Thillaikural - chidambaram news

  • Home
  • Thillaikural - chidambaram news

Thillaikural - chidambaram news NEWS FROM CHIDAMBARAM FOR CHIDAMBARAM

31/10/2024

முன்னுரை ... ... முனைவர் கி. ஆ. பெ. விசுவநாதம்.

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையார் இப்பாடல்களை அடிக்கடி பாடுவார்கள். துன்பமும் துயரமும் வந்தபோது மட்டுமல்ல, இன்பமும் மகிழ்ச்சியும் ஏற்படும் போதும் பாடுவார்கள். நானும் உடன்பாடித் தெரிந்து கொண்டேன். இப்பாடல்கள் எந்த நூலில் உள்ளதோ? .. இதன் ஆசிரியர் யாரோ? .. தெரியவில்லை. முருகன் தமிழன். தமிழரின், தமிழகத்தின் தெய்வம். அவன் அழகன், வேலன், அன்பன். தன்னை அழைத்தவர்க்கு ஓடோடி வந்து அருள் புரிவான் என்று கீழே உள்ள ஓலைச்சுவடி பழம் பாடல் கூறுகிறது.

இப்பாடல்களை உளமுருகிப் பாடுங்கள். கந்தனை, கடம்பனை, முருகனை, வேலனை, பழனிக் குமரனை, பாலகனை, அய்யனை நினைந்து பாடுங்கள். திரும்பத் திரும்பப் பாடுங்கள். உள்ளத் தூய்மையுடன் பாடுங்கள். அழையுங்கள் .. வருவான், கேளுங்கள் கொடுப்பான்.

துன்பம் மங்கி ஒளியும், இன்பம் பொங்கி வழியும்.

அவிநாசி பத்து

பாடல்

வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1

ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2

திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3

உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4

மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5

நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6

தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7

வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8

விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9

ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10

ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11

கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12

ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13

மத்திய அரசின் KVS எனும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு நாடு முழுவதும் சுமார் 1253 கேந்திரி...
26/10/2024

மத்திய அரசின் KVS எனும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டு நாடு முழுவதும் சுமார் 1253 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு, மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களைச் சேர்ப்பதால், பெரிய அளவில் போட்டி நிலவுகிறது.

இந்தியா முழுவதும் 1250 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. வெளிநாட்டில் 3 பள்ளிகள் உள்ளன்.

இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

மாணவர் சேர்க்கை

இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இதில் 25 சதவிகித இடங்கள், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (RTE) சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மூன்று பிரிவுகள் உள்ளதால், 30 இடங்கள் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்பப்படுகின்றன. முதலாம் வகுப்பில் மட்டும் RTE பின்பற்றப்படுவதால், விண்ணப்பிக்கும்போதே இதைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பிள்ளைகளை இலவசமாகப் படிக்கவைக்கலாம்.

இந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அதிகம் விரும்புவர். எனவே, தனியார் பள்ளிகளைக் காட்டிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மவுசு அதிகமாக இருக்கும்.

இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியே வழங்கி வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம். 2025-26ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பு நீங்களாக, 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். 11 ஆம் வகுப்பை பொறுத்தவரையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைக்கான உத்தேச நாட்கள்:

* மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியாகும் நாள்: பிப்ரவரி 2025 கடைசி வாரம்
* 1 ஆம் வகுப்பு விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: மார்ச் 2025 முதல் வாரம்

* 1 ஆம் வகுப்பு விண்ணப்பம் முடியும் நாள்: மார்ச் 3வது வாரம்

* தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: மார்ச்/ஏப்ரல்

* 2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நடைபெறும் நாள்: ஏப்ரல் 1&2 வது வாரம்

* 2 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள்: ஏப்ரல் 2&3 வது வாரம்

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை (RTE)

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

முன்னுரிமை

இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கும் 25 சதவிகித இடங்கள் போக, மீதம் உள்ள 75 சதவிகித இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் முதன்மையாகச் சேர்க்கப்படுகிறார்கள்.

குறிப்பாக, அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுபவர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அடுத்து, மாநில அரசில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் சேர்க்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு பிரிவினர் சேர்ந்ததுபோக மீதம் உள்ள இடங்களுக்கு மற்றவர்களும் விண்ணப்பித்துச் சேரலாம்.

