Read Ride Rant

  • Home
  • Read Ride Rant

Read Ride Rant This is the page for my youtube channel 'Read Ride Rant'.

A noise free Deepavali for Kollywood this year 😇😂🥲 IYKWIM
30/10/2024

A noise free Deepavali for Kollywood this year 😇😂🥲 IYKWIM

மெய்யழகன் படம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பார்வையும் கருத்தும் இருக்கிறது. பலரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக் ...
30/10/2024

மெய்யழகன் படம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பார்வையும் கருத்தும் இருக்கிறது. பலரும் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொண்டதாகவும் சில காட்சிகளில் அழுததையும், நெகிழ்ந்ததையும் குறிப்பிட்டு இருந்தார்கள் .

டெல்டா மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக ஊர் பெயர்ந்த பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஒரே மாதிரியான கதை இருக்கும். நிலம்/வீடு உள்ளிட்ட அனைத்தும் இருந்து பின்பு ஒன்றுமில்லாமல் போனபின் தான் தலையெடுக்க ஊரை விட்டு வந்தவர்கள். அல்லது பூர்வீக சொத்தை சொந்த பந்தங்களிடமோ பங்காளிகளிடமோ ஏமாந்து எழுதிக்கொடுத்துவிட்டு ஒன்றுமில்லாமல் போனபின் புதிய தொடக்கத்திற்காய் ஊர் மாறிப் போனவர்கள் என ஏதோவொரு கதை. எதுவும் இல்லையெனில் சாமர்த்தியம் போதாமல், வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் , குடி சூது கடன் என உட்காந்து தின்று சொத்தை அழித்தவர்கள். அல்லது இது எதுவுமே இல்லாமல் கல்விக்ககவோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்காக ஊரை விட்டு வந்தவர்கள்.ஒரு சிலர் கேட்டிருந்தது ஏன் இரவோடு இரவாக கிளம்பி வர வேண்டும் என. அது ஒரு மாதிரியான உள்ளுணர்வு. சொந்த வீட்டை விற்றுவிட்ட பின்னர் அதே ஊரில் நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் வாடகை வீடுகளில் குடியிருந்தாலும் கடைசியாக சென்னை வரும்போது இப்படித்தான் இரவோடு கிளம்பி வந்தோம்.இன்னும் இந்தப் படத்தில் என்னவெல்லாம் relatable எனச்சொல்ல முயன்றால் நிறைய சொந்தக்கதை சோகக்கதை சொல்ல வேண்டிவரும். அது வேண்டாம். அதனை விரும்பவில்லை.

நாங்களும் இதில் ஏதோ ஓர் வகைமையில் அடங்கிப் போகும் கதையைக் கொண்டவர்கள் தாம். சொந்த ஊருக்கும் எங்களுக்குமான கடைசிக் கண்ணி அப்பா தான் . அவர் போனதும் திரும்ப ஊருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமோ உந்துதலோ எதுவுமே இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில் தனிப்பட்ட முறையில் என்னால் ரொம்பவே உணர்ந்து கொள்ளக் கூடிய படமாக இருந்தது ‘மெய்யழகன்’. ஆனால் கீழத்தஞ்சை டெல்டா பகுதிகளை பிரேம்குமார் அசலாக காண்பித்திருக்கிறாரா எனப் பார்த்தால் இல்லை என்றே சொல்லவேண்டும். எப்போதோ ஊரைவிட்டு வந்த ஒருவரின் ஊர் சார்ந்த நினைவுகளின் மீட்டுருவாக்கம் தான் மெய்யழகன் திரைப்படம். அவர் மனதில் தஞ்சை பற்றிய நினைவுகளையும் அது சார்ந்த சில கற்பனைகளையும் தனக்கேயுரிய நகரத்து அழகியல் (urban aesthetics) உடன் உருவாக்கி கதையாக்கியிருக்கிறார். வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் , தஞ்சை பெரிய கோவில், நீடாமங்கலம், பேருந்து வழித்தடம் , தெரு, வீடு இவையனைத்தையும் சேர்த்து அங்கே சில கதைமாந்தர்களையும் உலவவிட்டு தான் சொல்லவந்த கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் (Thanjavur in his mind or his idea of Thanjavur). இந்த அழகியலின் காரணமாகவே திரைப்படத்தில் அதீதமான நாடகத்தன்மை இருந்தாலும், கதையின் போக்கில் அது மறந்துவிடுகிறது. அசலான டெல்டா திரைப்படம் எனக்கேட்டால் இன்னமும் ‘களவானி’ திரைப்படத்தைத்தான் சொல்வேன்.

சென்னையில் தக்‌ஷின் சித்ரா என்று ஒரு இடம் உண்டு. கிராமங்களும் அங்குள்ள வீடுகளும், பொருட்களும் எப்படி இருக்குமென வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். பணிபுரிகிற நிறுவனத்துக்கு வெளிநாட்டினர் யார் வந்தாலும் நம்மாட்கள் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிற முதல் இடம் அதுவாகத்தான் இருக்கும். அவர்களும் village experience என்று மகிழ்ந்து போவார்கள். கிட்டத்தட்ட அந்த மாதிரியான அழகியல் தான் மெய்யழகன் திரைப்படத்தினுடையதும். அதனைத் தவிர்த்து படத்தில் ரசிக்கவும் , ஒன்றிப்போகவும் நிறைய விஷயங்கள் உண்டு. ராஜ்கிரணுக்கும் ஜெயப்பிரகாஷுக்குமான தொலைப்பேசி உரையாடல் காட்சி, கார்த்தி அரவிந்த்சாமியிடம் அவர் விட்டுச்சென்ற சைக்கிள் தங்கள் வாழ்க்கையையே மாற்றியது பற்றி சொல்லுமிடம், அதிகம் பேரால் குறிப்பிட்டு சொல்லப்பட்ட கல்யாண மேடையில் தங்கைக்கு கொலுசு அணிவிக்கிற காட்சி என இன்னும் நிறைய.

