துளி வானொலி

துளி வானொலி Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de துளி வானொலி, Station de radio, Paris.
(5)

"தமிழ்போற்றும் நல்லுலகில் ஒருதுளி நமது துளிவானொலி"
“தமிழே எங்கள் முகவரி"
www.thulivaanoli.com
துளியின் புலனஎண்:+33605546867/+447774409468
அனைத்து வலைத்தளங்களையும் ஓரிடத்திற்பெற்றிட
https://linktr.ee/thulivaanoli
நிகழ்வின் :நேரம் பிற்பகல் 04:30

வாழ்க  தமிழ்.உறவுகள் அனைவர்க்கும், இந்நாள் நன்னாளாக ,இனிய  நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும்.இன்று ,நளித்திங்கள் ,௪(04) ஆம்...
18/11/2024

வாழ்க தமிழ்.

உறவுகள் அனைவர்க்கும்,
இந்நாள் நன்னாளாக ,
இனிய நற்றமிழ் வாழ்த்துரித்தாகட்டும்.

இன்று ,நளித்திங்கள் ,௪(04) ஆம் நாள், செவ்வாய்க்கிழமை , திருவள்ளுவர் ஆண்டு ௨௲௫௰௫(2055)..

பொதுநாள்காட்டி ௰௯/௰௧/௨௲௨௪ (19/11/2024).

இன்றையநிகழ்வு : *நூல்படித்தல்*
நாலடியார் தொடர்ச்சி…

நிகழ்வின் நேரம்.

கனடா/ அமெரிக்கா முற்பகல் ௰:௩௦ (10:30)
பிரித்தானியா பிற்பகல் ௩:௩௦(03:30)
ஐரோப்பிய பிற்பகல் ௪:௩௦ (04:30)
இலங்கை / இந்தியா பிற்பகல் ௮:௦௦(08:00)
சிங்கப்பூர்/ மலேசியா பிற்பகல் ௰:௩௦ (10:30)
ஆத்திரேலியா: முற்பகல் ௧௨:௩௦ (12:30)

இந்நிகழ்வில் இணைந்து சிறப்பிக்க அழைக்கவேண்டிய துளியின் புலனயெண்:
௦௦௩௩௬௦௫௫௪௬௮௬௭ ( 0033605546867 )

நிகழ்வைக் கேட்க 🔊இணைய இணைப்புகள்👇🏽

துளியின் அனைத்து வலைத்தளங்களையும் ஓரிடத்திற்பெற்றிட👇🏽

http://station.voscast.com/630b32afcc2ba/?

📲 அன்ரோயிட்:https://apkpure.com/p/com.thuli.vaanoli

📱ஐஓஎசு் : https://apps.apple.com/fr/app/thuli-vaanoli/id6450259598

🎬 முகநூல் நேரலை : https://www.facebook.com/ThuliFM

🌎 இணையத்தளம்: https://www.thulivaanoli.com/

“தமிழே எங்கள் முகவரி”
நன்றி ..
வாழ்க தமிழ் ..!!!

துளி வானொலி  #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #தமிழ்  #வாழ்க_தமிழ்  #தமிழறிவோம்  #நூற்றாண்டு
18/11/2024

துளி வானொலி #துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #தமிழ் #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் #நூற்றாண்டு

18/11/2024

தமிழெண். ஒலிப்பு. எண்

௱௯௰/௧௯௦. நூற்றுத்தொன்னூறு 190
௱௯௰௧ /௧௯௧. நூற்றுத்தொன்னூற்றொன்று 191
௱௯௰௨/௧௯௨. நூற்றுத்தொன்னூற்றிரண்டு. 192
௱௯௰௩/௧௯௩. நூற்றுத்தொன்னூற்றுமூன்று. 193
௱௯௰௪/௧௯௪ நூற்றுத்தொன்னூற்றுநான்கு. 194
௱௯௰௫/௧௯௫. நூற்றுத்தொன்னூற்றைந்து. 195
௱௯௰௬/௧௯௬. நூற்றுத்தொன்னூற்றாறு. 196
௱௯௰௭/௧௯௭. நூற்றுத்தொன்னூற்றேழு. 197
௱௯௭௮/௧௯௮. நூற்றுத்தொன்னூற்றெட்டு. 198
௱௯௭௯/௧௯௯. நூற்றுத்தொன்னூற்றொன்பது. 199
௨௱/௨௦௦. இருநூறு. 200

