Eastern Kural

  • Home
  • Eastern Kural

Eastern Kural This is the News Page - We Report You Decide

22/06/2023

இந்த பெயர் பலகையில் இடத்தின் பெயரை தவறாக தமிழ்ல் குறிப்பிட்டிருப்பது கருதி பலரும் பகிர்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

நண்பர்களே நன்றாக உற்று பாருங்கள்.இரண்டு ஊர்களின் பெயர்களும் வெவ்வேறான Font களில் அச்சிடப்பட்டுள்ளது. Photoshop இல் Edit செய்யப்பட்டிருப்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது....இனியும் பகிரத்தான் வேண்டுமா?

22/06/2023
Write your script
01/03/2023

Write your script

அடுத்த வாரம் இந்தியாவில் நிலநடுக்கம் இலங்கையிலும் தாக்குமாம் !அடுத்த  வாரம்  இந்தியாவின்  ஹிமாச்சல் - உத்தரகாண்ட்  மாநில...
01/03/2023

அடுத்த வாரம் இந்தியாவில் நிலநடுக்கம் இலங்கையிலும் தாக்குமாம் !

அடுத்த வாரம் இந்தியாவின் ஹிமாச்சல் - உத்தரகாண்ட் மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்!

திருகோணமலை, மனம்பிட்டிய, மினிபே, பிபில, மொனராகலை, புத்தல, வெல்லவாய, அம்பலாந்தோட்டை, உஸ்ஸங்கொடை வரை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை என்கின்ற போது திருமலை வெள்ளைமணல் பகுதியில் சேதத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள்! காரணம் வெள்ளைமணல் பகுதி மழை பகுதி!

கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8ரிக்டர் அளவுகோலில் தான் ஏற்பட்டது ..ஆனால் 8 என்கின்ற போது சேதம் அதிகரிக்கும் பக்கத்து மாநிலங்களையும் தாக்கும் வாய்ப்புக்கள்!

கடந்த வாரம் மட்டும் இந்தியாவில் 4.5 நிலநடுக்கம் வந்து போனது .அது இலங்கையில் பிபில பகுதியிலும் உணரப்பட்டது !

அபாயத்தை தட்டிக் களித்து கடந்து செல்ல முடியாது!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு. ஆயினும் தண்டனை ஒருவருட ...
01/03/2023

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பில்
மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு.

ஆயினும் தண்டனை ஒருவருட சிறை அல்லது ரூ. 1000 அபராதம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் எனவும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்/கடன்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் கடப்பாடு அவர்களுக்கும் உண்டு எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து மற்றும் பொறுப்புகள் அறிக்கையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாராளுமன்ற, இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேன்முறையீட்டு நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரட்ணம் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கினர்.

இத்தீர்மானத்தை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேகோன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களால் நியமிக்கப்பட்டவர்களே என தெரிவித்ததோடு, அவர்கள் பொதுமக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அத்துடன், அவ்வாறு சொத்துகள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்காமை சட்டப்படி குற்றமாகும் என்றும், இக்குற்றத்திற்காக அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மிகையாகாத சிறைத்தண்டனை அல்லது ரூ. 1,000 இற்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் தகுதி நீதவான் ஒருவருக்கு உண்டு என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் சட்டத்திற்கு அமைய, கடந்த 2018 ஜூன் 21ஆம் திகதி, ஊடகவியலாளர் சாமர சம்பத், சொத்துகள் மற்றும் பொறுப்புகளை அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரியிருந்தார்.

ஆனால் குறித்த கோரிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் நிராகரித்ததை அடுத்து, ஊடகவியலாளர் சாமர சம்பத் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு, முறைப்பாட்டாளர் கோரிய தகவல்களை வெளியிடுமாறு பாராளுமன்ற தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இம்மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதற்கமைய, மிக நீண்ட நாளாக இடம்பெற்ற விசாரணைக்குப் பின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2021 பெப்ரவரி 02ஆம் திகதி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததோடு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவில் உள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என அறிவித்து அதனை நிராகரிப்பதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சிறு வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் !!நூருல் ஹுதா உமர்அம்பாறை மாவட்ட, சாய்ந்தமருது ப...
01/03/2023

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சிறு வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் !!

