Samer TV

Samer TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Samer TV, TV Network, .

கல்முனை சாஹிரா பாடசாலை மாவணவர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்வு==================================...
27/02/2024

கல்முனை சாஹிரா பாடசாலை மாவணவர்களுக்கு நுகர்வோர் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்வு
=====================================

அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (27) பாடசாலையின் அதிபர் எம்.ஐ ஜபீர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப் பட்டது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வுக்கு அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் மலீக் கலந்து கொண்டார்.

இதில் பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத், எம்.எச்.எம் றிபாஜ் ஏ.பீ.எம் றிப்சாத், ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.

27/02/2024

இம்முறை அரச இப்தார் நிகழ்வுகளை கைவிட்டு காஸா குழந்தைகள் நிதியத்திற்கு பங்களிப்பு செய்யுங்கள் - ரணில் அறிவிப்பு

அரசாங்கத்தின் நுண்கடன் செயற்றிட்டத்தினால் வாழ்வாதாரம் முன்னேற்றமடைகின்றதுபிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம்...
26/02/2024

அரசாங்கத்தின் நுண்கடன் செயற்றிட்டத்தினால் வாழ்வாதாரம் முன்னேற்றமடைகின்றது

பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்
===========================
(சர்ஜுன் லாபீர்)

நாட்டில் வறுமையைப் போக்கி நிலை பேறான அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்கு தற்போதைய அரசாங் கம் முனைப்புடன் பல்வேறுபட்ட தேசிய திட்டங்களை அமுல்படுத் திக்கொண்டு வருகின்றது. இச்செயற்றிட்டங்களை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றபோது நாட்டில் வறுமையை இல்லாமல் செய்து நிலைபேறான அபிவிருத்தியை நிலை நாட்டலாம் என்று சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்தில் சுழற்சி முறையிலான நுண் கடன் வாழ்வாதார உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று(26) சம்மாந்துறை புளோக் ஜே வெஸ்ட்-02 (Block "J" West -2)கிராம சேவை பிரிவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ ஜெஸீலா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிராம சக்தி நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டில் 5000 பின்தங்கிய கிராமங்களை தெரிவு செய்து அக்கிராமங்களை முழுமையான முறையில் வறுமையிலிருந்து விடுவித்து அபிவிருத்தியடைய வைப்பதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் முறையற்ற விதத்தில் பதிவுகளை மேற்கொண்ட சில தனியார் நிதி நிறுவனங்கள்

நுண்கடன் செயற்றிட்டங்களுடாக வாழ்வாதார கடன் உதவிகளை வழங்கி அதனூடாக பல்வேறுபட்ட சமூகவியல் பிரச்சினைகள் ஏற்பட்டு அவை மரணம் வரை கொண்டுசென்ற விடயங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றோம். இச் செயற்றிட்டங்களை முறையாக செயற்படுத்தி மக்களுக்கு சுமைகளை வழங்காமல் அரசாங்கம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனூடாக நாட்டில் வறுமையை ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்டார்.

மேலும் இக் கிராமத்தில் சுமார் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நுண்கடன் செயற்திட்டம் நான்கு கட்டங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருகின்றமையானது இக்கிராமத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்கின்றார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இந்நிகழ்வில் விடயத்துக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் பௌஸான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் நியாஸ் உட்பட சங்க நிர்வாக உறுப்பினர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்
26/02/2024

இலங்கையின் 36ஆவது பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

உலக சாதனை வீரன் பர்ஷானுக்கு மருதூர் ஒன்றுகூடி கெளரவிப்பு!=====================================சர்வதேசம் சென்று சோழன் உலக...
24/02/2024

உலக சாதனை வீரன் பர்ஷானுக்கு மருதூர் ஒன்றுகூடி கெளரவிப்பு!
=====================================

சர்வதேசம் சென்று சோழன் உலக சாதனை நிகழ்வில் புலன் உறுப்புகள் மற்றும் உடல் பாகங்களினால் சாகசம் செய்து சாதனை நிகழ்த்திய சாய்ந்தமருது பர்ஷானுக்கு சாய்ந்தமருது முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (23) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

அண்மையில் இந்தியா - தஞ்சாவூரில் சோழன் உலக சாதனை நிகழ்வு இடம்பெற்றது. இதில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பர்ஷான் கலந்து கொண்டு, பற்களால் தேங்காயினை உறித்தும், மரப் பலகையினை கைகளினால் உடைத்தும், கண் இமையினால் ஐந்து கிலோ எடையினை தூக்கியும், குளிர்பானத்தை மூக்கினால் அருந்தியும் உலக சாதனை படைத்துள்ளார்.

