Portonovo Times

  • Home
  • Portonovo Times

Portonovo Times portonovo times provide world news upto date

15/08/2013
01/07/2013

பரங்கிப்பேட்டை: காதிரியா பள்ளி மக்தப் மதரஸாவின் 5-ம்

21/06/2013
18/06/2013
30/03/2013
30/03/2013
30/03/2013
30/03/2013
30/03/2013
30/03/2013
21/03/2013
21/03/2013
19/03/2013
14/03/2013

There is good news for NRIs flying home to India – you will not have to fill disembarkation forms, nor will the immigration official waste time going over the details, as they would already have been transferred online once your flight takes off.

HOLY SEE – In a shocking press conference Sunday, Pope Benedict XVI revealed to the world that he will be stepping down ...
12/03/2013

HOLY SEE – In a shocking press conference Sunday, Pope Benedict XVI revealed to the world that he will be stepping down from the Catholic Church’s highest office. “Through prayer and reflection over the past years,” the world’s holiest man began, “I’ve realized that Allah is the one true God.”
Amid clattering camera shutters and roaring reporters, Pope Benedict patiently answered questions, citing traditional Muslim folklore as well as passages from the Qur’an to explain his decision. His session was interrupted only once, when he swiveled South-East to face Mecca, stooped to the ground, and recited the Asr, one of the five daily prayers central to Muslim belief.
The startling reversal comes as a shock to many familiar with the Pope’s policies on Islam. “Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached,” the Bishop of the Vatican famously said of Islam in his 2006 lecture Faith, Reason and the University—Memories and Reflections.
When asked about the quote, Pope Benedict sighed with good-humored remorse and chuckled quietly to himself: “Yeah I’ve regretted that for some time. But I was young and naïve… I see things much clearer now. Besides, I’ve always kinda liked the thought of having a sword. The Cardinals were a real pain on that one.”
When asked whether he would be reverting to his born name, Pope Benedict enthusiastically interjected. “I’ve decided to change my name to Sajjad Sayyid Ratzinger,” His Ex-Holiness explained. “I’m keeping my surname purely for logistical reasons, so my Facebook friends and Twitter followers won’t be confused.”
His transition hasn’t been without opposition. Hours after the press conference, a special Fox and Friends segment aired on FOXNEWS, featuring a picture of the Pope photoshopped to include stereotypical Islāmic features, including: a turban in place of his mitre, darkened complexion, black hair, and Arabic letters spelling out an endorsement of Barack Hussein Obama tattooed across his chest. Beneath the picture, the panel discussed the possible involvement of Pope Benedict XVI, 85, in 9/11. The segment’s title, “The Holy Heathen,” emblazoned the lower left corner of the screen.
This morning, newspapers nationwide featured an editorial by Bill O’Reilly detailing the parallels between the Pope’s “betrayal of God-loving Christians everywhere” with the “betrayal of the American people and the Constitution by Benedict Arnold, his liberal agenda, and his radical left-wing entourage.”

12/02/2013
12/02/2013

அப்சல் குரு தூக்கு : அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்...........!!

டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:

1) நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று கூறிவந்துள்ளது. டிசம்பர் 12,2001-இல் பிரதமர் வாஜ்பாய் கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார். மறுநாளே தாக்குதல் நடந்தது. "மேம்பட்ட பாதுகாப்பு பயிற்சி" என்று கூறினார்களே அப்படியிருக்கும்போது வெடிபொருட்கள் நிரம்பிய கார்குண்டு எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2) தாக்குதல் நடந்து முடிந்து சிலநாட்களிலேயே இந்த தாக்குதலை ஜைஷே மொகமட் மற்றும் லஸ்க‌ர் இ தொ‌ய்பா திட்டமிட்டு நடத்தியுள்ளது என்று டெல்லி போலீஸின் சிறப்பு செல் கூறியது. இந்த தாக்குதலை தலைமை ஏற்று நடத்தியவர் மொகமட் என்பவர் என்றும் கூறியது. இவர் ஐ.சி.814 - விமானத்தை 1999ஆம் ஆண்டு கடத்தியவர் என்று கூறபட்டது. பிறகு இது சிபிஐ-யால் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் கோர்ட்டில் சாட்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. டெல்லி ஸ்பெஷல் செல்லிற்கு என்ன ஆதாரம் இருந்தது?

