Azhagana Rakshasi

  • Home
  • Azhagana Rakshasi

Azhagana Rakshasi Beautiful Demon with Wonderful Heart! Follow my page to get the News around you National & International and to know me better.
(7)

Basically Jumki Girl, Food Lover, Road Explorer, Radio Professional and much more

15/07/2022

🦉தான் படிக்காவிட்டாலும், தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த தினம் இன்று.💐

1903ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர், ஆறாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிப்படிப்பை தொடரவில்லை. அதனால் தான் முதலமைச்சராக பதவியேற்ற உடன் தமிழகம் முழுவதும் பள்ளிக் கூடங்களை திறந்தார் காமராஜர்.

எந்த சொத்தும் இல்லாத ஏழை மக்களுக்கு கல்வி என்ற அழியாத சொத்தை இலவசமாக வழங்கியவர். இதனால் 1957 ஆம் ஆண்டு 15, 800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 29ஆயிரமாக உயர்ந்தது. கல்வி பயில்வதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்க கூடாது என்பதற்காக கல்வியை இலவசமாக வழங்கியதோடு, இன்று வரை உலகம் வியந்து போற்றும் திட்டமான மதிய உணவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனால் தான் பதவியேற்ற முதல் ஐந்தாண்டுகளிலேயே 7 விழுக்காடாக இருந்த தமிழகத்தின் கல்வி கற்றோரின் எண்ணிக்கை 40 விழுக்காடாக உயர்ந்தது.

மேலும், நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் தான் இன்றளவும் தமிழக விவசாயத்தின் உயிர்நாடியாக உள்ளது என்றால் மிகையில்லை. மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களையும் கொண்டுவந்தவர் காமராஜர்.

கட்சிப்பணிகளில், இளையவர்களுக்கு வழிவிடும் கே- பிளானை நடைமுறைப்படுத்தி இளையோர்களை அரசியலுக்குள் அழைத்து வந்தவர் இவர்.

நேருவின் மறைவிற்கு பிறகு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை பிரமதமராக அடையாளம் காட்டியதால் கிங் மேக்கர் ஆனார்.

மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதும், இறுதிவரை வாடகை வீட்டிலேயே வசித்தவர். 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் காமராஜர் இறந்த போது, சில கதர் வேட்டி சட்டைகள், 150 ரூபாய் பணம் இவையே காமராஜரின் சொத்தாக இருந்தன.

பொது வாழ்வின் புதிய மைல்கல்லாக திகழ்ந்த காமராஜரின் பிறந்தநாள் இன்று.

🦉தோழர் சங்கரய்யா பிறந்த தினமின்று!💐இன்று நூற்றி ஒன்றாவது பிறந்த நாளைக் காணும் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் என். சங...
15/07/2022

🦉தோழர் சங்கரய்யா பிறந்த தினமின்று!💐

இன்று நூற்றி ஒன்றாவது பிறந்த நாளைக் காணும் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, தன் வாழ்வின் குறிப்பிடத்தக்க காலகட்டத்தை நாட்டிற்கான போராட்டங்களில் சிறையில் கழித்தவர்.

சங்கரய்யாவின் வரலாறு என்பது தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும்கூட.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் சங்கரய்யா.

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள்... சட்டமன்ற பணிகள், இலக்கியம், எழுத்து, மொழி உரிமை என பன்முக தளத்தில், பலருக்கு அனுபவ பாடமாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா- வை வணங்கி வாழ்த்துவோம்

🦉ஓவியர் வீர சந்தானம் நினைவு நாளின்று!🥲அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர் வீரசந்தானம். ஓவியத் து...
13/07/2022

🦉ஓவியர் வீர சந்தானம் நினைவு நாளின்று!🥲

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர் வீரசந்தானம். ஓவியத் துறையையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார். தோற்பாவைக் கூத்து, தொன்மையான இசைக் கருவிகள், கோயில் சிற்பங்கள், நிகழ்த்து கலைகள் போன்றவை இவருடைய ஓவியங்களில் தனித்து நிற்பவை. மரபுக் கலை, கட்டிடம் மற்றும் மரபு இசைக் கருவிகளை தனது ஓவியப் படைப்பின் வழியே இவர் மீள் உருவாக்கம் செய்துள்ளார். ஆடை வடிவமைப்புத் துறை யில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.

