Thuraitv

Thuraitv NEWS/ WORLD/

தமிழரசுக் கட்சிக்கு உள்ளும் புறமும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த பல்வேறு அச்சுறுத்தல்களை சுமந்திரனும் அவர் தரப்பும் ம...
13/10/2024

தமிழரசுக் கட்சிக்கு உள்ளும் புறமும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த பல்வேறு அச்சுறுத்தல்களை சுமந்திரனும் அவர் தரப்பும் மிக நேர்த்தியாகக் கையாண்டிருப்பதை இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெளிக்காட்டியுள்ளது. தமிழரசுக் கட்சியின் பெருமளவிலான ஆதரவாளர்கள் இந்தப் பெருங்கூட்டத்தில் ஆஜரானது மாத்திரமன்றி, தங்களது ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் தரப்பினருக்கும் இந்த எழுச்சியின் மூலம் வலுவானதொரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது - புலிகளினால் மாத்திரமே சாத்தியமாக்க முடிந்த - கூட்டணி. அது அவர்களின்பாலிருந்த அச்சத்தின் முன்னால் மண்டியிட்ட தமிழ் அரசியல் தரப்பின் விசுவாசத்தின் விளைவு. புலிகளற்ற கடந்த 15 வருடங்களில், தமிழரசுக் கட்சி, ஒட்டியிருந்த குழப்படிகாரக் கூட்டணிக்கட்சிகளை இவ்வளவு தூரம் இழுத்து வந்ததே பெரும் சாதனை. வீடு என்ற ஒற்றைச் சின்னத்தின் பலன்களை அனுபவித்துக்கொண்டு - தங்களது அத்தனை அட்டகாசங்களையும் நிறைவேற்றுவதற்காக - கட்சி அலுவலகத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு சுமந்திரன் என்பவர் அச்சுறுத்தும் பேர்வழியானார். அவரை எதிர்ப்பதற்கு உள்ளும் புறமும் எத்தனையோ குழிபறிப்புக்கள் - துரோகங்கள் - என்று அத்தனை அழுக்குகளும் அரங்கேறின. தற்போது ஏறக்குறைய அனைத்துக் கறைகளும் தாங்களாகவே கழன்றுகொண்டன.

இன்று சிவராஜ் சித்த மருத்துவர் லேகியம் விற்பதுபோல சிலர் முகநூலில் வந்து "தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும், தமிழரசுக் கட்சிக்கு மாற்று வேண்டும்" என்று உதிரிக் கட்சிகளுக்கு ஆதரவு வேண்டி கூவுவதை அறிவார்ந்த தமிழ் தரப்பினர், புன்னகையோடு எதிர்கொள்ளப் பழகிவிட்டனர்.

பொறுப்பான - பாரம்பரிய - தமிழர் தரப்பு என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி - கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது - இன்று மிகப்பெரியளவில் தன்னை மாற்றியமைத்திருக்கிறது. இனி இதற்கான மக்களாணையைப் பெற்றுக்கொள்ளும் ஜனாநாயகப் பாதையில் பயணிப்பதே எஞ்சியுள்ள செயல்வழி.

பிர #பாக #ரன் என்ற ஒற்றைத்தலைவன் ஓர்மத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது - அவர் வழியில் பயணித்த தளபதிகளை பிர #பாகர #னின் செம்புகள் என்று மக்கள் யாரும் சொன்னதில்லை. பிர #பாகரனு #க்காக பேசிய மதியுரைஞர் பாலசிங்கம் கம்பு சுத்துகிறார் என்றும் கூறியதில்லை. செயல்வழி வீரர்களின் பாதைக்கு ஒற்றுமை என்று பெயர்.

தமிழரசுக் கட்சியின் பயணம் இவ்வளவு காலமும் இயன்றளவு அவ்வாறானதாகவே அமைந்திருக்கிறது.

