13/07/2023
🍅 தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பாகற்காய் விலை ஏறிவிட்டது
சுரைக்காய் விலை ஏறிவிட்டது
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது,
இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்😩..
நான் தெரியாமல் தான் கேட்கிறேன்!!
என் மகனை ஆசிரியர் ஆக்குவேன் என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என் மகனை தொழிலதிபராக்குவேன் என்று கூறும் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை
விவசாயி ஆக்குவேன் என்று கூறுவதில்லை😌..
COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்..🤔
6 மாதம்
1 வருடம் ,
தண்ணீர் இல்லாமல்
எத்தனையோ செலவு செய்து, வெயிலில் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல்
ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..
விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா? இல்லை JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..
சிந்தியுங்கள் மக்களே
🌾🌾விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்.. 👍
இல்லையேல்
, கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் விஷமேறி.,
கடைசி மீனும் பிடிபடும்
போதுதான் உரைக்கும்,
பணத்தை சாப்பிட முடியாதென்று..!
அப்போது உரைத்து ஒரு பயனும் இல்லை...☹️...
விழித்திடுங்கள்🌱🌴🌳🌾