பழந்தமிழகத்தின் நாட்டார் கூறுகளையும், பாரம்பரியமிக்க தென் திராவிட கோயில் சிற்பங்களையும் உள்ளடக்கி வீரசந்தானம் படைத்துக்காட்டிய ஓவியங்கள் தமிழக ஓவியக் கலையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தன. இளவயதிலேயே மும்பையில் உள்ள நெசவாளர் பணி மையத்தில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்த வீரசந்தானம், தமிழினத்திற்கான போராட்டங்களில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வதற்காக விருப்ப ஒய்வு பெற்றார்.

பாலு மகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘தானே’ புயலின்போது சென்னையில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார். ஓவியர் வீரசந்தானத்தின் கலைப் பயணத்தை எடுத் துரைக்கும் விதமாக ‘காமதேனு’ என்ற ஆவணப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஓவியத்திறமையால் தத்ரூபமாக உருவாக்கிய பெருமை வீரசந்தானத்தையே சாரும். காலத்தால் அழியா ஓவியங்களைப் படைத்த வீரசந்தானத்தின் ஆற்றலுக்கு, அகில இந்திய தொழிற்துறை கண்காட்சியின் விருது 1997 ஆம் ஆண்டு கிடைத்தது. சிறந்த ஓவியத்திற்கான தேசிய விருது 1988 ஆம் ஆண்டு பெற்றார். வன விலங்குகளின் வாழ்க்கை பற்றிய புகைப்படத்திற்கான விருதை 1975 ஆம் ஆண்டும், சிறந்த ஓவியங்களைப் படைத்தமைக்காக 1990 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும் வீரசந்தானத்தை வந்தடைந்தது!

🦉கணினித் தமிழ் மேதை ஆண்டோ பீட்டர் காலமான தினமின்று🥲கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடியாக கருதப்படுபவரும், கணினி தொடர்பா...
12/07/2022

🦉கணினித் தமிழ் மேதை ஆண்டோ பீட்டர் காலமான தினமின்று🥲

கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடியாக கருதப்படுபவரும், கணினி தொடர்பான பல நூல்களை எழுதியவருமான ஆண்டோ பீட்டர், இதே ஜூலை 12 (2012)ல் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தமிழ் கணினித் துறையில், பல்வேறு குறிப்பிடத்தக்க, சேவைகள் புரிந்தவர் ஆண்டோ பீட்டர். கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த இவர் "சி.எஸ்.சி.,' சாப்ட்வியூ என்ற நிறுவனத்தை துவங்கி, ஏராளமானவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து வந்தார்.

கடந்த 1967ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்ததோடு, மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பிலும் ஈடுபட்டவர்.
பல விருதுகளைப் பெற்ற இவர், இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்

உலகளவில் நடந்த, தமிழ் கணினி மாநாடுகளில், 25க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவிலும், இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இவர், கடந்த 1997ம் ஆண்டு,"தமிழ் சினிமா.காம்' என்று துவக்கிய இணையதளம் மிகவும் பிரபலமானது.

🦉🦉குஞ்சிதம் குருசாமி அம்மையார் பிறந்த நாளின்று💐இவர் திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர்.குஞ்சிதம் டி. சு...
12/07/2022

🦉🦉குஞ்சிதம் குருசாமி அம்மையார் பிறந்த நாளின்று💐
இவர் திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர்.
குஞ்சிதம் டி. சுப்பிரமணிய பிள்ளை – தங்கம்மாள் தம்பதிகளுக்கு தலைமகளாக சென்னையில் பிறந்தார். சென்னை ஜார்ஜ் டவுனில் தொடக்கக் கல்வி பயின்றார். பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.
இராணி மேரி கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்று, பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி இந்தியாவிலேயே முதல் கல்வியதிகாரியாகப் பணியாற்றியவர்.
‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில இதழின் இதழாசிரியராக இருந்த குருசாமி என்பவரை 08.12.1929 இல் பெரியார் – நாகம்மையார் முன்னிலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார், இதுவே முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், கணவரின் கொள்கைக்கேற்ப தாலி, குங்குமம் முதலியவற்றைத் துறந்தார். இவர் பல சுயமரியாதை இயக்க மாநாடுகளுக்கு கணவருடன் இணைந்து சொற்பொழுவுகள் பல நிகழ்த்தியும், சுயமரியாதை மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தியும் சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார்.
ஆதி திராவிடர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்கவும், கடவுளின் பெயரால் செய்யப்படும் வீண் செலவுகளைத் தவிர்த்து, ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு துணி, புத்தகம் முதலியவற்றை வாங்கிக் கொடுக்கவேண்டும். வாண வேடிக்கைக்காக விரயமாகும் பணத்தைச் சுகாதாரத்தைப் போதிக்கும் காண்காட்சிகள் அமைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். தெய்வங்களுக்காகச் செலவிடப்படும் பணத்தில் நூலகங்களும், மருத்துவ மனைகளும் அமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற முற்போக்குச் சிந்தனைகளை முன்வைத்துப் போராடினார். புரோகிதர்களை எதிர்த்தார். பால்ய விவாகம், பெண்ணடிமை முதலானவற்றைச் சாடினார். “ஜாதகம் சரியாயிருப்பதாக ஒரு பெண்ணை ஒரு கழுதைக்குக் கட்டிக் கொடுப்பதா” என்று கேட்டு ஜோதிட மூட நம்பிக்கையை எதிர்த்தார். அதுமட்டுமல்லாமல் எல்லா சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் மதங்களே காரணம் அவை ஒழிய வேண்டும் என முழக்கமிட்டார். கலப்பு மணம், விதவை மணம், காதல் மணம் முதலியவற்றை ஆதரித்தார். பாரதிதாசன் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் தொகுப்பாக வெளியிட்டது இவரது குறிப்பிடத்தக்க இலக்கியப்பணி. பெண்கல்வி, சமூகச்சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக உழைத்து சுயமரியாதை இயக்க வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றார். அப்படியாபட்டவர் 30.07.1961 இல் புற்றுநோயின் காரணமாக மறைந்தார்]