இதனை கெளரவிக்கும் முகமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். ஹிபத்துல் கரீம் வழிகாட்டலில் யூத் அலைன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேர்தல் சீர்திருத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையார் ஏ.எல்.எம் சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.எம்.மன்சூர், பொருளாளர் உஷாம் எம்.சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாறக், EFO அமைப்பின் தலைவர் பெறியியலாளர் ஏ.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதம இலிகிதரும் மரைக்காயருமான ஏ.சி.முஹம்மட், யூத் அலைன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் தலைவர் இஷட்.எம் ஸாஜீத், சிங்கர் சோ றூம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எச் ஜிப்ரி உள்ளிட்ட பிரமுகர்கள் ஒன்றுகூடி சாதனையாளர் பர்ஷானுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போற்றி கெளரவித்தனர்.

இதில் பர்ஷானுக்கு நல்லாசி வேண்டி பேஷ் இமாம் அல்-ஹாஜ் எம்.ஐ. ஆதம்பாவா அவர்களினால் துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

23/02/2024
03/01/2022

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்.....

15/08/2021

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொள்ளும் மின்னல் நிகழ்ச்சி

நாடாளுமன்றத்தில் ரணில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம...
23/06/2021

நாடாளுமன்றத்தில் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலையின் வித்தொன்று சரித்திரமாகிறது!===================================இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ...
22/06/2021

தென்கிழக்குப் பல்கலையின் வித்தொன்று சரித்திரமாகிறது!
===================================

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவி உயர்வு 09.08.2021 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.

இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் சமூகவியல் முதற்தொகுதி மாணவராக கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, முதல் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர்.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் இள வயதில் (43) உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு===================================அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை ப...
19/06/2021

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு
===================================

அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச்செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.

சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாள ராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும்.

நாளை முதல் பிரதி திங்கள் தோறும் உங்கள் மெட்ரோ லீடர் பத்திரிகையில்...."ஊடுருவல்" வெளிவராத சங்கதிகள் சுவாரஸ்யமான புதிய தொட...
30/05/2021

நாளை முதல் பிரதி திங்கள் தோறும் உங்கள் மெட்ரோ லீடர் பத்திரிகையில்....
"ஊடுருவல்" வெளிவராத சங்கதிகள் சுவாரஸ்யமான புதிய தொடர்
பார்க்கத் தவறாதீர்கள்...

Don't miss it...

29/05/2021

☂️எதிரொலி - 2021.05.29
☂️அதிதி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

Hack செய்யப்பட்ட சமர் ரீ.வி முகநூல் பக்கம் மீளப் பெறப்பட்டுள்ளன.தொழில்நுட்ப உதவி வழங்கிய எனது சகோதரர் சட்டத்தரணி ஷஃபி எச...
28/05/2021

Hack செய்யப்பட்ட சமர் ரீ.வி முகநூல் பக்கம் மீளப் பெறப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப உதவி வழங்கிய எனது சகோதரர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில்

நன்றிகள்

https://ceynews.lk/read.php?post=23
25/05/2021

https://ceynews.lk/read.php?post=23

CentralTV.lk | 24X7 Leading Tri Lingual News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema

https://ceynews.lk/read.php?post=17
24/05/2021

https://ceynews.lk/read.php?post=17

CentralTV.lk | 24X7 Leading Tri Lingual News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று (17) உயிரிழந்தார்.!! அ திர்ச்சியில் ...
17/04/2021

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று (17) உயிரிழந்தார்.!!

அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு மூவர் சிபாரிசு(நூருள் ஹுதா உமர்)தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உப வ...
26/03/2021

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு மூவர் சிபாரிசு

(நூருள் ஹுதா உமர்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உப வேந்தர் பதவிக்கு மூவரின் பெயரியனை பல்கலைக்கழக பேரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று (26) வெள்ளிக்கிழமை சிபாரிசு செய்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மற்றும் கலை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகிய மூவருமே உப வேந்தர் பதவிக்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உப வேந்தர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இப்பல்கலைக்கழத்தின் முன்னாள் உப வேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களின் ஐந்து பேரை பல்கலைக்கழக பேரவைக்கு சிபாரிசு சொய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு இன்று கூடி இப்பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரை சிபாரிசு செய்தது.

இதிலிருந்து மூவரை தெரிவுசெய்வதற்காக இன்று மாலை பல்கலைக்கழக பேரவை கூடியது. இதன்போது மேற்குறிப்பிட்ட மூவரும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது

 #இறைவனின்_படைப்பில்_கனடா_செந்தில்  #குமரன்_போன்றவர்களின்_எண்ணிக்கை  #அதிகரிக்காதா?கனடாவை சேர்ந்த செந்தில் குமரனின் அளப்...
26/03/2021

#இறைவனின்_படைப்பில்_கனடா_செந்தில் #குமரன்_போன்றவர்களின்_எண்ணிக்கை #அதிகரிக்காதா?

கனடாவை சேர்ந்த செந்தில் குமரனின் அளப்பெரிய சேவையானது, வாழ்வாதாரங்களையும் இழந்து இருதய நோயினால் உயிருக்கு போராடும் எம்மக்களை, இருதய சிகிச்சை செய்வதன் மூலம் உயிர்காக்கும் ஒரு மா மனிதனாக திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை.
இதனை Akathiyan Tholkapiyan என்ற ஒரு முகப்புத்தக கவிஞர் மேற்கண்டவாறு எழுதி அவரது மகத்தான சேவையினை செய்வதற்கு ஆர்வமூட்டச்செய்கிறார்.

விரும்பியவர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
இன்னும் பல உயிர்களை காக்க விரும்பியவர்கள் கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்
https://www.nivaranam.com/

"இவ்வாறான ஆத்மார்த்த விடயங்களுக்கு லைக்குகளோ பின்னூட்டங்களோ இட்டு ஊக்கமளிப்போர் தொகை குதிரைக் கொம்பாக இருப்பது கவலைக்குரிய ஒரு வழமையாக இருபினும் , இச்செய்தி மனித நேயம் சார்ந்ததாக இருப்பதனால் அவற்றையும் கடந்து மக்கள் கவனத்திற்கு எடுத்து வரப்படுகின்றது என்பதனை முதலில் இங்கு தெரிவித்து விடலாம்.
மின்னலே , நிவாரணம் புகழ்
மனிதநேயச் சிகரம்
திரு . செந்தில்குமரன்.

எனக்குத் தெரிய , இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக பொதுப் பணிகளில் அதுவும் " உயிருக்காகப் போராடும் பொருளாத வசதி கிஞ்சித்தும் அற்ற எமது தாயக மக்களின் மறு பிறவி தருவதற்கான மனித நேயப்பணிகளில் " தனது குடும்ப வாழ்வையும் கடந்து தன்னை ஆழ ஆட்படுத்தி பூமிப் பரப்பெங்கனும் ஓடோடி தனது பல் கலை வித்துவங்களின் மூலம் அயராது உழைத்து பல உயிர்களைக் காத்து புது வாழ்வு தருவித்து வரும் "வானைப் போல்" விசாலித்த மனித நேய இதயம் படைத்த எனது பெரு மதிப்பிற்குரிய திரு . செந்தில் குமரன் அவர்களுக்கு மனித நேய வாஞ்சை கொண்ட ஈழத்தமிழினத்தின் சார்பாக தலை சாய்த்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்ம்புகிறேன்.

மேலும் , ஒரு பொது மக்கள் செயற் பட்டாளர் என்பவர் தனி நபரோ அன்றி நிறுவனங்களோ அவைதம் நம்பகத் தன்மையை உளத் தூய்மையுடன் பேணுதல் ஒன்றே அந்த செயற்பாட்டுத் தளத்தின் ஆணிவேராக ஆன்மாவாக நின்று மனிதத்தை மலர்விக்கும் பெரு விருட்சமாக செழித்தோங்கி பயன் தரும் வல்லமையினைப் பெற வல்லது என்பது அறிவு.

