Cinema World

Cinema World சினிமா தகவல்களின் சுவர்

எங்கட சமூகத்தில இப்படியும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்றத எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்ளவேணும்.வாழ்த்துக்கள் கஜன் தா...
02/06/2024

எங்கட சமூகத்தில இப்படியும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்றத எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்ளவேணும்.

வாழ்த்துக்கள் கஜன் தாஸ் Valvai Sulax தயவு செய்து இந்த பாதையை மாற்றிவிடாதீர்கள்.

https://youtu.be/Vyz_6ZlORf4
01/06/2024

https://youtu.be/Vyz_6ZlORf4

எமது கலாசாரத்தின் அடையாளமாக வரட்சியை தாங்கும் தூணாக கற்பகதருவாக சித்தரிக்கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத.....

பூவரசி புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் “மூக்குத்திப்பூ” திரைப்படம் எதிர்வரும் ஜூன் 7 முதல் உங...
28/05/2024

பூவரசி புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் “மூக்குத்திப்பூ” திரைப்படம் எதிர்வரும் ஜூன் 7 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் வெளிவரக்காத்திருக்கின்றது.
டிக்கெட்டுக்கள் முற்பதிவுக்கு..

0769047684
0764515794
யாழ். ராஜா - ஜூன் 7,8,9
மன்னார் சண் - ஜூன் 15
வவுனியா அமுதா - ஜூன் 16
தொடர்ந்து லண்டன், அவுஸ்ரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளிலும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இலங்கைத் தாய் வட கிழக்குத் தமிழருக்கெனத் தந்த அரும் பெரும் சொத்து பனை. பயிரிடப்படாது இயற்கையிலே தானாகவே வளரும் பனைகள் இன...
20/05/2024

இலங்கைத் தாய் வட கிழக்குத் தமிழருக்கெனத் தந்த அரும் பெரும் சொத்து பனை. பயிரிடப்படாது இயற்கையிலே தானாகவே வளரும் பனைகள் இன்று கவனிப்பின்றி அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளன.

இந் நிலை தொடர்ந்தால் நாமும் எம் எதிர்கால சந்ததியினரும்,
விலை மதிப்பில்லாத பெரும் செல்வத்தை இழந்திடுவோம்!
நீண்டகாலம் வாழ ஆரோக்கியம் தரும் உணவைத் இழந்திடுவோம்!
இயற்கைக்குத் தீங்கில்லா பாவனைப் பொருட்களைக் இழந்திடுவோம்!
பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இழந்திடுவோம்!
பொருளாதாரத்தில் நாம் பலம் பெறுவதை இழந்திடுவோம்!
பூமியைக் காக்கும் இயற்கைத் தெய்வத்தை இழந்திடுவோம்!
எம் இனத்தின் அடையாளங்களில் ஒன்றை இழந்திடுவோம்!

மக்களே! அழிவடைந்துவரும் பனையைக்காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், இப் பாரம்பாரியத்தினை அடுத்த தலைமுறையினாரிடமும் கடத்தவும் எதிர்வரும் 26.05.2024 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை யாழ்ப்பாணம், பொன்னாலை, திருவடி நிலை எனும் பிரதேசத்தில் “பனை இருந்தால் பஞ்சம் இல்லை” எனும் தொனிப் பொருளிலான #பனைத்_திருவிழாவினை நடாத்தவுள்ளோம்.

எனவே அனைவரும் குடும்பமாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு எமது Whatsapp குழுவில் இணைய லிங்கை அழுத்துங்கள்.
https://chat.whatsapp.com/BNZzGM4261201lHNqWT0mR

ஒரு கூட்டுக் குடும்பமாக விவசாயத்தின் மீது இருந்த அதீத விருப்பும் ஈடுபாடும் காரணமாக மக்களுக்கு இயற்கைமீது விருப்பம் ஏற்பட...
19/05/2024

ஒரு கூட்டுக் குடும்பமாக விவசாயத்தின் மீது இருந்த அதீத விருப்பும் ஈடுபாடும் காரணமாக மக்களுக்கு இயற்கைமீது விருப்பம் ஏற்படுத்த வேண்டும்மக்கள் தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும் இளைஞர்கள் பசுமையை நேசிக்க வேண்டும்
பசுமையான நாட்டை உருவாக்க வேண்டும்
மக்கள் எவருமே வறுமையினால் பாதிக்கப்படக் கூடாது என்கின்ற பல்வேறு நோக்கங்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பண்ணை ஒன்றை அமைத்துள்ளார்கள்.