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழெண் #தமிழ்

18/11/2024

“வரலாறு எனக்கானதன்று தமிழிற்கானது“

தனித்தயென்னுயிர்க்கு எம்மதிப்புமில்லையென்பதை நானேயறிவேன் . பார்த்துப்பார்த்துக்கட்டிய எத்தனையோ கோட்டைகள் அடையாளமேயின்றி அழிந்தொழிந்துபோனதை யெல்லாரும் அறிவர் .

எம்மதிப்புமற்ற இவ்வுயிரைக்காப்பதற்கு ஒருமணித்துளியும் வீணடியேன் . ஆனால் , இவ்வுயிரை ஒரு பாறாங்கல்லிற்கு ஒப்பாக்கி , இருக்கும் நாள்வரை தமிழிற்காகவே யுழைப்பேன் .

இங்கு நான்குறிக்கும் தமிழென்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தைப்பற்றிய , இடத்தைப்பற்றிய பார்வையன்று . இதுவோர் பரந்துவிரிந்த தமிழிற்கான பார்வை .

மொழியிழந்த மாந்தனாய் யாரையும் மடியவிடுவதாயில்லை .

மொழியே பண்பாடு …
மொழியே மரபுரிமை..
மொழியே அரசியல்..
மொழியே வரலாறு ..
அஃதே அடையாளம் .

மொழியறிந்தால் அனைத்து வழிகளும் தானாகப்புலப்படும். மொழியையிழந்தவன் அடையாளத்தையிழந்தவன் . மொழிக்கொலைக்கு துணைநிற்க பலருண்டெனில் மொழியைக்காத்து நிற்க நான்கு தூண்களாவது கிடைக்காதா என்ன ?

உனக்காக வாளேந்த நான் பிறப்பெடுக்கவில்லை .
தமிழிற்காகப்போராடப்பிறந்துள்ளேன் . என்னை நான் உணர்ந்தறிந்தே களத்தில் நிற்கிறேன் . உன்னாற்றல் என்னை யழித்தொழிக்கலாம் . என்னை யழிக்க நீயெடுக்கும் முயற்சியைக்கொண்டே என்தமிழை நான் வளர்த்தெடுப்பேன் .

என்சாவிற்கு என்வரலாற்றை ஒருபோதும் கொடுக்கமாட்டேன் . தமிழர்களிடம் தமிழின் வரலாற்றைக்கொடுக்காமால் சாகவும் மாட்டேன் .

வாழ்க தமிழ்!

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழ் #எண்ணத்துளி #துளியின்துளி துளி வானொலி

18/11/2024

குறளில் பொருள்மயங்குபுணர்ச்சி.

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
அதிகாரம் - 1. கடவுள்வாழ்த்து.
குறள் - 4.
“வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.”

இக்குறளின் நங்கூரச்சொல் ‘யாண்டும்’ எனும் முற்றும்மை. அறுதியிட்டுக்கூறுவதற்காக இம்முற்றும்மையை தெய்வப்புலவர் ஆண்டுள்ளார். அறுதியிடல் துலக்கமாக வெளிப்படவேண்டுமானால் ‘யாண்டும்’ எனும் முற்றும்மை புணராமல் தனித்து நிற்கவேண்டும்.
முற்றும்மை புணராது.

