள்.

நான் முதலாவது வீடு வாங்கும் போது 25 வயது.
உங்களுக்கு ஒரு நிறுவனத்த முழு நேர பணி 6 மாதங்களிற்கு மேல் இருந்து, கடனுதவி பெறுவதில் சிக்கல் ஏதும் இல்லை என்றால் நம்ம ஊர் போன்று காணியுடன், நில வீடாக 10-15% வீட்டுப் பெறுமதியை முதலாக செலுத்தி உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் கட்ட ஆரம்பிக்கலாம்.

வாடகை வீட்டிற்குரிய மாத காசும் சொந்த வீட்டிற்கு கட்டும் வங்கி கடன் காசும் கிட்டத்தட்ட ஒரே தொகையே.

பக்கத்து வீட்டுக்காரனுக்கு சத்தம் கேட்கும், அவன் வந்து பேசுவான் இப்படி சமாச்சாரங்கள் இங்கு குறைவே, காரணம் பெரிய வீடுகள்.

ஊதியம் - ஏற்கனவே ஓர் காணொலியை பகிர்ந்திருந்தேன், உலகில் ஊதியம் அதிகம் வழங்கும் நாடுகளுள் அவுஸ்திரேலியாவும் ஒன்று .

இதனால் சாதாரணமாக முழு நேரப் பணியில் இருப்பவருக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்த வருமானமாக அரச வரியின் பின் 3000 டொலர் கிடைக்கும். இங்கு நம்மவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த தொகைக்கும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள்.

இங்கு பணிக்குச் செல்லாது அரச செலவில் வாழும் தமிழர்கள் குறைவு.

முதலாவது வீடு வாங்கி 2-4 வருடங்கள் அதற்குரிய கடனை தொடர்ந்து செலுத்தி வந்தாலே போதும் - இரண்டாவது இல்லத்தினை எந்த ஓர் சிக்கலும் இன்றி முதல் வீட்டை மூலதனமாக காட்டி வாங்கலாம் - வாடகைக்கு கொடுக்கலாம்.

குடியுரிமை - கல்வி கற்று இந் நாட்டு குடியுரிமை பெறுவது , skilled visa இல் வருகை இந் நாட்டு குடியுரிமையை இலகுவாகப் பெறலாம்.

அதே போன்று இங்கு வசிப்பவராயின் நிரந்தர வதிவிட உரிமம் ( PR) கிடைத்த பின் 5 வருடங்களினுள் அவுஸ்திரேலியா குடிமகனாகிடலாம்.

முழு நேர பணி தவிர்த்து , பகுதி நேரமாக cleaning வேலை, uber eat, door dash, menu log , Amazon flex இப்படியும் சம்பாதிக்கலாம், விரிவாக பின்னர் பகிர்கிறேன்.

நான் தவற விட்ட விடயங்களை நண்பர்கள் பகிருங்கள்.

நன்றி
#கமலேஷ்

Adresse

Rosny-Sous-Bois

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Puradsifm கமலேஷ் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager


Autres entreprises de médias à Rosny-Sous-Bois

Voir Toutes