Mano Ganesan Media Unit

  • Home
  • Mano Ganesan Media Unit

Mano Ganesan Media Unit Mano Ganesan(MP)
former Minister of National Integration, Official Languages, Social Progress and Hindu Religious Affairs/ Leader of TPA
(1)

27/10/2024
“இல்லையில்ல, நாங்கள்   இல்ல. நாம்  ” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப த...
25/10/2024



“இல்லையில்ல, நாங்கள் இல்ல. நாம் ” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை.

தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை.

இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது.

சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் புதிய கருத்துகளை கேட்டு, ஒரு கட்சியாக நாம் அரசியல் பரப்பில் முன்னோக்கி நகர்வோம்.

இப்படி “பொசிடிவாக” NPP/JVPஐ கணிப்போம் என்றால் இவர்கள் தங்கள் தங்கள் கறுப்பு வரலாற்றை மறைக்க முயல்வதுடன் எமது வரலாற்றையும் கொச்சை படுத்த முயல்கிறார்கள்.

மகாவம்சத்தில் இருந்து, சமகாலத்தில் JVP உட்பட்ட பெருந்தேசியவாத சக்திகளினால், சிங்கள மக்கள் மத்தியில் 1950களில் இருந்து விதைக்க பட்டுள்ள பேரினவாத சிந்தனை என்பதை திரை போட்டு மறைத்து, மலையக அல்லது ஈழத்தமிழ் மக்களின் இன்று வரையிலான அவல நிலைமைகளுக்கு பிரதானமாக, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளுமே முற்று முழுமையான பொறுப்புகளை ஏற்க வேண்டும் என JVP பிரசாரம் செய்ய முயல்கிறது.

இது ஒரு பலவீனமான பிரச்சாரம்!

தமிழ் மக்கள் அரசியல் பரப்பில் முற்போக்கு அணி, பிற்போக்கு அணி என இரண்டு முகாம்கள் இருக்கின்றன என்பது ஜனாதிபதி அனுரவுக்கும், பிரதமர் ஹரிணிக்கும் மிக நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தெரியும் என்று தலைவர் மனோவுக்கும் தெரியும்.

இது, இன்றைய சில புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். இவர்களை நாம் கணக்கில் எடுப்பதில்லை.

பிற்போக்கு தமிழ் அரசியல்வாதிகளை, ஏன் பிற்போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும்கூட, தமிழ் பேசம் மக்களே உரிய விதத்தில் தோற்கடிப்பார்கள்.

அது தொடர்பில் JVPயின் தடுமாற்றம் அவசியமில்லை. முதலில், JVPசிங்கள பெருந்தேசியவாத பரப்பில் உள்ள இனவாத, கொலைக்கார, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.

முதலில், JVPயின் கறுப்பு வரலாறு என்ன? இதிலும் கூட பல விஷயங்கள் விட்டு விடுகிறோம். எம்முடன் தொடர்பு பட்ட விடயங்களை மட்டும் பார்ப்போம்.

1) இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக பெருந்தோட்ட தமிழ் மக்களை சித்தரித்து காட்டினார்கள். கட்சி தொடர்களுக்கான JVPஇன் “பந்தி பஹா” என்ற ஐந்து வகுப்புகளில் இது இரண்டாம் வகுப்பாகும். இந்தியாவை ஏகாதிபத்தியத்தியமாக குறிப்பிடுவதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக JVP பிரசாரம் செய்ததால், சிங்கள மக்கள் மனங்களில் இனவாத நஞ்சு விதைக்க பட்டது.

2) மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாக ஏற்பது விஞ்ஞான பூர்வமாக சாத்தியம் அற்றது என்றார்கள்.

3) ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளை JVP தலைவர்கள் கூறி வந்தார்கள்.

4) நாடு தழுவிய அரசியல் அதிகார பகிர்வை ஏற்க மறுத்தார்கள். இன்றுவரை அதிகார பகிர்வு தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள்.

5) அதிகார பகிர்வின் அடையாளமான மாகாணசபைகள் முறைமையையும், சட்ட மூலத்தையும் எதிர்த்து நாடு தழுவிய பெரும் கிளர்ச்சியை செய்தார்கள். பெரும்தொகை மரணங்களை, சேதங்களை விளைவித்த கிளர்ச்சி அதுவாகும். பின்னர் மாகாணசபைகள் தேர்தல்களில் பங்கு பற்றி சபைகளில் வந்து அமர்ந்தார்கள்.

6) மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாரிய பங்காற்றி, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட மகிந்தவின் கொடூர ஆட்சிக்கு அஸ்திவாரம் போட்டார்கள்.

7) யுத்தம் செய்ய தயங்கிய, ஜனாதிபதி மகிந்தவை யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி, ஒரு முட்டாள் கொலையாளி கையில் அரிவாளை கொடுத்து, இன்று கறுப்பு சரித்திரம் ஆகிவிட்ட யுத்த கொடுமைகளுக்கும், யுத்தத்தின் பக்க விளைவான, கொழும்பில் நிகழ்ந்த “வெள்ளை-வேன்” கடத்தல், படுகொலை நிகழ்வுகள் உட்பட, வரலாறு காணாத மனித உரிமை மீறல்களுக்கும் முதல் காரணமாக அமைந்து விட்டார்கள்.

8) யுத்தம் முடிந்த பின்னர் யுத்த வெற்றி பெருமையில், JVPக்கும் பங்கு இருக்கிறது, என சிங்கள மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்தார்கள்.

இங்கே, முற்போக்கு பொருளாதார நகர்வுகளுக்காக உலகத்துடன் சேர்ந்து முன்நகர இலங்கை முயன்ற போதெல்லாம், “கற்காலத்தில்” இருந்த JVP எவ்வளவு தடையாக நின்றது என்பதை பற்றி எழுதவில்லை.

இன்று அவர்கள் பொருளாதார கொள்கையிலும் மாறி விட்டார்கள் என்றும் நாம் நம்புவோம். (JVPயின் பொருளாதார தவறுகள் பற்றி அவசியமாயின் இன்னொரு நாள் எழுதுவோம்.)

இன்று தம் பழைய வரலாற்றில் இருந்து NPP மீண்டு விட்டது என்றும், பழைய தவறுகளை அவர்கள் செய்ய மாட்டார்கள் எனவும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! ஆனால், பழைய வரலாறு என்று ஒன்று இருக்கவே இல்லை என்று காட்ட படும் மலின முயற்சியை கண்டு கொஞ்சம் சிரித்தும் வைப்போம்!

20/10/2024

#ஜேவிபி_மகிந்த யுத்தத்தால் வெள்ளை வேன் கொழும்பில் எம்மை தூக்கிய வேளை, போராடியவன் நான்! #மனோகணேசன்
(Foll 1st Comment)

19/10/2024
 #பிறந்த  #நாள்  #வாழ்த்துகள், பரணி..!கட்சி, கொள்கை, இன பற்று, இஸ்லாமிய, சிங்கள சகோதர்களையும் அரவணைக்கும் தேசப்பற்று, நே...
31/07/2024

#பிறந்த #நாள் #வாழ்த்துகள், பரணி..!

கட்சி, கொள்கை, இன பற்று, இஸ்லாமிய, சிங்கள சகோதர்களையும் அரவணைக்கும் தேசப்பற்று, நேர்மை, தூர பார்வை, துணிச்சல் மிக்க வழித்தடம், தடம் மாறாமல் தலைமை மீது விசுவாசம், இவைதான் எதிர்கால கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பரணிதரன்..!

#மனோ_கணேசன்
31-July-2K24

 #தோழர்  #விக்கிமரபாகு,  #இறுதிவரை  #போராளி! கொழும்பு கோட்டை ரயில் நிலைய எதிரில், ராஜபக்ச கும்பல் ஆர்ப்பாட்டம், பின்னால்...
26/07/2024

#தோழர் #விக்கிமரபாகு, #இறுதிவரை #போராளி! கொழும்பு கோட்டை ரயில் நிலைய எதிரில், ராஜபக்ச கும்பல் ஆர்ப்பாட்டம், பின்னால் அவர்களது பேனரில் விக்கிரமபாகுவின், எனது படங்களை “புலிகள்” என போட்டு பிரசாரம்! (கூடவே இன்றைய கூட்டாளி ரணில் படமும் உள்ளது) #மனோகணேசன் 26-July-2K24-Colombo