இச்செய்யுட்சீர்கள் நின்றவரிசையே ஆற்றொழுக்காக பொருளை உணர்த்துகின்றன.

செம்மைவடிவம் —
“வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில.”

நன்றி.

முத்தையா சுப்பிரமணி

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் #திருக்குறள் #தமிழ்

 #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #வாழ்க_தமிழ்  #தமிழறிவோம்  #எண்ணத்துளி  #துளியின்துளி
18/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் #எண்ணத்துளி #துளியின்துளி

 #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #வாழ்க_தமிழ்  #இன்றையநாள்
18/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #இன்றையநாள்

https://www.thulivaanoli.com/2024/11/17/23315/
17/11/2024

https://www.thulivaanoli.com/2024/11/17/23315/

துளி வானொலி ------------------ "தமிழே எங்கள் முகவரி " என்பதே தமிழைத் தூயத் தமிழாக வளர்க்க வென்றே தொட

17/11/2024

திருக்குறள்.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
அதிகாரம் - 1. கடவுள்வாழ்த்து.
குறள் - 3.

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.”

இக்குறள் செம்மைவடிவத்தில் பரிமேலழகனாருரை நூலில் அச்சிடப்பட்டுள்ளது. சொற்களை இடம்மாற்றாமல் இதேவரிசையில் ஆற்றொழுக்காக பொருளுணரலாம்.

‘மலர்மிசைக்கண் ஏகினானது மாணடியைச்சேர்ந்தார்’ எனும் தொகாநிலைத்தொடரின் தொகைவடிவமே ‘மலர்மிசையேகினான்மாணடி சேர்ந்தார்’ என்பது. இதனை நெடுந்தொடரெழுவாய் என்பர். செய்யுளில் சீரமைப்பில்வரும்போது இத்தொகைச்சொல் சீர்களாக பிரிந்துவரும். இதனை உரைநடையில் எழுதும்போது இடைவெளியில்லாத ஒற்றைச்சொல்லாய் எழுதவேண்டும்.
‘தொகைச்சொற்கள் ஒருசொன்னடைய’ என்கிறது இலக்கணம்.

நன்றி.
முத்தையா சுப்பிரமணி

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் #திருக்குறள்

 #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #வாழ்க_தமிழ்  #எண்ணத்துளி  #துளியின்துளி
17/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #எண்ணத்துளி #துளியின்துளி

16/11/2024

காற்றெங்கிலும் காந்தள் பூக்களின் நறுமணம்..!
ஏனோ வாகை மரத்தில் செண்பகங்களின் கூட்டம்..!
சிரிக்க மறந்து அழுது கொண்டேயிருக்கும்
ஈழமாந்தக்கண்கள் தோறும் ஏக்கம் ..!
ஏதிலி மக்களிடம் இயலாமையின் தாக்கம் ..!
பசையிழந்த உயிரினங்களாய்
நம்வாழ்வியலில் ஒரு பக்கம் அப்பட்டமாக நீக்கம் .!

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #பா #காந்தள்

16/11/2024

தமிழெண். ஒலிப்பு. எண்

௱௮௰/௧௮௦. நூற்றெண்பது. 180
௱௮௰௧ /௧௮௧. நூற்றெண்பத்தொன்று 181
௱௮௰௨/௧௮௨. நூற்றெண்பத்திரண்டு. 182
௱௮௰௩/௧௮௩. நூற்றெண்பத்துமூன்று. 183
௱௮௰௪/௧௮௪ நூற்றெண்பத்துநான்கு. 184
௱௮௰௫/௧௮௫. நூற்றெண்பத்தைந்து. 185
௱௮௰௬/௧௮௬. நூற்றெண்பத்தாறு. 186
௱௮௰௭/௧௮௭. நூற்றெண்பத்தேழு. 187
௱௮௭௮/௧௮௮. நூற்றெண்பத்தெட்டு. 188
௱௮௭௯/௧௮௯. நூற்றெண்பத்தொன்பது. 189
௱௯௰/௧௯௦. நூற்றுத்தொன்னூறு. 190

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழெண் #தமிழ்

 #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #வாழ்க_தமிழ்  #தமிழறிவோம் துளி வானொலி
16/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் துளி வானொலி

 #துளிவானொலி  #தமிழே_எங்கள்_முகவரி  #வாழ்க_தமிழ்  #இன்றையநாள் துளி வானொலி
16/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #இன்றையநாள் துளி வானொலி

16/11/2024

குறளில் பொருள்மயங்குபுணர்ச்சி - 2.

பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.

பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
அதிகாரம் - 1. கடவுள்வாழ்த்து.
குறள் - 2.
“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.”

இக்குறளில் ‘கற்றதனால்’ எனுஞ்சொல் புணராமல் தனித்து நிற்கவேண்டும். இக்குறளின் கரு/தலையாயசொல் இச்சொல்லே. எனவே இச்சொல் முதன்மையுற்று சொல்லுவோரது உணர்ச்சியை நாமும் பெற வேண்டுமானால் தனித்துநிற்கவேண்டும். இவ்விடத்து ‘விட்டிசை’ எனும் இலக்கணம் செயல்படும். விட்டிசை நிகழுமிடங்களில் புணர்ச்சி நிகழாது.

பொருணர்முறையில், ‘வாலறிவனற்றாடொழாஅர் எனின் கற்றதனால் ஆயபயனென்கொல்’ என்றாகும். ‘வாலறிவனது நற்றாள்களைத்தொழார்’ எனவிரியும் தொகாநிலையின் தொகைநிலையே ‘வாலறிவனற்றாடொழாஅர்’ என்பது.

செம்மைவடிவம் —
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.”

நன்றி.

முத்தையா சுப்பிரமணி

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழறிவோம் #திருக்குறள் துளி வானொலி

16/11/2024

துளி வானொலி #துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழரசியல் #அரசியல் #யாழ்ப்பாணம் #இலங்கை

யாழ்மக்களால் புகட்டப்பட்டபாடமே எமக்கான தோல்வி . எம்மக்கள் எம்மீது கொண்ட சினத்தின் வெளிப்பாட்டையே இத்தேர்தலில் எம்மால் பார்க்கமுடிந்தது .

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

16/11/2024

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழ் #எண்ணத்துளி #துளியின்துளி #மேதகு

16/11/2024

தமிழெண். ஒலிப்பு. எண்

௱௭௰/௧௭௦. நூற்றெழுபது. 170
௱௭௰௧ /௧௭௧. நூற்றெழுபத்தொன்று 171
௱௭௰௨/௧௭௨. நூற்றெழுபத்திரண்டு. 172
௱௭௰௩/௧௭௩. நூற்றெழுபத்துமூன்று. 173
௱௭௰௪/௧௭௪ நூற்றெழுபத்துநான்கு. 174
௱௭௰௫/௧௭௫. நூற்றெழுபத்தைந்து. 175
௱௭௰௬/௧௭௬. நூற்றெழுபத்தாறு. 176
௱௭௰௭/௧௭௭. நூற்றெழுபத்தேழு. 177
௱௬௭௮/௧௭௮. நூற்றெழுபத்தெட்டு. 178
௱௬௭௯/௧௭௯. நூற்றெழுபத்தொன்பது. 179
௱௮௰/௧௮௦. நூற்றெண்பது. 180

#துளிவானொலி #தமிழே_எங்கள்_முகவரி #வாழ்க_தமிழ் #தமிழெண் #தமிழ்

Adresse

Paris

Téléphone

+33605546867

Site Web

http://station.voscast.com/630b32afcc2ba/, http://www.thulivaanoli.com/, https://ap

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque துளி வானொலி publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à துளி வானொலி:

Vidéos

Partager


Autres Station de radio à Paris

Voir Toutes