முப்படைகளையும் கட்டி ஆண்டவர்களின் பேரழிவினால் ஏற்பட்ட பெரு வெளியில் ஒரே நாளில் கொண்டுபோயிருத்தப்பட்ட சம்பந்தரும் அவர் அணியினரும், எதையெல்லாம் வென்று தந்தார்கள் என்பதிலும் பார்க்க, தமிழர்கள் தொடர்ந்து தோற்றுவிடாமல் இயன்றளவு காத்துக்கொண்டார்கள் என்று சொல்லவேண்டும்.

போர் முடிந்த பதினைந்து வருடங்களில் - அப்பாவி மக்களை வீரப் பேச்சுக்களால் கொம்பு சீவி - இன்னொரு அழிவுக்குள் அழைத்துச்சென்று வீழ்த்திவிடாமலும் - அவ்வாறு வீழ்த்துவதற்குக் கங்கணம் கட்டிய தரப்புக்களிடமிருந்து காப்பாற்றியதும் - தமிழரசுக் கட்சியின் பெருமைக்குரிய வெற்றி.

தென்னிலங்கையின் சகல அரசியல் - அதிகார - தரப்புக்களுடனும் சமதையாக இருந்து ஒரு உரையடால் மேற்கொள்ளவல்ல உறவினை ஏற்படுத்தி வைத்திருப்பதும், அதற்கு அப்பாலும் சர்வதேச தரப்புக்களுடன் தமிழர் அபிலாஷைகள் குறித்த அழுத்தத்தினை தொடர்ந்து பேணுவதும் இன்றைய உலக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க வெற்றியே.

தமிழரசுக் கட்சி பல நடவடிக்கைகளை நேர் சீராக்குவதற்கும் - புதியவர்களுடன் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கும் - காலம் கனிந்திருக்கிறது.

மக்கள் ஆணையோடு அவை
தெய்வீகன் பஞ்சலிங்கம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்புமனுக்கள் 11.10.2024 காலை  முருகேசு சந்திரகுமா...
11/10/2024

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்புமனுக்கள் 11.10.2024 காலை முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்படும்.

10/10/2024
இலங்கையிலும் ஒரு புதிய கட்சி
09/10/2024

இலங்கையிலும் ஒரு புதிய கட்சி

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபலங்கள்! 📸  |   |
09/10/2024

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபலங்கள்! 📸

| |

08/10/2024

'தமிழ்த் தேசிய அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்கப் போகிறோம்' என்று கண்கள் சிவக்க - விஜயகாந்த் போல - எழுந்து வருபவர்கள் முக்கால்வாசிப்பேரது நிகழ்ச்சிநிரல் என்ன என்று பார்த்தால், சுமந்திரன் என்ற ஒற்றை மனிதனுக்கு எதிராகக் குறுக்கு மறுக்காக ஓடித்திருந்து மணியடிப்பதுதான். அந்த ஒரு அரசியல்வாதிக்கு எதிராக முகநூலில் பெயரிலிகளாகக் கணக்குகளை ஆரம்பித்து கண்ணிவெடி வைப்பதும், ஒழித்து நின்று கூ அடிப்பதும்தான் இன்று ஈழத்தின் எழுச்சிமிக்க அரசியலாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு புரட்சிகரப் போராட்டமாக அறிவித்து, பட்டமளிப்பு நடத்தி, கேடயங்கள் வழங்குவதற்கு, வெளிநாடுகளில் கொஞ்சக் கேணைக்கூட்டம் எப்போதும் தயாராக உள்ளது. இதில் பெரிய நகைச்சுவை என்ன என்றால், இந்த மங்குனிகளின் கூத்தினை மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மாத்திரமல்லாமல், தாங்கள் தேர்தலில் நின்றால் மக்கள் வாக்குப்போடவேண்டும் என்றும் முழுசிப்பார்க்கிறார்கள். சுமந்திரன் பேசுகின்ற அரசியலைத்தாண்டித் தாங்கள் கூவப்போகும் குரல், சர்வதேச அரங்கில் ஒலிக்கப்போகிறது என்பார்கள். சொல்லப்போனால், இவர்களது சத்தம் சாவகச்சேரியைத் தாண்டியே கேட்பதில்லை என்பதுதான் உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்..