முதலாம் வகுப்பில் சேர, www.kvsonlineadmission.in ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும்போது, ஒருவர் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. விண்ணப்பத்தில் மொபைல் எண், இமெயில் முகவரி, குழந்தையின் புகைப்படம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு, குறிப்பிட்ட காலம் வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தில் சரியான தகவல்களை வழங்க வேண்டும். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதால், அதற்கான சான்றிதழையும் வழங்க வேண்டும்.

இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்பிலும் எவ்வளவு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதை ஆன்லைன் வழியே பார்த்து விண்ணப்பிக்கலாம்.

பதினொன்றாம் வகுப்பில் சேர, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை குறித்து கே.வி பள்ளியில் பேசியபோது, ``மாணவர் சேர்க்கை அனைத்தும் கம்ப்யூட்டர் வழியே வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், கே.வி பள்ளிகளில் குறுக்குவழியில் மாணவர்களைச் சேர்க்க வாய்ப்பு இல்லை. இதனால், பெற்றோர்கள் வெளிநபர்களிடம் பணம் எதுவும் தந்து ஏமாற வேண்டாம்’’ என ஆலோசனை வழங்கினார்கள்.

https://en.m.wikipedia.org/wiki/Kendriya_Vidyalaya_Sangathan

https://kvsangathan.nic.in/en/directory-of-kvs/page/96/

Pin Up casino Review: Pinup provides casino players a great selection of events Slot machines on the ⚡ PinUp official website ⏩ Welcome offer of

31/07/2024
20/07/2024

𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐥𝐚𝐧: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧
𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢
* Depart early in the morning from your location via the Prithvi Highway.
* Have lunch on the way.
* Visit Lumbini, the birthplace of Lord Buddha.
* Explore the Lumbini Garden and the Mayadevi Temple.
* Stay at Lumbini.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟐: 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐭𝐨 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel and head towards Bharatpur.
* Enjoy the scenic journey.
* Explore Bharatpur and visit the Narayani River.
* Have lunch on the way.
* Stay at Bharatpur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟑: 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐏𝐚𝐫𝐤
* After breakfast, head to Chitwan National Park.
* Enjoy a jungle safari and elephant ride.
* Visit the Elephant Breeding Center.
* Have lunch inside the park.
* Return to the hotel in the evening.
* Have dinner at the hotel.
* Stay at the hotel.
𝐃𝐚𝐲 𝟒: 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel.
* Head towards Bandipur.
* Have lunch on the way.
* Explore Bandipur, visit Siddha Gufa (cave), and enjoy the local culture.
* Stay at Bandipur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟓: 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮
* Have breakfast at the hotel.
* Head back to Kathmandu.
* Have lunch on the way.
* Reach Kathmandu by evening.
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐬:
✅ Lunch
✅ Dinner
✅ Breakfast
✅ Room Accommodation (sharing basis)
✅ Transportation (bus or jeep as per your preference)
𝐍𝐨𝐭 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐝 𝐢𝐧 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞:
❌ Snacks & cuisines
❌ Drinking beverages (Beer, Mineral Water)
❌ Personal expenses
❌ Travel Insurance
❌ Overstay due to any natural calamities/strikes
**Note:** Schools and colleges are planning to go on a tour. Remember, we offer special discounts for schools and colleges. These special discounts will be provided for schools and colleges.
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐬𝐞𝐫𝐯𝐞, 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐨𝐮𝐫 𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭

14/07/2023

Travel for LiFE has been formulated as a sectoral Program for tourism sector under Mission LiFE that aims to promote sustainable tourism in the country in convergence with the National Strategy for Sustainable Tourism.

The “Travel for LiFE” Program aims to mobilize tourists and tourism businesses of the country to be mindful and deliberate in their actions as important stakeholders of the tourism value chain.

Click the link in bio to read the full PDF on the 🌎

Travel for LiFE – A Program for Tourism Sector
under Mission LiFE.



Kishan Reddy Gangapuram Shripad Naik Ajay Bhatt Press Information Bureau - PIB, Government of India Incredible India G20 India

28/10/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thillaikural - chidambaram news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share