பரபரப்பில்லாத கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்துப் பழகாத நமக்கு ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் நிதானம் ஆரம்பத்தில் பிடிபடவில்லை.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என எல்லாவற்றிலும் அதே நிதானம். கொஞ்சம் கொஞ்சமாய் அதற்குப் பழகி படத்தில் நாம் ஒன்றிப்போகும்போது படம் முடிவடைகிறது. ஜல்லிக்கட்டு காளை தொடர்பான காட்சிகள் தவிர்த்து (வெட்டப்பட்டவை உட்பட) படத்திலிருந்து விலகி நிற்கிற அம்சம் என எதுவுமில்லை. It was so calming at the end , that I forgot to even look at my phone for more than hour. கோவிந்த் வசந்தாவின் இசையும் கமல் குரலில் வருகிற பாடலும் அதனைப் பயன்படுத்தியிருந்த விதமும் அற்புதம். படம் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது இதுவும் ஒருமாதிரியான fantasy திரைப்படம் தான் என. சுற்றியிருக்கிற அத்தனை உறவுகளும் நம் மீதான அன்புடனும் பரிவுடனும் வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் இருப்பதான காட்சிப்படுத்தல் ஒரு மிகையான ஆனால் அழகான கற்பனை. போலவே ஒருகட்டத்தில் மெய்யழகனும் அருள்மொழியும் ஒரே ஆளின் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தின் வயதின்/பிரதிபலிப்பு என்று தோன்றியது.Meyyazhagan is Arul's past/lost self which he eventually rediscovers through his journey . இரண்டு ஆண்களுக்கு இடையேயான நட்பை கடைசியாக இத்தனை அழகாக திரையில் பார்த்தது கார்த்தியின் ‘தோழா’ திரைப்படத்தில்தான். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகான bromance. அதிஷா இதைப் பற்றி மட்டுமே சிறப்பான ஒரு பதிவெழுதியிருக்கிறார். தேடிப்படித்துவிடவும்

கார்த்தியைத் தவிற இந்தப் பாத்திரத்தை இவ்வளவு சிறப்பா நடிச்சிருக்க முடியுமா தெரியல. பேசுற தொனி உட்பட அப்படியே மாறியிருக்காரு. அரவிந்த்சாமியுடைய நடிப்பு பத்தியும் நாம தனியா சொல்லத்தேவையில்லை. கடைசில அந்த மனப்போராட்டத்தோட ஊரவிட்டு கிளம்பி வர்ரதெல்லாம் அவ்வளவு அழுத்தம். கொஞ்ச நேரம் வந்தாலும் ஸ்ரீதிவ்யாவுடைய பாத்திரமும் நடிப்பும் கூட அழகா இருந்துச்சு. எனக்கு ரொம்பவே பிடிச்சது. I absolutely love then way how Premkumar writes the leads in his movies. Their awkwardness and how they unravel later is all so poetic and pleasing.

And yes நானும் ஒரு சில இடங்கள்ல அழுதேன் தான். This movie is capable of doing that to you.

மத்தபடி ராவோட ராவா ஏன் கிளம்பி வந்தாங்க, வேற யார்கிட்டயாவது அவன் யாருன்னு கெட்ருக்கலாமே, கேட்டவ்வுடனே 25 லட்சம் எவன் தருவான் மாதிரியான logical கேள்விகளை பெருசா எடுத்துக்க தேவையில்லை. இந்த மாதிரி உடைக்க ஆரம்பிச்சா எல்லா சினிமாவையும் எல்லா கதைகளையும் சுலபமா உடைச்சிட்டு போகலாம். அது அவசியமில்லைன்னு தோணுது. At least I cannot be that cynical while approaching any work of art and could never ridicule it baseless just for my clout .

Meyyazhagan is beautiful tale and a much needed breather. Please do watch it if you haven't already.

28/10/2024

Written by Abdul Hameed Sheik Mohamed
___________________________
யாருக்கும்
மிகக்குறைவாகவே இருங்கள்
எந்த இடத்திலும்
மிகக்குறைந்த நேரமே
இருங்கள்

எந்தக் காதலிலும்
மிகக்குறைவாகவே
வெளிப்படுத்திக்கொள்ளுங்கள்
எந்த விசுவாசத்தையும்
மிகக்குறைவாகவே காட்டுங்கள்

எந்தப் பொறுப்பையும்
மிகக்குறைவாகவே நிறைவேற்றுங்கள்
எது அதிகமாக இருக்கிறதோ
அது விரும்பபடாதிருக்கிறது
எது விலை நிர்ணயிக்கப்படாதிருக்கிறதோ
அது யாராலும் மதிக்கப்படாதிருக்கிறது

ஒரு கிண்ணத்தில்
கால்வாசிக்குமேல்
அமுதத்தை நிரப்பாதீர்கள்

ஒரு கரம் உங்கள் கரத்தைப் பற்றுகையில்
பத்து விநாடிகளுக்குள்
உங்கள் கரத்தை விலக்கிக்கொள்ளுங்கள்
எது இல்லாமல் இருக்கிறதோ
அதுவே வேண்டப்படுகிறது

