12/27/2024
வடக்கு கிழக்கில் சுனாமி அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான பணிகளைச் செயல்படுத்த, அரசாங்கமும் விபு இயக்கமும் Post-Tsunami Operational Management Structure (P-TOMS) என்கின்ற பொதுக்கட்டமைப்புக்கு உடன்பட்டிருந்தனர்.
இந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு அரசியல் அதிகாரம் இருக்கவில்லை . அதே போல P-TOMS உருப்படியான எந்த நிர்வாக வலிமையும் கொண்டிருக்கவில்லை
மாறாக, இது மிக வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட மிக ஒரு தற்காலிக மனிதாபிமான ஒழுங்கமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது
ஆழி பேரலையில் உயிர், உடைமைகள், வீடு வாசல்கள், தொழில் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகி நின்ற அப்பாவி மக்களுக்கு மறுவாழ்வளிக்கவே
P-TOMS உருவாக்கப்பட்டது
ஆனால் ஜேவிபி மேற்படி பொது இணக்கப்பாட்டை தனிநாடு நோக்கிய வரைபடமாக சித்தரித்தது
நாடு பூராகவும் பெருமெடுப்பில் போராட்டங்களை நடத்தியது
ஜேவிபியின் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்
குறிப்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை இன்றைய அமைச்சர் திரு சுனில் ஹந்துநெத்தி அவர்களே ஒழுங்கமைத்தார்
ஜேவிபியின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் பொதுக்கட்டமைப்பு கிளிநொச்சியில் இயங்க தடை விதித்தது
அதே போல P-TOMS திட்டங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் தடை விதித்தது
P-TOMS நிதியம் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது
இதுமாத்திரமின்றி திட்ட முகாமைத்துவ குழு செயற்படவும் அனுமதி மறுக்கப்பட்டது
இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் P-TOMS முழுமையாக நீர்த்து போக செய்யப்பட்டது
இயற்கை பேரழிவில் ஒரே நாளில் 6,000 உயிர்களை பலி கொடுத்த அப்பாவி மக்களுக்கான மறுவாழ்வு பொறிமுறை முற்றாக முடக்கப்பட்டது
தீர்ப்பு வெளியாகிய வேளையில், நீதிமன்ற வாயிலில் இன்றைய அமைச்சர்களான திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துநெத்தி, திரு சந்திரசேகரர் உள்ளிட்டோர், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஜேவிபி நேர்மையாக அணுகும் என எதிர்பார்க்கும் சில தரப்புகள், இன்றைய ஆழிப்பேரலை நினைவு நாளிலாவது, அப்பாவி மக்களின் மறுவாழ்வுக்கு எதிராக ஜேவிபி ஆடிய சன்னதங்கள் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்.
வரலாறே உண்மையான வழிகாட்டி.
நன்றி: இனமொன்றின் குரல்