Northern Province - வட மாகாணம்

  • Home
  • Northern Province - வட மாகாணம்

Northern Province - வட மாகாணம் Education🎓 Sports🏃‍♀️ Requirements of Work🏦 Business News🌍

21/03/2024

இந்த இசைக்காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் எமது அடுத்த தயாரிப்புக்கான நிதிப்பங்களிப்பை வழங்கலாம்.🙏🏼Bank DetailsB...

21/03/2024

கிட்டதட்ட ஆறுமாத கால உழைப்பின் பின் உருவான "யாழ்ப்பாணம் - A Melodic Tale" பாடலினை வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்.

ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நேற்று அப்லோட் செய்யப்பட்ட வீடியோ நீக்கப்பட்டு விட்டது. புதிய லிங் முதலாவது கமெண்டில் இணைக்கப்பட்டுள்ளது. Break ஆன Flow இனை மீட்டெடுப்பது கடினம் தான். ஆனால் உங்களின் அன்பினாலும் ஆதரவினாலும் அது சாத்தியமாகலாம்.

மிக முக்கியமாக Headset பயன்படுத்தி மற்றும் Screen இன் Brightஐ கூட்டி பாடலினை பாருங்கள்.
(To enjoy the better experience)

பாடல் பிடிக்கவில்லை என்றால் திட்டவும், கருத்து சொல்லவும், கண்டுகொள்ளாமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு, அதேநேரம் பாடல் பிடித்திருந்தால் "மட்டும்" மற்றவர்களிடம் பகிருங்கள்.

If you think that it's worth to spend 15 minutes to watch, please share it with your friends and share a few words about how you feel about this Melodic Tale 😊

Thank you 💓

"யாழ்ப்பாணம்"
"A melodic Tale" by Arulanantham Jeevatharsan (அருளானந்தம் ஜீவதர்ஷன்)
Cinematography Rajeebhavan Sribhavan
Music & Vocal Piranavan Buvanendran
Lyrics Thuwaragan Ranganaathen
Editing Nishaharan Ranganathen
Title Design Yamuna Ehambaram
Colourist Rishi Selvam
Roto Artist SR Thusikaran

முன்பள்ளித்துறையில் இருப்பவர்களுக்கு  ஓர் அரிய வாய்ப்பு.   இலவசமாக ஒரு கற்கைநெறி.
19/03/2024

முன்பள்ளித்துறையில் இருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இலவசமாக ஒரு கற்கைநெறி.

மு/உடையார்கட்டு ம.வி சிவப்பு இல்லம்(இளங்கோ)
11/03/2024

மு/உடையார்கட்டு ம.வி
சிவப்பு இல்லம்(இளங்கோ)

10/03/2024

சென் ஜோன்ஸ் இன் குட்டி மலிங்க sling action 16 வயதான இளம் பந்துவீச்சாளர் மாதுளன், அவரின் O/L பரீட்சையின் பின்னர் லசித் மலிங்கவின் கண்காணிப்பில் பயிற்சி/ வளர்ச்சியில் இணையவிருக்கிறார் என்னும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது..!

சென்ற வருடம் சமிந்த வாஸ் கலந்துகொண்ட Jaffna Stallionsஇன் பந்துவீச்சு பயிற்சி முகாமில் 134km/h இல் பந்துவீசி அசத்தியிருந்தார் மாதுளன்.

கீழே இருக்கும் காணொளி நேற்று முடிவடைந்த Battle of the North இல் சென்றல் அணி வீரரொருவரின் விக்கட்டுகளை sling action இல் பெர்பெக்ட் யோர்கர் முறையில் நிலை தடுமாறவைத்து தகர்த்த தருணம்.! ❤️🏆

The GOAT's 🐐 Approval ✅ 🪩.
Exciting times ahead. Lasith Malinga has agreed to work with Mathulan after GCE O/L's. The message is very clear. Education is as important as playing the game you Love. - Kalugalage Amila Silva

10/03/2024

Nuwan Thushara❤️ Hat-trick+😍
Going to a fight too 😁

 #தன்வந் கரையைத் தொட்ட பின்னர் நடந்த நிகழ்வில் இன்று கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. 34 கடல் மைல்களை நீந்திக்கடந்து...
01/03/2024

#தன்வந் கரையைத் தொட்ட பின்னர் நடந்த நிகழ்வில் இன்று கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

34 கடல் மைல்களை நீந்திக்கடந்து வந்து உலகசாதனை புரிந்தவன் என்ற எந்தவித பரபரப்பும் இல்லாமல் மேடையின் நடுவில் அமைதியாக உட்கார்ந்திருந்தபடி, கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தங்கையுடன் கண்களால் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தான்.

வந்திருந்தவர்கள் மாறி மாறி உரையாற்றி, அவனுக்கு சந்தன மாலை, பூமாலை, வெற்றிப்பதக்கங்கள், சால்வைகள் என அணிவித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அவனது பெற்றோருடைய நன்றியுரை முடிந்ததும் அவனுடைய தந்தை ஒரு விடயத்தை கூறினார்.