எது மிகக்குறைவாக இருக்கிறதோ
அதுவே ருசி மிகுந்ததாகிறது
பேரன்புதான் சிறந்ததென்று சொல்பவர்கள்
அந்த அன்பு
எப்படிக் கேட்பாரற்றுப் போகிறது என்பதைக்
காண்பதே இல்லை

இந்த உலகில்
சிறிய அன்புகளைப் பரப்புங்கள்
கற்பூரம் போல
கரையும் அன்புகளை ஏற்றுங்கள்
மற்றவர்கள் நெஞ்சில்
இருக்கவேண்டும் எனில்
இயன்றவரை இல்லாதிருங்கள்

28.10.2024
பகல் 1.40
மனுஷ்ய புத்திரன்

Watched Vettaiyan
12/10/2024

Watched Vettaiyan

ஷிம்ட் இஸ் ரியல் 😭😭😭 அடே சக millenial தகப்பாஸ் எத்தன மாசத்துக்கு அப்புறம் ஜிம் போக ஆரம்பிச்சீங்க.. ப்ளீஸ் ஹெல்ப்
19/09/2024

ஷிம்ட் இஸ் ரியல் 😭😭😭 அடே சக millenial தகப்பாஸ் எத்தன மாசத்துக்கு அப்புறம் ஜிம் போக ஆரம்பிச்சீங்க.. ப்ளீஸ் ஹெல்ப்

Kudumi and Suruttai...இருந்தாப்ல இருந்துட்டு திடீர்னு ஒருநாள் ஜெய்ஹிந்த் படத்துல வர்ர செந்தில் மாதிரி Mohawk style (கீரி...
07/07/2024

Kudumi and Suruttai...இருந்தாப்ல இருந்துட்டு திடீர்னு ஒருநாள் ஜெய்ஹிந்த் படத்துல வர்ர செந்தில் மாதிரி Mohawk style (கீரிபுள்ள ஸ்டைல்) ல முடிய வெட்டிருவேன் 🤣🤣🤣

Champions indeed 🥹🥹🥹😭😭😭 என்ன மாதிரியான மேட்ச் Felt overwhelming as the team won it.Kohli delivering on the big dayAxar w...
29/06/2024

Champions indeed 🥹🥹🥹😭😭😭 என்ன மாதிரியான மேட்ச்

Felt overwhelming as the team won it.

Kohli delivering on the big day

Axar with his cameo

Kuldeep in most of the crucial matches

Rohit with his bat through the tournament

Bumrah has been a superstar with the ball right from the beginning equally backed by Axar

And Hardik at the clutch, nailing the last over

❤️❤️❤️ Historical win for Team India.

ரெண்டு redemption முக்கியமானது...

ஹர்திக் ஒன்னு.. கோஹ்லி இன்னொன்னு...

ஹர்திக் தான் தேம்பித் தேம்பி அழுதுட்டு இருந்தாரு. கண்டிப்பா ஐபிஎல் சமயம் நடந்ததெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போயிருக்கும்.

கோஹ்லிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. ஆரம்பத்துல இருந்தே எதுவும் சரியா வரல. ஆனா இன்னைக்கு he stood and delivered with a conviction.

நம்ம மனநிலை மாதிரியே இப்படியும் அப்படியுமா ஊசலாட்டத்துல இருந்து கடைசியில ஒரு நிலைக்கு வந்து அமைதியாகும்போது... இந்த வெற்றி மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

Congratulations Team India

Eid Mubarak ☺️❤️ Bakrid wishes to you and your family maaplais and machis
17/06/2024

Eid Mubarak ☺️❤️ Bakrid wishes to you and your family maaplais and machis

14/06/2024

எழுதியவர்: மருதன் கங்காதரன்

என் வீட்டுக்கு வரும் பத்துப் பேரில் குறைந்தது ஒன்பது பேர் என் நூலகத்தைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? “ஆ, என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு புத்தகங்களை நான் நூலகத்தில்தான் பார்த்திருக்கிறேன். உம்பர்தோ எக்கோ, இவற்றில் எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்து முடித்திருக்கிறீர்கள்?” சொல்லி வைத்ததுபோல் எல்லாரும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நீங்கள் இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கலாம். சமீபத்தில் படித்ததில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது என்று கேட்கலாம். இத்தாலியைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசை, என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் எக்கோ என்று கேட்கலாம். இதைப் படித்துவிட்டுத் தரலாமா என்றுகூடக் கேட்கலாம். எத்தனை புத்தகங்களைப் படித்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அங்கிருந்து ஒரு புல், இங்கிருந்து ஓர் இலை, எங்கிருந்தோ ஒரு குச்சி என்று பறந்து, பறந்து சேர்த்துக் குருவி கூடு கட்டும் இல்லையா? அதுபோல் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் தேடித் தேடி, பார்த்துப் பார்த்து வாங்கி நான் கட்டி வைத்திருக்கும் புத்தகக் கூடு இது. குறைந்தது 50 ஆயிரம் புத்தகங்களாவது வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். அவற்றில் நான் படித்து முடித்த புத்தகம் ஒன்றுகூட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், அதைச் சொன்னால் யாராவது நம்புவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ஏன், நீங்களே நம்ப மாட்டீர்கள்.

இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் வேண்டாம் எக்கோ, உண்மையைச் சொல் என்பீர்கள். நான் பார்க்கும்போதெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறாய். ஒரு புத்தகத்தைக்கூட முடிக்கவில்லை என்றால் எப்படி நம்புவதாம் என்பீர்கள். ஒன்றுகூட முடிக்கவில்லை என்றால் பிறகு எதற்காக மேலும் மேலும் வாங்கி, இவ்வளவு குவித்து வைத்திருக்கிறாய் என்று எதிர்க்கேள்வியும் கேட்பீர்கள்.

