Evo Stylish

Evo Stylish ❤ "நெஞ்சமே புலியாகப் பயின்றிடு; அஞ்சாமை உன் இயல்பாகட்டும்"❤
(2)

08/29/2024

நான் வேலைக்கு போறேன்...
என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா! கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர்:* நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர்: உங்கள் மனைவி..?

கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர்: குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

*கணவர்:* என் மனைவி தான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே. சும்மாதான் இருக்கா.

*நிபுணர்:* தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?

*கணவர்:* அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

*நிபுணர்:* உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?

*கணவர்:* என் மனைவி தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே.

*நிபுணர்:* பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*கணவர்:* மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்கு தான் வேலையில்லையே

*நிபுணர்:* மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

*கணவர்:* நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

*நிபுணர்:* பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*கணவர்:* இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

*மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.*

ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.

நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.

எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர் கொண்டபடி!

இதை படிக்கும் சகோதர ஆண்களே உங்கள் மனைவியை மதியுங்கள் அவளுக்கும் ஓய்வு கொடுங்கள் மனரீதியாக..

இதில் இன்னும் மோசம் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை.

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

08/29/2024

எப்போதும் நான்
நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
🥹🥹🥹🥹🥹🥹

08/28/2024

வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த எனக்கு உன்னை பார்த்த பின்
வாழ வேண்டும் என்ற ஆசை
அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது
❤️😘😘😘😘😘😍🥰😘🤗

08/19/2024

Life ல் சின்ன சின்ன விஷயங்கள்
எவளோ சந்தோஷத்த தருதுல
நமக்கு ரொம்ப புடிச்சவங்ககிட்ட இருந்து வர்ர அந்த good morning, good night Msg
சாப்டியா Time க்கு சாப்டுனு ஒரு Care ஹோட சொல்றது
Road cross பன்னும் போது நம்ம கைய புடிச்சுக்கிறது.
இந்த மாதிரி நிறைய இருக்கு
இது சின்ன விஷயமா தெரியலாம்
But it's very special
Little things ❤❤

டீ  குடிக்கிற பழக்கமே இல்லை ன்னு சொல்றவன் : கஞ்சன்,ஒரு நாளைக்கு இரண்டு டீ தான் சொல்றவன் : சுயநலவாதி, ஒரு நாளைக்கு நாலு ட...
08/17/2024

டீ குடிக்கிற பழக்கமே இல்லை ன்னு
சொல்றவன் : கஞ்சன்,

ஒரு நாளைக்கு இரண்டு டீ தான்
சொல்றவன் : சுயநலவாதி,

ஒரு நாளைக்கு நாலு டீ
குடிப்பவன் : படிப்பாளி

ஒரு நாளைக்கு எட்டு டீ
குடிப்பவன் : அறிவாளி,

ஒரு நாளைக்கு 12 டீ
குடிப்பவன் : அரசியல்வாதி,

யாராவது டீ வாங்கி கொடுத்தால்
மட்டும் குடிப்பவன் : குடிகாரன்,

ஒரு நாளைக்கு 15 டீ வரைக்கும்
குடிப்பவன் : உழைப்பாளி.

ஒரு நாளைக்கு 15 டீ க்கு மேல்
குடிப்பவன் : வேலையில்லாதவன்.

டீ அவ்வளவா குடிப்பது இல்லை னு
சொன்னா : வேற ஏதாவது வாங்கி தா னு அர்த்தம்.

இப்ப தான் நான் டீ குடிச்சேன் னு
சொன்னா : காசு நான் கொடுக்க மாட்டேன்
அர்த்தம்,

உனக்கு வேணும்னா டீ சொல்லு ன்னா :
என்கிட்ட காசு இல்லை னு அர்த்தம்....

படித்ததில் பிடித்தது. ...