"நான் வெற்றிகரமாக பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தால்... எனக்கு ஒரு 'ஓம்' பென்ரன் அம்மா போடோணும்" என்று தன்வந் கேட்டிருந்தானாம்.

தன் பிள்ளை வெற்றிகரமாக நீந்திக்கடப்பான் என்ற நம்பிக்கையில் அவனுடைய தாயார் தயாழினி முன்னேற்பாடாக அந்த பென்ரனை அவனுக்கு தெரியாமல் வைத்திருந்ததை அவர் அவனுக்கு அணிவிக்க மேடையேறிய போது, கடகடவென தன் கழுத்திலிருந்த மாலைகள் சால்வைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு கண்கள் சுருங்கி வரிசைப்பல் சிரிப்போடு அவன் நின்ற காட்சி தான் இன்றைய நாளின் நெகிழ்ச்சி.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயும் தந்தையும்... ❤️

வாழ்த்துகள் தன்வந்

பதிவு - Vythehi Narendran

01/03/2024

🇮🇳 India’s richest billionaires:

1. Mukesh Ambani: $112.1 billion
2. Gautam Adani: $79.0b
3. Shiv Nadar: $34.9b
4. Savitri Jindal: $29.4b
5. Cyrus Poonawalla: $25.2b
6. Dilip Shanghvi: $24.4b
7. Kumar Birla: $19.6b
8. Kushal Pal Singh: $17.9b
9. Lakshmi Mittal: $16.7b
10. Radhakishan Damani: $16.7b

According to Forbes, as of February 1, 2024

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 32 KM பாக்கு நீரிணையை 9 மணித்தியாலங்கள் 37 நிமிடத்தில் ...
01/03/2024

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 32 KM பாக்கு நீரிணையை 9 மணித்தியாலங்கள் 37 நிமிடத்தில் இன்று (01.03.2024) திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி 13 வயதான மாணவன் ஹரிஹரன் தன்வந் நீந்தி கடந்து சாதனை நிகழ்த்தினார்

கடல்வளம் மாசடைதல், இளவயது போதைப்பழக்கம் என்பவற்றுக்கு எதிரான கவனயீர்ப்பாகவும், தனது நீச்சல் சாதனை முயற்சியை இன்று காலை 05.30 மணிக்கு தனுஸ்கோடிக்கரையில் ஆரம்பித்து, எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே தலைமன்னார் கரையில் நிறைவு செய்தார்.

பாக்குநீரினையை நீந்திக்கடந்த மிகக் குறைந்த வயதுடையவர் தன்வந்த் என்பது குறிப்பிடதக்கது.

23/02/2024

Average monthly net salary (after tax):

