Acc News

Acc News News Only
(4)

✅👉ஆறு பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு..! 🔷 On, February 21, 2024🔷 Haseem Sajeeth (MO)உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோள...
21/02/2024

✅👉ஆறு பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு..!

🔷 On, February 21, 2024

🔷 Haseem Sajeeth (MO)

உளுந்து, பாசிப்பயறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் - (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை,

விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

20/02/2024

✅👉வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுமோ என்ற மன அழுத்தம் அதிகமாகி வீட்டுக்குள் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன் | முந்தல் - மங்கள எளிய பகுதியில் சம்பவம்..!

19/02/2024

✅👉பல்கலைக்கழக மாணவர்கள் செல்லும் மசாஜ் நிலையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது..!

✔️மூன்று யுவதிகள் கைது

✅👉இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லி..!🔷 *_On, February 19, 2024_*🔷 *_Haseem Sajeeth (MO)_*இபலோகம பிரதேசத்திலுள்ள கடையொன்றில...
19/02/2024

✅👉இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லி..!

🔷 *_On, February 19, 2024_*

🔷 *_Haseem Sajeeth (MO)_*

இபலோகம பிரதேசத்திலுள்ள கடையொன்றில் நேற்று (18) கொள்வனவு செய்யப்பட்ட இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லியொன்று காணப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் இபலோகம MOH அலுவலகத்திற்கு குறித்த நபர் தகவல் வழங்கியுள்ள நிலையில், இனிப்பு பண்டத்தை வாங்கிய நபர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இபலோகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இனிப்பு பண்டத்தை உற்பத்தி செய்த தம்புள்ளை – இனாமலுவ பகுதியிலுள்ள பேக்கறி மீது இதற்கு முன்னரும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இபலோகம MOH அலுவலகம் தெரிவித்துள்ளது.

✅👉ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு..!🔷 On, February 19, 2024🔷 Haseem Sajeeth (MO)ஆராச்சிக்கட்ட...
19/02/2024

✅👉ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு..!

🔷 On, February 19, 2024

🔷 Haseem Sajeeth (MO)

ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில்,

பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

19/02/2024

✅👉கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில்,

✅👉Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு..!

19/02/2024

✅👉போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்ட மகனை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த தந்தை கைது..!

✔️வெல்கல

✅👉மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை..!🔷 On, February 19, 2024🔷 Haseem Sajeeth (MO)இலங்கையில் நிலவும் வறட்சியான க...
19/02/2024

✅👉மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை..!

🔷 On, February 19, 2024

🔷 Haseem Sajeeth (MO)

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63% ஆக அதிகரிக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

மின்தேவை அதிகரித்துள்ள நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

✅👉பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்..!🔷 On, February 19, 2024🔷 Haseem Sajeeth (MO)எதிர்வரும் சிங்கள...
19/02/2024

✅👉பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்..!

🔷 On, February 19, 2024

🔷 Haseem Sajeeth (MO)

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்காக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்று முதல் லங்கா சதொச நிறுவனத்திற்கு தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தைக்கு அதிகபட்சமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டாலும் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத காரணிகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளுக்கு தேவையான முட்டைகளை இருப்பு வைக்கும் போக்கு காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

✅👉 கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை, ✅👉 விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது...! 🔷 On, February 1...
19/02/2024

✅👉 கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை,

✅👉 விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது...!

🔷 On, February 19, 2024

🔷 Haseem Sajeeth (MO)

அம்பாறை பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

✔️ இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற,

✔️ எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/Jlqm1FCmjkm6phRf93gUQ5

18/02/2024

✅👉தன் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது..!

✔️மின்வாங்கொட பகுதிகளில் சம்பவம்

18/02/2024

✅👉மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 13 பேருக்கு 3 வருடமும்,

✅👉இருவருக்கு 5 வருடமும் சிறை..!

✅👉இலங்கை அணிக்கு முதல் வெற்றி...!🔷 On, February 17, 2024🔷 Haseem Sajeeth (MO)ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபத...
17/02/2024

✅👉இலங்கை அணிக்கு முதல் வெற்றி...!