😂

சாப்பிட்டால் வயிறு மட்டும் தான் நிறையும்  ஆனால் சாப்ட்டியானு  நம்ம மனசுக்கு பிடிச்சவங்க கேட்கும் போது தான் மனசும் நிறைய...
08/17/2024

சாப்பிட்டால் வயிறு
மட்டும் தான் நிறையும்
ஆனால் சாப்ட்டியானு
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க
கேட்கும் போது தான்
மனசும் நிறையும் அது ஒரு வரம் ....❤️

08/16/2024

❤அழகிய ஆண் மகன்❤

1️⃣ எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லாதவர்

2️⃣ உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டும் சகித்துக் கொண்டும் சாப்பிடுவார்.

3️⃣ எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேசாதவர். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பவர்

4️⃣ மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5️⃣ உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6️⃣ உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7️⃣ உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8️⃣ உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9️⃣ அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

🔟 உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

1️⃣1️⃣ ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

வாழ்க்கையில் இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்

மனைவி_மட்டுமல்ல
நல்ல_கணவன்_அமைவதும்
இறைவன்_கொடுக்கும்_வரம்தான்

அழகான_வாழ்க்கை_என்பது ஆடம்பரத்தை_சார்ந்தது_அல்ல., அன்பையும்_அமைதியையும்_சார்ந்தது..

❤நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு
இதில் பல சான்றுகள் உள்ளன.

"நெருங்கிய வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடு." "Prioritize success in your immediate life."   @
08/12/2024

"நெருங்கிய வாழ்க்கையில்
வெற்றிக்கு முக்கியத்துவம் கொடு." "Prioritize success in your immediate life."
@

08/09/2024

- என்னங்க பெரிய எதிர்பார்ப்பு...❤️🤗🥹

காலைல Good Morning நா-யேன்னு ஒரு Text Message இல்லன்னா ஒரு Voice note...😊

அப்புறமா சாப்ப்டியாடான்னு ஒரு கேள்வி, சாப்டலன்னா Timeக்கு சாப்ட மாட்டியா ஒரு சின்னதா திட்டு...😍

இடையிடைய எங்க இருக்க?, என்ன பண்ற?, எங்கயும் போறன்னா சொல்லிட்டு போன்னு Message, அப்டி சொல்லாம போயிட்டா ஏன் சொல்லலன்னு சின்னதா சண்ட....❤

நாம எவ்ளோ வேலையாவோ, இல்ல யார் கூட இருந்தாலும் நடுல Call பண்ணிட்டு Love you சொல்லிட்டு தான் Call cut பண்ணணும்னு ஒரு அழகான இம்சை...💙✨

நாம Down ah feel பண்ணி அத மனசு விட்டுப்பேசுற எல்லாத்தையுமே பொறுமையா கேட்டுட்டு இருந்திட்டு, நான் இருக்கன்னு சொல்லுற அந்த வார்த்த...❤️🥰

அப்புறமா பேச எதுவுமே இல்லாம இருந்தாலும் பேசித்தான் ஆகனும்னு சொல்ற கண்டிப்பு...😊

- காதல் அழகுதான் - ❤

"மனதை ஒருமுகப்படுத்திக் கொள் எதிர்மறையான எண்ணங்களை விரட்டிவிடு வெற்றியின் வழிகள் உன்னை நோக்கி திறந்திருக்கும்."Focus you...
08/09/2024

"மனதை ஒருமுகப்படுத்திக் கொள் எதிர்மறையான எண்ணங்களை விரட்டிவிடு வெற்றியின் வழிகள் உன்னை நோக்கி திறந்திருக்கும்.
"Focus your mind Drive away
negative thoughts
The ways of success will be open to you.

❤ "முயற்சியின் சுவையை உணரு தோல்விகளை ஏற்று அதிலிருந்து கற்றுக்கொள் வெற்றிக்கான வாசலை உன்னால் திறக்க முடியும்."Experience...
08/08/2024

❤ "முயற்சியின் சுவையை உணரு தோல்விகளை ஏற்று அதிலிருந்து கற்றுக்கொள் வெற்றிக்கான வாசலை உன்னால் திறக்க முடியும்.
"Experience the taste of effort
Accept failures and learn from them
You can open the door to success. ❤