1. 🇨🇭 Switzerland ($6,264.54)
2. 🇱🇺 Luxembourg ($5,106.23)
3. 🇸🇬 Singapore ($4,960.32)
4. 🇺🇸 United States ($4,668.81)
5. 🇮🇸 Iceland ($4,362.84)
6. 🇶🇦 Qatar ($4,166.40)
7. 🇩🇰 Denmark ($3,556.10)
8. 🇳🇱 Netherlands ($3,527.10)
9. 🇦🇪 United Arab Emirates ($3,490.20)
10. 🇳🇴 Norway ($3,441.74)
11. 🇦🇺 Australia ($3,243.05)
12. 🇭🇰 Hong Kong (China) ($3,088.89)
13. 🇩🇪 Germany ($3,041.05)
14. 🇮🇪 Ireland ($3,005.26)
15. 🇨🇦 Canada ($2,983.13)
16. 🇬🇧 United Kingdom ($2,936.61)
17. 🇫🇮 Finland ($2,929.19)
18. 🇳🇿 New Zealand ($2,861.27)
19. 🇰🇼 Kuwait ($2,666.21)
20. 🇧🇪 Belgium ($2,665.90)
21. 🇦🇹 Austria ($2,597.48)
22. 🇸🇪 Sweden ($2,596.20)
23. 🇮🇱 Israel ($2,533.61)
24. 🇫🇷 France ($2,512.68)
25. 🇰🇷 South Korea ($2,430.62)
26. 🇯🇵 Japan ($2,259.00)
27. 🇵🇷 Puerto Rico ($2,223.47)
28. 🇴🇲 Oman ($2,188.50)
29. 🇪🇸 Spain ($1,961.37)
30. 🇸🇦 Saudi Arabia ($1,934.51)
31. 🇮🇹 Italy ($1,714.84)
32. 🇹🇼 Taiwan ($1,626.66)
33. 🇨🇿 Czech Republic ($1,604.77)
34. 🇨🇾 Cyprus ($1,510.80)
35. 🇪🇪 Estonia ($1,505.51)
36. 🇲🇹 Malta ($1,485.53)
37. 🇸🇮 Slovenia ($1,390.52)
38. 🇵🇱 Poland ($1,286.40)
39. 🇱🇹 Lithuania ($1,230.63)
40. 🇿🇦 South Africa ($1,197.36)
41. 🇵🇹 Portugal ($1,118.65)
42. 🇭🇷 Croatia ($1,109.14)
43. 🇺🇾 Uruguay ($1,081.40)
44. 🇸🇰 Slovakia ($1,078.69)
45. 🇱🇻 Latvia ($1,073.86)
46. 🇨🇳 China ($1,000.12)
47. 🇭🇺 Hungary ($957.03)
48. 🇬🇷 Greece ($920.00)
49. 🇨🇷 Costa Rica ($871.52)
50. 🇧🇬 Bulgaria ($833.67)
51. 🇲🇾 Malaysia ($804.04)
52. 🇹🇹 Trinidad and Tobago ($785.11)
53. 🇷🇴 Romania ($778.56)
54. 🇵🇦 Panama ($776.67)
55. 🇲🇪 Montenegro ($769.25)
56. 🇲🇽 Mexico ($745.89)
57. 🇦🇲 Armenia ($682.93)
58. 🇯🇲 Jamaica ($663.07)
59. 🇨🇱 Chile ($655.55)
60. 🇧🇦 Bosnia and Herzegovina ($650.35)
61. 🇷🇸 Serbia ($648.75)
62. 🇵🇸 Palestine ($637.87)
63. 🇯🇴 Jordan ($627.10)
64. 🇮🇳 India ($596.53)
65. 🇮🇶 Iraq ($553.20)
66. 🇰🇿 Kazakhstan ($550.61)
67. 🇹🇭 Thailand ($550.04)
68. 🇧🇾 Belarus ($547.53)
69. 🇪🇨 Ecuador ($515.25)
70. 🇦🇱 Albania ($504.18)
71. 🇬🇹 Guatemala ($503.90)
72. 🇲🇺 Mauritius ($499.91)
73. 🇷🇺 Russia ($488.49)
74. 🇬🇪 Georgia ($484.31)
75. 🇲🇰 North Macedonia ($467.62)
76. 🇻🇳 Vietnam ($453.42)
77. 🇽🇰 Kosovo (Disputed Territory) ($440.03)
78. 🇦🇷 Argentina ($427.18)
79. 🇧🇷 Brazil ($420.87)
80. 🇺🇦 Ukraine ($418.51)
81. 🇵🇪 Peru ($403.24)
82. 🇲🇦 Morocco ($396.59)
83. 🇩🇴 Dominican Republic ($396.45)
84. 🇹🇷 Turkey ($394.89)
85. 🇧🇴 Bolivia ($386.58)
86. 🇦🇿 Azerbaijan ($374.87)
87. 🇰🇪 Kenya ($357.59)
88. 🇨🇴 Colombia ($347.79)
89. 🇺🇿 Uzbekistan ($340.50)
90. 🇵🇭 Philippines ($328.20)
91. 🇮🇩 Indonesia ($327.43)
92. 🇱🇾 Libya ($305.70)
93. 🇹🇳 Tunisia ($298.96)
94. 🇮🇷 Iran ($272.23)
95. 🇩🇿 Algeria ($269.68)
96. 🇧🇩 Bangladesh ($250.48)
97. 🇳🇵 Nepal ($206.56)
98. 🇱🇰 Sri Lanka ($189.07)
99. 🇻🇪 Venezuela ($186.80)
100. 🇵🇰 Pakistan ($157.59)
101. 🇪🇬 Egypt ($145.74)

08/02/2024
𝗕𝗮𝗰𝗵𝗲𝗹𝗼𝗿 𝗼𝗳 𝗔𝗿𝘁𝘀 -2020/2021கலைமாணிபட்டப்படிப்பு 2020/2021யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத...
17/01/2024

𝗕𝗮𝗰𝗵𝗲𝗹𝗼𝗿 𝗼𝗳 𝗔𝗿𝘁𝘀 -2020/2021
கலைமாணிபட்டப்படிப்பு 2020/2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய
பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு - https://www.codl.jfn.ac.lk/index.php/calling-for-application-b-arts-batch-iii/

காணாமல் போகப் போகும்யாழ்ப்பாண கிணறுகள்! Thirunavukkarasu Thayanthan எழுதி இருக்கும்  முழு பதிவையும் படியுங்கள் . இதை கேட...
13/01/2024

காணாமல் போகப் போகும்
யாழ்ப்பாண கிணறுகள்!

Thirunavukkarasu Thayanthan எழுதி இருக்கும் முழு பதிவையும் படியுங்கள் .

இதை கேட்கும் போது வடிவேலுவின் கிணற்றை காணோம் என்கிற திரைப்பட காமடி ஞாபகத்துக்கு வத்தாலும் வெகுவிரைவில் இன்னும் சில வருடங்களில் இந்த செய்தி அதிகமாக உணரப்படும்!
அதுவே யதார்த்தமான உண்மையும் கூட!

ஆம்,
கிணறுகள் காணமல் போகும்!
இன்னும் ஏராளமான பகுதிக்கும் உவர்நீர் உட்புகும்!
காலப்போக்கில் முற்றாக விவசாயம் செய்யமுடியாத அளவுக்கு கூட எமது பிரதேச நீர் உவராகலாம்!

