18/03/2024
வாருங்கள்... அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த..., அதை தொடர்ந்து சபீழுள் முஃமினீன்கள் சென்ற பாதையில்... நாங்களும் பயணிப்போம்...!!
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ وَسَآءَتْ مَصِيْرًا
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் : 4:115)
தராவீஹ் விடயத்தில், ரசூலுல்லாஹ் முதல், 1300 நூற்றாண்டுகள் வரை, அனைத்து முஃமின்களும் பயணித்த அதே பாதையில் பயணிப்பதே நேர்வழியாகும்....
அல்ஹம்துலில்லாஹ் அதற்குரிய சான்றுகள்...
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள்
ரமலான் மாதத்தில் தொடர்ச்சியாக 20 ரக்அதுகள் தராவீஹ் மற்றும் 3 ரக்அத்
வித்ரையும் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். [முஸன்னப் இப்னு
அபூ ஸைபாஹ் 002/ 7692]
தராவீஹ் 20 ரக்அத்துகள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கும் ஹதீது 'மர்பூஃ' என இப்னு அபீஷைபா முஸன்னிபில் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இப்றாஹீம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர்.
மர்பூஃ ஆன பலவீனமான ஒரு ஹதீது நபிமணித் தோழர்களின் செயல்கள்
மூலம் உறுதி செய்யப்படும் போது அந்த பலவீனமான ஹதீது ஆதாரமாக
எடுக்கத் தகுதிபெற்று விடுகிறது.
பைஹகீ (ரஹ்) அவர்கள்
தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமான ஸனதுடன் ஸஹாபாக்கள் தராவீஹ் 20
ரக்அத்துகள் தொழுதனர் என்று பதிவு செய்துள்ளார்கள். அநேக நபிமணித்
தோழர்கபள் மூலம் இவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன.
நாற்பெரும் இமாம்களும் மேற்படி ஸஹாபாக்களின் கருத்தையே பின்பற்றுகின்றனர்
என்று... ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திதுத் திஹ்லவி (ரஹ்) அவர்கள் தமது பதாவா அஸீஸிய்யாவில் பாகம் 1 பக்கம் 111, 119
ல் கூறுகிறார்கள்.
ஸயீப் பின் யஜீத் (ரலி) :
"உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் 20
ரக்அது தொழுதார்கள்".
[பைஹகீ சுனன் குப்ரா
002/ 698-9, ஹதீஸ்
நம்பர் 4617 [
இமாம் அல்-நவவி (ரஹ்) அவர்கள்: "தராவீஹ் 20 ரக்அத்" என்பதை 'ஸஹீஹ்'
என்கிறார்கள்.
[அ ல்- குலஸா அல்-அஹ்கம் 1961] ۰۰
ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து
அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி
பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்
தொழுவித்தார்கள் .
(அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் ஸலமி [சுனன் பைஹகி2/ 699,4620])
*உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,* உமர் (ரலி) அவர்கள் நான் தொழுகையை வழிநடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். அதன் பிறகு, *“மக்களுக்காக இருபது ரக்அத்கள் தொழுவியுங்கள்”* என்று எனக்கு பணித்தார்கள்.. .
(அதருள் சுண்ணன் பக்கம் 255)
மேலும் இமாம் மாலிக் (ரஹ் ) அவர்கள் முஅத்தாவில் "யசீத் இப்னு அப்துர் ரஹ்மான், யஹ்யா இப்னு யசீத் ஆகிய இருவரின் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.. அதில் உமர் (ரலி ) அவர்களின் காலத்தில் 20 ரகாதுக்கள் தொழுததாக கூறியுள்ளார்கள்.
இப்னு தைமிய (ரஹ்) எழுதுகிறார்கள் :
*"ரமளானில் இருபது ராக்கத்துக்கள் மற்றும் மூன்று ரக்காத்துக்கள் வித்ருமாக உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்" என்பது ஏற்றுக்கொலப்பட்ட செய்தி*. அதன் படி பெரும்பாலான உலமாக்கள் *இருபது ராக்கத்துக்கள் தொழுவதை சுன்னாஹ்வாக ஏற்றுகொண்டனர்*.
ஏனெனில், உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் முஹாஜ்ரீன்கள் மற்றும் அன்சாரிகள் கூட்டத்தினருக்கு தலைமை தாங்கினார், அவர்களின் யாரும் அவருடைய செயலை நிராகரிக்க வில்லை..