3) இந்த அனைத்து தாக்குதலும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த படங்களைக் காட்டவேண்டும் என்று கபில் சிபல் கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை ராஜ்யசபா துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். மேலும் இவர் இந்த சம்பவம் குறித்து பல குழப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கூறும்போது, 'நான் பார்த்தபோது காரிலிருந்து 6 பேர் இறங்கினர். 5 பேர்தான் கொல்லப்பட்டனர். சிசிடிவி 6 பேர் இருந்ததைக் காட்டியது' என்றார். தாஸ் முன்ஷி சரி என்றால் போலீஸ் ஏன் 5 பேர்தான் காரில் இருந்ததாக கூறவேண்டும்? யார் அந்த 6வது நபர்? அவர் எங்கே இப்போது? சிசிடிவி படங்களை அரசு தரப்பு சாட்சியமாக ஏன் கோர்ட்டில் போட்டுக் காட்டவில்லை? ஏன் அது பொதுமக்கள் பார்வைக்கு விடப்படவில்லை?

4) இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்றம் ஏன் ஒத்தி வைக்கப்பட்டது?

5) டிசம்பர் 13‌க்கு பிறகு சில நாட்கள் கழித்து பாகிஸ்தானின் தொடர்பிருப்பதாக சுமார் 5 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பினர். துணைக்கண்டம் அணு ஆயுதப் போருக்கு தயாரானது போல்தான் இருந்தது. அப்சல் குருவை சித்ரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலம் தவிர முரண்பட முடியாத சாட்சியம் என்ன இருந்தது?

6) டிசம்பர் 13, நாடாளுமன்ற தாக்குதலுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எல்லையில் ராணுவத்தினரை குவிக்கும் திட்டம் நடந்தேறியது என்பது உண்மைதானா?

7) சுமார் 1 ஆண்டு எல்லையில் இந்த ராணுவத்தினரின் இருப்புக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? சரியாக கையாளத்தெரியாது வெடித்த கண்ணி வெடிகளினால் எவ்வளவு ராணுவத்தினர், பொது ஜனங்கள் உயிரிழந்தனர்? கிராமங்கள் வழியாக லாரிகளும், ராணுவத்தினரும் ரோந்தில் ஈடுபட்டதால் எவ்வளவு விவசாயிகள் தங்களது வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்தனர்? அவர்களது நிலங்களில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டதா இல்லையா?

8) எந்த ஒரு கிரிமினல் குற்ற விசாரணையிலும் ஒருவ‌ர் எப்படி குற்றவாளி என்று கண்டுபிடித்தோம் என்பதை போலீஸ் கோர்ட்டிற்கு விளக்குவது அவசியம். எப்படி மொகமது அப்சல் குருவை போலீஸ் பிடித்தது? ஸ்பெஷல் செல் கூறியது ‌கிலானி மூலம் அப்சலைப் பிடித்தோம் என்று. ஆனால் அப்சல் குருவை பிடிக்குமாறு ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு செய்தி அனுப்பப்பட்டது ‌கிலானியை கைது செய்வதற்கு முன்பே! எப்படி ஸ்பெஷல் செல் அப்சல் குருவை இதில் குற்றவாளியாக சேர்த்தது?

9) அப்சல் குரு சரணடைந்த தீவிரவாதி. இவர் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருடன் தொடர்பில் இருந்துள்ளார், குறிப்பாக சிறப்பு அதிரடிப்படையினருடன் இவர் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளார் என்பதை கோர்ட்டுகளே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர்களது கண்காணிப்பின் கீழ் இருந்த அப்சல் குரு எப்படி இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்?

10) சிறப்பு அதிரடி படையின் சித்ரவதைக்கூடத்தில் சிக்கிய, அவர்களுடன் அடிக்கடி தொடர்புடைய, அவர்களது கண்காணிப்பின் கீழ் உள்ள அப்சல் குருவை வைத்து ல‌ஷ்ய‌ர் இ தொ‌ய்பா, ஜைஷீ அமைப்புகள் தாக்குதலை திட்டமிட்டிருக்க முடியுமா?

11) அப்சல் குரு கோர்ட்டில் கூறும்போது, அப்சல் குருவை மொகமட் என்பவருக்கு அறிமுகம் செய்தவர் டாரிக் அவர்தான் மொகமடை டெல்லிக்கு அழைத்து செல்லக் கூறினார் என்றார். தாரிக் அதிரடிப்படையில் வேலை செய்பவர். போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தாரிக் இருக்கிறார். ஆனால் அவர் எங்கே?