🦉கவிஞரும், ராஜதந்திரியுமான பாப்லோ நெருடா (Pablo Neruda) பிறந்த தினம் இன்று (ஜூலை 12). 💐* தென்அமெரிக்க நாடான சிலியின் பரா...
12/07/2022

🦉கவிஞரும், ராஜதந்திரியுமான பாப்லோ நெருடா (Pablo Neruda) பிறந்த தினம் இன்று (ஜூலை 12). 💐

* தென்அமெரிக்க நாடான சிலியின் பரால் நகரில் (1904) பிறந்தவர். இயற்பெயர் ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ. பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்தார். ரயில்வே கூலித் தொழிலாளியான தந்தை மறுமணம் செய்துகொண்டார். சிற்றன்னை இவரை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். தனது 8-வது வயதில் நெருடா முதன்முதலில் எழுதிய கவிதையே இந்த அன்புத் தாயைப் பற்றியதுதான்.

* கவிதை எழுதுவதில் நாட்டமும் திறனும் கொண்டவர். சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். 10 வயது முதல், பலரால் அறியப்படும் கவிஞராகப் புகழ்பெற்றார்.

* தந்தை இவரது எழுத்தையும் இலக்கிய நாட்டத்தையும் எதிர்த்தார். ஆனாலும்கூட, இவரது இலக்கிய ஆர்வம் தடைபடவில்லை. தந்தையின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க 'பாப்லோ நெருடா' என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.

* உள்ளூர் பத்திரிகையில் இவரது முதல் கட்டுரை 13 வயதில் வெளிவந்தது. முதல் கவிதைத் தொகுப்பான 'புக்ஸ் ஆஃப் ட்விலைட்ஸ்' 19 வயதில் வெளிவந்தது. தொடர்ந்து கவிதை, உரைநடை, கட்டுரைகளை எழுதிவந்தார். இவரது கவிதைகள் பன்முகத் தன்மை கொண்டவை. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

* காதல், யதார்த்தம், அரசியல் என பல சிந்தனைகளை இவரது கவிதைகள் மையமாகக் கொண்டிருந்தன. கவிதைகளை பச்சை மையில்தான் எழுதுவார். ஆசை மற்றும் நம்பிக்கையின் சின்னம் பச்சை என்பது அவரது கருத்து.

* சிறந்த அரசியல் தலைவர், ராஜதந்திரியாகவும் விளங்கினார். சிலி நாட்டின் தூதராக 1927-ல் பர்மா சென்றார். இலங்கை, சிங்கப்பூர், பர்மாவில் தூதராக 6 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த சமயத்தில் ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் ஆகியோரது படைப்புகளை வாசித்தார்.

* ஸ்பெயின் தூதராக 1934-ல் பணிபுரிந்தார். அப்போது அந்நாட்டுக் கவிஞர் லோர்க்காவின் நட்பைப் பெற்றார். உள்நாட்டுப் போரில் அரசியல் காரணங்களால் லோர்க்கா கொல்லப்பட்டார். இதை கண்டித்து பத்திரிகைகளில் எழுதியதால், நெருடாவின் தூதர் பதவி பறிபோனது. அதன் பிறகு, இலக்கியப் படைப்பில் தீவிரமாக இறங்கினார்.