உண்மையைச் சொல்லட்டுமா? என் நூலகத்தில் இருக்கும் நூல்களில் சிலவற்றை நான் முழுக்கப் படித்திருக்கிறேன். ஆனால், ஒன்றைக்கூட இதுவரை முடித்ததில்லை.

முதல் சொல்லில் உங்கள் பயணத்தைத் தொடங்கி இறுதிச் சொல்லை வந்து சேர்ந்துவிட்டீர்கள் என்றால் அந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்துவிட்டீர்கள் என்று பொருள். ஆனால், அதை நீங்கள் இன்னமும் முடிக்கவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அதே புத்தகத்தைக் கையில் எடுத்து மீண்டும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த கதையாக இருந்தாலும் முதல் வாசிப்பில் கிடைக்காத வெளிச்சம் இப்போது கிடைக்கத் தொடங்கும். அப்போது புரியாமல் போன அல்லது பாதி மட்டும் புரிந்த சில விஷயங்கள் இப்போது முழுமையாகப் புரியத் தொடங்கும். கவனியுங்கள், கிடைக்கத் தொடங்கும், புரியத் தொடங்கும் என்றுதான் சொல்கிறேனே தவிர, கிடைத்துவிடும், புரிந்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஒருபோதும் அப்படிச் சொல்லவும் மாட்டேன். காரணம், எந்தப் புத்தகமும் இவ்வளவுதான், இதற்குமேல் எதுவும் இல்லை என்று கையை விரிக்காது. படிக்கப் படிக்க விரிந்துகொண்டே போகும். நீங்கள் எடுக்க, எடுக்க ஆழமாகிக்கொண்டே போகும். போதும் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். முடிந்தது என்று ஒருபோதும் அது சொல்லவே சொல்லாது.

முடிக்காத புத்தகங்கள் ஒருபக்கம் என்றால், இதுவரை படிக்காத புத்தகங்கள் இன்னொரு பக்கம். இரண்டாவதைத்தான் அதிகம் சேர்த்து வைத்திருக்கிறேன். எதற்கு? படிக்காத புத்தகங்களால் என்ன பலன்? ஏற்கெனவே இருப்பதையே படிக்கவில்லை எனும்போது எதற்காக நான் மேலும் மேலும் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறேன்? ரொட்டி வாங்க வெளியே போனால்கூடக் குறைந்தது இரண்டு புதிய புத்தகங்களை ஏன் வாங்கி வருகிறேன்? இது போதும் என்றோ இருப்பதை வாசித்துவிட்டுப் பிறகு வாங்கிக்கொள்வோம் என்றோ இன்று வாங்காவிட்டால் இந்தப் புத்தகம் மறைந்து போய்விடாது என்றோ வீட்டில் இதற்குமேல் இடமில்லை என்றோ இதுவரை ஒருமுறைகூட எனக்குத் தோன்றாதது ஏன்?

ஏனென்றால், படித்த புத்தகங்களைப் போலவே படிக்காத புத்தகங்களும் என் நண்பர்கள்தான். அவை செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை என்னோடு பேசும். என் வேலைகளை எல்லாம் கெடுக்கும். என்னோடு சண்டையிடும்.
‘எக்கோ, நீ நினைப்பதுபோல் நீ அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனோ பெரிய சிந்தனையாளனோ பெரிய வாசகனோ அல்ல. எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று நீயாகவே நினைத்துக்கொள்ளாதே. உனக்குத் தெரிந்ததைவிடத் தெரியாததே அதிகம். அதை நீ மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இங்கே வரிசையாக உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். போதாது, இன்னும் படிக்க வேண்டும், இன்னும் கற்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் உனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலை. அதைச் செய்வதற்காகத்தான் காசு கொடுத்து எங்களை வாங்கி வந்து உன் அலமாரியில் சேர்த்து வைத்திருக்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்.’

படிக்காத புத்தகங்கள் பொல்லாதவை. என்னைச் சாப்பிட விடாது. தொலைக்காட்சி பார்க்க விடாது. குளிக்க விடாது. நீ கண்ணை மூடிக்கொண்டு தூங்கினால், கனவில் வந்து குதிப்போம் என்று மிரட்டும். மிரட்டுவதோடு நின்றுவிடாமல் நிஜமாகவே கனவில் வந்து இப்போது என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கிறது, எழுந்து உட்கார்ந்து எங்களை எடுத்து மடியில் வைத்துக்கொள் என்று கூச்சலிடும். படித்த புத்தகங்களாவது அமைதியாக இருக்கின்றனவா என்றால், அவையும் இல்லை. சரியாகப் படி, மீண்டும் படி, இன்னொரு முறை படி, நான் மறைத்து வைத்திருக்கும் அனைத்தையும் கண்டுபிடி என்று அழைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் கூச்சல்களுக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எவ்வளவு புத்தகம் படித்திருக்கிறாய் என்று கேட்டால் நான் என்ன சொல்வது? என்னதான் செய்வது?

0

மருதன்

(தேன்மிட்டாய், மாயாபஜார், இந்து தமிழ் திசை)

Me after joining a new company:Appreciating everything from Good culture, Good food, Challenging environment, place for ...
11/06/2024

Me after joining a new company:

Appreciating everything from Good culture, Good food, Challenging environment, place for growth and feeling happy...

