04/10/2024
*பரமம் பவித்ரம்*
தர்ப்பை புல்லை வைத்து கொண்டு, மந்திரத்தை ஜெபித்து பாருங்கள்* மந்திர ஆற்றலை உணர்வீர்கள் -
ஆம் , தர்ப்பை பாயில் அமர்ந்து தர்ப்பையை இரண்டாக சுண்டி விரல் மோதிர விரல் நடுவில் இடுக்கி கொண்டு , இரட்டை படையில் தர்ப்பயை சம்மணமிட்ட இரண்டு கால்கள் கீழே வைத்து ஆசமனம் செய்து தரப்பயை பவித்ரம் போல் செய்து மோதிர விரலில் அணிந்து மீண்டும் ஆசமனம் செய்து வாயை துடைத்து துடைத்த கை விரல்களை அலம்பி பின் சங்கல்பம் செய்து கொண்டு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது உங்கள் வசம் ஸித்தி ஆகி விடும் என்று *மந்த்ர வஸ்ய கல்ப ஸூத்ரம்* என்ற கேரள தாந்த்ரீக நூலில் சொல்லி யுள்ளது !!!
கடவுளுக்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமா?
உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டாலே போதும்.
சில பேரால் இறைவழிபாட்டை மனநிறைவோடு செய்ய முடியாது. கண்களை மூடி சாமி கும்பிட முடியாது. ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து அந்த மந்திரத்தை சித்தி செய்துகொள்ள முடியாது.
கண்களை மூடி தியான நிலையில் மனதை ஒரு நிலைப் படுத்த முடியாது. மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இறைவனுக்கும் நமக்கும் இடையே நிறைய இடை வெளி இருப்பது போல தோன்றும்.
அந்த இடை வெளியை குறைத்து இறைவனடி சேர, இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்த இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும்.
எதிர்மறை ஆற்றலை அழிக்கும் வல்லமை கொண்ட, *நஞ்சையும், அமுதமாக மாற்றக்கூடிய, அந்த காலம் முதல் இந்த காலம் வரை தேவர்களாலும் முனிவர்களாலும் ரிஷிகளாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் தர்ப்பைப் புல். தர்ப்பை புல் இருக்கும் இடத்தில் பாம்பு வராது - விஷ சக்திகளுக்கு விரோதி தான் தர்ப்பை*
இன்றும் பிராமணர்கள் இதை உபயோகம் செய்கிறார்கள் - ஹோமம் நடக்கக் கூடிய இடத்தில், மந்திரங்கள் ஒலிக்கும் இடத்தில் இந்த தர்ப்பைப் புல்லுக்கு முதலிடம் உண்டு.
ஒரு சிறிய ஹோமம் நடத்தினாலும் அந்த இடத்தில் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தர்ப்பை புல்லை கையில் மோதிரமாக செய்து போட்டு வைத்திருப்பார்கள்.
தர்ப்பைப் புல் பாய் விரித்து அதன் மீது அமர்ந்து மந்திரத்தை உச்சரிக்க கூடிய வழக்கம் உண்டு.
கிரகண காலங்களில் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறக்கூடாது என்பதற்காக அதில் இந்த தர்ப்பைப் புல்லை போட்டு வைக்கும் வழக்கமும் நம்மிடத்தில் உண்டு.
இத்தனை சக்திகளையும் கொண்ட இந்த தர்ப்பைப் புல்லுக்கு மருத்துவ குணங்களும் அதிகம். அதேசமயம் மகத்துவ குணமும் அதிகம்.
தினமும் உங்களுக்கு மந்திரத்தை சொல்லக்கூடிய பழக்கம் இருந்தால், மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுடைய இரண்டு உள்ளங் கைகளிலும் ஒரு சிறிய துண்டு தர்ப்பை புல்லை வைத்து கொண்டு, மந்திரத்தை ஜெபித்து பாருங்கள். *மனம் ஒருநிலைப்படும். மந்திரம் உங்களுக்கு வசியமாகும். மந்திரம் உங்களுக்கு ஸித்தியாகும்.*
மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும்.