* மார்க்சியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிலியில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்தவர், பின்னர் அர்ஜென்டினாவுக்கு தப்பினார். 1971-ல் பாரீஸில் தூதராகப் பணியாற்றியபோது, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் வரிகளைப் போலவே அமைந்துள்ள 'பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்' (The skin of the earth is same everywhere)' என்ற இவரது கவிதை வரிகள் பிரபலமானவை. '20-ம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் என்று புகழப்பட்ட பாப்லோ நெருடா 69 வயதில் (1973) மறைந்தார்.

பாலிவுட் ஆக்டர் பிரான் காலமான தினமின்று🥲இந்தி சினிமா உலகில் 60 ஆண்டு காலம் வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வ...
12/07/2022

பாலிவுட் ஆக்டர் பிரான் காலமான தினமின்று🥲

இந்தி சினிமா உலகில் 60 ஆண்டு காலம் வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்தவர் பிரான்.

பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பிரானின் முழு பெயர் பிரான் கிரிஷன் சிகாந்த். ஆனால் பிரான் என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார். இவர் 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பழைய டெல்லி பகுதியில் பிறந்தார்.

சிறந்த போட்டோகிராபராக வேண்டும் என்பது தான் அவரது ஆரம்ப கால விருப்பம். ஆனால் விதி அவரை சினிமா துறைக்கு அழைத்து வந்தது. 1940-ம் ஆண்டில் 'யாம்லா ஜாத்' என்ற பஞ்சாபி படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு சில படங்களில்
கதாநாயகனாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து இந்தி படங்களில் வில்லன் நடிகராக நடிக்க தொடங்கினார். அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரையில் மோதினார். 350-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து உள்ளார். இந்தி சினிமா உலகில் அசைக்க முடியாத வில்லன் நாயகனாக திகழ்ந்தார்.

பிரான், பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு சினிமா விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசு 2011ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கியது.

இதைத் தொடர்ந்து இந்திய சினிமாக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உச்ச விருதான தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

🦉ரிப்பன் பிரபு காலமான நாளின்று🥲👑இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்...
09/07/2022

🦉ரிப்பன் பிரபு காலமான நாளின்று🥲

👑இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு.

👑தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார்.

👑இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார்.

👑 கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார்.

👑உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.

👑1829 இராஜா ராம்மோகன் ராய்-யுடன் இணைந்து சதி முறையை ஒழிக்க பாடுபட்டார்

👑கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது.

1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ரா # ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார்.

👑இந்திய மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு முறைய தொடங்கியவரிவர்தான்.

👑இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது.

🦉வாஸ்கோ ட காமா ஷிப் ட்ராவலா🚢 இந்தியாவுக்கு கிளம்பின தினமின்று🚨 - ஜூலை 8👣🎩வாஸ்கோட காமா முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தி...
08/07/2022

🦉வாஸ்கோ ட காமா ஷிப் ட்ராவலா🚢 இந்தியாவுக்கு கிளம்பின தினமின்று🚨 - ஜூலை 8👣

🎩வாஸ்கோட காமா முதன் முதலாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீர் வழிப் பாதையைக் கண்டுபிடித்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த நீர் வழிப் பாதையை கண்டுபிடிக்க வாஸ்கோட காமாவின் தந்தையான எஸ்டேவோ தான் இரண்டாம் ஜோவோ மன்னரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த இலட்சியத்தை அடையும் முன்னரே இறந்து போனார். இதையடுத்து இந்த வாய்ப்பு வாஸ்கோட காமாவின் அண்ணனான பௌலோவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனை நிராகரித்து விட்டார். இந்நிலையில் அந்த பயணம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டியதாகி விட்டது. எனவே வேறு வழியில்லாமல் கடைசி முயற்சியாக வாஸ்கோட காமாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 👀

🎯1469 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் பிறந்த வாஸ்கோட காமா, நன்கு கல்வி கற்று, இரண்டாம் ஜோவோ மன்னரின் அரசவையில் பணியாற்றினார். அவர் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 1492ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகளுக்கு எதிராக கினியா கடற்கரையில் போர்ச்சுகீஸ் படையை வழிநடத்தினார். இதையடுத்து அவர் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா நோக்கிய பயணத்திற்கு தலைமையேற்று வழி நடத்த நியமிக்கப்பட்டார். 1497 ஆம் ஆண்டு இதே ஜூலை 8 ஆம் தேதிதான் அவர் தனது பயணத்தைத் துவங்கினார்.