❤ "பிழைகளிலிருந்து கற்றுக்கொள், அவை உன்னை வளர்ச்சியடைய வழிவகுக்கும்." "Learn from mistakes, they will pave the way for y...
08/05/2024

❤ "பிழைகளிலிருந்து கற்றுக்கொள்,
அவை உன்னை
வளர்ச்சியடைய வழிவகுக்கும்."
"Learn from mistakes,
they will pave
the way for your growth." ❤

❤ "கடினமான பாதைகளே வெற்றிக்கு வழிகாட்டும்." "The toughest paths pave the way for success." ❤
08/04/2024

❤ "கடினமான பாதைகளே
வெற்றிக்கு வழிகாட்டும்."
"The toughest paths
pave the way for success." ❤

❤ " இன்றைய தோல்விகள் நாளை வெற்றிகளாக மாறும்." " Today's failures will turn into tomorrow's successes. " ❤
08/04/2024

❤ " இன்றைய தோல்விகள்
நாளை வெற்றிகளாக
மாறும்."
" Today's failures
will turn into
tomorrow's successes. " ❤

"கடினமான உழைப்பே வெற்றியின் அடிப்படை, அதை நெருங்குங்கள்.""Arduous labor is the foundation of success, embrace it." ❤
08/03/2024

"கடினமான உழைப்பே
வெற்றியின் அடிப்படை,
அதை நெருங்குங்கள்."
"Arduous labor
is the foundation
of success,
embrace it." ❤

" உன் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், அது உன்னை வெற்றிநோக்கி அழைத்துச் செல்லும்." "Cultivate self-confidence...
08/03/2024

" உன் வாழ்க்கையில்
தன்னம்பிக்கையை
வளர்த்துக்கொள்,
அது உன்னை வெற்றிநோக்கி
அழைத்துச் செல்லும்."
"Cultivate self-confidence in your life,
it will lead you towards success"

😥🖤
08/02/2024

😥🖤

08/02/2024

பெண்ணின்_திருமணம்

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கைபெண்களை...புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்_பெண்களை.
வாழ்க வளத்துடன்! வளர்க நலமுடன்!

08/01/2024

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த 13 வழிகள்...✍🏾

1: உங்கள் குரலைக் குறைக்கவும்
அவளைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்?

2: காதலில் செய்யுங்கள்
காதலில் திருத்தம் செய்ய வேண்டும். வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.

3a: விமர்சிக்க வேண்டாம்
அவளை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது. ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள். ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.
திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்
திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல

3b: கணவர் A கூறுகிறார்
இது என்ன வகையான உணவு?
இது பாப்கார்னா அல்லது வறுத்த அரிசியா?
சிறந்த வீட்டுப் பயிற்சியுடன், சிறப்பாக சமைக்கக் கூடிய, விவேகமான மனைவியை நான் எப்படி மணந்து கொள்ள விரும்புகிறேன்.
கணவர் பி கூறுகிறார்
அன்பே இந்த அரிசியில் நேற்று நீங்கள் செய்ததைப் போலல்லாமல் இது மிகவும் காரம் மற்றும் உலர்ந்தது. நமது ஆரோக்கியம் காரணமாக உப்பை வேறு எந்த நேரத்திலும் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கணவன் ஏ விமர்சித்த போது கணவன் பி தன் மனைவியை காதலில் திருத்தினார்
உங்கள் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்

4 எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள்
நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

5 உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள்
உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.

6 பொதுவில் அவளைத் திருத்த வேண்டாம்
உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும்.

7 கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும்
கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.

8 அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம்
அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்.
"உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?" எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?" "அப்படியா?"

9 பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்
விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.

10 அவள் பெண்ணைத் தாக்காதே
"மற்றும் நீ உன்னை ஒரு பெண் என்று சொல்கிறாயா?, நல்லொழுக்கமுள்ள பெண்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள், நான் உன்னை மாற்றுவதற்கு முன் நீ மாறுவது நல்லது!" இது மிகவும் தவறு, செய்யாதீர்கள்

11 அவளுடைய கண்ணியத்தைத் தாக்காதே
நீங்கள் உணர்வுள்ள ஒருவரைப் போல நடந்து கொள்ளவில்லை, நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் பள்ளிக்குச் சென்றதாகச் சொன்னீர்கள், அது எனக்கு சந்தேகம்."
நீங்களும் கல்லூரியை கடந்து செல்பவர் போல் பேசாமல் இருப்பது மிகவும் தவறு.