12) டிசம்பர் 19, 2001-இல் தானே போலீஸ் கமிஷனர் எஸ்.எம். ஷங்கரி, நாடாளுமன்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மொகமது யாசின் படே மொகமட் என்றும், இவர் லஸ்கரைச் சேர்ந்தவர் என்றும், அவர் 2000 ஆம் ஆண்டே மும்பையில் கைது செய்யப்பட்டார் என்றும் இவரை உடனடியாக ஜம்மு போலீசிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார். இவர் கூறுவது உண்மையெனில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளாரா? இது தவறு மொகமது யாசின் எங்கே?

13) கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார் யார்? ஏன் இன்று வரை நமக்கு அது பற்றி கூறப்படவில்லை?

11/02/2013

Etisalat on Monday introduced a new ‘Wasel International Add-on’, which allows Wasel prepaid customers to make international calls at prices equivalent to that of local calls.

25/01/2013

Thick fog covered most parts of Dubai and neighbouring emirates as motorists reported near-zero visibility.

24/01/2013

கடலூரில் பாமக - அதிமுக தொழிற்சங்க பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடலூரில் நுழைய ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர் பா.ம.க.,வினர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பா.ம.க.,வினர்- போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க.,வினர் மீது லேசான தடியடி நடத்தினர்.

பா.ம.க.,வினர் போலீஸ் மோதலில், அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அதிமுக தொழிற்சங்க பேரவையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தாக்குதலை தொடர்ந்து பா.ம.க.,வினர் மீது அதிமுக தொழிற்சங்க பேரவையினரும் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை நிறுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

21/01/2013

21 Jan 2013
ஜெய்பூர்:காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஷிண்டே, “ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது” என்றார்.

ஷிண்டேவின் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல் காவி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தாம் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

18/01/2013

Dubai’s rail network is set for a massive expansion with the Red and Green lines extended, new lines added and with connections to the proposed Etihad Rail network across the Gulf countries.

15/01/2013
15/01/2013
15/01/2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வின் காரணமாக சென்னையில் லிட்டர் 70.58 ரூபாயாக விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல், 70.93 ரூபாயாக விற்கப்படும்.

பெட்ரோல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை இவ்வாறு அடிக்கடி உயர்த்தப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் வாகன ஒட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

15/01/2013

இந்தியா- அவுஸ்திரேலியா தொடர் சென்னைக்கு மாற்றம்

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் டெல்லியிலும் (பிப்ரவரி 22-26ம் திகதி) அடுத்த மூன்று போட்டிகள் மொகாலி (மார்ச் 2-6), ஐதராபாத் (மார்ச் 14-18), சென்னையில் (மார்ச் 22-26) நடத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மாற்றம் செய்துள்ளது. இதன்படி, முதல் டெஸ்ட் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 22-26ம் திகதிகளில் நடத்தப்படும்.

இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 2-6ம் திகதிகளில் நடத்தப்படும்.

மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திலும் (மார்ச் 14-18), நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லியில் (மார்ச் 22-26) உள்ள பெரோஷா கோட்லா மைதானத்திலும் நடத்தப்படும்.

வடமாநிலங்களில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ செயலாளர் சஞ்சய் ஜக்தாலே கூறுகையில், புதிய அட்டவணையின் படி இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடத்தப்படும்.

அதன்பின், அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகள் முறையே ஐதராபாத், மொகாலி, டெல்லியில் நடத்தப்படும் என்றும் போட்டி நடக்கும் திகதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மைதானங்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார்அஹ்மதாபாத்:கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்ப...
15/01/2013

மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார்

அஹ்மதாபாத்:கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீவைக்கப்பட்ட வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர் மவ்லானா உமர்ஜி(73) மரணமடைந்தார். கோத்ரா ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உள்ள வீட்டில் அவரது மரணம் நிகழ்ந்தது. நீரழிவு நோயால் அவதிப்பட்ட உமர்ஜியின் கால் செயலிழந்தது.
2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக துயர்துடைப்பு முகாம்களை திறந்து பணியாற்றுவதில் முன்னணியில் இருந்த உமர்ஜியை 2003-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் தீவைப்பு வழக்கில் மோடி அரசு அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்தது. இவ்வழக்கில் முக்கிய சூத்திரதாரி என குற்றம் சாட்டி எட்டு ஆண்டுகளாக உமர்ஜி அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2011-ஆம் ஆண்டு உமர்ஜி குற்றமற்றவர் என நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.
ஆன்ம தைரியத்தின் சின்னம் உமர்ஜி என்று பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளா

ஹிஜாப் தனித்தன்மைஇஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்ம...
13/01/2013

ஹிஜாப் தனித்தன்மை
இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் "person of the year" - "பர்ஸன் ஆஃப் த இயரில்"ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை.
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.
இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 4, 2012 ஹிஜாப் தினமாக நம்மை கடந்து செல்கிறது. சர்வதேச ஹிஜாப் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தினமாக செப்.4-ஆம் தேதியை அறிவிக்க காரணம் பிரான்சு நாட்டில் 2002 ஆம் ஆண்டு இதே தினத்தில் பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. உலகில் முதன்முறையாக ஹிஜாபிற்கு
தடை விதிக்கப்பட்ட நாட்டில் தான் ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு அதிகாரப் பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஹிஜாப் அணிவது அதிகரித்து வருகிறது. ஹிஜாபின் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை எல்லாம் தூக்கி வீசிவிட்டு ஹிஜாப் எங்களின் தன்னம்பிகையின் அடையாளம் என கூறும் புதிய தலைமுறை முஸ்லிம் பெண்கள் உருவாகியுள்ளார்கள்.
அண்மைக் காலமாக தமிழகத்திலும், கேரளாவிலும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது யதார்த்தமே!
கேரளாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றை பார்த்த பொழுது அரபுக் கல்லூரியா? இது என்று சந்தேகம் எழுந்ததாக ஒரு எழுத்தாளர் கூறியிருந்தார். பொது சமூகத்திலும், பள்ளிக்கூடம், கல்லூரிகளிலும் முஸ்லிம் பெண்களும் அபிமானத்துடன் இன்று ஹிஜாபை அணிந்து செல்கின்றார்கள். ஹிஜாபை அணிய ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் தடுத்தால் அதனை எதிர்த்து போராடும் துணிச்சலும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மகத்தான மாற்றமாகும். அண்மையில் கர்நாடகா மாநிலத்திலும், அதற்கு முன்பு ஆந்திராவிலும் ஹிஜாபை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து முஸ்லிம் மாணவிகளும் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தியது சோசியல் நெட்வர்க் மீடியாக்களில் பரபரப்பான செய்தியானது.
முந்தைய காலக்கட்டங்களை விட முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிக் கொண்டிருப்பது ஹிஜாபின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர காரணமானது எனலாம். 'ஹிஜாப் அடிமைத்தனம்' என்றெல்லாம் புலம்பும் இஸ்லாத்தின் எதிரிகளின் கூக்குரல்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாக மாறிவிட்டன. இக்கருத்துக்களை தற்பொழுது முஸ்லிமல்லாதவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இவ்வாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்களின் கண்ணியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஹிஜாப் அணிந்த ஈராக் நாட்டு பெண்மணி ஷைமா அல் அவாதி இஸ்லாமோ ஃபோபியோ தலைக்கேறிய இனவெறியன் ஒருவனால் கொல்லப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவாக பத்து லட்சம் மாற்று மதங்களைச் சார்ந்த அமெரிக்க பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.
சோசியல் மீடியாவும், தகவல் தொழில்நுட்ப த்துறையும் பெண்களின் ஹிஜாப் அணியும் உணர்விற்கு ஆக்கம் கூட்டுகின்றன. இஸ்லாமிய ஆடை அணிவதை கேவலமாக கருதிய காலம் மாறிவிட்டது. இஸ்லாத்தின் மீதான பற்றுறுதியால் பர்தா அணிந்த பெண்களை கிண்டலடிக்கும் காலமும் மலையேறிவிட்டது. ஹிஜாப் அணிந்த பெண்கள் ஏன் முகத்தை மறைக்கும் நிகாபை அணிந்த பெண்கள் கூட இன்று பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றார்கள்.
ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகள், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்ற, வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாபை சுதந்திரமான ஆடையாகவே கருதுகின்றார்கள். எகிப்தில் புரட்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஃபாத்திமா நபீல் ஸ்கார்ஃபை அணிந்துவிட்டு செய்தி வாசிக்க துவங்கியுள்ளார்.