இவருடன் நான்கு கப்பல்கள் வந்தன. ஸோ கேப்ரியல் (Sao Gabriel) என்ற கப்பலுக்கு கோன்காலோ அல்வேர்ஸ் (Goncalo Alvares) என்பவர் தலைமேற்று வழிநடத்தினார். வாஸ்கோட்ல்ககாமாவின் சகோதரர் பௌலோ (Paulo) ஸோ ரெபெல் (Sao Rafael) என்ற கப்பலை வழிநடத்தினார். மற்ற இரண்டு கப்பல்கள் பெர்ரியோ (Berrio) மற்றும் ஸ்டார்ஷிப் (Starship) ஆகும். இந்த கப்பல்களில் வேலை பார்த்தவர்கள் பெரும்பாலும் கைதிகள் ஆவார்கள்

🦉வேர்ல்ட் சாக்லேட் டே!"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திள...
07/07/2022

🦉வேர்ல்ட் சாக்லேட் டே!

"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. அதை பெருமைப்படுத்தும் நோக்கில் உலகளவில் சாக்லேட் தினம், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் இந்த ஜூலை 7ல் சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல உணவுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை சாக்லேட்.. இன்று நாம் சுவைத்து அனுபவத்து மகிழும் சாக்லேட்டுக்கு பின்னால் ஒரு மிக நீளமான வரலாறே உள்ளது. சாக்லேட் முதலில் மீசோ அமெரிக்கா பகுதியில்தான் தயாரிக்கப்பட்டதாம். அது தற்போது உள்ள மொக்ஸிகோவிலிருந்து வடக்கு கோஸ்டாரிக்கா வரையிலான பகுதியாக இருந்துள்ளது.

சாக்லேட், மால்வேஸி குடும்பத்தை சேர்ந்த தியோப்ரோமா கோக்கோ என்ற தாவரத்தின் விதைகளில் இருந்து பெறப்பட்டு தயாரிக்கப்படும் பொருளாக இருந்தது. ஆரம்ப காலத்தில் சாக்லேட் ஆல்கஹாலுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒரு பானமாகத்தான் விளங்கியது. மீசோ அமெரிக்க மக்களின் கடவுளான ''க்வெட்சால்கோட்ல்''-க்கு அன்பளிபாக வழங்கும் பொருளாக சாக்லேட்டை பயன்படுத்தியுள்ளனர்.

முதலில் குளிர்பானமாகவும், உற்சாகமூட்டும் பானமாகவுமே இருந்து வந்த சாக்லேட் சர்க்கரையின் அறிமுகத்துக்கு பின்பு ஒரு இனிப்பு தரும் பானமாக மாறியது. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமான பிறகுதான் சாக்லேட் மிகவும் பிரபலமடைந்தது.15ம் நூற்றாண்டு வரை சாக்லேட் பற்றிய அடிப்படை தகவல்களே தெரியாத ஐரோப்பிய மக்களுக்கு 15 ம் நூற்றாண்டில் தான் சாக்லேட் அறிமுகமானது அதன் பின்னர் சாக்லேட் தனது மாறுபட்ட பரிணாமங்களுக்கு மாறத்தொடங்கியது. சாக்லேட்.

ஒரு பானமாக உருவாகிய சாக்லேட் பின்னர் திட வடிவம் பெற்றது. அதன் கோக்கோ விதைகள் பறிக்கப்பட்டு பதபடுத்தப்பட்ட விதைகளிலிருந்து உருவாக்கப்பட்ட சாக்லேட் குறிப்பிட்ட வெப்பநிலையில் குறிபிட்ட வடிவில் தயாரிக்கப்படுகிறது. அதன் தன்மையை பொறுத்து அது எந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. 17 டிகிரி செல்சியஸ் தொடங்கி 36 டிகிரி செல்சியஸ் வரை உள்ள ஒவ்வொரு வெப்பநிலையிலும் சாக்லேட்டுகள் உருகும் அதன் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உருகாமல் பாதுக்காக்கப்படுகின்றன.

சில சாக்லேட்டுகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் திரவ நிலையில் தொடர்ந்து சுழற்றப்பட்டு கொண்டே இருக்கும். அதனை ஐஸ்கீரிம்களின் மேல் நனைத்து எடுத்த சற்று நேரத்தில் அதன் மேல் படந்துள் சாக்லேட் திரவம் திட நிலைக்கு மாறும் இந்த முறை 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று சாக்லேட் என்பது பரிசளிக்கும் பொருளாகவும், பிறந்தநாள் பகிர்வுக்கான பொருளாகவும் மாறி இருக்கிறது.

