Ramya Army

Ramya Army A Crime series character in Junior Vikatan

இத்தனை பெரிய பெரிய வேலையை தொடங்கி விட்டோமே என்ற அச்சம் இரண்டு ஆண்டுகளாக சுழன்று கொண்டே இருந்தது. எண்ணித் துணிக என்பதே மந...
26/10/2024

இத்தனை பெரிய பெரிய வேலையை தொடங்கி விட்டோமே என்ற அச்சம் இரண்டு ஆண்டுகளாக சுழன்று கொண்டே இருந்தது. எண்ணித் துணிக என்பதே மந்திரம். துணிந்தேன். தொடர்கிறேன்.
தோழர்கள் பலரும் துணை நிற்கிறார்கள். பல தோழர்கள் தொடர்ந்து ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலிருந்து ஒரு தோழர் பேசினார். ஒரே நாளில் இவ்வளவு தூரம் பரவி இருக்கிறது முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. அடுத்த மாதத்தில் அச்சுப்பணி தொடங்கும். அதற்கு அடுத்த மாதம் நூல்கள் கைக்கு வரும். பெரிய கனவு நிறைவேற போகிறது.
பிழை திருத்தும் பணிக்காக மீண்டும் இந்த நாவலை படிக்கும் போது அலெக்சேய் தல்ஸ்தோய் சோவியத் புரட்சியை எப்படி எழுதினாரோ அதை தொ.மு.சி ரகுநாதன் அவர்கள் தன் சொந்த மொழி போல உள்வாங்கிக் கொண்டு எழுதியதை உணர முடிகிறது. மகத்தான வாசிப்பு அனுபவம். இரண்டே மாதங்கள் காத்திருங்கள் தோழர்களே.

07/08/2024

ஆச்சரிய மனிதர்கள்

புத்தகக் காட்சியில் கடை போடுவதற்காக ஏகப்பட்ட கட்டுப் பாடுகள் இருப்பது பலருக்கும் தெரியும். ஏறத்தாழ ஆயிரம் கடைகள் சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெறும். அப்படியும் உறுப்பினராக இல்லாத பலருக்கு இடம் கிடைக்காமல் போகும். பலருக்குக் கோபம் பொங்கும். சில நேரங்களில் அரங்கத்தில் மழை நீர் பொங்கும். கடையில் அடுக்கி வைக்கப்பட்ட நூல்கள் பாழானதாகப் பரிதவிப்பார்கள் சிலர்.
கடந்த ஆண்டு அத்தகைய சூழலில் கண்காட்சி தொடங்கும் நாள் காலை. கண்காட்சி மதியம் தொடங்க இருந்தது. நான் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நூல்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். ஒருவர் கடைக்குள் வந்து நின்றார்.
``யார் நீங்கள்?'' என்றேன்.
``என் நூல்களை எங்கே அடுக்குவது?'' என்றார் நான் அடுக்கிக் கொண்டிருந்த ரேக்கு களை நோக்கியபடி. அவருடைய இரண்டு கைகளிலும் பெரிய பைகளில் நூல்கள் கொண்டு வந்திருந்தார்.
``உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்கு எண் சொல்லுங்கள்.''
``அரங்கு எண்ணா?''
``ஆமாம்.''
``டோக்கன் கொடுப்பார்களா?''
``இனிமே அடுத்த வருஷம்தான் வாங்க முடியும்.'' நான் தனி ஆளாக நூல்களை அடுக்கிக் கொண்டு அவதியில் இருந்தேன்.
பக்கத்து அரங்கில் இன்னும் ஆட்கள் வரவில்லை. காலியாக இருந்தது. `அதிலே அடுக்கிக் கொள்ளட்டுமா?'' என்றார் ஆர்வமாக.
யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் அடுக்கிவிடுவாரோ என்ற அச்சம் என்னுள் பரவியது.
``அப்படியெல்லாம் திடீரென அடுக்கக் கூடாது. அதை வேறு ஒருவருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.''
``நீங்கலாம் மட்டும் கடை போடுறீங்க. நான் போடக்கூடாதா?''
``போடலாம். அதுக்கு முன்னாடியே விண்ணப்பிக்கணும்.''
``எங்கே?''
``பாபாசி யில.''
``அது எங்க இருக்கு?''
நான் அலுவலகம் இருந்த இடத்தைக் காட்டினேன். அவர் வேகமாகப் போனார்.