(பாதாவ இப்னு தைமியா - பாகம் 23 - பக்கம் 112)
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களன் காலத்தில் ஒரு ரவாபிலி (ஷியா) ஒருவன், உமர் (ரலி) அவர்கள் மீது 20 ராக்ஆத்துக்களின் பித்ஹத்தான நடைமுறையை உருவக்கியதற்காக குற்றம் சாட்டினான். இந்த குற்ற சாட்டுக்கு இப்னு தைம்மியா பதில் அளித்தார்கள்.
அதிலே, ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக எழுதி விட்டு., *உமர் (ரலி) அவர்கள் 20 ராக்ஆத்துக்கள் தராவீஹ் இஸ்தாபித்து, ஒரு மோசமான நடைமுறையை கடைபிடித்ததாக, அன்று கருதப்பட்டு இருந்தால்.. ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பார்கள். இது அவர்களின் கிலாபாத்திலும் இருந்தது., அவரது கிலாபத்தில் அவரும் குஃபாவில் 20 ராக்ஆத்துக்கள் தராவீஹ் தொழுகை நடத்தி இருக்கிறார்கள்.*
(என்று பதில் அளித்து அவனுடைய வாதத்ததை முறியடித்தார்கள்..)
(பதாவா இப்னு தைமியா)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள் : *தரவீஹ் இருபது (20) ராக்கத்துக்களை கொண்டதே,* அதன் வழிமுறைகளும் நன்றாகவே அறியப்பட்டதாகும். அது ஒரு சுன்னதுள் முஅக்கதாவாகும்.
(இஹ்யா உல் உலூம், பாகம் : 1, பக்கம் : 139)
அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் :
*தராவீஹ் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவில் உள்ளதாகும். மேலும் அது 20 ரக்காத்துக்களை கொண்டதாகும்.*
(குன்யதுத் தாலிபீன், பக்கம் : 464)
இமாம் இப்னு குதாமா ஹம்பலி (ரஹ்) அவர்கள் எழுதி இருக்கிறார்கள் :
"இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் கருத்தின் பிரகாரமும் மிகவும் ஏற்புடையதான கருத்து.. *தராவீஹ் இருபது (20) ராக்கத்துக்கள்* என்பதே."
(அல்-முஃனி, பாகம் : 1, பக்கம் : 802)
*இருபது ராக்கத்துக்கள் தராவீஹ் தொழுகை என்பது சஹாபாக்களின் இஜ்மாவில் உள்ள பழக்கமாக.* இருந்தது.
(முல்லாஹ் அலி காரி : மிர்காத் பாகம் : 3 - பக்கம் : 194)
பெரும்பாலனா அறிஞர்கள் உமர் மற்றும் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஒன்று படுகிறார்கள்.
(திர்மிதி, பாகம் : 1, பக்கம் : 166)
அல்லாமா கசாணி (ரஹ்) அவர்களும் அறிவிப்பு செய்கிறார்கள்.. *சஹாபாக்களின் இஜ்மா.., இருபது ராக்கத்துக்களை அமல் செய்வதாகவே இருந்தது..*
(பாதியுஸ் ஸனாய் பாகம் : 1, பக்கம் : 644)
காதி இமாம் அபூ யூசுப் (ரஹ்) என்பவரிடம் இருந்து அசாத் பின் அமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : "நாம் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் தராவீஹ் விஷயத்தை பற்றியும்.., உமர் (ரலி) அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கேட்டேன்.
அதற்கு இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் பதில் அளித்தார்கள் : *20 ரக்ஆத்துக்கள் தராவீஹ் என்பது சுன்னத் முஅக்கதா, உமர் இந்த வடிவத்தை சுயமாக நிறுவவில்லை.., அல்லது, தீனில் புதுமைகளை உருவாக்கவும் இல்லை.*
(மராஃகில் பாலாஹ் பக்கம் : 334)
இதை ஹஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், *‘ரமலான் மாதத்தில் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் உமர் (ரலி) அவர்கள், மக்களைக் கூட்டி, இருபது ரக்அத்கள் தொழுதார்கள்*.
