16/03/2024
Copied from அபூ அப்துல்லாஹ்'s post.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் (தொழுகை) வரிசைகளை சீர்படுத்துங்கள். வரிசையின் ஒழுங்கு தொழுகையை முழுமைப்படுத்துவதில் உள்ளது.
(புகாரி : 723)
அனஸ்(ரலி) கூறினார்: 'உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.
(புகாரி : 725)
வரிசையில் சமமாக நில்லுங்கள். தோள்பட்டை அருகே நிற்பவரின் தோள்பட்டையுடனும் உங்கள் பாதங்கள் அருகே நிற்பவரின் பாதத்துடனும் சேர்ந்து நில்லுங்கள் (இல்லையயனில்) உங்கள் முகத்தை அல்லாஹ் வேறுபடுத்திவிடுவான்.
(புகாரி:717)