அதிகாரத்துக்கு வந்துள்ள ஜேவிபியை மூளையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி, அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்று நாடாளுமன்ற பலத்தை சுவீகரிப்பதற்கான நுட்பமான திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறது. எனது கணிப்பில், அவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான ஒவ்வொரு நாளும், தேசிய மக்கள் சக்தியை நோக்கி மக்கள் நாடளாவிய ரீதியில் மேலும் மேலும் நெருக்கமாகிய வண்ணமுள்ளார்கள். இந்த நெருக்கத்தை தங்களது உச்ச அரசியல் வெற்றியாக - நீண்ட காலத்துக்கானதாக - உருவாக்கவேண்டும் என்பதில் அவர்கள் உக்கிரமாக வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள். கிடைத்த வெற்றியையும் கிடைக்கப்போகும் வெற்றியையும் முதலீடாகக் கொண்டு நீண்டகாலத்துக்கு இலங்கை அரசியலைத் தங்கள் கைகளுக்குள் வைத்திருப்பதற்கு, அவர்கள் சகல திட்டங்களையும் போடுவார்கள். இந்தத்தடவை இலக்கு எக்காரணம்கொண்டும் தவறிவிடக்கூடாது என்பதில் அவர்கள் உச்சக் கவனத்தில் உள்ளார்கள். அதனை நிகழ்த்தியும் காட்டுவார்கள். ஏனெனில், அவர்கள் கடந்தகாலத் தவறுகளிலிருந்து தங்களைத் திருத்தி எழுந்து வந்தவர்கள்.

அனுர, விஜித ஹேரத், ஹரினி என்று பத்து பதினைந்துபேர் தேசிய மக்கள் முன்னணியின் அதிகாரம்பொருந்திய முகங்களாக வெளியில் தெரிந்தாலும், இவர்களின் பின்னணியில் இயங்குகின்ற முடிவெடுக்கும் சக்திதான் இவர்களை இயக்குகின்ற செயற்பாட்டுக் குழு. அவர்கள் யாரென்று எவருக்கும் தெரியாது. இடதுசாரி அமைப்புக்களினதும் ஆயுதக் குழுக்களினதும் - அடிப்படை அரசியல் அணுகுமுறை இது. அந்த முடிவெடுக்கும் குழுவின் ஏவல்களைத்தான் இன்று அனுரவும் ஏனையோரும் பேசியும் செய்துகொண்டுமிருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால், அனுர இன்று செய்துகொண்டிருப்பது அன்று தமிழ்ச்செல்வன் செய்த வேலையைத்தான். தற்போது பதவிநிலைப்படுத்தப்பட்டவர்கள் நாளையே விலக்கப்படலாம். முக்கிய இலக்குகளோடு வேறு தரப்பினர் முன்னுக்குக்கொண்டுவரப்படலாம். சிங்களவர்களின் "இயக்கம்" இது.

எது நடந்தாலும், நாட்டின் நன்மைக்காக என்ற காரணத்தால், இந்த மாற்றங்கள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் சமன்செய்யப்படும். இதனை ஏற்றுக்கொள்ள பெரும்பான்மை சிங்கள சமூகமும் தயாராகவே உள்ளது. காரணம், "ஊழலை ஒழிக்கவேண்டும். எதிர்காலத்துக்கான தூய தேசத்தை உருவாக்கவேண்டும்" என்று மிகப்பெரியதொரு மாற்றத்தை எதிர்பார்த்து, சிங்கள மக்கள் இந்தப் புதிய சக்தியை ஆட்சிக்குக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெரும்பான்மை சிங்கள சமூகமானது, மாற்றங்களை மிகத்துரிதமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதனை அவர்கள் கடந்தகாலங்களில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்திருக்கிறார்கள். 'பொதுக்காரியத்தைச் சீர்படுத்தவேண்டிய பெருவழியில், விசுவாசம் என்ற பெயரில் தேங்கிக்கிடப்பதற்குத் தாங்கள் தயாரில்லை' - என்பதை மகிந்த - கோத்தா - பொன்சேகா விடயங்களில் முகத்திலடித்துக் காண்பித்துவிட்டார்கள்.