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட, சாய்ந்தமருது பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சிறு வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (27) காலைஉத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக ஸ்தாபக பிரதேச செயலாளரும், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்,
சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம். எஸ். நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன் விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

திருக்கோவில் தம்பிலுவில் பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிதம்
01/03/2023

திருக்கோவில் தம்பிலுவில் பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் மரணம் ஒரு கொலையேஇரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த கு...
28/02/2023

தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் மரணம் ஒரு கொலையே

இரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த குடிமகனின் உயிரைப் பறித்தது என 43 படையணி தெரிவித்துள்ளது.

இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க, இச்சம்பவம் தெளிவாக ஒரு கொலையே எனத் தெரிவித்தார்.

இரத்தம் தோய்ந்த கடந்த காலத்தை நினைவூட்டி இரத்த வாசனைக்கு சிறகுகள் கொடுக்காமல் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றியதாக கூறப்படும் ஜனாதிபதி, மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதற்கு செயற்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாட்டளி ரணவக்க செயற்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

“நாங்கள் மிகத் தெளிவாக எச்சரித்தோம். இந்தத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையின் மூலம், இரத்த வாசனையுள்ளவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். இரத்த வாசனையால் கவரப்பட்டவர்களின் முதல் வேட்டையாக இந்த தேர்தல் வேட்பாளர் கொல்லப்பட்டார் இந்த அப்பாவி மனிதர்.

அரசியலமைப்பில் ஜனாதிபதி தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் பொதுத் தேர்தல் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார். எனவே, மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அவர் அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர் அல்ல. ஆனால் இந்நாட்டில் உள்ளூராட்சி வாக்குகளும் மாகாண சபை வாக்குகளும் மக்களின் இறைமையைப் பிரயோகிக்க இரண்டு சந்தர்ப்பங்களாகும்.

அந்த இரு நடவடிக்கைகளும் இன்று தடை செய்யப்பட்டுள்ளதாக பாட்டளி ரணவக்க சுட்டிக்காட்டுகிறார். அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை தேர்தல் வரைபடத்தை சுருக்கிக் கொள்ள ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிகிறது. அதற்குத் தேவையான அடக்குமுறைப் பொறிமுறையைப் பேணுவதற்குத் தகுந்த பொலிஸ் அமைச்சரையும் பொலிசாரையும் ஜனாதிபதி பெற்றுள்ளார்.

இந்நேரத்தில் என்னிடமிருந்து விலகி இருக்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் மிகத் தெளிவாகக் கூறுகிறோம். அத்துடன், இரத்தவெறிபிடித்து, அந்தத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளுக்குச் சென்றால், இரத்தத்தை நிறுத்திவிட்டு, இன்னும் ஆறு வருடங்களுக்கு பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்கச் சிந்திப்போம் என்பதே அமரசிறியின் மரணத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். . இந்த கும்பல் குழுக்களுக்கு சிறகுகள் கிடைக்கும்.

இந்த அடக்குமுறையைத் தொடரத் தேவையான சூழலை உருவாக்குகிறார்கள். எனவே, இந்த ஜனநாயக விரோதச் செயற்பாட்டுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி சக்திகளும், அரசாங்கத்தின் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரே முன்னணியில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து வடக்கில் மட்டுமல்லாது வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய நாடுகளிலும் தொடர்ந்து குரல் எழுப்பி, நாட்டின் ஜனநாயகம் குறித்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அனைத்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமும் கேட்டுக்கொள்கிறோம். இந்த அடக்குமுறை, ஜனநாயகம் பூட்டப்படுவதைப் பற்றியது.

நாட்டு மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என சர்வதேச நாணய நிதியத்திற்கு பாட்டளி சம்பிக்க ரணவக்க ஞாபகப்படுத்தினார். இல்லையேல் சர்வதேச நாணய நிதியம் இந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கும் நிறுவனமாக கருதப்பட வேண்டும்..” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Dc

 #அனைத்துக்  #கட்சிகளின்  #பிரதிநிதிகளையும்  #உள்ளடக்கி_புதிய  #கூட்டணி  #உருவாகிறது! நடைபெறவிருந்த  தேர்தல் பிற்போடப்ப...
28/02/2023

#அனைத்துக் #கட்சிகளின் #பிரதிநிதிகளையும் #உள்ளடக்கி_புதிய #கூட்டணி #உருவாகிறது!