அந்த வகையில் , திரு . செந்தில் குமரன் அவர்கள் மேற் கொள்ளும் உயிர் காப்பு செயற்பாடுகள் தொடர்பான , நிதி வழங்குவோர் தொட்டு , அவரது
மருத்துவர் குழாம் , நிதி பெறுதல் தொடர்பாக தொண்டர்களாக சேர்ந்தியங்கும் பாடகர் மற்றும் இசைக் கலைஞர்கள் , நிதி பெறுதலுக்காக தொழில் நுட்ப மற்றும் இன்ன பிற துறை சார் வல்லுனர்களின் ஒத்துழைப்பு வரை , அனைத்து விடயங்களும் , பங்களிப்புச் செய்தோர் பெயர்கள் தொலை பேசி எண்கள் மற்றும் வரவு செலவு அடங்கலான அத்தனை தரவுகளும் மிகத் தெளிவாகவும் நுணுக்கமாகவும் வெளிப்டையாகவும் பட்டியலிடப்பட்டு மக்கள் பார்வைக்காக பொதுத் தளங்களில் பதிவேற்றி தனது அதி உச்ச உளத்தூய்மையை ஏனையோருக்கும் ஒரு முன்னுதாரணமாக வெளிப்படுத்தும் தன்மைக்கு பங்களிப்பாளரும் பயன் பெறுவோரும் தலை வணங்குவர் என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம்.
இன்றைய இக் covid19 தொற்று முடக்க நிலையிலும் கூட உயிர் காப்பு் பணிகளை நிறுத்தி வைத்து ஒதுங்கி விடாது வழமையான தனது செயற்பாடுகளை சற்றும் பிசகாது மெய் நிகர் ( zoom ) வழியான உள்ளரங்க கலை நிகழ்ச்சிகள் மூலம் தளர்வின்றி பல்துறையினரையும் ஒன்று திரட்டி உழைத்து பல நோயாளரின் சத்திர சிகிச்சைகளுக்கு உதவிக்கரமாக இருந்து அக்குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்திருக்கின்றார் என்பது எத்தனை ஆத்மார்த்தமானது என்பதனை நாம் அனைவரும் ஒருகணம் எண்ணி.பார்த்திடலாம்.

அத்த வகையில் இவர் மட்டுமல்லாது இவர் போலவே வெளிப்படைத் தன்மையுடன் துன்பத்தில் ஆழ்ந்தோரைத் தூக்கி வாழ்வு தரும் நல்லெண்ணம் படைத்த செயற்பாட்டாளர் எவராயினும் அடையாளம் கண்டு மதிப்பளிக்கப் படல் வேண்டும் என்பது மனித உணர்வு படைத்த அனைவரது கடனாகும் என்பது வெளிச்சம்.
ஏதோ நமக்குக் கிடைத்த வாழ்வை நாம் மட்டும் நமக்கென்றே இன்புற்று வாழ்ந்து விட்டுப் போகலாமே என்றில்லாமல் , கதியற்றுக் கலங்குவோரையாம் கை கொடுத்து கரை சேர்க்க விளையும் இவ்வாறான மனிதத் தொண்டர்கள் எவராயினும் ஊக்குவிக்கப் படல் வேண்டும் என்பதனை இத்தால் பணிவன்புடன் வேண்டிக் கொள்ளலாம்.
வாழ்க செந்தில் குமரன்கள் , வளர்க அவர் தம் மனித நேயம்...!
கீழே அவர் பணிகள் தொடர்பாக பங்களித்தோர் விபரக் கோர்வைப் பட்டியல்களின் பதிவுகளை ஆர்வமுள்ளோர் பார்வையிடலாம் !"

20/03/2021

இன்று காலை 15 பேரை பலி கொண்ட பஸ் விபத்தின் CCTV காணொளி

பசறையில் பஸ் விபத்து – 15 பேர் பலிபசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.மே...
20/03/2021

பசறையில் பஸ் விபத்து – 15 பேர் பலி

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொதுப்போக்குவரத்து பஸ் சேவையொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

அசாத் சாலி கைது!முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில...
16/03/2021

அசாத் சாலி கைது!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி வௌியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் இன்று பிற்பகல் அறிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Samer TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samer TV:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share