 #தோழர்  #விக்கிமரபாகு,  #இறுதிவரை  #போராளி!  படங்கள் பேசட்டும்! அது ஒரு கொடுமையாக காலம்! எனக்கு பின் தொப்பி அணிந்து விக...
26/07/2024

#தோழர் #விக்கிமரபாகு, #இறுதிவரை #போராளி! படங்கள் பேசட்டும்! அது ஒரு கொடுமையாக காலம்! எனக்கு பின் தொப்பி அணிந்து விக்கிரமபாகு, பின் மண்டை மட்டும் தெரிய ரவிராஜ்! இதை விட என்ன சொல்ல? சிரித்தபடி அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த காலம்! (2006ம் வருஷம் கொழும்பு)
#மனோகணேசன் 26-July-2K24-Colombo

தோழர் விக்கிமரபாகு, இறுதி வரை போராளி! பிறகு எழுதுகிறேன்! இன்று படங்கள் பேசட்டும்! அது ஒரு கொடுமையாக காலம்! இன்றைய வாய் ப...
26/07/2024

தோழர் விக்கிமரபாகு, இறுதி வரை போராளி! பிறகு எழுதுகிறேன்! இன்று படங்கள் பேசட்டும்! அது ஒரு கொடுமையாக காலம்! இன்றைய வாய் பேச்சு வீரர்கள் இல்லாத, ஓடி ஒளிந்த காலம்!
#மனோ கணேசன்

 #ஆகஸ்ட்_2  #தமுகூ  #அரசியல்  #குழு  #கூட்டம்     #மனோகணேசன்   Ganesan 26-July-2K24-Colombo
26/07/2024

#ஆகஸ்ட்_2 #தமுகூ #அரசியல் #குழு #கூட்டம்



#மனோகணேசன் Ganesan 26-July-2K24-Colombo

X -   President Wickramasinghe  invited   to discuss his cabinet memo, “Establishment of New Settlement Villages in the ...
19/07/2024

X -

President Wickramasinghe invited to discuss his cabinet memo, “Establishment of New Settlement Villages in the Plantation Sector”. Attending the discussion as a responsible party, we welcomed any move in principle to de-link the lives of plantation peasants from the modern slavery clutches of the plantation employers. But we cannot accept the 200-year-old built “Line Rooms” being declared as “Villages”.

We urged the president to end the 200-year old geographical isolation of our people who live in “Line-Room” housings, similar to cow-barns, located in the hills away from the rest of the communities. We wanted our people, who are SriLankans today, to be brought down to location in close proximity to the Highways so this community enters the national mainstream.

TPA very dutifully submitted our six point alternative proposals to the head of the state:
(1)Please provide Housing land plots to our people, geographically within the reach from closest national highway with the maximum “reach” of 3km.
(2)Extent of Land plots shall match with such allocation practices in the particular DS Division.
(3)The ownership deeds shall be with the same legal status of what's being given to villagers in the other parts of the country.
(4)We propose that the deeds given to the name of the woman head of the family.
(5)Every married couple shall be considered as a Family & every family shall be entitled to receive land for housing.
(6)Those who are able to construct their houses shall go ahead to construct their own houses and the others who are in the need can be accommodated in the housing schemes supported by the government projects and funding from India and other international agencies.


https://x.com/ManoGanesan/status/1814201156308250878

ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மும்மடங்கு அதிகரிப்பு. இதனால், ஈரானிடம் பெற்ற பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலர் திருப்பி செல...
16/07/2024

ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மும்மடங்கு அதிகரிப்பு. இதனால், ஈரானிடம் பெற்ற பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலர் திருப்பி செலுத்த முடிந்தமை எமக்கு நற்செய்தி. ஆனால் ஆண்டாண்டு காலம் தேயிலை கொளுந்தை பறிக்க மலை ஏறி உழைக்கும் எங்கள் பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வரும்..? #மனோகணேசன்
https://x.com/ManoGanesan/status/1813108575394537781

தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பல்லின, ப...
01/07/2024

தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பல்லின, பன்மொழி, பன்மத இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர்.

அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.