எழுத்துப் புயல் ஜிரா எழுதிய அனுப்பிய விமர்சனம் இது. ஜிரா-வின் மூன்று நூல்களை ஒரு சேர வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்...
05/07/2024

எழுத்துப் புயல் ஜிரா எழுதிய அனுப்பிய விமர்சனம் இது. ஜிரா-வின் மூன்று நூல்களை ஒரு சேர வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தில் பயணிக்க செய்கின்றன. அவருடைய கற்பனை அபாரம். ஆச்சர்யம் தரும் புதிய உலகைக் காட்டக் கூடிய எழுத்து. அவரைப் பற்றி பிறகு விரிவாக எழுதுவேன். இப்போது என்னுடைய ஞாலம் நாவல் குறித்த அவருடைய விமர்சனத்துக்கு நன்றி.

ஞாலம்

உயிருள்ள எழுத்து ஒரு வகை. உயிருள்ளவர்களைப் பற்றிய எழுத்து ஒரு வகை. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதற்கு ஞாலம் என்று பெயர் வைத்துவிடலாம். எழுத்தாளர் தமிழ்மகனின் ஞாலம் புதினத்தைத்தான் சொல்கிறேன்.

படித்த என்னைச் சிரிக்க வைத்தார். சிந்திக்க வைத்தார். அழ வைத்தார். சினப்பட வைத்தார். வருந்த வைத்தார். தேட வைத்தார். அதற்கெல்லாம் தேவையானவற்றை அவர் புதினத்தில் வைத்தார்.

19ம் நூற்றாண்டுச் சென்னையோடு அறிமுகமாகமும் வேங்கடாசல நாயகரோடு தான் நமது பயணம். நெஞ்சுக்குள் நெருப்பையும் மூளைக்குள் பொறுப்பையும் வைத்திருந்த உண்மை மனிதனின் வாழ்க்கை வரலாறுதான் ஞாலம்.

இலக்கியங்களில் ஞாலம் எனும் போது மண்திணி ஞாலம் என்றே பல இடங்களில் பார்க்கிறோம். அண்ட கோள்கள் சராசரங்கள் என்றெல்லாம் அளவில்லாதது ஞாலம் என்று அறிவியல் சொன்னாலும்... மனிதன் கால் எந்த மண்ணில் இருக்கிறதோ, அந்த மண்ணே ஞாலம். அப்படிப்பட்ட மண்ணுக்காக போராடிய வீரனின் கதையைப் படிக்கும் போது எனக்குள் பற்பல உணர்வுகள் கலவையாய்ப் பொங்கின. பாதி படிக்கும் போதே அவரை தொலைபேசியில் அழைத்து சண்டையும் போட்டேன். அது படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் இடையிலான உரிமை.

வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிக் கொண்டு போகும் போதே அன்றைய சென்னையையும் நமக்குக் காட்டி, அதில் ஆன மாற்றங்களையும் காட்டுகிறார். கொஞ்சம் படிப்பேன். அவர் சொல்லியிருக்கும் தகவல் ஆர்வத்தைத் தூண்டும். புத்தகத்தை வைத்துவிட்டு இணையத்தில் அவர் சொல்லியிருப்பதைத் தேடி மேய்வேன். தெரிந்து கொண்ட பின் மீண்டும் படிக்கத் தொடங்குவேன். சென்னையின் ஏழுகிணறு, காக்ரேன் கால்வாய், தாது வருடப் பஞ்சம், வள்ளலார்... என்னென்ன... என்னென்ன... பத்திருபது புத்தகங்களுக்கான தகவல்களை ஒரு புத்தகத்தில் கொட்டி விட்டாரே என்று நினைத்தேன். ஆனால் ஆள்... இன்னும் நூறு புத்தகங்களுக்குத் தகவல் சேர்த்துவிட்டு கமுக்கமாக இருக்கிறார்.

கதையைப் படித்து முடித்ததும் வேங்கடாசல நாயகர், சீதா, ரத்தினம், சிங்காரம், மாணிக்கம், ஜெகதீசுவரி எல்லாம் Eastman Colourரில் நம் கண்ணுக்குள்ளேயே வந்து போகிறார்கள். நேர்த்தியான பழைய படத்தைப் பார்ப்பது போல காட்சிகள். தார்ச்சாலைகள் இல்லாத 19ம் நூற்றாண்டுச் சென்னையில் புழுதியை மிதித்து நம்மை நடக்க வைக்கிறார் தமிழ்மகன்.

புத்தகத்தை முடிக்கும் போது, எழுதிய அத்தனைக்கும் தரவுகளைக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். காலப்பயணம் செய்வதற்கு அறிவியலில் இன்னும் வழியில்லை. எழுத்தில் இருக்கிறது. அதுதான் இருட்டு வேளையில் வண்டலூர் காட்டுப்பகுதி வழியாக சிம்னி வைத்த பொட்டி வண்டியில் நாயகரோடு நம்மையும் அழைத்துப் போகிறது. சில்வண்டுகள் நம் காதைத் துளைக்க, நரிகளும் சிறுத்தைகளும் வந்துவிடுமோ என்ற அச்சம் பயத்தைக் கொடுக்க... வண்டிப் பைதாவின் கரகர ஓசையோடு நாமும் போகிறோம்.