🔷 On, February 17, 2024

🔷 Haseem Sajeeth (MO)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் Wanindu Hasaranga அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றதுடன்,

Sadeera Samarawickrama 25 ஓட்டங்களையும் Dhananjaya de Silva 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Fazalhaq Farooqi 3 விக்கெட்டுக்களையும்,

Naveen-ul-Haq மற்றும் Azmatullah Omarzai ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Ibrahim Zadran ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Matheesha Pathirana 4 விக்கெட்டுக்களையும், Dasun Shanaka 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

✅👉 #மாணவர்களின்  #ஜனாஸா மீட்பு : - ✅👉 #ஒருமித்தே  #விடைபெற்ற நண்பர்கள்...!🔷 On, February 17, 2024 #மாளிகைக்காடு -  #சாய்...
17/02/2024

✅👉 #மாணவர்களின் #ஜனாஸா மீட்பு : -

✅👉 #ஒருமித்தே #விடைபெற்ற நண்பர்கள்...!

🔷 On, February 17, 2024

#மாளிகைக்காடு - #சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை,

புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர்.

அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மாணவரின் ஜனாஸா இன்று காலை மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சாய்ந்தமருதை சேர்ந்த ரிஸ்வான் முஹம்மட் இல்ஹம் (வயது 15) எனும் மாணவனின் ஜனாஸா இன்று மதியம் மீட்கப்பட்டது.

✅👉70 இலட்சம் இந்திய முட்டைகள் சதொசவிற்கு...!🔷 On, February 17, 2024🔷 Haseem Sajeeth (MO)லங்கா சதொச நிறுவனத்திற்கு இந்திய...
17/02/2024

✅👉70 இலட்சம் இந்திய முட்டைகள் சதொசவிற்கு...!

🔷 On, February 17, 2024

🔷 Haseem Sajeeth (MO)

லங்கா சதொச நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 இலட்சம் முட்டைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (16) முதல் குறித்த முட்டைகளை லங்கா சதோசவில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து சதொச கிளைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✅👉 #இறக்காமம் மக்களின் நலன் கருதி, ✅👉 #மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு உதயமாகிறது, ➕     ➕🔷On February...
17/02/2024

✅👉 #இறக்காமம் மக்களின் நலன் கருதி,

✅👉 #மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு உதயமாகிறது,

➕ ➕

🔷On February 17, 2024

எமது மக்களின் நலன் கருதி இலங்கை வங்கிக்கு (BOC) அருகாமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

✅👉இங்கு தரப்படும் சேவைகள் : -

➕ #மருத்துவ #சேவைகள்

🔰சிறுவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள்.

🔰முதியவர்களுக்கான சிகிச்சைகள்.

🔰பெண்ணியல் நோய்களுக்கான சிகிச்சைகள்.

🔰அனைத்து விதமான காய்ச்சல், தலைவலி, வாய்ந்திபேதி, சிறுநீரக நோய், வயிற்றுப்போக்கு, சக்கரை வியாதி, குருதி அழுத்தம், மூட்டுவாதங்கள், ஆஸ்மா இரைப்பை அலர்ச்சி, போன்றவற்றிக்கான மருந்து சிகிச்சைகள் மற்றும் மாதாந்த கிளினிக் வசதிகள்.

➕ #தாதிய #சேவைகள்

🔰அனைத்து விதமான காயங்களுக்கும் மருந்து கட்டுதல்.

🔰சேலைன் போடுதல்.

🔰இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் செய்து தரப்படும் (Blood and Urine tests)

🔰அனைத்து விதமான ஊசி மருந்து ஏற்றுதல்.

🔰இரத்த அழுத்தம் குளுக்கோஸ் அளவை சோதனை இடுதல்.

அது மாத்திரமல்ல #விசேடமாக #வீடுகளுக்குச் #சென்று தாதிய பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

✅👉வைத்தியர் பார்வையிடும் நேரம்,

✔️பி. ப 05.00 - இரவு 9.00 மணி வரை

✅👉பரிசோதனைக்கான குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்படும் நேரம்,

✔️காலை 07.00 - 10.00 மணி வரை

மேற்குறப்பட்ட சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள,

#இன்றே #நாடுகள் 👇

📍USMAN MEDILINK,
📍Ampara Road,
📍Irakkkamam
📍Near the BOC Bank

Dr Anomi wijetunga(MBBS)
Reg no: SLMC 43675
General hospital - Ampara

M.M.Najath(Bsc (Hons) in nursing)
Reg no: SLNC 23153
Base hospital Akkaraipatttu

A. Fathima Ruzaina (Bsc (Hons) in nursing)
Reg no: SLNC 33249
Nursing officer

📞 #தொடர்புகளுக்கு

📲076 3735 585 - M.M. Najath (Bsc (Hons) in nursing)

📲077 4871 903 - A.Fathima Ruzaina (Bsc.Hons in nursing)

✅👉சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் : -⭕️ Update... ✅👉இரண்டு மாணவர்கள் கடலில் காணாமல் போன நிலையில...
17/02/2024

✅👉சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் : -

⭕️ Update...