கட்டுப்பாடு அற்ற வகையில், நீலத்தடி நீர்க் கட்டுமானங்ளை சரியாக புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக அடிக்கப்படும் ஆழ்துளை கிணறுகளும் குளாய்க் கிணறுகளும் இந்த நிலையை ஏற்படுத்தி இவ்வளவு காலமும் சாதாரண கிணறுகள் மூலம் அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஏராளமான சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வியலை எதிர்காலத்தில் இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தப் போகிறது.
ஏற்கனவே வடக்கின் சில பகுதிகளில் குழாய்க்கிணறுகளின் தாக்கத்தால் வற்றிப்போன கிணறுகள் தொடர்பான செய்திகள் பதிவாகிஉள்ளன!

இந்தியாவின் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் உட்பட உலகின் பலவேறு நாடுகளில் இந்த அனுபவத்தில் பல உதாரணங்கள் உள்ளன! அது நாளை நமது பிரதேசங்களிலும் நடக்கப் போகிறது.

இதை புரிந்துகொள்வதற்கு, யாழ்பாண நிலத்தடி நீர்க்கட்டுமானத்தை எளிய முறையில் விளங்கப்படுத்த முயல்கிறேன். இணைபில் உள்ள படங்களையும் பார்த்து புரிந்து கொள்ள முயலுங்கள்!
யாழ்ப்பாண குடாநாடு கிட்டத்தட்ட நான்கு பக்கமும்( மூன்று பெருங்கடல்கள் உட்பட) உவர்நீரால் சூழப்பட்ட ஒரு குடாநாடு.
Geology அடிப்படையில் சுண்ணாம்புக் கற்பறைகளின் மீதே யாழ்க்குடாநாடு அமைந்துள்ளது. சிலபகுதிகளில் இந்த பாறைகள் நிலமட்டத்துக்கு அண்மையாகவும் சில இடங்களில் ஆழமாகவும் இந்த பாறைகளே உள்ளன.
சீமெந்து தயாரிப்புக்கான மூலப்பொருளான சுண்ணாம்பு பாறைகள் எனும் இந்த வளத்தை குறிவைத்து தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த சுண்ணாம்புக் கற்பாறைகளிடையே ஏனாளமான வெடிப்புகள் உள்ளன. அத்துடன் அவை மெதுவாக கரையும் தன்மை கொண்டவை. அதனால் தான் சுடுதண்ணீர் கொதிக்க வைத்த கேத்தலின் அடியில் கல்சியம் படிவுகளை நீங்கள் காண்பதுண்டு.
இந்த பண்புளால் இந்த பாறைகளுக்குள் நிலத்தடியில் மிகப்பெரிய நிலத்தடி நீர்த்தேக்கங்கள் போன்ற இயற்கை அமைப்புகள் உண்டு.
யாழ்க்குடாநாட்டை பொறுத்தவரை அவ்வாறான மேற்பரப்பை அண்டிய 5 shallow aqufiers ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் சுண்ணாகம் aqufier மிகப்பெரியது. வழுக்கி ஆற்றின் படுக்கை அந்த aqufier க்கு நீர் ஊட்டும் உயிர்நாடியாக உள்ளது.

இன்னும் கிழே சென்றால் Deep aqufiers என்று சொல்லப்படும் சற்று ஆழமான அதே போன்ற கட்டமைப்புகள் இருக்கும். அதன் கீழை செல்லும் போது Saline water என்று சொல்லப்படக்கூடய நிறைகூடிய உவர்நீர் இருக்கும்.
நமது குடாநாடு கடலால் சூழப்பட்டிருப்தால் எப்போதும் கடல் நீர் உள்ளே புகுந்து மேற்படி எமது நீர்க் கட்டமைப்பு உவராகும் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்( காலப்போக்கில் முற்றாக உவராகி வயும் காரை நகர் அதற்கு ஒரு உதாரணம்) . ஆனால் அவ்வப்போது கிடைக்கும் மழைநீர் நிலத்தினுள் சென்று இந்த இடைவெளிகளை நிரப்புவதோடு உயர் அழுத்தத்தையும் கொடுப்பதால் இந்த கட்டமைப்பில் இருந்து மேலதிக நல்லநீர் கடலினுள் உந்தப்படும் தன்மை இப்போது வரை நடக்கிறது. அவ்வாறு இந்த aqufier இல் இருந்து நிலத்தடி நீர் கடலினில் உந்தப்படும் இடங்களாக கீரிமலை, மருதங்கேணி போன்ற இடங்கள் ஏற்கவே ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நன்னீர் கலக்குமிடம் உவர்த்தன்மை குறைவாக இருக்கும் காரணத்தாலேயே மருதங்கேணியில் உவர்நீர் சுத்திகரிப்புநிலையும் பிரேரிக்கப்பட்டது.

ஆக இந்த சுண்ணாம்புக்கற் பாறை வெடிப்புளூடு பாய்ந்தோடும் நீரைத்தான் நாம் ஊற்று என்று கண்டுபிடித்து கிணறுகளை வெட்டியுள்ளோம். நிலாவரை கிணறு போன்ற இடங்கள் இந்த பிரமாண்ட நிலத்தடி நீர்த்தேக்கத்துடன் பெரிய நேரடித் தொடர்பில் இருப்பதால் வற்றாத கிணறுகளாக அறியப்படுகின்றன.
அதேபோல தாள்வான பகுதியில் உள்ள பொக்கணை கிணறு, மாரிகாலங்களில் இந்த aqufier உள் அழுத்தம் அதிகரித்து நீரை வெளியே தள்ளுகிறது. நிற்க.

