Esha info Tamil

Esha info Tamil discover

இன்று காலை Jogging சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 300 மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.அவர்...
01/03/2023

இன்று காலை Jogging சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 300 மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.

அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.

நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன்.

சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு ,

எங்களுக்கு 50 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.

எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.

இறுதியாக, சாதித்து விட்டேன்!

அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.

எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.

ஆனால் அந்த நபருக்கு , நான் அவருடன் போட்டி போட்டது கூட தெரியாது.

நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....

1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.

2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.

3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.

4.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.

அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது. நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?

நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நாமே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.

உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........

ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,

*நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.*

சிலர் தங்கள் கவனத்தை,

அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,?
எங்கே செல்கின்றார்கள்,?
என்ன அணிகிறார்கள்,?
என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,?
என்ன பேசுகிறார்கள்?..
என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மையை உணருகின்றார்கள்.

உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.

கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை.
யாரும் நமக்கு போட்டி இல்லை.
அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.

*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*

மற்றவரைக் கவிழ்க்க எண்ணி நாம் கவிழ்ந்து போவது தெரியாமல் வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுகிறோம்.

*உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.*

💐💐💐 சித்திரை திருவிழா 2023💐💐💐 ஏப்ரல் 23, 2023– ஞாயிறுக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகன...
13/02/2023

💐💐💐 சித்திரை திருவிழா 2023💐💐💐

ஏப்ரல் 23, 2023– ஞாயிறுக்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 24, 2023 – திங்கள்கிழமை – பூத , அன்ன வாகனம்

ஏப்ரல் 25, 2023- செவ்வாய்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 26, 2023 – புதன்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 27, 2023– வியாழக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 28, 2023– வெள்ளிக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 29, 2023– சனிக்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 30, 2023– ஞாயிறுக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா

மே 01, 2023– திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

மே 02, 2023– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

மே 03, 2023– புதன்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

மே 04, 2023 – வியாழக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை👇👇

இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

மே 05, 2023 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

மே 06, 2023– சனிக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

மே 07, 2023– ஞாயிறுக்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

மே 08, 2023– திங்கள்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..

🙏🙏🙏அனைவரும் வருக அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வார் ஸ்ரீ கள்ளழகர் அருள் பெறுக 🙏🏻🙏🏻

ஆபிரகாம் லிங்கன்பெப்ரவரி 12, 1809 ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் த...
12/02/2023

ஆபிரகாம் லிங்கன்

பெப்ரவரி 12, 1809
ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.

காதலர் தின வரலாறுஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் த...
09/02/2023

காதலர் தின வரலாறு

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் காதல் மடல்:

இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில். எஸ் பி பி அவர்கள் பாடிய முதல் பாடல். ஆயிரம் நிலவே வா. உடன் சுசிலா அம்மாஆண்டு 1969 அப்போது எஸ் பி பி அவ...
08/02/2023

தமிழ் சினிமாவில்.
எஸ் பி பி அவர்கள் பாடிய முதல் பாடல்.
ஆயிரம் நிலவே வா.
உடன் சுசிலா அம்மா
ஆண்டு 1969
அப்போது எஸ் பி பி அவர்களுக்கு வயது 20

பாலம் கல்யாண சுந்தரம்.இந்திய அரசின் ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது பெற்றவர்..சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பால...
27/01/2023

பாலம் கல்யாண சுந்தரம்.

இந்திய அரசின் ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது பெற்றவர்..

சுபாஷ் கலியன் இயக்கியத்தில் வெளியான "பாலம் கல்யாணசுந்தரம்" பற்றிய ஆவணப்படம், 2012 ஆண்டு நடைபெற்ற மூன்றாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வானது

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?.

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகூறி விட்டு திரும்பினார்.

ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.ஆனால் இதை எதையும் தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளாதவர்

ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.

ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.

கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்..

இத்தகைய உத்தமருக்கு பத்ம ஸ்ரீ விருதை அளித்து மத்திய அரசு பெருமை தேடி கொண்டுள்ளது.

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......** # முதல் வித்தியாசம்......*பதினைந...
26/01/2023

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*

* # முதல் வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் இதை கொடியை பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்பார்கள்..

* #இரண்டாவது வித்தியாசம்......*

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

* # மூன்றாம் வித்தியாசம்.......*

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......

அனைவருக்கும் இனிய. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்...
25/01/2023

அனைவருக்கும் இனிய.
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இந்திய மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததாக கொண்டாடும் நாள் தான் குடியரசு தினம் ஆகும்.

குடியரசு என்றால் மக்களாட்சி என்று பொருள்படுகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சி செய்யும் முறையே குடியரசு ஆட்சி முறையாகும்.

உங்களின் பெரிய சொத்து உங்களின் மனநிலை மட்டுமே
22/01/2023

உங்களின்
பெரிய சொத்து உங்களின் மனநிலை மட்டுமே

ஏன்டா ! இந்தியா குள்ள தான் தமிழ்நாடு இருக்கு. மொத்த இந்தியாவுக்கும் எங்க வரி GST பணம் தான் அதிகமா போகுது. எங்க பணத்தை வா...
21/01/2023

ஏன்டா ! இந்தியா குள்ள தான் தமிழ்நாடு இருக்கு.

மொத்த இந்தியாவுக்கும் எங்க வரி GST பணம் தான் அதிகமா போகுது.

எங்க பணத்தை வாங்கிட்டு எங்க மீனவர்களையே அடிச்சு விரட்டுறீங்க

நாய் என்றால் அவ்வளவு கேவலமா என்ன ?
21/01/2023

நாய் என்றால் அவ்வளவு கேவலமா என்ன ?

"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு"நீண்ட இடைவேளைக்குப் பிறகு. சினிமாவில் மீண்டும் நடிகர் கவுண்டமணிநடிக்க உள்ளார். தமிழ் மொழிய...
21/01/2023

"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு"

நீண்ட இடைவேளைக்குப் பிறகு.
சினிமாவில் மீண்டும் நடிகர் கவுண்டமணி
நடிக்க உள்ளார். தமிழ் மொழியை தவிர.
வேறு எந்த மொழிகளிலும்
நடிக்க மாட்டேன் என்ற
கொள்கை உடையவர்.

பத்மினி,ராகினி,மற்றும் லலிதா
19/01/2023

பத்மினி,ராகினி,மற்றும் லலிதா

தனி ஒருவன்
18/01/2023

தனி ஒருவன்

நேற்று மாட்டுப்பொங்கல். இன்று ஆட்டுக்கு பொங்கல்
17/01/2023

நேற்று மாட்டுப்பொங்கல்.

இன்று ஆட்டுக்கு பொங்கல்

Address

Maha Rajan Nagar
Chittagong Division
625009

Alerts

Be the first to know and let us send you an email when Esha info Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esha info Tamil:

Videos

Share

Nearby media companies