✅👉இரண்டு மாணவர்கள் கடலில் காணாமல் போன நிலையில்,

✅👉ஒருவரின் (முன்ஸிப்) உடல் கரையொதுங்கியது..!

🔷 On, February 17, 2024

🔷 Haseem Sajeeth (MO)

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில்,

இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் வெள்ளிக்கிழமை (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்ஸிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது.

மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவ தினம் மாளிகைக்காடு- சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது

இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் கடல் அலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தவிர ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16/02/2024

✅👉குடும்ப தகராறு காரணமாக வீட்டினுள் வைத்து 23 வயது இளம் மனைவியை தாக்கிக் கொன்ற குற்றத்தில் 32 வயது கணவர் கைது..!

✔️மிகிந்தலை

✅👉பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு..! 🔷 On, February 16, 2024🔷 Haseem Sajeeth (MO)சந்தையில் கிலோ ஒன்றுக்கு 330 ரூபாவாக இர...
16/02/2024

✅👉பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு..!

🔷 On, February 16, 2024

🔷 Haseem Sajeeth (MO)

சந்தையில் கிலோ ஒன்றுக்கு 330 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலை,

நேற்று (பிப்ரவரி 15) 420 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு காரணமாக,

பெரிய வெங்காயத்தின் விலை 420 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் விலை மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 420 – 440 ரூபாவாக இருந்ததாகவும்,

இந்த தட்டுப்பாடு தொடருமானால் ஒரு கிலோவின் சில்லறை விலை மீண்டும் 600 ரூபாவாக உயரும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை திடீரென 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் ஆராயப்பட வேண்டிய விடயம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

✅👉 #புதிதாக உதயமாகிறது    ..!🔷 On, February 16, 2024 #இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை பிரதான வீதியில் புதிதாக உதயமாகிறது Ya...
16/02/2024

✅👉 #புதிதாக உதயமாகிறது ..!

🔷 On, February 16, 2024

#இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை பிரதான வீதியில் புதிதாக உதயமாகிறது Yarah Communication.

இங்கு 👇

✔️
✔️
✔️

போன்ற மற்றும் பல சேவைகள் உங்களுக்காக செய்து தரப்படும்.

பாடசாலை #மாணவர்களுக்கு மிக இலகுவாக குறைந்த விலையில் இச்சேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

⭕ #குறைந்த #விலை
⭕ #அதிவேகம்

பல பகுதிகளில் அளவிடப்படும் கட்டணங்களுக்கு குறைவான கட்டணமே இங்கு அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

🛃 #சலாம் #பள்ளி அருகாமையில்

➡️ #ஓட்டுத் #தொழிற்சாலை வீதியில்

✅உரிமையாளர் : - MA

📲 : -

📞077 350 32 36

📞075 66 33 053

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

15/02/2024

✅👉காதலர் தினம் கொண்டாட வராத காதலியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞன் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இறக்குவானை பிரதேசத்தில் பதிவு..!

✅👉DIPLOMA IN EARLY CHILDHOOD EDUCATION🚨Target Groups: After O/L students, After A/L students, Housewives,  University St...
14/02/2024

✅👉DIPLOMA IN EARLY CHILDHOOD EDUCATION🚨

Target Groups:
After O/L students, After A/L students, Housewives, University Students , Graduates , Government Employees