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால்
இப்போது மழைவீழ்ச்சி பற்றியும் சற்று பேசியாக வேண்டும்.
கடந்த காலங்களில் வருடத்திற்கு 120 நாட்கள் வரை யாழ்ப்பாணத்துக்கு கிடைத்து வந்த மழைவீழ்ச்சி பாதியாக 60 நாட்களாக சுருங்கிவிட்டது. ஆனால் அதே அளவு அல்லது சில வேளைகளில் அதிக மழை குறைந்த நாட்களில் கிடைக்கிறது.
நாங்கள் வீட்டு வளவு முழுவதையும் காங்கிறீட்டால் மூடியும், வாய்க்கால்கள் சீமெந்தால் கட்டப்பட்டும், பல குளங்கள் பாதி மூடப்பட்டும்( தூர்வாரப்படாமல்) இருப்பதாலும் கிடைக்கும் மழை, சில நாள் வெள்ளப்பிரச்சினைகளுடன் வெகு விரைவாக கடலை சென்று அடைந்துவிடுகிறது. ஆக நிலத்தடிக்கு முன்னர் போல நீரை மெதுவாக ஊடகடத்த இப்போது முடிவதில்லை.
இது அதிக வரண்ட நாட்களை எங்களுக்கு உருவாக்கி வருகிறது. நிற்க.

இந்த களச்சூழல் இவ்வாறு இருக்க,
அண்மைக்காலங்களில் கட்டுப்பாடு அற்ற நிலையில் ஏராளமான குழாய்க்கிணறுகள் கண்மூடித்தனமாக அடிக்கப்படுகின்றன. இந்தப்பதிவு குழாய்க்கிணறுகளுக்கு முற்றிலும் எதிரான பதிவு அல்ல. அவை சரியான முறையில், சூழலின் நீர்பாதுகாப்பை உறுதிப்படுத்தி அடிக்கப்பட வேண்டும் என்பதையே பேசவிளைகிறது.
இலங்கையில் குழாய்கிணறுகளை அடிப்பதற்கு சட்டபூர்வ அனுமதி பெறப்படவேண்டும்.
பிரதேச செயலகங்கள், இலங்கை நீர்வள சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளட்ட அரச திணைக்களங்ஙள் தன் பங்காளிகள்.

1.அடிக்கவேண்டிய குழாய்க்கிணறுகளின் ஆழம், அந்த பிரதேசத்தில் உள்ள நீர்ப்பாவனை, ஏனைய கிணறுகளின் ஆழம், எடுக்கவேண்டிய நீரின் அளவு, எடுக்க கூடிய நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு தரவுளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும். ஊழலுக்கு விலைபோகாமல் மேற்படி அரச திணைக்களங்கள் அந்த பணியை சரியாக செய்ய வேண்டும்.

2. குழக்கிணறு அடிக்கும் இயந்திரம் கொண்டுவரும் நிறுவனங்கள் அதற்கான அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்கவேண்டும். அவர்களுக்கு number plate வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த பணியை உணர்ந்து சரிவரச்செய்யவேண்டும்.

3. பாவனையாளர்கள் பக்கத்துவீட்டுக்காரனுக்கு என்ன நடந்நாலும் பறவாயில்லை என்ற மனநிலையில் கொடுக்கப்பட்ட அனுமதியை தாண்டு அதிக ஆழமாக குழைய்க்கிணறு அடித்தாலோ, அதிக நீரை வியாபாரத்தேவை உள்ளிட்ட விடையங்களுக்காக உறிஞ்ச ஆரம்பித்தாலோ சூழலில் உள்ள கிணறுகள் வற்றும்.

4. அரச திணைக்களங்கள் மேற்படி அனுமதிப் பத்திரங்கள் பெறாமல் தோண்டப்பட்ட கிணறுகள் மற்றும் அனுமதிக்கப்பபட்ட ஆழத்தை விட அதிகமான ஆழத்துக்கு தோண்டப்பட்ட கிணறுகளை மூட ஊழல் இல்லாமல் நியாயமாக முன்வரவேண்டும்.

5. பொதுமக்கள் இது தொபர்பான விழிப்பணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் பிரதேசத்தில் அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளின் அனுமதியை விசாரிக்கவும். குழாய்க்கிணறு தோண்டும் நிறுவனத்தின் இயந்திர அனுமதியை சரிபார்க்கவும். அத்துமீறி அனுமதி இன்றி அடிக்கப்படும் குழாய்க்கிணறு மற்றும் அனுமதிக்கு அதிகமாக வியாபாரத்தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் குழாய்க்கிணறுகளை பகிரங்கப்படுத்தவும்.
911 என்ற தொலைபேசி இலக்கத்திற்டு முறையிட்டால், பொலீஸ் திணைக்களம், பிரதேச செயலகம், கிராமசேகவர், நீர்வள சபை ஆகியவற்றுக்கு மேற்படி முறையீடு உடனடியாக அனுப்பப்படும். பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கும்.