12 அமைதியான நேரத்தில் அதைச் செய்யுங்கள்
பெரும்பாலான கணவர்கள் கோபத்தின் உஷ்ணத்தில், தவறான புரிதலின் உச்சக்கட்டத்தில், கோபம் ஏற்கனவே கூரையைத் தாக்கியபோது, ​​​​சரிசெய்ய விரும்புகிறார்கள். சரி செய்ய இது சிறந்த நேரம் அல்ல, அது சிறிதளவு அல்லது பலனைத் தரும்.

13 உதவி கரம் கொடுங்கள்
சரிசெய்வதற்கான சிறந்த வழி, உதாரணத்திற்கு வழிநடத்துவது, உதவிக் கரம் கொடுக்க சமையலறைக்குள் நுழைந்து, சமையலறையில் நடப்பதைத் திருத்திக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடாதீர்கள்.
மனைவிகள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்கள், உங்களுடையதைப் பாராட்டவும், சிறந்த மனைவியாகவும் தாயாகவும் இருக்க அவளுக்கு ஆதரவளிக்கவும்.

உங்கள் வாழ்க்கையில் உங்கள் மனைவி ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் முதலில் அவளுக்காக ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும்.

07/31/2024

~Some Truth.....💁🏻‍♀️

ஒரு சிலர் கூட நம்ம பேசுறத நல்லாவே கொரச்சிருப்பம் அவங்களும் அப்போ இருந்த Bond la சுத்தமா இருக்க மாட்டாங்க...>>>

Reason நம்மலா இருக்க மாட்டம் கூட இருந்த அந்த உறவுகளா தான் இருப்பாங்க

Bcz அவங்க ஒரு Level ku போய்ருப்பாங்க Maximum Life Settled nu சொல்லலாம் ஏதோ அவங்க இப்பிடி Settled ஆனதும் நம்ம ஏதோ அவங்க கிட்ட Help nu போய்ருவம் அப்படினுற பயமா கூட இருக்கலாம்

என்னங்க பெரிய Settled சொந்தம் சொல்லிட்டு இருக்க உறவுகள் கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசி சிரிச்சி சந்தோஷமா இருந்துட்டு போறதுல நீங்க எல்லாம் ஒன்னும் இல்லாம போக போறது இல்லையே

Life Is Just Nothing அன்பு மட்டும் தானே எல்லாம் ஒரு Problem வரும் போது எப்பவுமே சொந்தகாரங்க கூடவே இருக்க மாட்டாங்க ஏதோ நம்மல வேணும் நினைச்சி நம்ம மேல உண்மையா அன்பு வச்சிருக்க சில உறவுகளை தவிர

(யாரும் நம்பலனாலும் இதாங்க உண்மை காசு வந்த பிறகு உறவுகள் காணாம போய்டும்💥💯😌)

07/27/2024

ஒருத்தங்க உங்கள வேணாம் னு விட்டுப்போக நினைக்கிறாங்கனா...

மனச கல்லாக்கிட்டு போக விட்றுங்க....
தூக்கி எறிஞ்சுருங்க வெறுத்து ஒதுக்கிடுங்க...

அவங்க வாழ்க்கையோட வெறுப்பின் எல்லைக்கு போயிரணும்....

நீங்கள் அவர்களிடம் அன்பிற்கு பிச்சை எடுத்தீர்கள் என்றால் அவர்கள் உங்களை மிகவும் கேவலமாக தான் நடத்துவார்கள்....

ஏனா அவங்க உங்கள விட Better ஆன comfort zone அ உருவாக்கியிருப்பாங்க...

அது தெரியாம நீங்க பைத்தியம் மாதிரி உங்க கூட அன்பா இருப்பாங்க என்று நினைக்காதீங்க....