எழுத்தாளனுக்கு ஆத்திரம் வரவேண்டிய இடத்தில் வரவேண்டும். வேங்கடாசல நாயகரின் அறச்சீற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் போது… அப்பப்பா! காலத்தைத் திருப்பி எதையும் சீர் செய்ய முடியாத கையறுநிலை புரிகிறது. முன்னேறிப் போய்த்தான் எதையும் செம்மை செய்ய வேண்டும் என்பது உறைக்கிறது.

மைய மாந்தரான வேங்கடாசல நாயகரை எவ்வளவுக்கெவ்வளவு தனக்குள் வாங்கியிருந்தால், அவரை எழுத்தில் இத்துணை சிறப்பாக வடிவமைத்திருக்க முடியுமென்று வியக்கிறேன்! தமிழ்மகனே நாயகராக மாறிவிட்டாரோ என்று தோன்றும் அளவுக்கு அவருடைய பேச்சும் வீச்சும் அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்மகன் அமைதியின் திருவுருவம். “இப்படிச் செஞ்சுட்டீங்களே” என்று கதையின் ஒரு கட்டத்தில் அவரை அழைத்துக் கோவித்த பொழுது கூட... அவர் பேச்சும் சொல்லும் பனையோலையில் குடிக்கும் பதநீர். அதனாலென்ன... வாய்ப்பேச்சு காட்டாத வேகத்தை எழுத்து காட்டிவிட்டது.

விட்டால் நான் இன்னும் சொல்லிக் கொண்டேயிருப்பேன். ஆனால் கடலுக்கு ரோஜாமாலை போடத்தான் முடியுமா! சுருக்கமாகச் சொன்னால்... பாசாங்கு இல்லாத எழுத்து! அடர்வெழுத்து!

ரசனையோரே, ஞாலம் படியுங்கள். நான் என்ன படிக்கப் போகிறேன் தெரியுமா? ஞாலம் புதினத்தில் அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்களைத் தேடித்தேடி படிக்கப் போகிறேன். ஏனுகுல வீராசாமியின் காசியாத்திரை ஆங்கில நூல் கிடைத்து விட்டது. அதிலிருந்தே தொடங்கப் போகிறேன். இன்னும் தத்துவ விவேசினி, சென்னை லௌகீக சங்கம்.... என்று வரிசை வளர்கிறது. இன்னொரு பெயரைச் சொன்னால் எரிமலைகள் வெடிக்கும்... வேண்டாம். வேண்டாம். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்பின் தமிழ்மகன், நல்ல அனுபவத்தைக் கொடுத்த உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும் நன்றி பல!

அன்புடன்,
ஜிரா
2024-07-04

------0------

ஞாலம் நாவலுக்கு அன்புக்குரிய முனைவர் அ. மோகனா அவர்கள் கணையாழியில் எழுதியிருக்கும் மிக நீளமான விமர்சனத்தின் முதல் பக்கம் ...
01/04/2024

ஞாலம் நாவலுக்கு அன்புக்குரிய முனைவர் அ. மோகனா அவர்கள் கணையாழியில் எழுதியிருக்கும் மிக நீளமான விமர்சனத்தின் முதல் பக்கம் இது. வாக்கியங்களுக்கு இடையில் இருக்கும் அரசியலை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். முனைவர் வீ. அரசு அவர்களின் மாணவர்களில் தர வரிசையில் முன்னணியில் இருக்கும் மாணவர்களில் ஒருவர். நண்பர் முனைவர் திருஞான சம்பந்தம் அவர்களின் இணையர். விமர்சனத்தைப் படித்து பெரிதும் மகிழ்ந்தேன். நன்றி தோழி.

(அன்புக்குரிய சிற்பி பாலசுப்ரமணியம் ஐயா எழுதிய மடல். நன்றி ஐயா.)அன்புள்ள தமிழ்மகன்தாங்கள் அன்புடன் அனுப்பிய ' ஞாலம்' பெற...
13/03/2024

(அன்புக்குரிய சிற்பி பாலசுப்ரமணியம் ஐயா எழுதிய மடல்.
நன்றி ஐயா.)

அன்புள்ள தமிழ்மகன்

தாங்கள் அன்புடன் அனுப்பிய ' ஞாலம்' பெற்று மகிழ்ந்தேன். ஏற்கெனவே தங்கள் நூல்களை ஈடுபட்டுப் படிக்கும் வாசகன் நான்.

அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரை அவருடைய இந்துமத ஆசார ஆபாச தர்ஷினி மூலம் நான் அறிந்திருக்கிறேன்.தங்கள் படைப்பின் மூலம் ஒரு காவிய நாயகராக அவரை வாழ வைத்திருக்கிறீர்கள். உவந்து பாராட்டுகிறேன்.

