இது தவத்திற்காக

  • Home
  • இது தவத்திற்காக

இது தவத்திற்காக எம் குருதியால் எமக்காக உருவாக்கப்பட?

ஒரு வாக்கை மட்டும் தா........*********************************காசு என்னிடமில்லைகல்பு இருக்கிறதுஉங்களை நேசிப்பேன்வசதி என்...
05/11/2024

ஒரு வாக்கை மட்டும் தா........
*********************************
காசு என்னிடமில்லை
கல்பு இருக்கிறது
உங்களை நேசிப்பேன்

வசதி என்னிடமில்லை
வாய் இருக்கிறது
உங்களுக்காக வாதிடுவேன்

கஜானா என்னிடமில்லை
கனவு இருக்கிறது
உங்களுக்காக கடைமை புரிவேன்

பொருள் என்னிடமில்லை
பொறுப்பு இருக்கிறது
உங்களுக்காக போரிடுவேன்

வாகனம் என்னிடமில்லை
வார்த்தை இருக்கிறது
உங்களுக்காக வழக்காடுவேன்

நிவாரணம் என்னிடமில்லை
நிதானம் இருக்கிறது
உங்களுக்காக நீதி கேட்பேன்

பதவி என்னிடமில்லை
பாதம் இருக்கிறது
உங்களுக்காக மலையும் ஏறுவேன்

அதிகாரம் என்னிடமில்லை
அறிவு இருக்கிறது
உங்களுக்காக அரசையும் எதிர்த்திடுவேன்

படைகள் என்னிடமில்லை
படிப்பு இருக்கிறது
உங்களுக்கு பணிவிடை செய்வேன்

இன்னும்...
உரிமை என்று வந்துவிட்டால்
என் உயிரையும் தருவேன்

நீ
ஒரு வாக்கை மட்டும் தா...
நம் சமூகத்தின் விதியையே மாற்றுவோம்!

- ஏ.எல்.தவம் -

25/10/2024
தனித்துவ அரசியலுக்கான பயணம்...🌳X 4XAL Thavam
19/10/2024

தனித்துவ அரசியலுக்கான பயணம்...
🌳X 4X
AL Thavam

12/10/2024

ஆறு அடி கொண்ட சூரியனா
தவம் போராளி என்னும் போர்க்களமா

12/10/2024

முஸ்லிம் தேசிய அரசியலை தூய்மைப்படுத்துவது தொடரட்டும்!….
பாதி தூரத்தையே கடந்துள்ளோம்.
மீதித் தூரத்தையும் கடந்துதானாக வேண்டும்.
அதில் ஒவ்வொருவருக்கும் பாத்திரமுண்டு.
வெல்வது யார் என்பதை விடவும் வீழ்வது சமூகமாக இருக்க முடியாது.
இது கடினமான பயணம் என்பது நன்கு தெரியும்.
ஆனால், முட்களை எண்ணி பாதங்களை ஆறவிட முடியாது.
மு.கா #நமது #இயக்கம்!
நமது #முஸ்லிம் #தேசிய #அடையாளம்!
நமது #தனித்துவ #அரசியல் #நிறுவனம்!
அது அழிவதையும் அழிக்கப்படுவதையும்
பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
ஒவ்வொருவரும் உறுதிகொள்ளுங்கள்!
முஸ்லிம் தேசிய அரசியலை தூய்மைப்படுத்துவது தொடரட்டும்!
நமது வாக்குகள் அதற்கே என்று சத்தியம் எடுத்துக்கொள்ளுங்கள்!

எனக்காகப் பிரார்த்தியுங்கள்!
Thavam Army

UNP, SLFP & SLPP அழிந்தது போல் - 20க்குக் கையுயர்த்திகளைக் களமிறக்கி SLMCயையும் அழித்து விடாதீர்கள்!இதுவே நமது வேண்டுகோள...
26/09/2024

UNP, SLFP & SLPP அழிந்தது போல் - 20க்குக் கையுயர்த்திகளைக் களமிறக்கி SLMCயையும் அழித்து விடாதீர்கள்!
இதுவே நமது வேண்டுகோள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்  வெற்றி வேட்பாளர்  #சஜித்_பிரேமதாஸ அவர்களை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்க...
16/09/2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் #சஜித்_பிரேமதாஸ அவர்களை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடாத்தும் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் கலாநிதி அல்-ஹாஜ் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான #நிஷாம்_காரியப்பர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் Mohamed Ibrahim Mohamed Mansoor , முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் Rahmath Munsoor ஆகியோரும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்புரையாற்றவுள்ளனர்.

உங்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து தெளிவு பெற அன்போடு அழைக்கிறேன்.

#இடம் - கடற்கரை வீதி ( #ஹனீபா_போடியார்_சந்தி)

#காலம் - 2024.09.17 #செவ்வாய் மாலை 5.00 மணிமுதல்.

அழைப்பு
மத்திய குழு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அக்கரைப்பற்று

Rauff Hakeem
AL Thavam
Baheej Meera Mohideen
Aboosali Mohemed Sulfikar
A.L. Rinos

இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை (14/09) அக்கரைப்பற்றில் சஜித் பிரேமதாச!அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
12/09/2024

இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை (14/09) அக்கரைப்பற்றில் சஜித் பிரேமதாச!

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!

12/09/2024

மரம் மண்டியிடாது...

இந்த மரம் பட்டை முற்றிய பச்சை மரம்...

இந்தப்பச்சை ரணிலின் அந்தப் பச்சை அல்ல...

அந்தப் பச்சை இப்போது பச்சையும் அல்ல...

அந்தப் பச்சை இப்போது மொட்டின் எச்சை...

ஏ.எல். தவம் Thavam Army

09/09/2024

#வெல்லும் #சஜித்தை ஆதரித்து #அக்கரைப்பற்றில் நேற்று நடந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம்

05/09/2024

இன்றைய (5/9) கருத்தரங்கு Akp 20அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
05/09/2024

இன்றைய (5/9) கருத்தரங்கு
Akp 20
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!

04/09/2024

நாட்டின் எதிர்காலத்தை முதலில் தீர்மானிக்கும் அரச ஊழியர்களான உங்கள் தபால் வாக்கினை ஐக்கிய மக்கள் சக்திக்கு அளித்து வெற்றியின் பங்காளியாகுங்கள்.

As the Government Officials who will be the first to determine the future of our country, as postal voters, vote for Sajith and be stakeholders of the victory.

අප රටේ අනාගතය තීරණය කරන ප්‍රතමයන් වන රාජ්‍ය නිලධාරීන් වශයෙන් සහ තැපැල් ඡන්ද දායකයන් ලෙස, සජිත්ට ඡන්දය දී ජයග්‍රහණයේ කොටස්කරුවන් වන්න.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இது தவத்திற்காக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share