*❤️*BMICH இல் Convocation நடாத்தப்படும்❤️*

▪️```Medium``` : *Tamil*
▪️```Mode``` : *Online*

Duration:06 months
```

*Registration fees : Free*
*Monthly payment:* *4500/-*

👉சர்வதேச அங்கீகாரமிக்க சான்றிதலுடன் டிப்ளோமா கற்கையை தொடர்வதற்கான வாய்ப்பு

👉தேர்ச்சிமிக்க விரிவுரையாளர்களது கற்பித்தலும் பயிற்றுவிப்பும் .

👉 ஆன்லைன் மூலமான கற்றல் கற்பித்தல் ஏற்பாடுகள்

*For More Details*👇

https://chat.whatsapp.com/JaLPS8pC6rnFcboek6gkiZ

*March 7, 2024 ல் ஆரம்பம்* 🗓️

*உலகத்தில் எங்கு இருந்தாலும் ஆன்லைனில் படிக்கலாம்*

*இணையம்*
www.motivirus.edu.lk

*REGISTER NOW :*

📞 +94721792547
📞 +94778960859

Organized By :
*MV EDUCATION - MotiVirus PVT LTD*
Reg No.PV00267370

14/02/2024

✅👉சாதாரண தர, உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு..!

✔️O/L May - June | A/L December

✅👉சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி..! 🔷 On, February 14, 2024🔷 Haseem Sajeeth (MO)யானைப் பாதுகாப்புக்கென...
14/02/2024

✅👉சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி..!

🔷 On, February 14, 2024

🔷 Haseem Sajeeth (MO)

யானைப் பாதுகாப்புக்கென பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலியான சம்பவமொன்று நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேரில்லாவெளி ஈச்சையடி, கடான பிரதேசத்தில் மாடுகளை விரட்டிச்சென்ற போது,

இருளில் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே ஆறுமுகன் யோகநாதன்(50), வினாயகமூர்த்தி(21) சுதர்ஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மின்சாரத்தைப்பெற்று பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டே இருவரும் உயிரிழந்துள்ளதுடன்,

சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றமை, அதன் மூலம் இரு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

✅👉உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு...!🔷 On, February 14, 2024🔷 Haseem Sajeeth (MO)2023 ஆம் ஆண...
14/02/2024

✅👉உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு...!

🔷 On, February 14, 2024

🔷 Haseem Sajeeth (MO)

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் வீட்டுப் பொருளாதாரம் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

✅👉2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!🔷 On, February 14, 2024🔷 Haseem Sajeeth (MO)நாட்டில் தற்போது சுமார் 2,8...
14/02/2024

✅👉2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில்..!

🔷 On, February 14, 2024

🔷 Haseem Sajeeth (MO)

நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில்,

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

✅👉பேராதனை பல்கலைக்கழகத்தில் 150 கிலோ எடையுள்ள✅👉பன்றி ஒன்றை திருடி சென்ற மூன்று பேர் கைது..!🔷 On, February 14, 2024🔷 Hase...
14/02/2024

✅👉பேராதனை பல்கலைக்கழகத்தில் 150 கிலோ எடையுள்ள

✅👉பன்றி ஒன்றை திருடி சென்ற மூன்று பேர் கைது..!

🔷 On, February 14, 2024

🔷 Haseem Sajeeth (MO)

பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து,

சுமார் 150 கிலோ எடையுள்ள பன்றியைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்த மூவரை பேராதனை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.

குறித்த பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் வளர்க்கபடும் விலங்குகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உட பேராதனை பிரதேசத்தில் இந்த மிருக பண்ணை அமைந்துள்ளதாகவும்,

கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று முந்தினம் (12) இரவு பண்ணைக்குள் நுழைந்து, பன்றியை கொன்று அதன் உடல் பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பண்ணையில் நன்கு வளர்ந்த பன்றி காணாமல் போனதாக பண்ணையின் முகாமையாளரால் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து,

உட பேராதனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பன்றி இறைச்சி இருந்ததை அவதானித்திருந்தனர்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் குறித்த பண்ணையில் கோழிகள் காணாமல் போயுள்ளதுடன், இந்த விலங்குகள் திருடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இப்பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் விலங்குகள் வளர்க்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேராதனை பொலிஸ் குற்றப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் குமாரவின் பணிப்புரையின் பேரில்,

பேராதனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க, ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

13/02/2024

✅👉அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு,

✅👉27 வருட கடூழிய சிறைத் தண்டனை..!

✅👉சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..!🔷 On, February 13, 2024🔷 Haseem Sajeeth (MO)72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13...
13/02/2024

✅👉சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு..!

🔷 On, February 13, 2024

🔷 Haseem Sajeeth (MO)

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி,

இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14) கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

✅👉கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், ✅👉தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அ...
12/02/2024

✅👉கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்,

✅👉தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு..!

🔷 On, February 12, 2024

🔷 Haseem Sajeeth (MO)

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என,

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால்,

அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Endereço

Amparo, SP
32250

Telefone

+94722030403

Notificações

Seja o primeiro recebendo as novidades e nos deixe lhe enviar um e-mail quando Acc News posta notícias e promoções. Seu endereço de e-mail não será usado com qualquer outro objetivo, e pode cancelar a inscrição em qualquer momento.

Vídeos

Compartilhar

Empresas De Mídia nas proximidades



Você pode gostar