(முஸ்னத் அல் இமாம் ஜைத் 158, 159)
ஷாஹ் அப்துல் ஹசீஸ் முஹத்தித் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு நபி (sal) அவர்களின் தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதே.*
(பத்வா அசீசிய்யஹ் பக்கம் 125)
அபுல் குசைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், *சுவைத் இப்னு கப்fலாஹ் (ரஹ்) அவர்கள் 5 தர்வீஹ்களில், 20 ராக்கத்துக்கள் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள்.*
(அல் சுன்னனுள் குப்ரா லில்-பைஹாகி, பாகம் : 2, பக்கம் : 496)
ஷுதைர் இப்னு ஷகல் (ரஹ்) அவர்கள் பதிவு செய்கிறார்கள் : *தான் ரமளானில் 20 + 3 ராக்கத்துக்கள் தொழக்கூடியவராக இருந்ததாக.*
(முசன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் : 5, பக்கம் : 222)
இப்ராஹீம் அன்னக்ஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *மக்கள் ரமளானில், 5 தர்வீஹ்களில் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.*
(கிதாபுல் அதர் அபீ-யூஸுப், பக்கம் 41)
அதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : *"மக்கள் 23 ராக்ஆத்துக்கள் வித்ரோடு சேர்த்து தராவீஹ் தொலக்கூடியவர்களாக இருந்தார்கள்..*
(குறிப்பு : *அதா (ரஹ்) அவர்கள் ஒரு தாபிஈ*)
(முசன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் : 5, பக்கம் : 224)
எனவே.., அன்று முதல் இன்றுவரை...
மக்காவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!
மதினாவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!
அக்ஸாவிலும் அதே 20 ரக்ஆதுக்கள் தான்!
இதுவே... 1300 வருடங்களாக சபீலுல் முஹ்மினீங்கள் சென்ற பாதை... என்பது தெள்ளத்தெளிவான உண்மை...
எங்களுடைய எந்த முன்சென்று முஃமினாண அறிஞரும்... தராவீஹ் 8 ரக்கத்துகள் என்று விளங்கும் இல்லை... அதை அப்படி அமல் செய்யவும் இல்லை...
----------------------------------------------
இந்த நவீன குழப்பவாதிகள்.., தங்களது மடமையை நிலைநாட்ட தூக்கிக் கொண்டுவரும், ஆதாரத்தை பாருங்கள்...!
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : உமர் (ரலி) அவர்கள் மக்களை ஜமாத்தாக ஒன்று சேர்த்து தொழ வைத்தது.., அது 11 ரகதுக்களே .
பதில் :
இந்த ஹதீஸ் மிகமிக பலவீனமானதாகும் . இதன் ராவிகள் வரிசையில் பாரிய இடைவெளி இருக்கிறது .இமாம் மாலிக் (ரஹ் ) அவர்களிடமிருந்து கூறுபவர் "அல் ஜுவரீ "என்பவர் . அவர் பிறந்தது ஹிஜ்ரி 238. இமாம் மாலிக் (ரஹ் ) வாபாதாகியது ஹிஜ்ரி 179.
*இரண்டு ராவிகளுக்கு இடையில், 59 வருட இடைவெளி* குழப்பவாதிகளுக்கு போதுமா..??
இவர்களின் அடுத்த பலமான ஆதாரம்..
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும், ஹதீஸில் ரசூலுல்லாஹ், ராமலானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் 8+3 தொழுதார்கள்... என்பதே...
இந்த ஹதீஸ் ரமளானில் மட்டும் தொழப்படும் ஒரு விசேட தொழுகை பற்றியது அல்ல... மாறாக இது ரசூலுல்லாஹ்வின் வழமையான தஹஜ்ஜதையே குறிக்கும்...
இதை நாங்கள் சொல்லவில்லை... சொல்பவர்கள் யார் யார் என்று பாருங்கள்...
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகின்ற "ரமலாம் , ரமலான் அல்லாத மாதத்தில் 11 ரக்அது தொழுதார்கள் " என்ற ஹதீஸ் "தஹஜ்ஜத்தை குறிக்கும் என புஹாரின் விரிவுரையாளரான இப்னு ஹஜர் அல் அஸ்கலனி (ரஹ்) கூறுகிறார்கள். .
(பதுஹுல் பாரி 3/328)
காதி இயால் மலிகி (ரஹ்) அவர்களும் *ஆயிஷா (ரலி) அவர்களின் (11 ராக்கத்துக்கள் பற்றிய ஹதீஸ்) ரசூலுல்லாஹ்வின் தஹஜ்ஜுத் பற்றியதே*. என்று கூறியுள்ளார்கள்.
(ஷரஹ் முஸ்லிம் நவவி : பாகம் 01 - பக்கம் : 253)
கைர முகல்லிதுகளில் ஒருவரான) காதி முஹம்மத் ஷவ்கானி அவர்கள் எழுதியுள்ளார்கள் : *ஆயிஷா (ரலி) அவர்களின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கும் 11 ராக்கத்துக்கள் என்ற செய்தி, அது ரமளானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் தொழப்பட்ட தஹஜ்ஜுத் சம்பந்தமான அறிவிப்பாகும்.*
(நைலுல் அவதார், பாகம் : 3, பக்கம் : 39)