இவற்றை நீங்கள் செய்யாத பட்சத்தில் யாழ்க்குடாநாட்டின் கிணறுகள் வற்றி, காலப்போக்கில் மொத்தக்குடாநாடும் உவர் நீராவதை இன்னுல் சிலகாலத்தில் பார்ப்போம்.

மேற்பரப்பில் தான் நீங்கள் எல்லைகளை போடலாம். பணக்காரன், ஏழை, இந்த தொழில் செய்பவன், படித்தவன் படிக்காதவன், இந்த சாதிக்காரன், அந்த மதத்தவன், இந்த கிராமம், அந்த பிரதேசம், அந்த மாவட்டம்
என்ற வாதங்கள் எல்லாம் மேற்பரப்பில் போடப்பட்ட வெறும் வேலிகளும் மதில்களும் மட்டுமே!
நிலமும், நீரும், வானும் மண்ணும் காற்றும் மழையும் என்றுமே எல்லைகளை பார்ப்பதில்லை🙏

வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் எங்களை போன்ற ஒரு மாவட்டத்தில் 1990 முன்னர் வரை கிணறுகளில் நீரை எடுத்து பருகி வந்ந மக்கள் குழாய்க்கிணறுகளை 1990 களின் பின்னர் கட்டுப்பாடின்றி அடிக்க ஆரம்பித்து இப்போது 250 அடி ஆழம் வரை மீண்டும் மீண்டும் குழாய் கிணறுகளை ஆழப்படுத்தி நீரை தேடுகின்றனர் என்பதை அண்மையில் Young water professionals - north( வடக்கின் நீர்த்துறைமையாளர் வட்டம்) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்த இணையவழிகலந்துரையாடல் ஒன்றில் கலந்து சிறப்பித்த பேராசிரியர் கவலையுடன் விளங்கப்படுத்தினார். இத்த நிலை நாளை எங்கள் பிரதேசத்திற்கும் வருவதை தடுக்க இன்றே விழித்துக்கொள்வோமாக.

நீரின்றி அமையாது உலகு.

திருநாவுக்கரசு தயந்தன்
2024.01.12

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟎𝟑/𝟐𝟎𝟐𝟒 𝟐𝟎𝟐𝟒 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் ப...
10/01/2024

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟎𝟑/𝟐𝟎𝟐𝟒
𝟐𝟎𝟐𝟒 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் விதவைகள்/ தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல்

இணைப்பு:https://www.pubad.gov.lk/web/images/circulars/2024/T/1704894231-03-2024-t.pdf

வாழ்த்துகள் ஈழ நாயகி
17/12/2023

வாழ்த்துகள் ஈழ நாயகி

க. பொ. த. (உ/த) வினாத்தாள்களுக்கு பதிலளிப்பதில் ஏற்படும் தவறுகளை மாணவர்கள் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம்.உயிரியல் விஞ்ஞானம...
13/12/2023

க. பொ. த. (உ/த) வினாத்தாள்களுக்கு பதிலளிப்பதில் ஏற்படும் தவறுகளை மாணவர்கள் எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம்.

உயிரியல் விஞ்ஞானம்/கணிதம்/தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகம் Centre for Science Education, Faculty of Science உ/த பாடங்களுக்கான பிரதம பரீட்சகர்களின் உதவியுடன் நடத்தும் Zoom வழி செயலமர்வு.

மொழிமூலம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்.

Meeting ID & Link: 466 134 3917
https://learn.zoom.us/j/4661343917?omn=91322584005

Time: 2.00 pm to 4.00 pm

12/12/2023
பரீட்சைத்திணைக்களம் க.பொ.த(உ/த)பரீட்சை -2023 இற்கான அனுமதி அட்டைகளை தரவிறக்கவும் திருத்தம் செய்யவும் டிசம்பர் 19 திகதிவர...
12/12/2023

பரீட்சைத்திணைக்களம் க.பொ.த(உ/த)பரீட்சை -2023 இற்கான அனுமதி அட்டைகளை தரவிறக்கவும் திருத்தம் செய்யவும் டிசம்பர் 19 திகதிவரை சந்தர்ப்பமளித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபரூடாக https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ இந்த இணைப்பில் சென்றும்

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/இந்த இணைப்பினூடாகவும் திருத்தங்களை சமர்ப்பிக்கலாம்

2023/39 சுற்றறிக்கைக்கு அமைவாக 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியும்,தவணை அட்டவணையும். அரச பொது விடுமுறை நாட்...
11/12/2023

2023/39 சுற்றறிக்கைக்கு அமைவாக
2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியும்,தவணை அட்டவணையும். அரச பொது விடுமுறை நாட்களும்.

தமிழ்,சிங்களப் பாடசாலைக்கானது.

