Ramnad Seithigal

  • Home
  • Ramnad Seithigal

Ramnad Seithigal RamnadSeithigal

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரி...
30/10/2023

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை தெப்பக்குளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் பசும்பொன் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.",
#பசும்பொன் #முத்துராமலிங்கதேவர் #முதல்அமைச்சர்

news from Dailythanthi

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள...
30/10/2023

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டரங்கில் காலை 9.45 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மேலும் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கூட்டரங்கில் தீ பற்றி எரிந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே லிபினா என்ற பெண் உடல்கருகி உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் குமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேரளா தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக டொமினிக் மார்டின் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மார்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.",
#திருவனந்தபுரம் #கேரள #எர்ணாகுளம் #குண்டு
News From Dailythanthi

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.ஆந்திர மாநிலம் விசாகப...
30/10/2023

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு பயணிகள் ரெயில் பாலசாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் அலமந்தா - கன்கடப்பள்ளி இடையேயான தண்டவாளத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது.அப்போது, அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி மற்றொரு பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. இரு ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் வேகமாக வந்த விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம் - பாலசாவு பயணிகள் ரெயில் மீது பின்புறத்தில் இருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 2 ரெயில்களின் பெட்டிகள் தடம்புரண்டன.இந்நிலையில், இந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 39 பேர் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மனித தவறே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ",
#அமராவதி #ஆந்திரா #ரெயில்
News from Dailythanthi.

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று...
24/10/2023

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.இந்த சூழலில், ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ",
#ஹமூன் #சென்னை #புயல் #வானிலைஆய்வுமையம்
FROM Dailythanthi

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-...
24/10/2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.",
#மேட்டூர் #டெல்டா #மேட்டூர்அணை
News from Dailythanthi

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை,இன...
24/10/2023

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்,தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1.500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
#சென்னை #வேலைநிறுத்தம் #ஆம்னி #பேருந்து

news from Dailythanthi

ஆண்களுக்கான  உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஹாங்சோ, பாரா ஆசிய விளைய...
23/10/2023

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹாங்சோ, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், மகளிருக்கான படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். தற்போது வரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 7 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ",
#வெள்ளிப்பதக்கம் #ஆசியவிளையாட்டுபோட்டி
News from Dailythanthi

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது....
23/10/2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 367 ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான், அந்த இலக்கை நோக்கி ஆடிய போது 305 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காததால் இலக்கை நெருங்க முடியவில்லை. குறிப்பாக உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான கேப்டன் பாபர் அசாம் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. அவர் 4 இன்னிங்சில் வெறும் 83 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். முகமது ரிஸ்வான் (ஒரு சதம் உள்பட 294 ரன்) மட்டுமே அந்த அணியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 'புதிய பாகிஸ்தான் அணி'இதே போல் வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி (9 விக்கெட்) வலு சேர்க்கிறார். அதே சமயம் சுழற்பந்து வீச்சில் பலவீனம் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் ஷதப் கானுக்கு பதிலாக இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் 9 ஓவரில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாக மாறினார். முகமது நவாசும் (2 விக்கெட்) சொதப்புகிறார். சென்னை ஆடுகளம் வேகம் குறைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு அனுகூலமானது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். அத்துடன் அரைஇறுதி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.நேற்று நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் கூறுகையில், 'நாங்கள் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2-2 என்று இருக்கிறோம். கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதே முக்கியம். அது குறித்து நிறைய பேசியுள்ளோம். நாளை (இன்று) புதிய பாகிஸ்தான் அணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஆப்கானிஸ்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதை சமாளிக்கக்கூடிய திறமை எங்களிடம் உண்டு. அண்மையில் ஒரு நாள் தொடரில் அவர்களை 3-0 என்ற கணக்கில் நாங்கள் வீழ்த்தியதை மறந்து விடக்கூடாது. சென்னையில் இருந்து கிளம்பும் போது 4-2 என்று (சென்னையில் நடக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில்) இருப்போம் என்று நம்புகிறேன்' என்றார். ஆப்கானிஸ்தான் எப்படி?ஆப்கானிஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 139 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ளது. ஏதுவான இந்த ஆடுகளத்தில் முகமது நபி, முஜீப் ரகுமான், ரஷித்கான் ஆகியோர் சுழல் ஜாலத்தில் மிரட்டினால், இங்கிலாந்தை போன்று பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். இது தான் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கப்போகிறது.ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் என்றாலே தற்போது கடும்போட்டி நிலவுவதால் இது விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஆடிய ஒரு நாள் தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வென்றிருக்க வேண்டியது. நெருங்கி வந்து தோற்றோம். இந்த முறை அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வென்று இருக்கிறது.பிற்பகல் 2 மணிக்கு...போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான் அல்லது உஸ்மான் மிர், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித்கான், முஜீப் ரகுமான் அல்லது நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.",
#உலகக்கோப்பை #கிரிக்கெட் #சென்னை #பாகிஸ்தான்

லியோ படத்தின் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.நடிகர் வ...
17/10/2023