இப்படிப்பட்ட முழுக்க முழுக்க செயல்வடிவான - ஒரு அரசியல்/மக்கள் தரப்பைத்தான், தமிழ் அரசியலாளர்கள் அடுத்த ஆண்டிலிருந்து எதிர்கொள்ளவுள்ளார்கள். ஆனால், எதிர்கொள்ளக்கூடிய மூளைவளம் இந்தப் புண்ணியவான்களுக்கு உள்ளதா? இனியாவது உருவாக வாய்ப்பிருக்கிறதா? இவர்கள் இன்னமும் சங்கு - நொங்கு என்று அடிபட்டு, ஆளாளுக்கு வேட்டியை உருவிக்கொண்டு ஓடி அரசியல் செய்வதை இனத்தின் பெருமையாக பேட்டி கொடுத்தவண்ணமுள்ளார்கள்.

ஒட்டுமொத்தத் தமிழ்த்தரப்பும் ஒரு விடயத்தை மிக ஆழமாகவும் உறுதியாகவும் புரிந்துகொண்டால், ஒரு தெளிவுக்கும் தெரிவுக்கும் வந்துவிடலாம்.

அதாவது, தற்போதுள்ள சூழலில், தமிழருக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வானாலும்கூட, அது அடுத்த பத்து - பதினைத்து வருடங்களுக்கு சாத்தியமே இல்லை.

இலங்கை அரசியலின் முன்னாலும் - தெற்காசிய அரசியலின் முன்னாலும் - உலக அரசியலின் முன்னாலும், இலங்கைத் தமிழர்களது அரசியல் அபிலாஷை மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றின் பெறுமானம், இப்போதைக்கு அவ்வளவே.

கசப்பானாலும் கடுப்பானாலும் அதுதான் உண்மை.

இப்படியானதொரு கசப்பினை எழுபதுகளில் ஜே.வி.பி உணர்ந்து - புத்திபூர்வமாகச் செயற்பட்டுத் - தன்னைத் தக்கவைத்த காரணத்தினால்தான், அது இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.

ஆக, தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் உண்மையிலேயே - இதயசுத்தியுடன் - தங்களது வருங்காலத் தலைமுறைக்கு வளமான எதிர்காலமும் தீர்வும் அமையவேண்டும் என்று விரும்பினால் -

இயன்றளவு தூரநோக்குடன் - கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் - செயற்படவேண்டும். அதுவே, அவர்களை கடந்தகாலத் தவறுகளிலிருந்து குறைந்தபட்சமேனும் காப்பாற்றும். இல்லையோ, வரலாறே சபிக்கும். சம்பந்தனும் மாவையும் விக்னேஸ்வரனும் விட்டுச்சென்றுள்ள அழுக்கை மீதிப்பேரும் அள்ளித் தங்களில் பூசித்தான், இந்த இனத்துக்கு இன்னொரு ஊழிக்கூத்து நடத்தவேண்டும் என்றால், தாராளமாக இன்னும் ஐந்து ஆறு கட்சிகளை ஆரம்பிக்கலாம். லௌட்ஸ்பீக்கர் போட்டுக் கத்தலாம். செத்துச் செத்து விளையாடலாம்.

குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரையாக்கியதைப்போல இனத்தின் எஞ்சியுள்ள ஆன்மாவையும் விற்றுப்புசிக்கலாம்.
Writing by Theivigan Panchalingam

இந்தியாவை சுற்றி சைக்கிளில் வலம் வரும்இலங்கையைச்சேர்ந்த பிரதாபன்இலங்கையை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இயற்கை வளங்களையும்...
08/10/2024

இந்தியாவை சுற்றி சைக்கிளில் வலம் வரும்
இலங்கையைச்சேர்ந்த பிரதாபன்

இலங்கையை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இயற்கை வளங்களையும் வன உயிர்கள் மற்றும் குளங்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள பயணம் மேற்கொணடு வருகின்றார். அதன் ஒரு கட்டமாக 107 ஆவது நாளான இன்று 11ஆயிரம் கிலோமீற்றர்கள் சைக்கிளில் பயணத்தினை மேற்கொண்டு கன்னியாகுமார வந்தடைந்துள்ளார்.
கேரளாஇதமிழ்நாடுஇகர்நாடாக.மஹாராஸ்டிராஇ பஞ்சாப்இ மும்பைஇ ராஜஸ்தான்இபுதுடில்லிஇ உத்தரப்பிரதேஇ பீகார்இ அருணாச்சலப்பிரதேஸ்இ இமாலயப்பிரதேஸ் ஆந்திரப்பிரதேஸ் ஓரிசா போன்ற மாநிலங்களில் தனது சைக்கிள் பயணத்தை முடித்துள்ளார்.

பலிக்கடா ஆக்கப்பட்டாரா லோசன்தமிழ் முற்போக்கு கூட்டணியில் கொழும்பில்  ஊடகவியலாளர்  ஏ.ஆர்.வி.லோசன் போட்டியிடப்போவதாக சில த...
08/10/2024

பலிக்கடா ஆக்கப்பட்டாரா லோசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் கொழும்பில் ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி.லோசன் போட்டியிடப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் மனோ கணேசன் அறிவித்திருந்தார்.
ஆனால் லோசனின் தெரிவானது அவர் வெற்றி பெறுவதற்காக போடப்பட்ட வேட்பாளர் போன்று தெரியவில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கட்சிக்கு கிடைக்கும் வாக்காகவே கட்சி கருதுகின்றது. த.மு.கூ.வின் கடந்த கால செயற்பாடுகளில் இருந்து இது தெளிவாக கருதமுடியும்.
த.மு.கூவில் முன்னர் போட்டியிட்டு தற்பொழுது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சண் குகவரதன் மற்றும் ஜெனகன் ஆகியோர் இவ்வாறே கட்சியில் இணைந்து கட்சிக்காக பாடுபட்ட்டவர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டனர். அந்த வரிசையில் லோசனும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

06/10/2024

Song : Sakalakalavalli Maalai - Lyrical VideoSingers : Trivandrum SistersMusic : Sivapuranam D V RamaniVideo Powered : Kathiravan KrishnanProduction : Vijay ...

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவசரமாக இலங்கை வந்தடைந்தார் அங்கு இலங்கை ஜனாதிபதி பிரதமர் மற்றும் முன்னாள் ஜனா...
04/10/2024

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவசரமாக இலங்கை வந்தடைந்தார் அங்கு இலங்கை ஜனாதிபதி பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்

04/10/2024


விஜயின் இறுதிப்படமான விஜய் 69 படத்தின் துவக்க விழா

சூலத்துடன் ஊன்றப்பட்ட பந்தக்கால் - திரண்ட தவெக படை.. ஸ்தம்பித்த விழுப்புரம்
04/10/2024

சூலத்துடன் ஊன்றப்பட்ட பந்தக்கால் - திரண்ட தவெக படை.. ஸ்தம்பித்த விழுப்புரம்

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வயிறு தொடர்பான நோயினால்...
30/09/2024

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு தொடர்பான நோயினால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை முக்கிய சோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் அதிரடி அறிவிப்புபாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகள் இனி செல்லமாட்டார்களாம். நல்ல ஒரு முடிவு அரசியல்வாதிக...
26/09/2024

இலங்கை பிரதமர் அதிரடி அறிவிப்பு
பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகள் இனி செல்லமாட்டார்களாம். நல்ல ஒரு முடிவு அரசியல்வாதிகள் மட்டுமில்லை, பாதுகாப்புபடை அதிகாரிகளையும் பாடசாலை வைபவங்களுக்கு அழைக்காவிட்டால் நல்லம்.

கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் பற்றி மக்களுக்கு நம்பிக்கை இல்லை பிரதமர் ஹரிணி அறிவுறுத்தினார்.

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல் வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றின் போது (26) இன்று தெரிவித்தார்.....

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியாதல் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தி பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு நியாயத்தை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளை பணித்தார்.....

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை இந்த நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் உரிய முறையில் பரீட்சை நடத்துதல் பெறுபேறுகள் வழங்கும் விடயத்தில் இந்த நிறுவனங்கள் இதனை விட முனைப்புக் காட்ட வேண்டும் ஆசிரிய நியமனங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மை காட்டப்படுவது அவசியம் எனவும் அவர் அதிகாரிகளுக்குஅறிவுரை வழங்கினார்.

புதிய அமைச்சுப் பதவிகள்ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க1. பாதுகாப்பு2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமி...
24/09/2024

புதிய அமைச்சுப் பதவிகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
1. பாதுகாப்பு
2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
3. வலுசக்தி
4. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் ஹரினி அமரசூரிய
5. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
6. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
7. பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
8. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
9. சுகாதாரம்

விஜித ஹேரத்
10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

இலங்கைகான சீன தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவை ஜே.வி.பி தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது...
23/09/2024

இலங்கைகான சீன தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவை ஜே.வி.பி தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது...

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள...
23/09/2024

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்கு தெரியும். எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது. அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.

ஒருபோதுமே தோ்தலொன்றின்போது இடம்பெறுகின்ற அதிகார பரிமாற்றத்தை எந்தவொரு தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கிணங்க செயலாற்றி முன்னாள் சனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மக்களின் மக்கள் ஆணையை சுமுகமாக ஏற்றுக்கொண்டு இந்த சனநாயக ரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான அவருடைய அர்ப்பணிப்பையும் முன்மாதிரியான தன்மையையும் வெளிக்காட்டியமைக்காக நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதைப்போலவே எங்களுக்கு கிடைப்பது சவால்கள் நிறைந்த ஒரு நாடே என்பதை நாங்கள் மிகவும் ஆழமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம். எமது அரசியலில் இதைவிட பரிசுத்தமாக்கப்படவேண்டிய, மக்கள் பாரியளவில் எதிர்பார்க்கின்ற சாதகமான அரசியல் கலாச்சாரமொன்றின் தேவை நிலவுகிறது. நாங்கள் அதற்காக அர்ப்பணிப்பு செய்யத்தயார். எமது நாட்டின் அரசியல்வாதி மற்றும் அரசியல் பற்றி பிரஜைகள் மத்தியில் பாதகமான ஓர் அபிப்பிராயமே நிலவுகிறது. அது பொருத்தமற்ற ஒரு இடமென்ற கருத்தே நிலவுகிறது. எனவே நாங்கள் எமது பக்கத்தில் உச்சளவில் மீண்டும் அரசியல் பற்றியும் அரசியல்வாதி பற்றியும் மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக எமது தரப்பில் ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றத்தயார்.

அத்துடன் எங்களுக்கு கிடைக்கின்ற இந்த ஆழமான நெருக்கடியானது வெறுமனே ஓர் அரசாங்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது ஒரு தனிநபரால் மாத்திரம் கடந்து செல்லக்கூடிய நிலையில் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால் இதற்கு முன்னரும் நான் ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்லவெனக் கூறியிருக்கிறேன். நான் ஒரு மெஜிக்காரனல்ல. நான் இந்த நாட்டில் பிறந்த ஒரு சாதாரண பிரஜை. ஆற்றல்கள் இருக்கின்றன. ஆற்றாமைகளும் இருக்கின்றன. நாம் அறிந்த விடயங்களும் இருக்கின்றன. அறியாத விடயங்களும் இருக்கின்றன. ஆனால் என்னுடைய முதன்மைப்பணி ஆற்றல்களை உறிஞ்சி எடுத்து அறிந்தவற்றை ஒன்று திரட்டி மிகச் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நாட்டை நெறிப்படுத்துவதாகும். அதனால் அந்த கூட்டான இடையீட்டின் பங்காளியாவதே என்னுடைய பொறுப்பாகும். அதுபோலவே இந்த நெருக்கடியை நிறைவு செய்யும் போது அனைத்துத் துறைகளையும் சோ்ந்த பொதுப்பிரஜைகளுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. அந்தப்பொறுப்பினை ஈடேற்றுவதற்காக நான் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறேன்.