After a brief interval.. Company be like:

CEO Steps down to Management role, New CEO steps in, Org restructure, Goals realignment, Pressure to prove, Stock price down, Other Cut downs

Konja neram dhana da sandhosha patten..
Adhukulla 😭😭😭

அடுத்த வீடியோ... மற்றுமொரு முக்கியமான புத்தகம் பற்றி. அலுவலகத்துல பயங்கரமான அழுத்தம் + பணிச்சுமை இருக்கு... எதுக்குமே நே...
08/06/2024

அடுத்த வீடியோ... மற்றுமொரு முக்கியமான புத்தகம் பற்றி. அலுவலகத்துல பயங்கரமான அழுத்தம் + பணிச்சுமை இருக்கு... எதுக்குமே நேரமே இல்ல..அதனால தான என்னமோ வேலையெல்லாம் முடிச்சுட்டு வரிசையா நடுராத்திரி உக்காந்து ஷூட் பண்ணி எடிட் பண்ணி அப்லோட் பண்ணிட்டு இருக்கேன். Capitalizing on the momentum and keeping the drive going on. போற வரைக்கும் போவோம் .

Link for the video in comments. Please watch and comment and subscribe 😅

அடுத்த வீடியோ... இறவான் விருப்பமான நாவல்கள்ல ஒன்னு 😊😅 PLink in comment. Please do watch and subscribe if you haven't 😅
07/06/2024

அடுத்த வீடியோ... இறவான் விருப்பமான நாவல்கள்ல ஒன்னு 😊😅 P

Link in comment. Please do watch and subscribe if you haven't 😅

Amidst other things which happened in the past year, I was not able to sit and record videos for my YouTube channel. For...
06/06/2024

Amidst other things which happened in the past year, I was not able to sit and record videos for my YouTube channel. For some reason I couldn't. So i tried doing it once again. The quality might not be great. But I still wanted to get back to it and reminded me again that Consistency is more important than perfection...! And so here goes... Link in comments.👇🏽

Please subscribe if you haven't 😅

The random urge and the trip down the musical rabbit hole***************************************************************...
24/05/2024

The random urge and the trip down the musical rabbit hole
*****************************************************************

என்றைக்கும் இல்லாமல் திடீரென ஒரு நாள், தூங்கி எழுந்ததும் காலை ஒரு மாதிரி வெறுமையாக இருக்கும். வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பேன். தூக்கம் தெளிந்தும் தெளியாமல் இருக்கும். அப்படியே பல்துலக்கி விட்டு முக கழுவிவிட்டு, ஒரு காப்பி போட்டுக் கொண்டு, லேப்டாப்பைத் திறந்து ஏதாவது ஒரு பாடலைத் தேடுவேன். அது எப்போதோ கேட்ட அல்லது யாரோ சொன்ன ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டேயிருக்கிற பாடலாக இருக்கலாம். அல்லது இதுவரை கேட்டேயிராத ஆனால் அப்போதை மன அலைக்கழிப்பை ஆற்றுப் படுத்துகிற ஒரு பாடலாக இசைத்துணுக்காக இருக்கலாம்.

அந்தப் பாடலைக் கேட்டதும் , இவர்களைப் பற்றி நம் நட்புவட்டத்தில் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிப் பார்ப்பதுண்டு. எப்படியும் ஓரிருவர் எழுதியிருப்பார்கள். அதிலிருந்து மற்றுமொரு திறப்பு கிட்டும். வேறொரு பாடல்; வேறொரு இசைக்கலைஞர் ; வேறொரு பரிமாணம் வேறொரு உலகம். ஒன்றை அடியொற்றி மற்றொன்றென்றென நம்மை சுற்றியிருக்கிற உலகை மறந்து வேலை நாளின் பரபரப்பை மறந்து ஒரு இசைச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருப்பேன். பின்பு ஏதோவொரு புள்ளியில் மனம் அடங்கியது ஒரு மாதிரி புத்துணர்வுடன் இந்த புற உலகிற்கு மீண்டு வருவேன்.

இம்மாதிரி musical rabbit holeல் விழுவதும் தேடுவதும் கேட்டிராத புது இசையைக் கண்டடைவதும் அண்மையில் (கடந்த ஒரு சில ஆண்டுகளில்) வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்க்கைச் சூழல், பணி , பொறுப்புகள் , பணி, தேவைகள், சோம்பேறித்தனம். மன அயற்சி, என பல காரணிகள் உண்டு. கேட்ட பாடல்களையே கேட்டுக் கொண்டிருப்பதில் ஒரு அலாதியான சொகுசு உண்டு. பழகிவிட்ட மனமும் அதனைத் தாண்டி வேறெங்கும் செல்ல அனுமதியாது. அத்தனையையும் தாண்டி ஒரு நாள் இந்த தேடலில் இறங்கினால் கிடைக்கிற அத்தனையும் புதையல்களாக இருக்கும். இன்றைய நாள் அப்படியொரு நாள்

முதலில் கேட்டது Glass beams - Mahal . ஆஸ்த்ரேலிய இசைக்குழுவானாலும் ஒரு மாதிரி துருக்கிய வாடையுடனான இசையாகத் தோன்றியது. மத்திய கிழக்கும் இந்தியாவும் மேற்கத்திய இசையில் சந்திக்கிற புள்ளி போல. தொடர்ந்து அவர்களைப் பற்றி தேடிப் படித்து மற்ற பாடல்களையும் கேட்கத்துவங்கினேன். Such a trip it was