எங்க நம்ம பண்ற தப்பா கண்டுபிடிச்சிடுவாங்களோ அப்படின்னு உங்ககிட்ட நடிக்க மட்டுமே செய்வாங்க....

அதனால்தான் உங்களிடம் பொய்யை மட்டுமே பேசுவார்கள் மெய்யை போன்று...

அவங்களுக்கும் நீங்க முக்கியமானவங்களா இருந்தா அவங்களாவே உங்கள தேடி வருவாங்க.....

இல்ல நான் போறன் போறேன் என்றவங்கள இழுத்துப்புடிக்கிறதுல எந்த பயனும் இல்ல எப்பயோ ஒரு நாள் போகத்தான போறாங்க...

போய்த் தொலையட்டும் போங்கள் என்று விட்ருங்க....

உங்களுக்கு அவங்க பொக்கிசமா தெரிஞ்சாலும்....

அவங்களுக்கு நீங்களும் உங்க பாசமும் குப்பையா தான் தெரியும்.....

சாக்கடையில் உழவிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் மட்டும் பிடிக்குமா என்ன???

இன்றைய நாகரீக அன்பின் பரிணாம வளர்ச்சி இதுதான்....

சிலரது வாழ்க்கையில்....

🤣🤣🤣🤣🤣

~Some Truth.....💁🏻‍♀️ஒரு சிலர் கூட நம்ம பேசுறத நல்லாவே கொரச்சிருப்பம் அவங்களும் அப்போ இருந்த Bond la சுத்தமா இருக்க மாட்...
07/26/2024

~Some Truth.....💁🏻‍♀️

ஒரு சிலர் கூட நம்ம பேசுறத நல்லாவே கொரச்சிருப்பம் அவங்களும் அப்போ இருந்த Bond la சுத்தமா இருக்க மாட்டாங்க...>>>

Reason நம்மலா இருக்க மாட்டம் கூட இருந்த அந்த உறவுகளா தான் இருப்பாங்க

Bcz அவங்க ஒரு Level ku போய்ருப்பாங்க Maximum Life Settled nu சொல்லலாம் ஏதோ அவங்க இப்பிடி Settled ஆனதும் நம்ம ஏதோ அவங்க கிட்ட Help nu போய்ருவம் அப்படினுற பயமா கூட இருக்கலாம்

என்னங்க பெரிய Settled சொந்தம் சொல்லிட்டு இருக்க உறவுகள் கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசி சிரிச்சி சந்தோஷமா இருந்துட்டு போறதுல நீங்க எல்லாம் ஒன்னும் இல்லாம போக போறது இல்லையே

Life Is Just Nothing அன்பு மட்டும் தானே எல்லாம் ஒரு Problem வரும் போது எப்பவுமே சொந்தகாரங்க கூடவே இருக்க மாட்டாங்க ஏதோ நம்மல வேணும் நினைச்சி நம்ம மேல உண்மையா அன்பு வச்சிருக்க சில உறவுகளை தவிர

(யாரும் நம்பலனாலும் இதாங்க உண்மை காசு வந்த பிறகு உறவுகள் காணாம போய்டும்💥💯😌)

Life_Lesson ✨❤️

07/25/2024

என்னா Bro ரொம்ப Feel பன்னுற போல எல்லாரும் விட்டு போறாங்க யார நம்புறதுனு தெரியல இனி யார்மேலயும் பாசம் வைக்க கூட பயமா தான் இருக்கும்.

But "It's okay" Bro எல்லாரும் நம்ம கூட இருக்கனுனு இல்ல

சில விஷயம் நம்மல விட்டு போகனுனு இருந்தா போயிரும் நீ எவளோ இருக்கமா புடிச்சு வச்சாலும் வலி உனக்கு தான்.

எல்லாம் உன் நல்லதுக்குனு நினச்சுக்கோ you need not to hold on things that isn't "Meant" for you

எல்லார் சொல்ற மாதிரி Move on ஆகுனு சொல்லல bcoz சொல்றது Easy அதுல இருந்து வெளில வாரது ரொம்ப கஷ்டம் தான்

but Wait பன்னு உனக்குனு யாராச்சும் எங்கயாச்சும் இருப்பாங்க you'll meet them when time comes.