நடைபெறவிருந்த தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தேசிய ரீதியான ஒரு கட்சியை உருவாக்கும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசாங்கத்தில் பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுதிபூண்டுள்ளதோடு, அதற்காக ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி யொன்றை உருவாக்கும் முயற்சியும் தற்போது இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இவ்வாறான கூட்டணியொன்றை அமைத்தால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தலையும் இலகுவாக வெற்றிகொண்டு பொருளாதாரத்தை திட்டமிட்ட வாறு தமது கொள்கைகளில் பயணிக்க முடியுமென ஜனாதிபதி நம்புகிறார். அத்தோடு, பாராளுமன்றத் தேர்தலின்போது தனது தலைமையில் பலம்வாய்ந்ததொரு கூட்டணியொன்றின் ஆதரவையும் திரட்ட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்தி, மொட்டு கட்சியின் உறவை கைநீட்டும் அளவில் பேணிக்கொண்டு முழுமையானதொரு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஒரு ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் மாத்திரமே கிடைத்திருந்ததால் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையை விட கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி அதிக நாட்டம் கொண்டுள்ளார்.

இதை கருத்திற்கொண்டே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை போன்று தனக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், அரசாங்கத்திற்கு வந்ததும் மேலும் சிலரை அழைத்து வர விரும்புவதாகவும், ஆனால் அதனை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வர விரும்புவோரை அழைத்துக்கொண்டு நமது அரசியல் பயணத்தை தொடருவோம் என ஜனாதிபதியிடம் கூறியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
SN

சட்டரீதியாக தேர்தல் இன்னும் ஒத்திவைக்கப்படவில்லைவை எல் எஸ் ஹமீட்பலரும் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; என்...
28/02/2023

சட்டரீதியாக தேர்தல் இன்னும் ஒத்திவைக்கப்படவில்லை

வை எல் எஸ் ஹமீட்

பலரும் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது; என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே! அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை.

தனியாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு என்ற ஒன்று சட்டத்தில் இல்லை.

உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டம் ( Local Authorities Elections Ordinance) பிரிவு 38(3) இன் பிரகாரம் ஏதாவது அவசரநிலை அல்லது விசேட சூழ்நிலையில் ஏற்கனவே குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடாத்த முடியாத சூழ்நிலையில் தேர்தலுக்கான மற்றுமொரு திகதியை அறிவிக்கலாம்.

அத்திகதி ஏற்கனவே எத்தினத்தில் தேர்தலுக்கான திகதி பற்றிய அறிவித்தல் வெளியிடப்பட்டதோ ( இம்முறை ஜனவரி 28ம் திகதியே மார்ச் 09 திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது) அவ்வறிவித்தல் வெளியான தினத்திற்குப்பின் 21 ம் நாளிற்கு முந்தியதாக இருக்கக்கூடாது. ( not earlier than the 21st day after the publication of the notice).

இங்கு மார்ச் 09 ம் திகதிய தேர்தலுக்கான அறிவித்தல் ஜனவரி 28இல் வெளியிடப்பட்டது. எனவே 29ம் திகதியில் இருந்து கணக்கிடவேண்டும். அதன்படி பெப்பரவரி 18ம் திகதி 21ம் நாள் வரும். அதாவது தேர்தலுக்கான புதிய திகதி பெப்ரவரி 18ம் திகதியோ அல்லது அதற்குப் பிந்திய எந்தவொரு நாளாக இருக்கலாம். (போயா அல்லது பொதுவிடுமுறை தினம் தவிர்ந்த)

இதன் பொருள் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபின் அத்திகதிக்கு முன்னராவோ பின்னராகவோ தேர்தல் நடத்தலாம் குறித்த சூழ்நிலை ஏற்பட்டால்.

இப்பொழுது தேர்தல் அறிவிப்பு வந்து 21 நாள் கடந்துவிட்டது. எனவே, சில ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல் 21 நாள் ( உண்மையில் இடைவெளி 20 நாளே தேவை) இடைவெளி தற்போது தேவையில்லை.

