Thaalam FM

Thaalam FM Thaalam FM 88.9 HD3 is a 24 Hours Tamil Radio. Crystal Clear Broadcast GTA & Beyond.
(11)

09/20/2024

09/15/2024

Vijaya Jewellery's 2024 Audi A3 Car Winner

09/15/2024

Drawing the Lucky Winner of Vijaya Jewellery's 2024 Audi A3!

09/15/2024
09/05/2024

🎉 Happy Labour Day! Today, we honor the hard work and dedication of everyone making a difference. Enjoy the day off—you'...
09/02/2024

🎉 Happy Labour Day! Today, we honor the hard work and dedication of everyone making a difference. Enjoy the day off—you've earned it!

உங்கள் முதல் தேர்வு என்ன???
08/30/2024

உங்கள் முதல் தேர்வு என்ன???

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள ந...
08/29/2024

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.

நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.

இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)

எனினும் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.

அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள்.

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.

மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள் நடைபெறுகின்றன.

ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.

வருடாந்த மகோற்சவம் ஆடி ஆமாவாசையிலிருந்து 6ம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது.

இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.

அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புபூசம், சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு கோயிலின் அர்ச்சனைப் பற்றுச்சீட்டுக்கள் பல விலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ள போதிலும் நல்லூரான் ஆலயத்தின் பற்றுச்சீட்டு இன்றுவரை ஒரு ரூபாவிற்கு மட்டுமே விற்கப்படுகின்றது.

அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம்ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது

ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டி நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கம் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Sheppard Avenue East
Toronto, ON
M1B3W3

Alerts

Be the first to know and let us send you an email when Thaalam FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thaalam FM:

Videos

Share

முத்தமிழ் வானொலி-Muthamil FM 88.9 HD 3

முத்தமிழ்

டொரண்டோ நகரில் குடியேறிய தமிழர்கள் தமது வர்த்தகம், வசதியான வீட்டுச் சூழல் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்ற பல்வேறு விடயங்களுக்காக டொரன்டோ நகரிற்கு வெளியே பெரும்பாகப் பகுதிகளுக்கு நகரத் தொடங்குகிறார்கள்.

டொரண்டோ மட்டுமல்லாது டொரண்டோப் பெரும் பாகத்திலுள்ள தமிழ் மக்களையும் சென்றடையும் 24 மணி நேரத் தமிழ் வானொலியின் தேவையை நிறைவு செய்யும் வகையில் FM 88.9 HD3 என்ற அலைவரிசையில் ஒலித்துக் கொண்டிருக்கும் முத்தமிழ் மிக விசாலமான நிலப்பரப்பைச் சென்றடையும் துல்லிய ஒலிநயம் கொண்ட ஒரேயொரு தமிழ் வானொலியாகும்.

பயணங்களில் வழித் துணையாகவும் நீண்ட தூரம் ஒலிக்கும் ஒரு வானொலியாகவுமுள்ள முத்தமிழ், கலை இசை தமிழ் என்ற பல்வேறு பரிணாமங்களில் உங்களைப் பல வழிகளிலும் வந்தடைகிறது.

Nearby media companies


Other Toronto media companies

Show All