அன்புடனும் பாராட்டுக்களுடனும்
சிற்பி பாலசுப்பிரமணியம்

17/02/2024

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கின்றன.

நாங்கள் அப்போது ஓட்டேரி பகுதியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). (இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை.) அத்தனை இல்லைகள். பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது.

Advertisement: 0:02

Close Player

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9
சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. அவற்றுக்கு உயிர் இருந்தது என்று ரசிகன் நம்பினான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது. கே. பாலசந்தர் இயக்கிய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகும். மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என எல்லா படங்களும் அங்கே வெளியாகின. பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்கள் கடைசியாக சக்கை போடு போட்டன. ஏனோ அது இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தந்த திரையரங்காகவே என்னுள் பதிந்திருக்கிறது.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்... இந்த தியேட்டர்களில் எஞ்சி நிற்பது தேவி காம்ப்ளக்ஸ், காசினோ மட்டும்தான். சாந்தி தியேட்டருக்கும் நாள் குறித்துவிட்டார்கள்.

ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம்.

கெயிட்டி, சென்னையின் பழைய திரையரங்கம். 1930-களில் இருந்து இருக்கும் தியேட்டர். அந்த தியேட்டருக்கு என விசேஷமான ரசிகக் கூட்டம் உண்டு. கடைசி கால கட்டத்தில் செக்ஸ் பட தியேட்டர் ஆகி, அஞ்சரைக்குள்ள வண்டி, சாரி டீச்சர் போன்ற படங்களை வெளியிட்டு, ரகசிய ரசிகர்களை நம்பி காலத்தை ஓட்டினார்கள்.

மெட்ராஸ் வரலாறு: சென்னையில் காணாமல் போன தியேட்டர்களின் கதை! | பகுதி 9
ராயப்பேட்டையில் ஒடியன், உட்லண்ட்ஸ், லியோ, பைலட் தியேட்டர்களில் இப்போது ஊசலாட்டத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது உட்லண்ட்ஸ் தியேட்டர். மற்றவை மூடப்பட்டுவிட்டன. மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் இருந்தது. தி.நகரில் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி திரையரங்குகள். நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் இந்த திரையரங்கம் இப்போது மெகா மார்ட் கடையாகிவிட்டது. நாகேஷ் திரையரங்கம் கல்யாண மண்டபமாகிவிட்டது.

வட சென்னை பகுதியில், மின்ட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் வரை வரிசையாக 15 திரையரங்குகளுக்கு மேல் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணா, கிரௌன் இரண்டும் மின்ட் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தன. சற்று தள்ளி முருகன் திரையரங்கம் இருந்தது. இதில் தியாகராஜ பாகவதர் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டன. இவை மூன்றும் இப்போது இல்லை. பாண்டியன், அகஸ்தியா, மகாராணி, தமிழ்நாடு, பத்மநாபா தியேட்டர்களில் பாதி இப்போது இல்லை. இந்தத் தியேட்டர்கள் எல்லாமே கடந்த 15 ஆண்டுகளுக்குள் காணாமல் போனவை.

15 ஆண்டுகளுக்குள் திரையரங்குகளுக்கு என்ன ஆனது? டி.வி-யின் வருகை பாதித்திருக்கலாம். திருட்டு விசிடி ஆபத்து நெருக்கி இருக்கலாம். சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்து அதற்குக் காரணமாகியிருக்கலாம்.

இது பின் குறிப்பு அல்ல... முன் குறிப்பு!

----------------------------------------------

இந்தத் திரையரங்குகளுக்கு எல்லாம் முன் சென்னையில் கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர். அந்த தியேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? சாந்தி தியேட்டர் எதிரில். சாந்தி தியேட்டர் எதிரில் இருக்கும் பழைய போஸ்ட் ஆபிஸ்தான். அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கு இருந்ததற்கான அடையாளமாக இப்போதும் அங்கே ஒரு கவுன்டர் மட்டும் சாட்சியாக இருக்கிறது.

-இது விகடன் இதழுக்காக நான் எழுதிய அன்றைய நான் பார்த்த சென்னையின் ஒரு பகுதி.

சென்னையோடு மிக சமீபத்தில் வந்து சேர்ந்த உதயம் திரையரங்குக்கு பலரும் வருந்துவதைப் பார்த்தேன். இப்போது உதயத்தையும் இதிலே சேர்த்துக் கொள்கிறேன் .

அரசியலும் உளவியலும்... ஆண்பால் பெண்பால் ஆக..
09/09/2022

அரசியலும் உளவியலும்... ஆண்பால் பெண்பால் ஆக..

டாலர் கிரகம்... 😂
07/09/2022

டாலர் கிரகம்... 😂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramya Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share