எல்லாவற்றையும் மீறி நல்லலாட்சி காலத்தில் ரணில் விக்க்கிரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புது அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடு பட்டவர்.

அதை நம்பி "தீபாவளிக்கு தீர்வு", "பொங்கலுக்கு தீர்வு" என்று கெடு கூறி அதற்காகவும் விமர்சிக்க பட்டவர்.

அறிவு, ஆன்மா, உடல் என்ற மனித கூறுகளில், உடலால் மட்டுமே பலவீனமாக இறுதி காலத்தில் இருந்தார். அறிவும், ஆன்மாவும் பலம் இழக்கவே இல்லை.

நான் அவரது கட்சி அங்கத்தவன் இல்லை. ஆனால், இந்த "சிங்க கொடி முதல் வழி காட்டல் குழு" சம்பவங்கள் வரை எல்லாவற்றையும் மிக பக்கத்தில் இருந்து பார்த்தவன், நான்.

இப்போது வரிசையாக சிங்கள பெளத்த தேசிய கட்சி தலைவர்கள் வந்து, “சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட, நாற்பது வருட, ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள். அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்கும், ஐயா..!

#மனோகணேசன்
01-July-2K24-Colombo

தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சம...
28/06/2024

தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் சந்திப்பு இன்று கொழும்பு அமெரிக்க தூதரின் இல்லத்தில் நிகழ்ந்தது.

இதில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ. முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் மமமு பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். அமெரிக்க தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாண்மை விசேட அலுவலர்கள் ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனோ கணேசன் தலைமையில் நுவரெலியா எம்பி உதயகுமார், கேகாலை அமைப்பாளர் பரணிதரன்  அடங்கிய, தமுகூ தூதுக்குழு, ஐநா வதிவிட பிரதிந...
27/06/2024

மனோ கணேசன் தலைமையில் நுவரெலியா எம்பி உதயகுமார், கேகாலை அமைப்பாளர் பரணிதரன் அடங்கிய, தமுகூ தூதுக்குழு, ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேயை கொழும்பில் சந்தித்து உரையாடல்

 #நினைவேந்தல்  #தொடர்பில்  #ஒரு  #பொது  #கொள்கை  #ஏன்  #அரசுக்கு  #இல்லை  #என  #ஜனாதிபதி  #ரணிலிடம்  #நான்  #சற்றுமுன்  ...
15/05/2024

#நினைவேந்தல் #தொடர்பில் #ஒரு #பொது #கொள்கை #ஏன் #அரசுக்கு #இல்லை #என #ஜனாதிபதி #ரணிலிடம் #நான் #சற்றுமுன் #தொலைபேசியில் #கேட்டேன்



“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ரணிலிடம் நான் சற்றுமுன் தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவேந்தும் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்று கேட்டேன்.

“இல்லை, அவர்கள் பொலிஸ் உடன் முரண் பட்டு உள்ளார்கள். அதனால்தான் கைது. சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கூறி விட்டேன். பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என பொலிசுக்கு, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி உள்ளார். ஆகவே நாளை விட்டு விடுவார்கள்.” என்றார் ரணில்.

“அதெல்லாம் சரி. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இருந்தால் எப்போதும் கைது செய்யலாம் தானே. ஆகவே இதற்காக ஏன் விசேடமாக நீதிமன்ற ஆணையை கேட்டு பெற வேண்டும்? இதில் என்ன மர்மம் இருக்கிறது?"

"நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசாங்கத்துக்கு இல்லை? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இல்லாமல் எவரும் தம் மறைந்த உறவுகளை நினைந்து நினைவேந்தல்களை நடத்தலாம் என அரசாங்கம் அறிவித்தால் என்ன?” என்றும் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன்.

"இவர்களை நாளை பிணையில் விட்டு விடுவார்கள், பிணையில் விட்டு விடுவார்கள்", என்று அவசர அவசரமாக கூறினாரே தவிர, இது தொடர்பில் பொது கொள்கையை அறிவியுங்கள் என்ற கோரிக்கைக்கு உடன் பதில் இல்லை.