11.12.2023 திங்கட் கிழமை பகல் 2.00 மணிஎதிர்வரும் 18.12.2023 க்கும் 20.12.2023 க்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு மாகாணத்த...
11/12/2023

11.12.2023 திங்கட் கிழமை பகல் 2.00 மணி

எதிர்வரும் 18.12.2023 க்கும் 20.12.2023 க்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மிக அண்மையாக தோன்றும் வாய்ப்புள்ளதனை மாதிரிகள் காட்டுகின்றன. எனினும் இதன் உறுதித்தன்மையை எதிர்வரும் 15.12.2023 அன்றே தீர்மானிக்க முடியும்.

அவ்வாறு ஒரு தாழமுக்கம் உருவாகினால் வடக்கு மாகாணம் முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. (மிகக் கனமழை கிடைத்தால் யாழ். நகரம் உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 14.12.2023 வரை தொடரும்.

மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.

-நாகமுத்து பிரதீபராஜா-

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரைமூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் அதிர்ஸ்ட மூங்கிலத்...
10/12/2023

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை

மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது.

அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத்தொடங்கி உள்ளார்கள். இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்.

இயற்கை எந்த உயிரியையுமே தேவையற்றுப் படைப்பதில்லை. ஒவ்வொரு உயிரியும் முக்கியத்துவம் மிக்கவை. அவை பரிணாமிக்கும் சூழலின் சமநிலையில் இன்றியமையாத பங்களிப்பை நல்கி வருகின்றன. ஆனால், அவை இயற்கையாகத் தோன்றிய பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போது அவற்றுள் சில இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகிவிடுகின்றன.

புதிய சூழலின் சமநிலையைக் குழப்பிச் சரிசெய்யமுடியாத அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகின் உயிர்ப்பல்வகைமையை அழித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக இவ்வந்நிய ஊடுருவல் இனங்கள் உள்ளன. அத்தகைய ஒரு அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமே ஆகாயத்தாமரை ஆகும்.

ஆகாயத் தாமரை தென் அமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட ஒரு அசுர நீர்க்களை. நீரே தெரியாத அளவுக்கு விரைந்து மூடிவளரும் ஆற்றல் பெற்றவை. இதனால், நீர்ச்சூழற் தொகுதியில் ஏனைய உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிப்பதோடு, நுளம்புகளின் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. குளங்களில் இருந்து தப்பிச்செல்லும் இக்களை வயல் நிலங்களில் பல்கிப்பெருகி நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இலங்கை அரசாங்கம் ஆகாயத் தாமரையை அந்நிய ஊடுருவல் ஆக்கிரமிப்பு இனமாகக் கருதி அழிக்கத் தலைப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்திலிருந்து இதனை முற்றாக அகற்றுவதற்கு மிகப் பெருந்தொகைப் பணமும் பெருங்காலமும் எடுத்தது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

இன்னும் ஏராளமான குளங்கள் ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்குள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் அதிர்ஸ்ட தேவதை என்ற அந்தஸ்தை வழங்குவது அதற்கு அசுரப் பலத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும்.

வீடுகளிலிருந்து தவறுதலாக வெளியேறும் இதன் சிறு அரும்பே அதன் பல்கிப்பெருகும் ஆற்றலால் சூழலை அதன் ஆக்கிரமிப்பின்கீழ் விரைந்து கொண்டுவந்துவிடும். ஏற்கனவே பார்த்தீனியம், சீமைக்கருவேலம், இப்பில்இப்பில் போன்ற அந்நியன்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம் நிலம் ஆகாயத் தாமரையினாலும் வலிகளைச் சுமக்க நேரிடும்.

எமது விவசாயத் திணைக்களம் ஆகாயத் தாமரை தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்த முன்வரவேண்டும்.

பொ. ஐங்கரநேசன்

🎓 Master of Education, University of Jaffna - 2023/24 அணி XV விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. முடிவுத்திகதி  2023-Dec-22
03/12/2023

🎓 Master of Education, University of Jaffna - 2023/24 அணி XV விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. முடிவுத்திகதி 2023-Dec-22

26/06/2022

# ஒரு_கசப்பான_உண்மை

இயற்கை அனர்த்த இடரின் போதும், கொடிய கொரோனா இடரின் போதும் மனிதநேய பணியை ஆற்றி அதனைப் பதிவேற்றி பல பேரினது வாழ்த்துக்களைப் பெற்ற இளைஞர்களே இன்று பெற்றோலை கறுப்புச் சந்தையில் பல மடங்கு விலையில் விற்று வருகின்றனர் ☹

22/06/2022

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்ட செயலகங்களும் 33 பிரதேச செயலகங்களும் 867 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன. இவற்றில்,
👉401 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 15 பிரதேச செயலகங்கள் யாழ்மாவட்டத்திலும்,
👉94 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 4 பிரதேச செயலகங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும்,
👉150 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 5 பிரதேச செயலகங்கள் மன்னார் மாவட்டத்திலும்,
👉127 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 5 பிரதேச செயலகங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலும்,
👉95 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 4 பிரதேச செயலகங்கள் வவுனியா மாவட்டத்திலும் உள்ளன. மேலதிகமாக வடக்கு மாகாண சபையும் உள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களின் கீழும் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பும் செயற்படுகிறது.