லியோ படத்தின் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளன.இத்திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் லியோவுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர முறையீடு செய்தார். படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்களே இருப்பதால், இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.அப்போது 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்குதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால் 18.45 மணி நேரம்தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிடலாம் என தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.இதனிடையே அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த் வழக்கு மாற்றப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தார்.இந்தநிலையில், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும், 9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பதுதான் அரசு வகுத்துள்ள விதி, அதனை மீற முடியாது. இடைவெளி நேரத்தை குறைத்துக்கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது, தியேட்டர் நிர்வாகம்தான் கூற முடியும். லியோ படம் 2 மணி 45 நிமிடங்கள் நீளம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது. அதனை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. லியோ படத்தின் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி அனிதா சுமந்த் கூறினார்.ரசிகர்களுக்காகதானே அனைத்து காட்சிகளும் திரையிடப்படுகின்றன என நீதிபதி அனிதா பேச்சால் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.",
#லியோ #நடிகர் #விஜய் #சென்னை #திரைப்படம்
News from Dailythanthi

2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வ...
17/10/2023

2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் (இருபாலருக்கும் 20 ஓவர்), ஸ்குவாஷ், பேஸ்பால்-சாப்ட்பால் மற்றும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளை புதிதாக சேர்க்க லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்தது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் ஐ.ஓ.சி.யின் 141-வது கூட்டத்தில் மேற்கண்ட 5 விளையாட்டுகளை சேர்ப்பது தொடர்பாக உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் ஐ.ஓ.சி.யின் 99 உறுப்பினர்களில் 2 பேர் மட்டுமே எதிராக கையை உயர்த்தினர். மற்ற அனைவரும் இந்த விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க ஒருமித்த ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து 5 விளையாட்டுகளும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக ஐ.ஓ.சி.யின் தலைவர் தாமஸ் பேச் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் ஸ்குவாஷ் மற்றும் பிளாக் கால்பந்து ஒலிம்பிக்கில் முதல்முறையாக அறிமுகமாகின்றன. மற்ற விளையாட்டுகள் ஏற்கனவே ஒலிம்பிக்கில் அங்கம் வகித்து இருக்கின்றன.கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றிருந்தது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது.லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி, 6 அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்டை நடத்தலாம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அணிகளின் எண்ணிக்கை, தகுதி சுற்று உள்ளிட்டவை குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விராட் கோலியும் காரணம்ஓட்டெடுப்புக்கு முன்பாக லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியின் இயக்குனரும், துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம் வென்றவருமான நிகோலோ கேம்பிரியானி பேசுகையில், 'உலகம் முழுவதும் 250 கோடி ரசிகர்களுடன் சர்வதேச அளவில் 2-வது பிரபலமான விளையாட்டாக விளங்கும் கிரிக்கெட்டை ஒலிம்பிக் வளையத்திற்குள் வரவேற்பது திரில்லிங்காக இருக்கிறது. லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதில் உங்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. அத்துடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் முன்னோடியாக இருக்கும் கிரிக்கெட்டை அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனது நண்பர் விராட் கோலி இங்கு (இந்திய கிரிக்கெட் வீரர்) இருக்கிறார். சமூக வலைதளத்தில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 34 கோடியாகும். இந்த எண்ணிக்கை லி பிரோன் ஜேம்ஸ், டாம் பிராடி, டைகர் வுட்ஸ் ஆகிய பிரபலங்களை பின்தொடர்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இதுவும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கு ஒரு காரணம்' என்றார்.காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு ஆகியவற்றை தொடர்ந்து ஒலிம்பிக்குக்கும் கிரிக்கெட் போட்டி திரும்புவது வீரர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நீத்தா அம்பானி பூரிப்புஐ.ஓ.சி. உறுப்பினரும், தொழிலதிபருமான நீத்தா அம்பானி கூறுகையில், 'ஐ.ஓ.சி. உறுப்பினராக, கிரிக்கெட்டின் தீவிர ரசிகையாக, பெருமைமிக்க இந்தியராக கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும். உலகம் முழுவதும் அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் திகழ்கிறது. அதிக பேர் பார்க்கும் விளையாட்டில் 2-வதுஇடத்தில் இருக்கிறது. 140 கோடி இந்தியர்களுக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல. ஒரு மதம் போன்று பின்னி பிணைந்துள்ளது.' என்றார்.இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறுகையில், 'ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்திருப்பதன் மூலம் புதிய எல்லைகள் திறக்கப்படுகிறது. உலக அரங்கில் கிரிக்கெட் வணிகத்தை இதுவரை பயன்படுத்தாத நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு இது ஈடுஇணையற்ற ஒரு வாய்ப்பாக அமையும்' என்றார்.நிரந்தர இடம்சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் கிரேக் பார்கிளே கூறுகையில், 'உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருப்பதால் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி அடையும். உலக அளவில் குழு போட்டியில் வேகமாக முன்னேற்றம் அடைந்துள்ள போட்டிகளில் கிரிக்கெட்டும் ஒன்று. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டுமின்றி வருங்காலங்களிலும் ஒலிம்பிக் விளையாட்டு திட்டத்தில் கிரிக்கெட் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார்.கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைத்திருப்பதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2032-ம் ஆண்டு ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடப்பதால் அதிலும் கிரிக்கெட் இடம் பெறுவதில் சிக்கல் இருக்காது. ",
#கிரிக்கெட் #ஒலிம்பிக்போட்டி #மும்பை #விளையாட்டு
News from Dailythanthi