கோவிலுக்கு செல்லும்போது இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை எனும் பட்சத்தில், வீட்டில் இறை வழிபாடு செய்யும் போதும் கோவிலுக்கு செல்லும் போதும் உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு சிறிய துண்டு தர்ப்பை புல்லை வைத்துக் கொள்ளுங்கள். இறைவழிபாட்டில் உங்களுடைய மனம் ஈடுபாட்டுடன் இருக்கும்.
ஒரு சில நாட்களில், இறைவனுக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து நெருக்கம் ஏற்படுவதை அனுபவ பூர்வமாக உணர்வு பூர்வமாக உணர்வீர்கள்.
உதாரணத்திற்கு இப்போது நம் எல்லாருடைய தேவைகளுக்கும் அத்தியாவசியமாக அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் என்றால் அது பணம்.
உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய பணம் வேண்டும் என்று நீங்கள் பல வழிகளில் முயற்சி செய்து, இறைவனிடம் வேண்டுதல் வைத்து இருப்பீர்கள்.
ஆனால் உங்கள் கையில் இந்த தர்ப்பைப் புல்லை வைத்துக்கொண்டு கடன் சுமை தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், சொத்து சுகம் சேர வேண்டும், என்று வேண்டுதல் வைத்து பாருங்கள்.
முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லும் போதும், மங்கள கரமான காரியங்கள் தடைபடாமல் நடக்க வேண்டு மென்றாலும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு சென்றாலும் சரி, உங்களுடைய கையில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் செல்லக் கூடிய காரியம் நல்லபடியாக நடக்கும். *தர்பை புல் கட்டை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்து, மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றித்தான் பாருங்களேன்.*
நன்மை நடந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நன்மை மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு *வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தர்ப்பை புல் !!*
தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும்.
கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்து கிறோம். *தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர் சக்திகளின் நட மாட்டம் இருக்காது.*
*தர்ப்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது. முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப் படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.*
தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப் படுகிறது. தர்பை சுபத்தை, புனிதத் தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
தர்ப்பை புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. தர்பைக்கு *அக்னி கற்பம்* என்பது பெயர்.
*இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.*
*அக்ர ஸ்தூல முடையது பெண் தர்பை, மூல ஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை. ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்*
*” தர்ப பில் (தர்பை ) மகிமை ”*
உலகம் தோன்றிய நாள் முதலாய் தர்ப பில்களும் தோன்றின என்பது வரலாறு.
தர்ப பில் (தர்பை ) எல்லா சுப மற்றும் அசுப கார்யங் களிலும் பிரதான இடம் வகிக்கிறது.
தர்ப பில் மிகவும் பவித்ரமானது, சுத்தமானது. வெளியிலிருந்து வரும் தீய சக்திகளை தடுக்கும் வல்லமை படைத்தது. தர்ப பில்லுக்கு மற்றொரு பெயர் “குஶம் “.
தர்ப பில் அடியில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும் நுனி பாகத்தில் ருத்ரனும் இருக்கின்றனர் .
*தர்பை புண்ய பூமி தவிர வேறு எங்கும் வளராது.* இதற்கு அக்னி கற்பம் என்று பெயர். இது நீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீரிலே மூழ்கி இருந்தாலும் அழுகாத தன்மை கொண்டது. ” அம்ருத வீர்யம் ” என்று பெயர்.
தர்ப்பை புல் ஆதியிலிருந்து கிரியை மார்க்கங்களில் இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப் படுகிறது.
ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும். நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இறைவழிபாடு ஜெபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில் கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது.
விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தரப்பை புல்லை போடுவார்கள் மோதிர விரல், மூளையுடன் சம்பந்தப்பட்டது .
ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்கு செல்கிறது. *கிரகண காலத்திலும் அமாவாசை யிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும்,*
ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.
தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், தர்பை உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்ச லேங்களில், தாமிரத்தில் மின்சார சக்தியை கடத்தும் சக்தியை போல் தர்பையிலும் உண்டு.