சாக்லேட் என்பது ரத்த சுத்திகரிப்பு அமைப்பை கட்டுப்படுத்துவதற்கும், கார்டியோவாஸ்குலர் பிரச்னைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், உடல் பருமனாக உள்ளவர்கள் சாக்லேட்டை சாப்பிடுவது நல்லது அல்ல என்று கூறுகின்றனர். மக்களால் மிகவும் விரும்பப்படும் சாக்லேட்டுகளில் சில பிரபலமானவை அதிலும் வெண்ணிலாவால் தயாரிக்கப்பட்ட முழுவதும் வெள்ளை நிற சாக்லேட், டார்க் சாக்லேட் எனப்படும் முழுவது கோக்கோவால் தயாரிக்கப்படும் கருப்பு நிற சாக்லேட், ஹேண்ட் மேட் சாக்லேட் எனப்படும் கையாலேயே தயாரிக்கப்படும் சாக்லேட்கள் மிகவும் ருசியுள்ளதாகவும், பிரபலமானதாகவும் உள்ளன.

இவ்வளவு பெருமைகளை கொண்ட சாக்லேட்டுகளைதான், இன்று நிறுவனங்கள் பல வடிவங்களிலும், சுவைகளிலும் நமக்கு தயாரித்து தருகின்றன.சாக்லேட்டை அதிகம் உற்பத்தி செய்வதில் இன்னமும் அமெரிக்க நாடுகள் தான் முன்னிலை வகிக்கின்றன. சாக்லேட் என்ற வார்த்தையை கேட்டதுமே டெம்ப்ட் ஆகும் நமது நாக்குகளுக்கு சாக்லேட் எப்போது உருவானது என்று தெரியுமா? இன்று பிறந்தநாள் தொடங்கி நம் அன்பை பரிமாறும் அனைத்து விஷயங்களிலுமே இடம் பெறும் இந்த சாக்லேட் உருவான ஆண்டு யாருக்காவது தெரியுமா?

சுமார் 3764 ஆண்டுகளுக்கு முன் கி.மு 1750ல் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. கொண்டாட்டங்களுக்கு சாக்லேட் வழங்கும் சாக்லேட்டுக்கான தினமாக இன்று ஜூலை ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது.

🦉மாவீரன் - தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்ட...
07/07/2022

🦉மாவீரன் - தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார்.

அப்போது மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப்பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா... தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார்.

‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார். ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் மேல்சாதிக்காரன் தொட்டுத் தூக்கமாட்டானா?’’ என்று ஜார்ஜ் மன்னர் திருப்பிக் கேட்டார். ‘‘தூக்க மாட்டான்’’ என்றார் ரெட்டைமலை சீனிவாசன். ‘‘அப்படி நடக்க எனது ராஜ்யத்தில் நான் விடமாட்டேன்’’ என்ற ஜார்ஜ், ரெட்டைமலை சீனிவாசனின் இரண்டு கையையும் பிடித்துக் குலுக்குகிறார்.

‘‘அன்புக்குரிய இந்திய மக்கள் வளமுடன் ஆனந்தமாக வாழ வழிகாட்டிய மாமனிதர்களின் வரலாற்றில் உங்கள் பெயரும் இடம்பெறும்’’ என்று அப்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் சொன்னது இவரைத்தான்.

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥🎭இந்திய சினிமா🎬வுக்கு ஹேப்பி பர்த் டே டுடே🐾🇮🇳இந்தியாவில் 1896-ம் ஆண்டு இதே ஜூலை 7-ம் ...
07/07/2022

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

🎭இந்திய சினிமா🎬வுக்கு ஹேப்பி பர்த் டே டுடே🐾

🇮🇳இந்தியாவில் 1896-ம் ஆண்டு இதே ஜூலை 7-ம் தேதிதான் திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 👀

லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம்தான் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள 'ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ஆறு மாதத்திற்குள்ளாகவே, லூமியர் சகோதரர்கள் இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஹோட்டலில் திரையிட்டுக் காட்டினர்.

அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.