தேர்தலுக்கான புதிய திகதி 21 நாட்களைவிட குறைந்த இடைவெளியாக இருக்கலாம். அல்லது அதைவிட கூடுதலான இடைவெளியாக இருக்கலாம்.

அதிக காலம் எவ்வளவு இருக்கவேண்டும்; எனக்குறிப்பிடப்பிடப்படவில்லை.

தனித்து விடப்பட்டார் அப்பச்சி மஹிந்த - மெல்ல விலகும் நெருங்கிய சகாக்கள்!ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், ம...
27/02/2023

தனித்து விடப்பட்டார் அப்பச்சி மஹிந்த - மெல்ல விலகும் நெருங்கிய சகாக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, ​​பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர், ஆனால் தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே சாப்பிடுகிறார்.

அவர் பிரதமராக இருந்த காலத்தில், ​​பாராளுமன்றத்துக்கு வந்தபோது, ​​அவரை வரவேற்க ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே திரண்டிருந்த நிலையில், இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார்.

அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. R

நாங்களும் மனிதர்கள் - பொத்துவில் பிரதான வீதியில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...!!!( றியாஸ் இஸ்மாயில் )பொத்துவில் ஆதார...
27/02/2023

நாங்களும் மனிதர்கள் - பொத்துவில் பிரதான வீதியில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...!!!

( றியாஸ் இஸ்மாயில் )

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (27) காலை 9.00 மணியளவில் பொத்துவில் பிரதான வீதியின் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அருகாமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

"அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற வசதிகளை ஏற்படுத்தித்தா " எனும் தொனிப்பொருளில் பொத்துவில் பொதுசுகாதார நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உடனடியாக நிரந்தர வைத்திய அத்தியட்சகரை நியமி, உடனடியாக இடமாற்றமா ?, அத்தியவசிய மருந்துகளையும், வைத்திய உபகரணங்களையும் பெற்றுத்தா,நாங்களும் மனிதர்கள், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே எமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தாருங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் பலரும் ஈடுபட்டனர்.

பின்னர் கோசங்களை எழுப்பிவாறு பொத்துவில் ஆதாரவைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் சென்று அங்கும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் அதன் பின்னர் மகஜர் கையளிக்க முற்பட்ட போது நிருவாகத்தினரால் மகஜர் கையேற்க யாரும் வரவில்லை.

பொது சுகாதார குழுவினர்
எதிர்வரும் புதன்கிழமை கொழும்பு சென்று சுகாதார அமைச்சில் மகஜரை கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் எம்.எம்.பாயிஸ் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜே.வி.பி யின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி காயம் அடைந்த ஒருவர் இன்று மரணம் அடைந்துள்ளார்
27/02/2023

நேற்று ஜே.வி.பி யின் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி காயம் அடைந்த ஒருவர் இன்று மரணம் அடைந்துள்ளார்

ஏழைகளுக்கு நாம் உதவி செய்யும் போது கேமராக்களை பாவிப்பதில்லை.அல்லாஹ்வை நம்பி உதவி செய்பவனுடையஉதவியை பெற்றுக் கொடு.உதவியை ...
26/02/2023

ஏழைகளுக்கு நாம் உதவி செய்யும் போது கேமராக்களை பாவிப்பதில்லை.

அல்லாஹ்வை நம்பி உதவி செய்பவனுடைய
உதவியை பெற்றுக் கொடு.

உதவியை பெறுபவர்களுக்கும் நன்மை உண்டு.

உதவி செய்பவர்களுக்கும் நன்மை உண்டு.
உதவியை பெற்றுக் கொடுக்கும் உனக்கும் நன்மை உண்டு.

பெருமைக்காக எதையும் செய்யாதே
அல்லாஹ்வுக்காக செய்
உன் மறுமைக்காக செய்
புகழும், பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம்.
அதைக் கையில் எடுக்கும் உரிமையை மனிதனுக்கு அல்லாஹ் தரவில்லை.