ஸ்டார் - 90ஸ் கிட்ஸ் இயக்குநர்கள் - 2கே படங்கள் (No spoilers) **********************************************************...
12/05/2024

ஸ்டார் - 90ஸ் கிட்ஸ் இயக்குநர்கள் - 2கே படங்கள் (No spoilers)
*****************************************************************

நேத்து நண்பர்களோட ஸ்டார் படம் பாத்தாச்சு. கவின் செம்மைய நடிச்சுருக்காரு, திறமைய காட்ட அவருக்கு நல்ல வாய்ப்பு. அதுக்கு மேல யுவனுடைய பின்னணி இசையும் பாடல்களும் ரொம்பவே நல்லா இருந்துச்சு. ஆனா படம் ஒட்டு மொத்தமா நல்லால்ல. எனக்கு பிடிக்கல. எல்லாரும் சொல்ற மாதிரி ட்ரெய்லர் பாத்தெல்லாம் எதிர்பார்ப்போட போகல. ஆனாலும் ஏமாற்றம் தான். படம் பாத்து முடிச்சுட்டு எல்லார் கூடவும் நிறைவே பேசிட்டு இருந்தோம். அவங்கள்ல பெரும்பாலானோர் late 90s,2k தான். யாருக்கும் படம் புடிக்கலன்னு தான் சொன்னாங்க. நேற்றை அந்த விவாதத்தின் தொடர்ச்சி தான் இந்த ரைட்டப்

இயக்குநர் இளன் அவருடைய அப்பாவுடைய கதையை படமா எடுக்க நெனச்சது அவருடைய போராட்டங்களை சொல்ல நெனச்சது சரிதான். ஆனா அந்த டைம்லைன 2000களுக்குப் பிறகான தமிழ் திரையுலகின் காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி மாத்தி எழுதுறதுல தான் கஷ்டப்பட்டிருக்காருன்னு நெனைக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒரு GVM பட பாணி தான் . ஆனா GVMக்கு விழுந்த அடி இளனுக்கு விழாது. வாரணம் ஆயிரத்தை நினைவு படுத்துற நிறைய காட்சிகள் உண்டு. ஒரு கேரக்டர் கூட GVMக்கு ட்ரிப்யூட்டா தான் வெச்சாங்கன்னு நினைக்கிறேன் (kickboxing :P )
கதைல நிறைய விஷயங்கள் க்ளீஷேவா முன்னுக்குப் பின் முரணா தான் இருக்கு. குறிப்பா நடிப்பு பயிற்சிக்காக பாம்பே போற பகுதியும் அந்த பாடல்ல வர்ர மாண்டேஜ் காட்சிகளும் தனியா ரொம்ப நல்லா இருந்துச்சு (டப்பாவாலா சைக்கிள், மிலிட்டரி சிங் , வடகிழக்கு அம்மா குழந்தைகள் etc) .ஆனா படத்துல ஒட்டுமொத்தமா அது ஏற்படுத்துற தாக்கம்னு பாத்தா எதுவும் இல்ல.

இன்னொன்னு இந்த 90ஸ் இயக்குநர்கள் எல்லாருக்குமே ஒரு சில விஷயங்கள்ல ஒரே மாதிரியான perception தான் இருக்கோன்னு தோணுது. பிரதீப் ரங்கநாதன் (Komali, Love today), பிரபுராம் வியாஸ் (Livin, Lover), இளன் (Pyar prema kadhal, Star) இந்த மூனு பேரையும் அவங்க எடுத்த படத்தையும் எடுத்துகிட்டா இந்த passion vs profession, life responsibilities அப்புறம் முக்கியமா relationship / partner பத்தின புரிதல் இதெல்லாமே கொஞ்சம் அறைகுறையா இருக்கு. இவங்க எழுதுன பசங்களோட கேரக்டர் எல்லாமே அதீதமான self pity யோட, பெற்றோர் நண்பர்கள் காதலின்னு சுத்தி இருக்குறவங்க யாரைப் பத்தியும் கவலைப்படாத சுயநலமானவங்களா, தனக்கு ஆதாயம் தர்ர விஷயங்கள்ல மட்டும் progressive ஆகவும் மத்தபடி பிற்போக்குத் தனமாவும், தன்னுடைய சந்தோஷத்துக்காக யாரையும் எப்படியும் பயன்படுத்திக்கலாம்னு நினைக்கிறவங்களாவும், ரொம்ப fragile ego உள்ளவங்களாகவும், unrealistic expectations உள்ளவங்களாகவும், ungrateful characters ஆகவும் தான் எழுதிருக்காங்க.

அதேமாதிரி they are heavily stuck in nostalgia. அது நல்ல வியாபாரமும் ஆகுது. பழைய விஷயங்கள call-back பண்ணாம , பாடல்கள்/காட்சிகள் கூட பழைய references இல்லாம புதுசா எதையுமே பண்ண முடியல. ஒரே மாதிரி alumni meet அங்க வர்ர மத்த நண்பர்கள சந்திக்க முடியாம குற்ற உணர்ச்சியோட இருக்குறது, கூடவே இருக்குற ஒருத்தனையோ/ஒருத்தியையோ கோவத்துல கத்திவைக்கிறதுன்னு இது கூட தவறாம ஒரே மாதிரியான காட்சிகளா வருது. May be it is a collective thing and which is why it might resonate well with some 2k kids.
முந்தைய தலைமுறை இயக்குநர்களுக்கும் இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

மேல சொன்ன மூனு இயக்குநர்கள்ல பிரதீப்புக்கு மட்டுமே ஒரு படத்த மொத்தமா ஒரு கதையோட்டத்தோட இழுத்துட்டு போற ட்ரிக் சரியா வொர்க்கவுட் ஆகியிருக்கு, despite of the other flaws.