1897-ம் ஆண்டளவில் பம்பாயில் கிளிப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு திரைப்பட கலையகத்தில் தினமும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.👑

🦉பிபிசி-க்கு ஹேப்பி பர்த் டே!💐பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிப...
05/07/2022

🦉பிபிசி-க்கு ஹேப்பி பர்த் டே!💐
பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு இதே ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

🦉வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளி...
05/07/2022

🦉வைக்கம் முகமது பஷீர், 1908 -ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கமில் ‘தலயோலப் பரம்பில்’ பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியா முழுக்க தேசாந்திரியாக அலைந்து திரிந்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தத் தேசாந்திரி பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார். பத்மஸ்ரீ உள்பட பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். 1994 -ம் ஆண்டில் இதே நாளான ஜூலை 5-ம் நாளில் தனது 86வது வயதில் காலமானார்

🦉தனது இறுதி காலம் வரை  ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர்  நினைவு தினம் இன்று…..🥲பத்தொன்பதா...
04/07/2022

🦉தனது இறுதி காலம் வரை ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று…..🥲

பத்தொன்பதாம் நூற்றாண்டின்இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் விவேகானந்தர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா(Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்தது. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைதவேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

பிறப்பும் இளமையும்….

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலிய வற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சி கள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

ராமகிருஷ்ணருடன்…

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். எராமகிருஷ்ணரை முதன் முதலாக 1881ம் ஆண்டு விவேகானந்தர் சந்தித்தார். எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடு பாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினை யும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்….

1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

🦉டக்லஸ் எங்கல்பர்ட் காலமான தினமின்று 🥲அமெரிக்காவின் போர்ட்லாண்டில் பிறந்த எங்கெல்பர்ட், ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில்...
02/07/2022

🦉டக்லஸ் எங்கல்பர்ட் காலமான தினமின்று 🥲

அமெரிக்காவின் போர்ட்லாண்டில் பிறந்த எங்கெல்பர்ட், ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார்.அப்போதுதான் கம்ப்யூட்டரை மனிதர்கள் கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார்.

இணைப்பில் இருப்பது தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி),

1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவில் ஒரிகன் என்ற இடத்தில பிறந்தவர் எங்கல்பர்ட்.

கணினியில் உள்ளீட்டுச் சாதனமான மவுஸ் எனப்படும் சுட்டுபொறி, காட்சித் திரைகளுக்கான X Y நிலைகாட்டி என்பது இதின் தொடக்க காலப் பெயர்.

இது பார்பதற்கு எலி போன்ற தோற்றம் கொண்டிருந்ததால் மவுஸ் என அழைக்கப்பட்டது.

🦉உரிமைப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான எலீ வீஸல் (Elie Wiesel) காலமான நாளின்று🥲 # ருமேனியாவின் சியாகட்...
02/07/2022

🦉உரிமைப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான எலீ வீஸல் (Elie Wiesel) காலமான நாளின்று🥲

# ருமேனியாவின் சியாகட் நகரில் (1928) பிறந்தார். யூத மதக் கல்வி கற்றார். மனிதநேயம் குறித்து தந்தையிடமும், மத நம்பிக்கைகள் பற்றி தாயிடமும் அறிந்துகொண்டார்.

# வீட்டில் யூத மொழியான இத்திஷ், ஜெர்மனி, ஹங்கேரி, ரோமானிய மொழிகளை பேசியதால் அவற்றில் ஆர்வமும் புலமையும் உண்டானது. ஹீப்ரு மொழி கற்றார். பல இலக்கியங்கள், அறிவுசார் நூல்களைப் படித்தார்.

# இரண்டாம் உலகப் போரின்போது, போலந்தின் ஆஷ்விட்ஸ் நகர வதை முகாமுக்கு 15 வயதில் அனுப்பப்பட்டார். அங்கு நாஜிக்கள் செய்த சித்ரவதைகளை நேரடியாகப் பார்த்தார். அந்த கொடுமைகளால் தங்கை, தாய், தந்தை அடுத்தடுத்து இறந்தனர். இவரும் 2 அக்காக்களும் நேசப் படைகளால் 1945-ல் விடுவிக்கப்பட்டனர்.

# பாரீஸுக்கு சென்று, படிப்பைத் தொடர்ந்தார். ஹீப்ரு கற்பித்தார். பிரெஞ்சு மொழி கற்று, பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய செய்தித்தாள்களில் பணியாற்றினார். அங்கு பல அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.