இறைவனால் அளிக்கப்பட்டுள்ள செல்வம், அறிவு, பதவி, அழகு, அந்தஸ்து என அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்கே தவிர, அதை வைத்து மனிதர்களிடம் பெருமை பாராட்ட இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்பெருமை கொள்பவர்கள் சுவனத்தின் வாசனையைக்கூட நுகரமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மட்டக்களப்பில் O/L மற்றும் A/L மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் இலவச கருத்தரங்கு 0779783344 , 0774436779
26/02/2023

மட்டக்களப்பில் O/L மற்றும் A/L மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் மற்றும் இலவச கருத்தரங்கு 0779783344 , 0774436779

நாட்ட விட்டு போற சந்தோசத்தில மாறி எடுத்திட்டன் 😁
26/02/2023

நாட்ட விட்டு போற சந்தோசத்தில மாறி எடுத்திட்டன் 😁

PAID ADDமட்டக்களப்பிலுள்ள உணவகம் ஒன்றிற்கு  வேலைக்கு ஆட்கள் தேவை  - 0761003887 கொத்து போடக்கூடியவர்,  உதவியாளர்  ,வெயிட்...
26/02/2023

PAID ADD
மட்டக்களப்பிலுள்ள உணவகம் ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை - 0761003887

கொத்து போடக்கூடியவர், உதவியாளர் ,வெயிட்டர்
- கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்
Job vacant alert
Kotthu boss.
Waiter.
Helper .
Urgently needed for our resturant in batticaloa
please contact us on 0761003887

*Attractive salary will be provided.

சிறுவனை காணவில்லை பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
26/02/2023

சிறுவனை காணவில்லை பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

✅👉இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை 30 ரூபா...!இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உண...
26/02/2023

✅👉இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை 30 ரூபா...!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு விடப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததுடன்,

அதன்படி 02 மில்லியன் முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

அரசாங்க பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனங்களுக்கு மாத்திரம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தின் பெளதீக வளங்களை கவின் நிலைப்படுத்தி கற்றல் மேம்பாட்டு நிகழ்வை முன்னேற்றி வரும்...
26/02/2023

பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தின் பெளதீக வளங்களை கவின் நிலைப்படுத்தி கற்றல் மேம்பாட்டு நிகழ்வை முன்னேற்றி வரும் பாடசாலையின் அதிபர் எம் ஏ. தாஜஹான் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
'
பாடசாலையினை பாரமெடுத்து இரண்டு மாதம் இருக்கும் ஆனால் பாடசாலையின் அனைத்து விடயதானங்களையும் சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தத்தது.

(றமீஸ் மீராலெவ்வை )

படங்கள் பார்வைக்கு:

இன்றைய சம்பவம் தொடர்பில்  #ஜேவீபிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட  #சஜித் பிரேமதாச! 👇எந்தத் தலைவரும் அல்லது கட்சியும் எப்போ...
26/02/2023

இன்றைய சம்பவம் தொடர்பில் #ஜேவீபிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட #சஜித் பிரேமதாச! 👇

எந்தத் தலைவரும் அல்லது கட்சியும் எப்போதும் சரியாக இருந்ததில்லை, அதனால்தான் ஜனநாயகத்திற்குள் கருத்து வேறுபாடுகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

இன்று போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

இதன்மூலம் அரசாங்கத்தின் செய்தி மிக சத்தமாகவும், தெளிவாகவும் எதை சொல்கிறதென்றால் “பொதுமக்கள் வாயை மூடிட்டு உட்காருங்கள்” என்பதுதான்.

பிரதமர் பதவி இராஜினாமா தொடர்பிலான அறிவித்தல்பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி ...
26/02/2023

பிரதமர் பதவி இராஜினாமா தொடர்பிலான அறிவித்தல்

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை அல்லது செல்வாக்கு செலுத்தப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் பிரதமரா?மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்க...
25/02/2023

மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் பிரதமரா?

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவை கோரியுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

சபாநாயகருக்கு தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கடிதம்உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்...
25/02/2023

சபாநாயகருக்கு தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கடிதம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கடிதம் நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

🔴 பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு
24/02/2023

🔴 பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

Address


Alerts

Be the first to know and let us send you an email when Eastern Kural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eastern Kural:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

உண்மை எனின் உரக்கச் சொல்

உண்மை எனின் உரக்கச் சொல்