Aesthetics, shot composition, technical aspects, production design, creative visualization, ex*****on எல்லாமே நல்லா பண்ணிட்டு, எழுத்துல மட்டும் கவனம் செலுத்த மாட்டேங்குறாங்களோனு தோணுது. எப்புடி பாடல்களெல்லாம் இன்ஸ்டா ரீல்ஸ், வரைல் ரீச், hook dance steps பொறுத்து அதுக்காகவே பண்றாங்களோ அந்த மாதிரி மொத்த படமும் collection of momentary highs ஓட முடிஞ்சு போய்டுது. இந்தப் படமும் அதே மாதிரி தான் struggle, fall and rise of a guy is such an beaten-to-pulp trope. ஆனாலும் அதுல பட்டைய கெளப்புன நிறைய படங்கள் இருக்கு . படம் முடிஞ்சு கொஞ்சமாவது மனசுல ஓரு தாக்கம் இருக்கனும்ல அது மிஸ்ஸிங்.

கடைசியா, Kavin definitely has place in Tamil cinema and also will have a fantastic career run

Me all the time 🤣🤣🤣
29/04/2024

Me all the time 🤣🤣🤣

ஏதோ ஒரு படத்த பார்ப்போம்னு முடிவு பண்ணி ரொம்ப ரேண்டமா பாக்க ஆரம்பிச்சு நம்மளே எதிர்பாராத விதமா அந்தப் படம் நல்லதா அமைஞ்ச...
22/04/2024

ஏதோ ஒரு படத்த பார்ப்போம்னு முடிவு பண்ணி ரொம்ப ரேண்டமா பாக்க ஆரம்பிச்சு நம்மளே எதிர்பாராத விதமா அந்தப் படம் நல்லதா அமைஞ்சுடும் இல்லையா. அந்த மாதிரி தான் இந்த பைரி படம் எனக்கு. ரெண்டு மூனு ஃபேஸ்புக் போஸ்ட் பாத்துட்டு சரி பாப்போம்னு முடிவு பண்ணேன்.

ஆடுகளம் + அங்கமாலி டைரிஸ் ஒன்னா சேர்ந்த மாதிரி ஒரு வைப். முழுக்க முழுக்க ஒரு அக்மார்க் கன்யாகுமரி/நாகர்கோவில் படம். புறா பந்தயமும் அத சுத்தி இருக்குற மனுஷங்களோட வாழ்க்கையும் தான் கதை. படத்துல தெரிஞ்ச முகம்னு பாத்தா மறைந்த கவிஞர் ஃப்ரான்சிஸ் கிருபா ஒரு சில காட்சிகள்ல நடிச்சுருக்காரு. அவரைத்தவிர வேற யாரையுமே தெரியல. ஹீரோ உட்பட அத்தன பேரும் புதுமுகங்கள் தான். எல்லாருமே செம்மையா நடிச்சிருக்காங்க. கதை நாயகன் சையது , மணிகண்டனுக்கு தம்பி மாதிரி இருக்காப்ள. சரியான மண்டை சூடு பிடிச்ச கேரக்டர். அவரும் நல்லா நடிச்சிருந்தாரு.

படத்துல அத்தன கேரக்டர்கள் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஸ்க்ரீன்ல சரிசமமா ஸ்கோர் பண்ண வாய்ப்பு இருக்கு. எல்லாருமே அத நல்லாவும் பண்ணிருக்காங்க. எனக்கு நிறைய பேருடைய நடிப்பு ரொம்பவே பிடிச்சிருந்தது. கதாநாயகனுடைய அம்மாவா நடிச்சவங்க ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாங்க. அதே மாதிரி இந்த ரமேஷ் பண்ணையார் கேரக்டர் பண்ணவரும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு. இந்த ரெண்டு பேருடைய கேரக்டர எழுதுன விதம் (ரமேஷ் - எந்த சூழ்நிலைலயும் நிதானத்த இழக்காம பொறுமையா எல்லாத்தையும் சமாளிக்கிறதும், அதே சமயம் பசங்க பிரச்சனைல மாட்டும்போது அவங்க விட்டுக் கொடுக்காம, அவங்கள காப்பாத்த பெருமுயற்சி எடுக்குறதும்னு நல்ல story arc அவருக்கு, ஆளும் அந்த had-been generational wealth இளம் தலைமுறை பெரிய மனுசனுக்கு பொருத்தமான casting) அம்மா - பையன் புறா பந்தயத்துல இறங்குனா வாழ்க்கைய தொலச்சுடுவான்னு அவன படிப்பு வேலைன்னு திசைதிருப்ப அவ்வளவு மெனக்கெடுவாங்க. படம் பாக்குற நமக்கே வெறுப்பு வர்ர அளவுக்கு ஒரு நடிப்பு.

அமல்னு ஒரு ஃப்ரெண்டு கேரக்டர். பட்டைய கிளப்பிருப்பாரு ஒரு முட்டாள்தனமான ஆனா ஃப்ரெண்டுமேல உயிரையே வெச்சிருக்குற கேரக்டர். படத்தோட இயக்குநர் இவரு தான் படம் பாக்கும்போது தெரியாது. செம்ம performance. முக்கியமான பாத்திரம் இவரோடதும்.