# இளம் வயதில் அனுபவித்த சித்ரவதைகள் குறித்து இத்திஷ் மொழியில் ‘அண்ட் தி வேர்ல்டு வுட் ரிமைன் சைலன்ட்’ என்ற 900 பக்க நூலை 1956-ல் எழுதினார். பின்னர் இதை சுருக்கமாக பிரெஞ்சில் ‘லா நியுட்’ என்ற பெயரிலும், 1960-ல் ஆங்கிலத்தில் ‘நைட்’ என்ற பெயரிலும் எழுதினார்.

# ஆரம்பத்தில் இது அவ்வளவாக விற்கவில்லை. நாள் ஆகஆக, விற்பனை சூடுபிடித்தது. அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகாலத்துக்கு, ஆண்டுதோறும் 3 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

# தொடர்ந்து ‘டான்’, ‘டே’, ‘கேட்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட்’, ‘தி ஓத்’, ‘ஆல் ரிவர்ஸ் ரன் டு தி ஸீ’ என்பது உட்பட 40-க்கும் மேற்பட்ட புனை மற்றும் அல்புனைப் புதினங்களை எழுதினார். யூதப் பேரழிவு குறித்து ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

# அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை பேராசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். நியூயார்க் பல்கலைக்கழகம், அமெரிக்கன் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, யேல் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். யூதப் பேரழிவு ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

# அமைதிக்கான நோபல் பரிசு 1986-ல் வழங்கப்பட்டது. ‘மெஸஞ்சர் ஆஃப் மேன்கைண்ட்’ என்ற பட்டத்தை நார்வே நோபல் கமிட்டி வழங்கியது. அமெரிக்க அதிபர் பதக்கம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம் உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார்.

# நியூயார்க்கில் வசிக்கும் எலீ வீஸல், தன் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு பலியானவர்கள் மற்றும் குர்த் இன மக்களின் உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் 87 வயதிலும் குரல் கொடுத்து வந்தவர் இதே ஜூலை 2 (2016)ல் காலமானார்.

🦉நம் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதுமையான மேம்பாலம் ரூ.66 லட்சம் செலவில், 21 மாதங்களில் கட...
01/07/2022

🦉நம் மெட்ராஸ் மவுண்ட் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதுமையான மேம்பாலம் ரூ.66 லட்சம் செலவில், 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா இதே ஜூலை 1ல் நடந்தது. ஆம்.. சென்னையின் அடையாளங்களில், ஒன்று, அண்ணா மேம்பாலம் எனப்படும்,ஜெமினி மேம்பாலம். 1973 இதே ஜூலை 1ஆம் தேதிதான் திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்து நம் கட்டிங் கண்ணையா பகிர்ந்திருக்கும் சேதி இதோ:

பொதுவாக ரெயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு மேம் பாலம் அமைக்கப்பட்டது.தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரில் 1973_ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட்ரோடு) ஜெமினி சந்திப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது.

தலைநகராம் சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தைக் கட்ட அப்போது ஆன செலவு ரூ.66 லட்சம்தான்.

மேம்பாலத்தின் நீளம் 1,250 அடி. அகலம் 48 அடி ஆகும். 21 மாதங்களில் (1 ஆண்டு) கட்டி முடிக்கப்பட்டது.

முதலில் இந்த மேம்பாலத்தை ஜெமினி மேம்பாலம் என்றே மக்கள் கூறி வந்தார்கள். முதல்அமைச்சர் கருணாநிதி அதன் திறப்பு விழா பற்றி நிருபர்களிடம் கூறும்போது, “அது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார். அதன்படி அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1_7_1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதுபற்றி அவர் கூறியது இதுதான்:-

சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட பாலங்கள் _ நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால் _ நம்முடைய சமு தாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால்_ இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது.

“மர்மலாங்” பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது. மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் “மறைமலை அடிகளார் பாலம்” என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு “காயிதே மில்லத்” அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப்பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும்.

காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும். அதைப்போல “ஆமில்டன்” பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள்.

பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது. சமுதாயத்திற்காக பாடுபட்ட வர்களுக்கு காட்டப்படுகிற நன்றி உணர்வு இருக்கிறது.

ஆகவேதான் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அது விளக்கத்திற்காகக் கேட்கப்படுகிற கேள்வியே தவிர, கேலிக்காகக் கேட்கப்படுகிற கேள்வி அல்ல என்பதற்கேற்பத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.”இவ்வாறு கருணாநிதி கூறினார்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Azhagana Rakshasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azhagana Rakshasi:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

News Updates

Latest News, Photos, Videos Trends from Tamilnadu, India and around the World.... From Azhagana Rakshasi via AanthaiReporter.