#மனோகணேசன்
15-May-2K24-9.45pm-Colombo

03/05/2024

 #இந்த  #சிரிப்புகளுக்கு  #தான்  #ஆயிரம்  #பொற்காசு! குழந்தை, பெல்மதுள்ள ரில்ஹேன தோட்ட தமிழ் கிராமம். தாய், களுத்துறை சி...
22/04/2024

#இந்த #சிரிப்புகளுக்கு #தான் #ஆயிரம் #பொற்காசு!

குழந்தை, பெல்மதுள்ள ரில்ஹேன தோட்ட தமிழ் கிராமம். தாய், களுத்துறை சிங்கள கிராமம்.

எனக்கு மாலை போட வந்த குழந்தையின் மாலையை வாங்கி, “எனக்கு அல்ல, உனக்கு தான் மாலை” என்று அவர் கழுத்திலேயே போட்டேன். இது என் வழமையான பாணி என பலருக்கு தெரியும். அப்போது குழந்தை முகம் முழுக்க சிரிப்பு..!

அந்த தாய், பாலித தெவரபெருமவின் மரண சடங்கில் என்னை கண்டதும், ஏனோ தெரியலை, சூழலை மறந்து, ஓடி வந்து, "ஹா.. மனோ கணேஷன் மந்திரிதுமா" என்று என் கையை பிடித்து கொண்டு கதைத்தார். அவர் முகம் முழுக்க சிரிப்பு!

சமூக வெளி நண்பர்கள் சிலருக்கு, "மரண வீட்டிலும் சிரிப்பா?" என்று "மரபு-மீறல்" பிரச்சினை. நான் எங்கேயும், எப்போதும் அவசியமானால் "மரபு"களை உடைக்க தயங்குவதில்லை. அப்படிதான் பழையன களைந்து புதிய உலகில் நுழைய முடியும் என்பதை அறிவேன்.

அவர் ஒரு சிங்கள கிராமத்து தாய். அவரை இதற்கு முன் நான் அறியேன். இனிமேலும் காண வாய்ப்பு இருக்க போவதில்லை. ஆனாலும் என்னை கண்டதும் ஓடி வந்து, கதைத்த முகம்தான் இங்கே ஆயிரம் பொற்காசு அற்புதம்!

அதற்காக எத்தனை முறையும் நான் மரபுகளை உடைப்பேன்.

அதுதான் நான். #மனோகணேசன்

18/04/2024



உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா நாளை ஆரம்பம்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது.

543 தொகுதிகள், 28 மாநிலங்கள், 8 ஒன்றிய பிரதேசங்கள் ஆகியனவற்றை ஊடுருவி சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும், 2,600 கட்சிகளின் வேட்பாளர்களை கொண்ட உலகின் மிக பிரமாண்ட ஜனநாயக தேர்தல் நடவடிக்கையின் மூலம், ஆறு வாரங்களில் ஏழு கட்டங்களில், இந்தியாவின் பல கட்சி ஜனநாயகம் இந்திய ஒன்றியம் என்ற இந்திய அரசாங்கத்தை தெரிவு செய்கின்றது.

இலங்கை பிரஜை என்ற பெருமையுடனும், மறைக்க பட முடியாத இந்திய வம்சாவளி பின்னணியுடனும், இந்திய நாட்டு தேர்தல்களை கணிக்கின்ற இலங்கையின் ஒரு ஜனநாயக கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய தேர்தல் பிரசாரத்தில் என் மனதை வெகுவாக கவர்ந்த சுலோகம் ஒன்று உண்டு.

அது, “நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றீர்கள் என்பதற்கு நேரம் எடுத்து சிந்தியுங்கள்! சரியாக சிந்தித்து உங்கள் சரியான எம்பியை தெரிவு செய்யுங்கள். ஆனால், தேர்தலில் வாக்களிக்க வேண்டுமா? இல்லையா? என ஒருகணமும் சிந்திக்காதீர்கள்! எப்போதும் வாக்களியுங்கள்! அது உங்கள் உரிமை!”.

இது இலங்கைக்கும் மிகவும் பொருத்தமான செய்தியை தரும் சுலோகம் என எண்ணுகிறேன்.

மிக சிறந்த இந்திய மனங்களால் கட்டி எழுப்ப பட்டு, நியாயம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும், இந்திய ஜனநாயகத்துக்கு எனது பாராட்டுகள்.

#மனோகணேசன்

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mano Ganesan Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share