வழமையாக எங்களுடைய பிரதேசங்களில் வளரக்கூடிய தாவரங்கள் முதன்மைப் படுத்தி விற்பனையில் ஈடுபடும் பண்ணைகளுக்கு அப்பால், இப்பிரதேசங்களில் வளர்த்தேடுத்துப் பயன்பெற முடியாது என்கின்ற தாவரங்களையும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தென்னிலங்கையில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் கொண்டுவந்து வளர்த்தெடுத்து காட்டியிருப்பது இப்பண்ணையின் குறிப்படத்தக்க சாதனையாகும்.

ஒரு கூட்டுக் குடும்பமாக விவசாயத்தின் மீது இருந்த அதீத விருப்பும் ஈடுபாடும் காரணமாக மக்களுக்கு இயற்கைமீது விர...

மௌனித்த காற்றே !!!எம்மக்களில் வலி சொல்லும் ஒரு பாடல்..
18/05/2024

மௌனித்த காற்றே !!!

எம்மக்களில் வலி சொல்லும் ஒரு பாடல்..

VM Creative Present மௌனித்த காற்றே !!!Releasing on TRM Picture Youtube இயக்கம் - பிரகாஷ் ராஜா🎵இசை - விக்கி மகேசன்🎥ஒளிப்பதிவு - அருள் செல்வம் ஒளித்.....

மலையகம்.... அது ஒவ்பொரு மனிதர்க்கும் தனித்தனி கதைகளை நிறைத்து வைத்து வெடித்துக்கொண்டிருக்கும் எரி மலை....படைப்பாளிகளுக்க...
28/04/2024

மலையகம்....
அது ஒவ்பொரு மனிதர்க்கும் தனித்தனி கதைகளை நிறைத்து வைத்து வெடித்துக்கொண்டிருக்கும் எரி மலை....

படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்
Short Film Link 1st Comment

ராம் இரவு நேரப் பணிக்காக தனது அலுவலகத்திலிருக்கிறான். அந்த சூழல் அமைதியற்றதாக இருக்கிறது. வழமைக்கு மாறாகவும் முரணாகவும் ...
18/04/2024

ராம் இரவு நேரப் பணிக்காக தனது அலுவலகத்திலிருக்கிறான். அந்த சூழல் அமைதியற்றதாக இருக்கிறது. வழமைக்கு மாறாகவும் முரணாகவும் இருக்கிறது. நடு இரவு தன்னிலை இழந்து தூக்கத்துக்குப் போகின்றான். சில கணங்களில் உடலசைவற்ற விழிப்பு நிலைக்குக் தள்ளப்படுகின்றான். கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள் அவனை சுற்றி நடக்க ஆரம்பிக்கிறது. அம் முடக்கத்திலிருந்து மீண்டெழுவதற்குத் அவன் தன் மனதுடன் போராடத் தொடங்குகின்றான்.

Link ==> https://www.youtube.com/watch?v=e1X86o9MPtI

Lead Cast: R.KANTHARUBAN,
Supporting Cast : P.NIEL REXON, S.R. THUSIKARAN
Cinematography : SOBANASIVAN.V
Production Designer : PUVANESWARAN PIRASHANTH
Editor : DHILIP LOGANATHAN
Sound Designer : PIRANNA
Publicity Design : S.MORIS
Executive Producer S.R. THUSIKARAN
Producer AINHARAN KATHIRGAMANATHAN
Writer & Director PUVANESWARAN PIRASHANTH
2022. ALL RIGHT RESERVED. TAMIL CREATORS.

Recognition :
4th Screen Film Awards 2022 - OFFICIAL SELECTION
Student World Impact Film Festival 2023 - SEMI - FINALIST

பிரசாந்தின் இயக்கத்தில் உருவான ‘PALSY’ குறும்படம் CEYLON PICTURE YOUTUBE தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.இது ஒரு சி...
15/04/2024

பிரசாந்தின் இயக்கத்தில் உருவான ‘PALSY’ குறும்படம் CEYLON PICTURE YOUTUBE தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இது ஒரு சின்ன படம், சின்ன எதிர்ப்பார்ப்பு போதும். காத்திருங்கள்.