இவ்வாறான அரச நிர்வாக கட்டமைப்புகள் இருந்தும் வடக்கு மாகாணத்தில் ஒரு சீரான எரிபொருள் விநியோக முறைமையை இன்று வரை நடைமுறைப்படுத்த இயலவில்லை. குறைந்த பட்சம் அவ்வாறான காத்திரமான முயற்சிகள் கூட எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்று பாரிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒரு சரியான பங்கீட்டு முறைமையை நடைமுறைப்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் எந்தெந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்ற விபரங்களை முதலிலேயே வெளியிட்டு முதல் நாளிலிருந்தே வரிசைகளில் காத்திருக்க வைத்து பல கிலோமீட்டர் நீள வரிசைகளை உருவாக்கி அந்த சாதனைகள் செய்தியாகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் குடும்ப பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்தி விநியோகத்தை ஒழுங்கமைக்காமல் வேடிக்கை பார்க்கும் நிர்வாக கட்டமைப்புகள் எதற்கு இருக்கின்றன?

தற்போது எரிபொருள் விநியோக நெருக்கடிக்கே இந்நிலைமை என்றால், இனிவரும் காலங்களில் ஏற்படும் உணவு பொருட்களுக்கான நெருக்கடி நேரத்தில் எவ்வாறு நிலைமை கையாளப்படும் என்பது கேள்விக்குரியதே. உயர் பதவிகளில் உள்ளவர்கள் / திணைக்கள தலைவர்களுக்கு அரச சுற்றறிக்கைகளின் படி அரச வாகனம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படுகின்ற வாகனத்திற்கான எரிபொருள், எரிபொருள் விநியோக கட்டளை படிவத்தின் ஊடாக வரிசைகளில் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் குறித்த எரிபொருள் விநியோக நிலையங்களில் வழங்கப்படுகிறது. இவ்வாறாக அரச வாகன சவாரியில் காலத்தை ஓட்டும் அதிகாரிகள் மற்றவர்களின் / மக்களின் நலனுக்காக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலான அதிகாரிகளுக்கே கூட அது தெரியாது. இன்றுவரை நெருக்கடி நிலையை முகாமை செய்வதற்கான எந்த முன்மொழிவுகளும் / செயற்றிட்டங்களும் வடமாகாணத்தில் உள்ள எந்தவொரு செயலகத்தினாலும் / திணைக்களத்தினாலும் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கோ பாராளுமன்றிற்கோ சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல் இல்லை. தற்றுணிவுடன் செயற்படவேண்டிய இடங்களில் எல்லாம் நழுவல் போக்கில் மற்றவர்களை கைகாட்டி விலகிக்கொள்ளும் அதிகாரிகளே தற்போது அதிகம். இந்த விசித்திரத்தில் அரசின் வீட்டுத்தோட்ட செய்கைக்கான 15/2022ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் 16/2022ஆம் இலக்க சுற்றறிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை கூட்டம் போட்டு ஆராயும் மேதாவி அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உங்களுக்கு நிர்வாக திறமை பற்றாக்குறை என்றால் 2009இற்கு முன்னர் ஒவ்வொரு நெருக்கடிகளும் தமிழீழ நிழல் அரச நிர்வாகத்தின் கீழ் எப்படி முகாமை செய்யப்பட்டது என்பதை மற்றவர்களிடம் கேட்டோ / வாசித்தோ அறிந்தாவது ஏதாவது பயனுள்ள திட்டங்களை முன்னெடுக்க முயலலாம். மக்கள் மத்தியில் இருந்து கூட நெருக்கடிக்கு பொருத்தமான தீர்வுகளை எழுத்து மூலமாகவோ / வேறு பொருத்தமான வகையிலோ பெற்று, அவற்றை பரிசீலித்து பொருத்தமானவற்றை தொகுத்து செயற்றிட்டங்களாக்கி அமைச்சரவைக்கு முன்வைக்கலாம். UN நிறுவனங்களின் பண உதவியில் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் (UN Projects) எவ்வாறு உள்நுழைந்து எவ்வாறு எல்லாம் தங்கள் சுய பொருளாதாரத்தை வளமாக்கலாம் என சிந்தித்து அதற்கான வழிகளை தேடிக்கொண்டு, அரச திணைக்கள கதிரைகளை சூடாக்கி வீற்றிருந்து அலங்கரிப்பவர்களை விட பல திறமையான / சிந்தனை, செயல் ஆற்றல் மிக்கவர்கள் வெளியில் இருக்கிறார்கள். அவ்வாறான மனித வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். எல்லா மட்டங்களிலும் இருந்து கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். இப்போது உள்ள பெரும்பாலான உயர் மட்ட அதிகாரிகளின் குறைபாடு, மற்றவர்களின் கருத்துக்களை செவிமடுப்பதில்லை. செவிமடுக்கவும் விரும்புவதில்லை.

உண்மையில் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டியது சனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டும் அல்ல. இவ்வாறான "வைக்கற்பட்டடை நாய்" போன்ற அரச அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டியவர்களே.
@𝔄𝔪𝔞𝔯𝔫𝔞𝔱𝔥.𝔎.𝔎
Copied

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Northern Province - வட மாகாணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share