"Chill and stay Strong Bro"🫴♥️✨

💙 💙

07/24/2024

நமக்காக ஒரு Person இல்லையேனு
பாக்குறவங்க, பழகுறவங்க எல்லாரையும் நமக்கானவங்களா இருப்பாங்களோனு நினைச்சிக்கிட்டு
அவங்க பின்னால பைத்தியம் மாதிரி தேடி ஓடி திரிய வேணாம்..

Enjoy your season of Waiting..❤️
நமக்கான காலம் வரும் வரைக்கும் இருப்போம்..
நமக்கானவங்க வரும் வரைக்கும் இருப்போம்..
நம்ம அன்புக்கு தகுதியானவங்க வரும் வரைக்கும் இருப்போம்..
அது வரை நமக்கான வாழ்க்கைய சந்தோசமா வாழுவோம்..

Yes..!
நமக்கானது நமக்கிட்ட வரும் வர
நமக்கான வாழ்க்கைய எந்த குறையும் இல்லாம திருப்தியா வாழுவோம்‌...❤️

07/22/2024

ஒருதங்க நீங்க பேசாட்டியும் உங்கள தேடி வந்து call , msg பண்றாங்கன்னா அவங்களுக்கு பேச வேற யாரும் இல்லனு இல்ல அவங்களுக்கு உங்க கிட்ட பேசினா கொஞ்சம் happy ah இருக்கும் prblm share பண்ணா நீங்க ஆறுதலா நாளு வார்த்த சொல்லுவீங்கனு நினைப்பாங்க உங்கள important person ah பாப்பாங்க அவங்கள மிஸ் பண்ணிடாதீங்க.....😒❤️

07/22/2024

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ...
இது சொந்த வீடா
வாடகை வீடா வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா.. கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.

அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ, கதவையோ, சாத்தாதீர்கள்...

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க...? அல்லது ஏன் வேலைக்கு போகல...? என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்...

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள் மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.

9.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு பொதுவுல அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்...

10.உங்களுக்கு என்ன குறைச்சல்... இரண்டு பேரு சம்பளம் பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க...

07/21/2024

இருக்கும் பொழுதே மனைவியை நேசியுங்கள் !

ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்..

எழுபத்தைந்து வயதில்.....
ஆதரவு இன்றி நிக்குது மனசு...

நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

என் கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

அவள் சமையலை
ஒருமுறையாவது நான்
மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..
ஒரு நாளாவது நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..

ஒரு நாளாவது
அவளுக்கு பதில் - நான்
அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..

ஒரு நாளாவது TV யையும், Mobilலையும் அணைத்துவிட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்..

ஒரு நாளாவது வேலை தளத்தின்
கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

ஒரு நாளாவது- என்
விடுமுறை நாட்களில் - அவளை
சினிமாவுக்கு அழைத்து
சென்று இருக்கலாம்..

ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி
இருக்கலாம்...

அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து
இருக்கலாம்.

ஒரு மாசமாவது− என்
முழு சம்பளப் பணத்தை
அவளிடமே கொடுத்து
இருக்கலாம்....

ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...

நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..

அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது
விசாரித்து இருக்கலாம்...

அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை கவனித்து இருக்கலாம்..

அவள் நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்...

என் தாயே! தாரமே....
நீ என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...

நீ என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...

என்னை தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை...

தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும்
சினம் வருது...

என் மனைவியே
உன்னை நான் தினமும்
கொண்டாடி இருக்க வேண்டும் ...

நான் தவறுகள் இழைத்ததற்கு
என்னை நீ மன்னித்து விடு...

ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன்
நான்...

மூச்சு இழந்த - உன்
புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். மனைவியே!
என்னை மன்னித்து விடு..

மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்..

எழுபத்தைந்து வயதில்.....
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....

உங்கள்_மனைவியை_நேசியுங்கள்!

Address

Montreal, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evo Stylish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evo Stylish:

Videos

Share

Nearby media companies