இன்டைக்கு 14.04.2024 மாலை 4 மணிக்கு SS ல் டக் டிக் டோஸ்
14/04/2024

இன்டைக்கு 14.04.2024 மாலை 4 மணிக்கு SS ல் டக் டிக் டோஸ்

தமிழர் என்னும் அடையாளத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் செறிவாக வாழ்ந்து வந்த முஸ்லீம் சமூகத்தவர்கள் இலங்கையில நடந்த உள்நாட்ட...
10/04/2024

தமிழர் என்னும் அடையாளத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் செறிவாக வாழ்ந்து வந்த முஸ்லீம் சமூகத்தவர்கள் இலங்கையில நடந்த உள்நாட்டு யுத்தத்தாலும், அதனால் நிகழ்ந்த குழப்பங்களினாலும், தாங்கள் பிறந்து, வளர்ந்த சொந்த நிலங்களில் இருந்து, அகதியாகி வெளியேறவேண்டிய நிலைக்கு ஆளாகினர். அவ்வாறு, வவுனியா மாவட்டம் செட்டிக்குளப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லீம் மக்களும், தங்கள் வயல்களையும் காணிகளையும், சொந்த வீடுகளையும் விட்டு வெளியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
யுத்தம் முடிவடைந்த பிறகு மீளக்குடியமார்ந்த மக்களுக்கு தொடர்ச்சியாக அரசு, பொருளாதார நெருக்கடியையும், நிம்மதியாக வாழமுடியாத அழுத்தங்களையும் கொடுத்துக்கொண்டு இருந்தது. ஒருபக்கம் நிலம் வறண்டு விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல், சரியான வேளாண்மை இல்லாமல் ஸ்தம்பிதிருக்க, அடுத்தடுத்து அச்சுறுத்தும்படி ஈஸ்ரர் குண்டு வெடிப்பும், கொரோனா அலைகளும் வந்து ஒட்டுமொத்தமாக அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியது.

இந்த நேரத்தில் தான் இந்த மண்ணையும் மக்களையும் எப்படியாவது வளப்படுத்த வேண்டும், எனும் தூரநோக்கோடு, இனம் மதம் மொழி கடந்த துடிப்பான சில இளைஞர்கள் ஒன்றிணைந்து, YOUR COMMUNITY FOUNDATION எனும் பெயரில் சமூக செயற்பட்டு அமைப்பொன்றை நிறுவி அந்த அமைப்பினூடாக நல்ல செயற்திட்டங்களை செய்து வருகிறார்கள்.
👇👇👇
https://youtu.be/F1DIRWBSeyQ

சித்திரை புதுவருடத்தை எங்கள் கலைஞர்களின் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.
09/04/2024

சித்திரை புதுவருடத்தை எங்கள் கலைஞர்களின் திரைப்படத்துடன் கொண்டாடுங்கள்.

பெருமளவு Commercial content இல்லாத இந்த படைப்பு 100,000 organic views in 10 days என்பது எங்களை பொறுத்த வரைக்கும் மிகப்பெ...
31/03/2024

பெருமளவு Commercial content இல்லாத இந்த படைப்பு 100,000 organic views in 10 days என்பது எங்களை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய பாய்ச்சல்.

இதை சாத்தியமாக்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. ஆவரேஜ் watching time சொல்லி நிற்பதெல்லாம் ஒன்றுதான்.

பார்க்கத் தொடங்கிய பெரும்பாலும் பெரும்பாலானோர் முழுவதுமாக அல்லது பெரும் பகுதியை பார்த்து முடித்துள்ளனர்.

தரமான ஒரு படைப்பை தந்த மகிழ்வும் திருப்தியும் எங்களால் ஒருங்கே உணரக்கூடியதாய் இருக்கின்றது. மீண்டும் மீண்டும் நன்றிகள்...
🥰🥰🥰🥰🥰

தமிழ் என்ற கர்வம்  தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் உண்டு. தமிழ் மொழி மாத்திரமல்ல தமிழர்களுடைய எண்ணற்ற கலைகளும் கலாச்ச...
29/03/2024