அதேவேளையில் இதர ஆடைகளைப் போலவே ஹிஜாப் மற்றும் மஃப்தாவில் புதிய ட்ரண்டுகள் மற்றும் ஃபேஷன்கள் ஊருவியுள்ளன. இதுவும் ஹிஜாபை வெகுஜன ஆடையாக மாற்ற காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய ட்ரண்டுகளும், ஃபேஷன்களும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிபந்தனைகளை தாண்டி செல்வதால் ஹிஜாபின் உண்மையான தாத்பரியம் அங்கே வீழ்ச்சியை சந்திக்கிறது.
மஃப்தாக்கள் பலவும் இன்று தலையில் சேர்த்து கட்டப்பட்டு கழுத்து உள்ளிட்ட பகுதிகளை வெளியே தெரியும் அளவுக்கு அணியும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நிறத்தில் தான் ஹிஜாபை அல்லது பர்தாவை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம், முன்கைகள் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்க கூடிய உடலுறுப்புகளை வெளியே காண்பிக்காத இறுக்கம் இல்லாத ஆடையாக இருக்கவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிபந்தனை. ஆகவே ஹிஜாபை அணியும் முஸ்லிம் சகோதரிகள் அதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், "ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது?" என்று.
தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: "ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்." என்றார்.
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூறுவது சாலச்சிறந்தது.
அதாஉ இப்னு அபீ ரபாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
இவர் (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரி)
ஆகவே ஹிஜாபை பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கும், இஸ்லாத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடையாக கருதுவோம்! நுகர்வுக் கலாச்சாரத்தின் புதிய பரிணாமங்களில் சிக்கி ஹிஜாபின் வரைவிலக்கணத்திற்கு விடைக்கொடுத்து விட வேண்டாம்.
[ இன்றைய இஸ்லாமிய பெண்மணிகள் ஹிஜாபை அணிவதில் பெருமை கொள்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.ஏனெனில் பர்தா அணியும் பெண்கள் ஆண்களின் அடிமை இல்லைஸ அவர்களின் கண்ணியம் அந்த பார்தாவின் உள்ளே இருப்பதை அவர்கள் அறிந்து விட்டனர் அவர்களால் சாதிக்க முடிந்தது பல அதற்க்கு தடையாக இந்த பார்தா இருக்க வில்லை.
இன்று மேற்குலகம் சுதந்திரம் என்கின்ற பெயரால் பெண்களின் மேலாடையை மட்டுமல்ல அவர்களின் உள்ளாடையையும் சேர்த்து கழட்டிவிடும் மோசமான காலகாட்டத்தை நாம் பார்க்கின்றோம் அதனால் தான் நம்மை விட மேற்குலகப் பெண்கள் தங்களுக்கு கண்ணியம் எதில் இருக்கிறது என்று ஆராய்சி செய்துப் பார்த்ததில் அது இஸ்லாத்தில்தான் இருக்கிறது என்கின்ற உண்மையை உணரத்துவங்கி விட்டனர்.
எனவே இஸ்லாமிய பெண்கள் நவீன கலாட்சாரம் என்கின்ற பெயரில் மேற்குலகம் இரக்குமதி செய்யும் அரைகுறை ஆடைகளை விட்டு விட்டு உங்களுக்கு கண்ணியத்தையும் நன் மதிப்புகளையும் பெற்றுத்தறும் ஆடையான ஹிஜாபை அணிந்து இஸ்லாமியப் பெண்கள் என்பதில் பெருமை அடைகிறோம் என்று பறைசாற்றுங்கள். -ஹமீது ஃபைசல் ]
நன்றி அ.செய்யது அலீ

08/01/2013

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து............. பரங்கிப்பேட்டை தில்லி சாஹிப் தர்கா அருகே ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்த வீடு முற்றிலும் தீக்கிரையானது, இன்று மாலை 6.30 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில், எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு சாய்ந்ததினால் இத்தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால்...
06/01/2013

3 தசாப்தங்களுக்கு பிறகு சீனாவில் கடும் உறைபனி காலநிலை தற்போது நிலவி வருகின்றது. இதனால், கடல்நீர் பனியாக உறைந்துவிட்டதால் சீனாவின் லயோனிங் மாகாணம், ஜினோஹு பகுதியில் உள்ள துறைமுகத்தில் 1000 கப்பல்கள் தமது பயணங்களை மேற்கொள்ளாமல் தரித்து நிற்கின்றன.
சீனாவில் மைனஸ் 7.4 டிகிரியாக வெப்ப நிலை குறைந்துபோனதால் அனைத்தும் உறைபனியாகிவிட்டன. பெருங்கடலும்கூட உறைபனியாகிக் கிடக்கிறது.

06/01/2013

cricket india thirill victory india win by 10 runs

06/01/2013

cricket live update india 167/10 pakistan still batting 145/9 need 23 runs in 15 balls

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Portonovo Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share