படத்துல வர்ர சண்டையெல்லாமும் ஹீரோயிச பிடப் இல்லாம (முக்கியமா ஸ்லோ மோ இல்லாம) ஊர்ல நடக்குற மாதிரி இயல்பா படமாக்கியிருந்தாங்க. ஆனா வன்முறையான காட்சிகள் நிறையவே இருக்கு.
படத்துல புறா பந்தயம் சம்மந்தமா வர்ர விவரணைகளும் காட்சிகள் எல்லாமெ நல்ல இருந்துச்சு. பட்ஜெட் பிரச்சனையா என்னன்னு தெரியல CG வொர்க் மட்டும் அவ்வளவு சிறப்பா வரல. ஆனா கதையோட போக்குல அது ஒன்னும் பெருசா தெரியல. புறா பந்தய detailing, நாகர்கோவில் வட்டார வழக்கு, nativity ,அய்ய வைகுண்டர் / அய்யா வழி சார்ந்து வர்ர காட்சிகள்னு குறிப்பிடும்படியா நிறைய விஷயங்கள் இருந்தாலும் இந்தப் படம் பத்தி எழுதனும்னு தோண வெச்சு விஷயம், முன்கோபம்..அதனால நடக்குற வன்முறை அதைத் தொடர்ந்து வர்ர பின்விளைவுகள எழுதியிருந்த விதமும் காட்சிப்படுத்தியிருந்த விதமும் ரொம்பவே பிடிச்சது. வீராப்பா பேசுறவன் உயிருக்கு பயந்து தெரியாம பண்ணிட்டேன் எப்படியாவது காப்பாத்துங்கன்னு கதறுவான்.மெட்ராஸ் படத்துல இதே மாதிரி ஒரு சீக்வன்ஸ் வரும். அந்த after effects + emotions அ ரொம்ப சரியா இந்த படத்துல கொண்டுவந்திருந்தாங்க.

முடிவு cliffhangerஆ இருந்தாலும் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்குறதுக்கு லீட் கொடுத்து தான் முடிச்சுருக்காங்க. ஆக மொத்தம் நல்ல படம். நல்ல உருவாக்கம். நல்ல எழுத்து. கொஞ்சம் ஏதாவது ஒரு star value இருந்தா இன்னும் நல்லாவே ஓடிருக்கும்னு தோணுச்சு. எனக்கு ரொம்பவே பிடிச்சுது.

Roadhouse is the kind of action movie you'd want to watch if you were in a really screwed up mind space and all you want...
26/03/2024

Roadhouse is the kind of action movie you'd want to watch if you were in a really screwed up mind space and all you want to do is to fight. Jake Gyllenhaal just nailed the character and damn he looks chiselled. The only other actor whom I could think of, who could've pulled this off effortlessly will be Brad Pitt (Once upon a time in Hollywood! )

You definitely got to put all that effort if you were to share screen space and get into fights with Conor Mcgregor. Yeah, I knew Conor was in the movie. But the performance was mad. He looked so wild and unpredictable beast like a final level boss in a combat video game.

The story is typical and predictable . An outsider moves in to a small town and gets into trouble when he messes with the wrong people. And he has a past.

The actions sequences were so damn cool and I thoroughly enjoyed the adrenaline rush. It has been a while (after the latest installment of John Wick) that a movie had action choreography so well planned and done. Especially hand to hand combat.

Don't watch it if you're someone who doesn't like violent films.

P.S: I was expecting something like this with Loki and Vijay na in Leo. Aana kedachadhu orey oru Cafe fight mattum dhan. 😭

Roadhouse should've definitely been a big screen release.

Currently streaming on Amazon Prime

“For here you were, Big James, named for me—you were a big baby, I was not—here you were, to be loved. To be loved, baby...
11/02/2024

“For here you were, Big James, named for me—you were a big baby, I was not—here you were, to be loved. To be loved, baby, hard, at once, and forever, to strengthen you against the loveless world.”

― James Baldwin, The Fire Next Time

“I think in saying 'loved each other,' Baldwin doesn't just mean the living. To survive by loving each other means to love our ancestors too. To know their pain, struggles, and joys. It means to love our collective memory, who we are, where we come from..”
― Susan Abulhawa, Against the Loveless World

Against the loveless world is the story of Nahr who's a Palestinian immigrant , born and brought up in Kuwait.Through the novel, Nahr's life story revolves around Kuwait, Jordan, Palestine and the Cube. The Cube is a solitary confinement prison and also the place from where Nahr begins to narrate her life in the first chapter. Though Nahr, we are introduced to the lives of Palestinians who are uprooted from their motherland and are forced to seek refuge in the nearby countries of Middle east.The protagonist lived through every major crisis we might have heard or seen in the news about the Middle east , in the last few decades.

*Israel's colonization of Palestine

*People's resistance movements in Palestine

*Palestinians seeking refuge in neighboring countries Kuwait/Jordan

*Iraq's invasion of Kuwait

*US invasion of Iraq

Along with all these, the narrator also talks in details about the psyche of political prisoners and the worst conditions they are forced to be in. Though it is a dark novel as a whole , there is happiness and hope amidst all the mishaps.I loved a lot of portions including when Nahr's love hate relationship with her grandmother and mother later turns into a understanding one, when Nahr lives as Yaqoot and describes passionately how she loves to dance, when Nahr loses her trust towards men and love but eventually grows to foster a relationship with someone.

Through Nahr, we learn about the plight of the hapless citizens of war torn nations and the identity crisis which they are forced into , as they are driven to other countries as immigrants and are made to live with constant fear and insecurities. I was able to recollect and relate this novel very much with Khaled hosseini's 1000 splendid suns, as both the novels had lots of similarities.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Read Ride Rant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share