தமிழ் என்ற கர்வம் தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் உண்டு. தமிழ் மொழி மாத்திரமல்ல தமிழர்களுடைய எண்ணற்ற கலைகளும் கலாச்சாரங்களும் கண்டுபிடிப்புக்களும் மிகப்பழமையான வரலாற்றைக் கொண்டவையாக காணப்படுகிறது. இவற்றில் தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு தனித்துவமான இடமுண்டு. ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராக அவர்களைக் காத்துக்கொள்வதே தமிழர் தற்காப்புக்கலையின் பிரதான நோக்காகும். அடிமுறை, கூட்டு வரிசை, வர்மக்கலை, சிலம்பம், அடிதடி, மல்யுத்தம், களரி யுத்தம் போன்றன தமிழர்களின் தற்காப்புக் கலைகளாக காணப்படுகின்றது. இவற்றில் மிக முக்கியமானதொரு கலையே சிலம்பக்கலை.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றியது தமிழ் என்ற கர்வம் தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் உண்டு. தமிழ் ...

https://youtu.be/EYUf8I93Z2Iஈழத்தமிழரான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தில்.தம்பி...
28/03/2024

https://youtu.be/EYUf8I93Z2I
ஈழத்தமிழரான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தில்.
தம்பி வாகீசன் ரசையாவின் இணைந்த குரலில் வெளியாகியிருக்கும் பாடல்..

வாழ்த்துக்கள்... Team

Watch the official lyric video of the second single sikkikitta from the movie "Finder Project 1". Starring Charlie, Directed by Vinoth Rajendran & Music by...

வனத்தில் இரண்டு முறை வேட்டையாடிய பிரகாஷ் ராஜ் சினிமாவில் மனிதரை வேட்டையாடி விலங்கு தெறிக்க களமிறங்கியிருக்கிறார்..வாழ்த்...
04/01/2024

வனத்தில் இரண்டு முறை வேட்டையாடிய பிரகாஷ் ராஜ் சினிமாவில் மனிதரை வேட்டையாடி விலங்கு தெறிக்க களமிறங்கியிருக்கிறார்..

வாழ்த்துக்கள் Team

Trailer Link In 1st Comment 👇

Production : DanyMan Productions
Written & Directed by : Piragash Rajah
Cinematography : Darun Basgar Arul Sellvam
Editing : Selvaraj Thanusan
Music : Prashanth Krishnapillai
Art Director & Makeup : Darien Daries
Poster Design : MS Thanusan
Direction Team : Jackson Kulas, Thenusan, Arun, Kavin, Amal , Arjun, Vithusan

ரெயின் போ ராசாத்தி....நல்ல இடம் நல்ல பாட்டு AI தொழில்நுட்பத்தை கொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறாங்கள் பெடியல்...மோடி ஜீயிட க...
03/01/2024

ரெயின் போ ராசாத்தி....

நல்ல இடம் நல்ல பாட்டு AI தொழில்நுட்பத்தை கொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறாங்கள் பெடியல்...

மோடி ஜீயிட குரலும் அவர்ட ஆட்டமும்...🥳😁😁
படைப்பில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்..🥳🥳🥰🥳🥳

பாடலை பார்க்க 1s comment போங்கோ...😁😁😁

Music Pathmayan Sivananthan
Direction Reji Selvarasa
Dop & DI Rishi Selvam
Vocal Sangeeth Satharupan
Rap & Lyrics Vaaheesan Rasaiya Arul
Make-UP Julius Andrew

புங்குடுதீவே ⭐️என்ற புங்குடுதீவு மண்ணின் மகிமையை சொல்கிறது இந்த அழகிய காணொளிப்பாடல்.❤️இந்த பாடலின் உருவாக்கத்தில் உழைத்த...
01/01/2024

புங்குடுதீவே ⭐️என்ற
புங்குடுதீவு மண்ணின் மகிமையை சொல்கிறது இந்த அழகிய காணொளிப்பாடல்.❤️

இந்த பாடலின் உருவாக்கத்தில் உழைத்த அத்துணை கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் " 🫶

பாடல் முதல் கருத்தாய் ==> 👇👇👇

இப்பாடலை அனைவரும் பார்த்து பகிர்ந்து வாழ்த்துங்கள் ❤️👌⭐️🙏

வரிகள்: நித்தியதாஸ்
இசை மற்றும் சொல்லிசை: சிவி லக்ஸ்
பாடியவர்: ரமணன்
இயக்கம் மற்றும் ஓளிப்பதிவு : AK கமல்

AK Kamal Reji Selvarasa Cv Laksh Lakshana Ammu Mariathasan Ithayaraj

Get ready fans
02/06/2023

Get ready fans

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cinema World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share