தங்கம், வெள்ளி கம்பிகளின் இடத்தில் பிரபஞ்சத்திலுள்ள சக்திகளை ஆகர்ணம் செய்யும். *எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும்.*
*பவித்ரங்கள்* :
அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பை களாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங் களுக்கு 5 தர்பை களாலும், சாந்தி கர்ம காரியங் களுக்கு 7 தர்பை களாலும் ( பவித்ரம் ) தர்பை மோதிரம் போட வேண்டும்.
தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலதுகால் ‘ *அபஸ்மரா* ’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும்.
அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார்.
அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடி யையும் வைத்து இருப்பார்.
கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும் அது வீழ்ந்து வணங்கும் பக்தர்களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும்.
பித்ரு காரியங்களில் தர்பை பிரதானமாக பயன்படுத்துவதால் முதல் காரகனாக “சனி ” பகவான் உள்ளார். ( எள் விஷ்ணுவின் வியர்வை யிலிருந்து தோன்றியதாலும் )
பிரசித்தமான சனி பகவான் ஆலயம் திருநள்ளாறு.
அங்கு சிவ பெருமான் தர்பாரண் யேஸ்வரர் என்ற நாமத்துடன் அருள் பாலிக்கிறார். *அந்த ஆலயம் தர்பை காட்டுக்குள் அமைந்துள்ள தால் இப் பெயர் ஏற்பட்டது. இங்கு ஸ்தல வ்ருக்ஷம் தர்பை ஆகும். இங்குள்ள இறைவனுக்கு தர்ப்பாரண் யேஸ்வரர்* என்றே பெயர்....
இவ்வளவு மகிமையை கொண்ட தர்ப பில் லினை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருப்பது மிகவும் உத்தமமானது.
இறைவனால் இயற்கை வாயிலாக படைக்கப்பட்ட தர்பயை சாஸ்திரங்கள் சொன்ன விதத்தில் பயன் படுத்தி பரிபூரண நலன்கள் பெற்று வாழ்வோமாக……..
அதர்வண வேத தர்ப்பை மந்திரங்கள்
யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷ சு வர்ம தே
தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :
சதம் தே தர்ப வர்மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே
தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:
—-அதர்வ.19-30
ஏ தர்ப்பையே ! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங் களையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்து வாயாக.
ஓ தர்ப்பையே !
நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்தியை வெளியிடுக்றாய்.
நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–
அதர்வம், 19-31
சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ர பர்ண உத்திர:
தர்போ ய உக்ர ஔஷதிஸ் தம் தே பந்தாம் யாயுஷே –19-31
ஓ, மனிதனே ! நான் (மருத்துவன்) உன் கையில் குஶம் என்ற புல்லைக் கட்டுகிறேன்.
இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.
தர்ப்பைப் புல்லுக்கு ‘குஶம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது.
இதை சங்க காலத் தமிழர்களும் பயன் படுத்தியதைப் புற நானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன.
*சங்ககால தமிழர்கள் விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.*
தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் .
அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர்.
இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.
பிராமணர்களின் ஆயுதம் தான் தர்ப்பை புல் !
பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.
இதோ பிராமணர் களின் சக்தி பற்றி:–
வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச
சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குஶ:
இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு
பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே ப்ரம்ம ராக்ஷசா:
விப்ராங்குலி
குஶம் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:
பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+
குஶம்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராஷஸர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!
குஶ பாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்ப வர்ஜித:
ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராஶ்மிவா நல:
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம் காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)
அபவித்ர கர: கஸ்சித் ப்ராம்மணே ய உப ஸ்ப்ருசேத்
அ பூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யா சமனம் ததா
சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.
அங்குஷ்டானா
மனாமிகாப்யாம்
து சின்னம் பைதாமஹம் சிர:
ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:
கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.
பாவனார்த்தம் ததோ ஹஸ்தே கச காஞ்சன தாரணம்
புஞ்சானஸ்து விசேஷேன நான்யதோ தேன லிப்யதே
கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.
குஶ்னோ உப விஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:
தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.
*ஆதாரம்* –
**தர்ப்பைகளின் பிரசம்ஸை* –*என்று கோபில ஸுத்ரம்....
💐💐💐💐💐💐
Written & Compiled by
M.S. Ramesh - Salem
Mob - 8754780924