ஆனால் நாட்டின் சனாதிபதி என்ற வகையில் என்னிடம் ஒரு தலையாய பொறுப்பு இருப்பதாக நான் நம்புவதோடு இந்த சவாலை வென்றெடுப்பதற்காக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயலாற்றுவதற்காக என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை நான் முறைப்படி ஈடேற்றுவேன் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவேன். அதைப்போலவே குறிப்பாக எங்களுக்கு தெரியும் எமது நாட்டுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். உலக நாடுகள் மத்தியில் எத்தகைய அதிகாரப்பிளவுகள் இருந்தாலும் நாங்கள் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாக அமந்துவிட முடியாது. உலகத்துடன் கூட்டாக ஒருங்கிணைந்து பயணிக்கவேண்டும். அதற்கு அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் நாங்கள் ஒருபோதுமே தயங்கமாட்டோம்.

அதைப்போலவே எமது நாட்டை கட்டியெழுப்புகையில் கைத்தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் முக்கியமானவர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை பலம்பொருந்தியவர்களாக கட்டியெழுப்ப அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி உதவுவார்களென நாங்கள் நம்புகிறோம். இறுதியாக நான் கூறிவைக்க விரும்புவது எமது நாட்டின் சனநாயகத்தினால் நான் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். அவ்வாறு தெரிவு செய்துகொள்வதற்காக மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனக்கு அளிக்கப்படாத வாக்குகளும் இருக்கின்றன. எனவே எமது வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது. எனவே எமக்கு ஒத்துழைப்பு நல்காத, எம்மை நம்பாத பிரஜைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் எனது ஆட்சிக்காலத்தில் எனக்கு கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாக அமைகின்றது. அந்த பணியை சரிவர ஈடேற்ற முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எதிர்காலத்தில் இவைனைத்துமே நடைமுறையில் சாத்தியமானதாக அமைகின்ற அனுபவத்தை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக உங்களுடைய ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் நல்லாசியையும் கடவுளின் துணையையும் வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கையின் புதிய பிரதமராக  பதவி ஏற்கவிருக்கும் கலாநிதி ஹரினி இந்தியதூதுவரை சந்தித்தபோது...
23/09/2024

இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் கலாநிதி ஹரினி இந்தியதூதுவரை சந்தித்தபோது...

ஜனாதிபதி அனுரகுமாரவின் புதியஅமைச்சரவை வருமாறு:1.ஜனாதிபதியிடம்பாதுகாப்பு,பொருளாதாரம், தேசியகொள்கை திட்டமிடல்.2.பிரதமரிடம்...
23/09/2024

ஜனாதிபதி அனுரகுமாரவின் புதிய
அமைச்சரவை வருமாறு:

1.ஜனாதிபதியிடம்

பாதுகாப்பு,பொருளாதாரம், தேசிய
கொள்கை திட்டமிடல்.

2.பிரதமரிடம்
நல்லாட்சி, நிருவாகம்.

3.அமைச்சர்-1
சமூக, மனிதவள அபிவிருத்தி

4.அமைச்சர்-11
உட்கட்டமைப்பு, கைத்தொழில் அபிவிருத்தி.

தற்போதைய 22 அமைச்சுக்கள் மேற்குறிப்
பிட்ட 04 அமைச்சுக்களின் கீழ் கொண்டு
வரப்பட்டுள்ளன.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Thuraitv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share