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
16/10/2023

மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ரூ.1,763 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-மாற்றுத்திறனாளிகளின் நலன் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து உயிர்களும் ஒன்று; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.",
#ஸ்டாலின் #முதல்அமைச்சர் #மாற்றுத்திறனாளி
News From Dailythanthi

இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இ...
16/10/2023

இஸ்ரேலில் இருந்து மேலும் 16 பேர் சென்னை வந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் கல்வி பயிலவும், வேலைக்காகவும் சென்று சிக்கி இருந்த இந்தியர்களை மத்திய அரசு 'ஆப்ரேஷன் அஜய் ' திட்டத்தின் கீழ் விமானம் மூலம் மீட்டு வருகிறது. முதல் கட்டமாக 212 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று முன்தினம் சென்னை மற்றும் கோவை வந்தடைந்தனர்.இந்தநிலையில் 2-வது கட்டமாக இஸ்ரேலில் இருந்து நேற்று அதிகாலை 235 இந்தியர்கள் நாடு திரும்பினர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேர் அடங்குவர். அதில் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 16 பேர், 2 விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். மீதம் உள்ள 12 பேர் டெல்லியில் இருந்து கோவைக்கு சென்றனர்.சென்னை விமான நிலையம் வந்த 16 பேரையும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர்.பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-இஸ்ரேல்-ஹமாஸ் போரால் நடைபெறும் அசாதாரண சூழலில் தமிழர்கள் பாதிக்காத வகையில் மீட்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கொடுத்த அழுத்தத்தால் தொடர்ந்து 2 நாட்களாக மீட்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து தமிழர்களை மீட்டு வந்து டெல்லி வரையிலும் கொண்டு வந்து சேர்க்கின்ற பணியை மத்திய அரசும், டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு வருகின்ற பணியை தமிழக அரசு சார்பாகவும் செய்யப்படுகிறது.இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களது வீடு வரை கொண்டு சேர்க்கும் பணியை தமிழக அரசின் செலவிலேயே செய்யப்படுகிறது. இதுவரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 128 பேர் பதிவு செய்திருகிறார்கள். மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். சொந்த செலவில் 12 பேர் நேரடியாக வந்து உள்ளனர்.இஸ்ரேலில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும்போது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் தங்களோடு இருக்கின்ற மற்ற நாட்டவர்கள் அழைத்துச் செல்லப்படுவதால் தனியாக இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனால் தாயகம் திரும்ப விரும்புகின்றவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.",
#இஸ்ரேல் #ஹமாஸ் #சென்னை #அமைச்சர்
News From Dailythanthi

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆமதாபாத்,13-வது உலகக...
14/10/2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆமதாபாத்,13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு ஆமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலகக் கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலு சேர்க்கிறார்கள். 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.ஆமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.",
#உலகக்கோப்பை #கிரிக்கெட் #இந்தியா #பாகிஸ்தான் #கிரிக்கெட்போட்டி
news from Dailythanthi

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொ...
14/10/2023

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உள்ளார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது.150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி இன்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
#நாகை #இலங்கை #கப்பல் #போக்குவரத்து
News from Dailythanthi

உங்கள் கம்பெனி தொழிலுக்கு தனி WEBSITE  இல்லை என்றுகவலை வேண்டாம்  india biz ads                       contact: 8012626555
09/03/2023

உங்கள் கம்பெனி தொழிலுக்கு தனி WEBSITE இல்லை என்றுகவலை வேண்டாம் india biz ads

contact: 8012626555

எங்கள் இணையதளத்தில் உங்கள் நிறுவனம் அல்லது தொழிலுக்ககான ஓர் இடம்  india biz ads                    contact: 8012626555
02/03/2023

எங்கள் இணையதளத்தில் உங்கள் நிறுவனம் அல்லது தொழிலுக்ககான ஓர் இடம் india biz ads

contact: 8012626555

We are Provide Software’sFor all your needs Contact80126261118012626222Billing SoftwareHotel Rooms BookingRestaurantGroc...
15/02/2023

We are Provide Software’s
For all your needs
Contact
8012626111
8012626222
Billing Software
Hotel Rooms Booking
Restaurant
Grocery Shop
Textile
Steel and Furniture
School and College

நீங்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களா? சிறந்த பந்து வீச்சாளரா உங்களது திறமையை நிரூபிக்க ஒரு அருமையான வாய்ப்பை தமிழ்நா...
07/02/2023

நீங்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களா? சிறந்த பந்து வீச்சாளரா உங்களது திறமையை நிரூபிக்க ஒரு அருமையான வாய்ப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது மாவட்ட வாரியாக சிறந்த கிரிக்கெட் பந்து பௌலிங் வீச்சாளர்களை அடையாளம் காணும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கீழ்கண்ட தேதிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது யாருக்குத் தெரியும் உங்கள் குழந்தையும் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ramnad Seithigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share